சக நடிகரின் அண்ணன் கிட்னி ஆபரேஷனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்த சல்மான் கான்

மும்பை: நடிகர் சல்மான் கான் சக நடிகர் சந்தோஷ் ஷுக்லாவின் சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவுவார். மேலும் தனக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது கஷ்டம் என்று தெரிய வந்தால் தானாக சென்று உதவி செய்வார். இந்நிலையில் சக நடிகரான சந்தோஷ் ஷுக்லாவின் சகோதரர் அஷுதோஷுக்கு(34) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பது குறித்து கேள்விப்பட்டார்.

சக நடிகரின் அண்ணன் கிட்னி ஆபரேஷனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்த சல்மான் கான்

உடனே அவர் அஷுதோஷுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இது குறித்து சந்தோஷ் கூறுகையில்,

சல்மான் பாய் என்னுடைய பிரச்சனை குறித்து படப்பிடிப்பின்போது யார் மூலமாகவோ தெரிந்து கொண்டார். உடனே அவர் என்னை அழைத்து வேலையில் கவனம் செலுத்துமாறு கூறினார். நான் கேட்காமலேயே அவர் எனது சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் அளித்தார். மேலும் அவர் என் அம்மாவுக்கு போன் செய்து பேசினார்.

என் சகோதரருக்கு அவரது மனைவி தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்ததையும் அவர் பாராட்டினார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அஷுதோஷ் வீடு திரும்பிய பிறகு அவரை சல்மான் பாயை சந்திக்க வைப்பேன். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றார்.

 

பாட்டாலே புத்தி சொன்னா...: இந்தி படத்திற்கு பாட்டெழுதிய கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாலிவுட் படம் ஒன்றுக்கு பாடல் எழுதியுள்ளார்.

சமூக ஆர்வலர், ஆம் ஆத்மி கட்சி தலைவர், டெல்லி முதல்வர் என்று பன்முகம் கொண்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அரசியலில் இருந்து சினிமாவுக்கு தாவி இருக்கிறார்.

பாட்டாலே புத்தி சொன்னா...: இந்தி படத்திற்கு பாட்டெழுதிய கெஜ்ரிவால்

நடிகர் ஆமீர் கானின் தம்பி ஹைதர் அலி கான் தில் தோ தீவானா ஹை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தீபக் ஷர்மா தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

மீதமுள்ள பாடல்களை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போகும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் எழுதியுள்ளாராம்.

 

சத்தியம் டிவியில் விண்ணைதொடுவோம்

சத்தியம் டிவியில் விண்ணைதொடுவோம்

சத்தியம் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் சிறப்பு வர்த்தக நிகழ்ச்சி விண்ணைத்தொடுவோம்.

தமிழ்த்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, பொருளாதாரவல்லுநர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பல்வேறு பார்வைகளை ஒருங்கிணைக்கிறது விண்ணைத் தொடுவோம்.

இந்தநிகழ்ச்சி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நல்லதொரு வழிக்காட்டியாய் அமையும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

வெற்றிக்காண படிகட்டுகளை அளமாய் விளக்கும் வல்லுநர்களின்வாழ்க்கை வரலாறு, ஆலோசனைகள் என இந்நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

வெர்வ்ஃபினான்சியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.லயனல்சார்லஸ் தொகுத்துவழங்கும் இந்நிகழ்ச்சியை சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணிமுதல் 9.30 மணிவரை ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பு மாலை 3.30 மணிமுதல் 4.00 மணி வரை ஒளிபரப்பாகிறது. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்தவரப்பிரசாதம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

 

மறைந்த இயக்குநர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி கொடுத்த எஸ்.வி.சேகர்

நினைவில் நின்றவள் திரைப்படத்தின் இயக்குநர் அகத்திய பாரதி புற்று நோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். அவருடைய இரண்டு மகள்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் கல்வி உதவித் தொகையாக வழங்கியுள்ளார் எஸ்.வி.சேகர்.

கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். நினைவில் நின்றவள். எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ள இந்த படத்தில் படத்தில் கீர்த்தி சாவ்லா, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

மறைந்த இயக்குநர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி கொடுத்த எஸ்.வி.சேகர்

கே.மணிகண்டன் குமரவேல், டாக்டர் சித்ரலட்சுமி குமரவேல் ஆகிய இருவரும் நினைவில் நின்றவள் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை,திரைக்கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனரருமான அகத்திய பாரதி புற்றுநோயில் மரணமடைந்துவிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் நின்றவள் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மறைந்த அகத்திய பாரதி அவர்களின் இரண்டு மகள்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் கல்வி உதவித் தொகையாக எஸ்.வி.சேகர் வழங்கினார்.

 

பரபரப்பு பப்ளிசிட்டிக்காக எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் பெயர்களைத் தலைப்பாக்கிய வனிதா விஜயகுமார்!

பப்ளிசிட்டிக்காக சாதனை நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் பெயர்களையே ஒரு சினிமா தலைப்பாக்கி, அதன் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் பரபரப்புத் திலகம் வனிதா விஜயகுமார்.

விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா ஏற்கெனவே இருமுறை திருமணம் செய்து, அவற்றை முறித்துக் கொண்டவர்.

இப்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாயின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் வனிதா இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஒருமனு கொடுத்தார்.

பரபரப்பு பப்ளிசிட்டிக்காக எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் பெயர்களைத் தலைப்பாக்கிய வனிதா விஜயகுமார்!

பின்னர் வனிதா நிருபர்களிடம் பேசுகையில், "நான் 'வனிதா பிலிம் புரோடக்ஷன்' சார்பில் புதுப்படம் தயாரிக்கிறேன். இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நால்வரும் சினிமாவுக்கு கடவுள் போன்றவர்கள். எனவேதான் இவர்கள் பெயரில் படம் எடுக்கிறேன்.

இதில் நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். பிரபலமானவர்கள் மற்றும் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். டான்ஸ்மாஸ்டர் ராபர்ட் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நடக்க உள்ளது. படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன்," என்றார்.