சென்னை: நடிகர் சிம்பு குறித்து தான் டிவிட்டரில் எதுவுமே சொல்லவில்ல என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
பெரும் காத்திருப்பிற்குப் பிறகு வெளியான வாலு படம் பலவரையும் கவர்ந்துள்ளது. படம் குறித்து பாசிட்டிவான பேச்சுக்களே வெளியாகியுள்ளன.
படம் வெளியானதும் ஏராளமான பேர் சிம்புவிற்கு போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர், இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சிம்புவைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவுகளை இட்டதாக செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து இவ்வாறு செய்திகள் அதிகமாக இது நடிகர் ஸ்ரீகாந்தின் கவனத்திற்கு சென்றது, உடனே பதறிப் போன அவர் தனது பெயரில் எந்த ட்விட்டர் அக்கவுண்டும் கிடையாது, மேலும் இது மாதிரி தவறான வேலைகளை நான் ஒரு போதும் செய்வதில்லை என மறுத்திருக்கிறார்.
இது குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில் "டுவிட்டர் இணையத்தில் ஸ்ரீகாந்த் என்று என் பெயரில் வரும் கருத்துகள் அனைத்தும் போலியானவை.
நான் இதுவரை டுவிட்டர் தளத்தில் எந்தவொரு கணக்கினையும் வைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். யாரோ சில விஷமிகள் என்னுடைய பெயரை தவறாக பயன் படுத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும், சிம்பு என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
அஜித், சிம்புவின் ரசிகர்களை பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் நான் அளிக்கவில்லை. என் பெயரில் போலியாக கணக்கினை வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.
இது மாதிரியெல்லாம் யார் பண்றாங்கன்னு தெரியல, ஆனா நல்லா பிளான் பண்ணி பண்றாங்க போல....!