2/16/2011 3:01:12 PM
நிருபர்களிடம் நரேன் கூறியதாவது: தற்போது வெளிவந்துள்ள 'தம்பிக்கோட்டை' எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்துக்காக வேறெந்த படத்திலும் நடிக்காமல் காத்திருந்தேன். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது. ஆக்ஷன் படங்கள் மட்டுமல்லாது, காதல் படங்களிலும் நடிப்பேன். கெட்அப் மாற்றி நடிக்கும் யோசனை எதுவும் இப்போது இல்லை. மக்கள் மனதில் பதியும் இரண்டு வெற்றிப் படங்களை தந்துவிட்டு பிறகுதான் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வேன். இரண்டு இந்திப் பட வாய்ப்புகள் வந்தது. தமிழில் வெற்றிபெறாமல் இந்திக்குப் போனால் உரிய மரியாதை கிடைக்காது என்பதால் மறுத்துவிட்டேன்.