மெரீனா பட விவகாரம்- பாண்டிராஜ் மீது மீண்டும் வழக்கு!

Marina Movie Issue Co Producer Sue Pandiraj

சென்னை: மெரீனா படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடக் கூடாது என அதன் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பாலமுருகன் வழக்கு தொடர்வதாக அறிவித்துள்ளார்.

மெரினா படத்தை பாண்டிராஜுடன் இணைந்து தயாரித்தவர் பாலமுருகன். ஆனால் படம் வெளியாகும் நேரத்தில் பாண்டிராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி முன்னிலையில் சமாதானம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பாண்டிராஜ், பாலமுருகனுக்கு சேர வேண்டிய லாபத்தை கொடுத்துவிடுவதாகவும், பாலமுருகன் அனுமதியின்றி வேறு மொழிகளில் படத்தை டப் செய்ய மாட்டேன் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கும் விஜய் டிவிக்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் 'மெரினா' படத்டை வரும் 14ஆம் தேதி தெலுங்கில் டப் செய்து வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

நீதிமன்றத் தடையை மீறிய செயல் இது என்று கூறி பாண்டிராஜ் மீது கிரிமினல் வழக்குத் தொடரப் போவதாக பாலமுருகன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி பாலமுருகன் கூறுகையில், "எந்த ஒழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் இல்லாமல் பாண்டிராஜை நம்பி ரூ 50 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றப் பார்த்தார். நீதிமன்றம் தலையிட்டதின் பேரில் எனக்கு பாண்டிராஜ் ரூ.15 லட்சம் கொடுத்தார்.

மேலும் மெரினா படத்தை என்னுடைய அனுமதி இன்றி வேறு எந்த மொழிகளிலும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பாண்டிராஜ் அந்த உத்தரவை மதிக்காமல் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார். எனவேதான் அவர் மீதும், படத்தை என் அனுமதியில்லாமல் வெளியிடுவோர் மீதும் வழக்கு தொடர்கிறேன்," என்றார்.

இதுகுறித்து பாண்டிராஜ் நம்மிடம் கூறுகையில், "பாலமுருகன் ரூ 50 லட்சம் முதலீடு செய்ததாகக் கூறுவதே தவறு. அவர் போட்டு முதலுக்கு வட்டியோடு சேர்த்துக் கொடுத்துவிட்டேன். மேலும் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த அத்தனை வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டுவிட்டன. இனி சட்டரீதியாக அவரால் எதுவும் செய்ய முடியாது," என்றார்.

 

இந்த தீபாவளி விஜய் Vs கார்த்தி!!

Diwali 2012 It Is Vijay Vs Karthi    | அலெக்ஸ் பாண்டியன்  

பெரிய முயற்சி இல்லாமலேயே பெரிய ஆளாய் ஆகிவிடும் ராசி கார்த்தியுடையது. பொதுவாக தீபாவளி போன்ற பெரிய விசேஷ நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும் அல்லது சோலோவாக விளையாடும்.

ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி (தலைப்பு உறுதியில்லை!!)யோடு மோதுவது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்.

விஜய் - அஜீத், விஜய் - சூர்யா என்பது போய், இப்போது விஜய் - கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.

இந்த தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் படங்கள் இந்த இரண்டும்தான். நவம்பர் 13-ம் தேதிக்கு பெருமளவு திரையரங்குகளை இந்தப் படங்களுக்குப் பெறுவதில் கடும்போட்டியே நடந்து வருகிறது.

இதனால் தீபாவளியைக் குறிவைத்துள்ள நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பிற படங்களின் ரிலீஸ் தேதி மாறக்கூடும் என்கிறார்கள்.

துப்பாக்கியை கலைப்புலி தாணு தயாரிக்க, ஜெமினி பிலிம்ஸ் விநியோகிக்கிறது. அலெக்ஸ் பாண்டியனை ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வெளியிடுகிறது.

 

அமிதாப் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

Big B Shows Dadu Love

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன் கையில் அழகிய பெண் குழந்தையை வைத்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் இருக்கும் குழந்தை அவரது பேத்தி ஆராத்யா என்ற அவசர முடிவுக்கே அனைவரும் வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இன்று இணையதளத்தில் பிரவுஸ் செய்தபோது அமிதாப் பச்சன் தன் கையில் ரோஸ் கலர் கவுன் போட்ட குட்டிப் பாப்பாவை வைத்திருக்கும் போட்டோவைப் பார்த்தோம்.

அமிதாப்பும் சரி, அந்த பாப்பாவும் சரி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவுடன் கூடிய செய்தியைப் பார்த்ததும் இத்தனை மாதங்களாக மீடியாக்கள் கண்ணில் படாமல் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் மகள் ஆராத்யாவோ என்ற நினைத்துவிட்டோம். அடடா அமிதாப் இறுதியாக ஆராத்யாவை உலகிற்கு காட்டிவிட்டார் போலும் என்று நினைத்து அந்த செய்தியைப் படித்தபோது தான் அது வேறு ஒரு பாப்பா என்று தெரிய வந்தது.

குரோர்பதி நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த வினீத் குமார் என்பவர் கலந்து கொண்டார். அவர் தனது மனைவி, 10 மாத மகள் குஷி ஆகியோரை அரங்கிற்கு அழைத்துச் சென்றார். நிகழ்ச்சியில் பிரேக் விட்டபோது வினீத் அமிதாபை பார்த்து சார், என் குழந்தையை கொஞ்சம் பார்க்க வருகிறீர்களா என்று கேட்க அவரும் குஷியை குஷியாக தூக்கி வைத்து கொஞ்சினார்.

அந்த குழந்தையும் அமிதாபிடம் அழாமல் சென்றுள்ளது. அதிர்ஷ்ட குழந்தை தான்....

நீங்களும் போட்டோவைப் பார்த்தவுடன் ஆராத்யா என்று தானே நினைத்தீர்கள்?

 

ஞானவேல் ராஜாவிடம் கும்கி!

Gnanavel Raaja Gets Kumki Rights   

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி படத்தை வாங்கியது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படம் இந்த கும்கி. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் லட்சுமி மேனனும் அறிமுகமாகும் இந்தப் படத்தின் இசையை சமீபத்தில் வெளியிட்டனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமலும்.

இதனால் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. பாடல்கள், ட்ரெயிலர் அனைத்துமே சிறப்பாக வந்திருந்ததால், வியாபார ரீதியாக படம் பெரிதாகப் போகும் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் சகோதரர் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. இதற்காக பெரும் விலை கொடுத்துள்ளார்களாம்!

ஏற்கெனவே அட்டகத்தி படத்தினை வாங்கி வெளியிட்டு, நல்ல லாபம் பார்த்தது ஸ்டுடியோ கிரீன். அந்த ராசி கும்கியிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் வாங்கியுள்ளனர் போலும்!

 

எஸ்.சி.விக்கு போட்டியாக களமிறங்கும் ரைட் டிவி!

Right Tv The New Competitor Scv

சன் டிவியின் மாஸ்டர் கேபிள் ஆபரேட்டர் நிறுவனமான எஸ்.சி.வி தான் தமிழகத்தில் கேபிள் தொழிலையே கட்டுக்குள் வைத்துள்ளது. தற்போது எஸ்.சி.வியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் களமிறங்கியுள்ளது ஒரு புதிய நெட் ஒர்க்!

திமுக ஆட்சிக் காலத்தில் சன் குழுமத்திற்கும் முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அரசு கேபிள் டிவி உருவாக்கப்பட்டது. கலைஞர் டிவியும் உருவானது. பின்னர் கண்கள் பணிக்க இதயம் இனித்து இருவர் குடும்பமும் ஒன்று சேர்ந்தன. இதன்பிறகு அரசு கேபிள் டிவி கிடப்பில் தள்ளப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் ஆவடி மார்கத்தில் கேபிள் டிவி நெட்வொர்க்கில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஜாக் டிவி நெட்வொர்க், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரியின் பின்பலத்துடன் சென்னையிலும் தங்கள் கேபிள் டிவி நெட்வொர்க் சேவையை பதித்தது.

இன்னொரு பக்கம் சென்னை அண்ணா நகர் மார்கத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களில் சுமார் இருபது பேர் கொண்ட கூட்டணி, பல ஆண்டுகளாக சென்னை திருமங்கலத்தில் மத்திய அரசின் எம்.எஸ்.ஒ லைசன்ஸ் பெற்று "ரைட் டிவி" என்னும் கேபிள் டிவி நெட்வொர்க்கை ஆரம்பித்தனர்.

ஆனால், எஸ்.சி.வியை மீறி அவர்களால் தனித்து கேபிள் டிவி நெட்வொர்க்கை நடத்த முடியாததால், எஸ்.சி.வி உடன் கூட்டு சேர்ந்து அண்ணா நகர் மார்க்கத்தில் தங்கள் கேபிள் டிவி சேவையை வழங்கி வந்தனர்!.

தற்போது ட்ராய் ஒழுங்குமுறை அமைப்பின் புதிய டிஜிட்டல் ஒளிபரப்பு சட்டத்தின் படி, எஸ்.சி.வியின் கட்டணம் மிக அதிகம் உயர்ந்துள்ளதாலும், லோக்கல் கேபிள் ஆபரேடர்களுக்கு இந்தக் கட்டணம் கட்டுப்படி ஆகாதா காரணத்தினாலும் ரைட் டிவி பங்குதாரர்கள் தனிச்சையாக முகப்பேர் எரி திட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ஒரு அச்சக கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதில் புதிய டிஷ் ஆன்டனாக்களை நிறுவி தனியே சேவையைத் தொடங்க இருக்கிறார்கள்.

ரைட் டிவியின் இந்த புதிய கேபிள் டிவி நெட்வொர்க் நவம்பர் மாதத்தில் தங்கள் சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ரைட் டிவி ஆரம்பத்தில் குறைந்த கட்டணத்தில் சுமார் 500 இலவச சேனல்களை டிஜிட்டல் வடிவில் ஒளிபரப்ப இருக்கிறதாம்!.

ரைட் டிவியின் இந்த முயற்சி, இதை போல் ஆரம்பிக்க உள்ள மற்ற கேபிள் டிவி எம்.எஸ்.ஒக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனி சென்னையில் எஸ்.சி.வி, ஜாக் டிவி, அரசு கேபிள் மற்றும் ரைட் டிவி என நான்கு கேபிள் நெட்வொர்க்குகள் செயல்பட உள்ளன.

இந்தப் போட்டி ஒருவர் கேபிள்களை மற்றவர் வெட்டிக் கொள்ளாமல், நுகர்வோருக்கு சாதகமாக சேவைகளை வழங்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.


 

கோடம்பாக்கத்தில் இருந்தபடி அற்புதங்கள் படைக்கலாம்! - பாலு மகேந்திரா

We Can Make World Cinema Even Kodambakkam Malu Mahendra

சென்னை: திரைத் துறையில் எவ்வளவுதான் கற்றாலும் திரும்ப இந்த கோடம்பாக்கத்தில்தானே இறங்க வேண்டும் என யாரும் சலித்துக் கொள்ள வேண்டாம். இதே கோடம்பாக்கத்திலிருந்தபடி அற்புதங்கள் படைக்கலாம் என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா.

பாரதி, ஆட்டோகிராப், குட்டி, மொழி போன்ற படங்களில் சின்னதும் பெரிதுமாக வேடங்கள் செய்துவந்த இவி கணேஷ் பாபு, முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் படம் யமுனா.

பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் படித்த சத்யா என்பவர் ஹீரோவாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமான நடிகை ஸ்ரீரம்யா நடிக்கிறார். ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றவர் இவர்.

ஆடுகளம் நரேன், எங்கேயும் எப்போதும் வினோதினி, சாம்ஸ் உள்பட பலரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு இலக்கியன் இசையமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் புனைந்துள்ளார். பொ சிதம்பரம் ஒளிப்பதிவு செய்ய, லெனின் எடிட்டிங் செய்துள்ளார். காதல் கந்தாஸ், காயத்ரி ரகுராம் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.

தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற காவிரிக் கரை நகரங்களில் யமுனா படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அறிமுக விழா திங்கள்கிழமை மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, "நான் தஞ்சாவூரிலிருந்து வந்தவன். விவசாயக் குடும்பம். பல நாடகங்களை எழுதிய பின்னர், இயக்குநராகும் ஆசையில் கும்பகோணம் வந்தேன். அப்போது தென்பாண்டி சிங்கம் படம் எடுத்த இளையபாரதியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ஆனால் என் உருவத்தைப் பார்த்து நடிகனாக்கிவிட்டார்கள்.

பொதுவா, ஒரு இயக்குனர் நடிகராகுறப்போ அதை ஈஸியா எடுத்துக்குறாங்க. ஆனா ஒரு நடிகன் இயக்குனரானா நம்மளை நோக்கி வீசுறதுக்காக ஆயிரம் அம்புகளை கூர்தீட்டி காத்திருக்காங்க!

என்னை நடிகராக பார்த்தே பழக்கப்பட்டவர்கள் இயக்குனராகி விட்டேன் என்றதும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த அதிர்ச்சியில் நீயெல்லாம் டைரக்டராகி? என்ற நக்கலும், படம் வந்ததும் உன் வண்டவாளம் தெரியத்தானே போகுது? என்ற குத்தலும் பொதிந்திருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது... அதை மனதில் வைத்து வெகு கவனமாக, ஜனரஞ்சகமாக, நான் யமுனாவை இயக்கியிருக்கிறேன்.

இந்தப் படத்தின் கதை வாழ்வின் அடிப்படை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்விஸ மருந்துதான் முக்கியம். இதற்காக அவன் மற்றவர்களைச் சார்ந்திருக்கும்போது, எதையும் செய்யத் தயாராக இருப்பான். அதைத் தெரிந்து கொண்டு, அவர்களை தங்கள் சுயநலத்துக்காக ஒரு கூட்டம் பயன்படுத்திக் கொள்கிறது... அதைப் பற்றியதுதான் இந்தப் படம்," என்றார்.

அடுத்து பேசிய பாலுமகேந்திரா, கோடம்பாக்கத்தில் தயாராகும் திரைக்கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு நம்பிக்கை வார்த்தைகளைத் தந்தார்.

அவர் கூறுகையில், "இந்த விழாவுக்கு பாலுமகேந்திராவுக்கும் என்ன தொடர்பு...? இவன் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டான்.. என்ற கேள்வி உங்களுக்கு எழும். தொடர்பு இருக்கிறது!

நான் நடத்தி வரும் சினிமா பட்டறையில் பயின்ற சத்யா என்ற மாணவன்தான் இந்தப்படத்தின் அறிமுகநாயகன். இன்னும் இரு மாணவர்கள் இதன் உதவி இயக்குநர்கள். என் பள்ளியில் குரல் பயிற்சி தரும் வினோதினி நடிக்கிறார். அதனால்தான் வந்தேன்.

எனது பயிற்சிப் பள்ளியில் நான் படிக்க வைப்பதில்லை.. உடல் மொழியை எப்படி வெளிப்படுத்துவது, குரலை சூழலுக்கேற்ப எப்படிப் பயன்படுத்துவது போன்றவற்றைத்தான் நாங்கள் கற்றுத் தருகிறோம். நடிப்பை கற்றுத் தரமுடியாது. காரணம் நடிப்பில் இத்தனை வகை என்றே அளவிட முடியாது. ஒருவனுக்கு நடிக்க வரும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அவனிடமிருந்து தங்களுக்குத் தேவையானதை கேட்டு வாங்குவது இயக்குநர் வேலை.

என்னதான் பயிற்சி எடுத்தாலும், பல விஷயங்களைப் பயின்றாலும் மீண்டும் இதே கோடம்பாக்கத்தில்தானே போய் இறங்க வேண்டும் என்று புதியவர்கள் சலிப்படைய வேண்டாம். காரணம் இதே கோடம்பாக்கத்திலிருந்துதான் ஒரு பராசக்தி வந்தது... பாசமலர் வந்தது, அழியாத கோலங்கள் வந்தது.

இந்த கோடம்பாக்கத்திலிருந்தபடி உலக சினிமா படைக்க முடியும்... அற்புதங்கள் படைக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டால்போதும்," என்றார்.

 

இரண்டாம் திருமணம் என்ற யோசனையே எனக்கில்லை - பிரபுதேவா

No Thought Second Marriage Says Prabhu Deva

சென்னை: என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைகள், சினிமாதான் இனி எல்லாமே என்கிறார் நடிகர்- இயக்குநர் பிரபுதேவா.

நயன்தாராவுக்காக மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபுதேவா. ஆனால் மகன்களைப் பிரிய மனமின்றி நயன்தாராவைப் பிரிந்தார்.

இப்போது தன் முதல் மனைவியின் குழந்தைகளுடன் தனது பொழுதைக் கழிக்கிறார். அடுத்து மூன்று இந்திப் படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மீண்டும் திருமணம் என்ற யோசனையே எனக்கு இல்லை. என் குழந்தைகள், என் சினிமாதான் இப்போது என் உலகம்.

என் குழந்தைகள் விடுமுறையில் இருக்கும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன்.

இப்போதைக்கு நுவ்வொஸ்தானன்டே... இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திப் படங்களில் பணியாற்றுவதால் மும்பையில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியுள்ளேன். ஆனால் நிச்சயம் சென்னைதான் என் இருப்பிட முகவரியாக இருக்கும்.

இந்தியில் படம் செய்வது பிடித்திருக்கிறது. காரணம் நிறைய பணம் முதலீடு செய்வதோடு, படப்பிடிப்பை துவங்கும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து விடுகின்றனர். அந்த அளவு முழு ஈடுபாடு காட்டுவது எனக்குப் பிடித்திருக்கிறது," என்றார்.

 

டக்ளஸ் போர்த்திய பொன்னாடை - மன்னிப்பு கேட்டார் பாடகர் உன்னி கிருஷ்ணன்

Singer Unni Krishnan Seeks Apology

சென்னை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பொன்னாடை பெற்றுக் கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன்.

பாடகர் உன்னிகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கூறியதாவது:

"நான் சுமார் 20, 25 ஆண்டுகளாக இசைத்துறையில் இருக்கிறேன். நன் பல்வேறு ஊர்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை கச்சேரிகள் செய்து வருகிறேன். மேடையிலும் பாடி வருகிறேன்.

இப்படி சென்ற நாடுகளில் நான் முதலில் ஆஸ்திரேலியா செல்கிற வாய்ப்பையும் லண்டன் செல்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாழ்பாணத் தமிழர்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு.

அப்படி ஒரு ஒரு அன்பான் அழப்பில்தான் அண்மையில் யாழ்பாணம் சென்று இருந்தேன்.அங்குள்ளவர்களின் விருப்பத்திற்கிணங்க "ஸ்வானுபவ " அமைப்பு இந்தக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தது. இதன் அமைப்பாளர் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

யாழ்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல அங்குள்ள ராமநாதன் இசைப் பள்ளியிலும் ஒரு சந்திப்பு அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு விரிவுரை ஆற்றவும் திட்டம், என்று கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் யாழ்பாணம் சென்றேன்.

அழைப்பின்றி வந்த டக்ளஸ்

கச்சேரி அழகாகப் போனது ஆனால் அங்கு எதிர்பாரத விதமாக ஒரு சம்பவம் நடந்தது. அங்கு வந்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா எனக்குப் பொன்னாடை போர்த்தினார்.

இது தமிழ் மக்களின் மனதின் வெகுவாக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த சம்பவம் நான் முற்றிலும் எதிபாராத ஒன்றாகும். அவர் கலந்து கொள்வார் என்பது எனக்குத் தெரியாது.

அழைப்பிதழில் அவர் கலந்து கொள்வார் என்றெல்லாம் போடவில்லை. திடீரென்று வந்தவர் அவர். ஆனால் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவர் தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒருவர் என்பது.

இசைப் பயணத்தில் கரும்புள்ளி

இந்த சம்பவம் எதிர்பாராததுதான் என்றாலும் இதற்காக நன் மிகவும் வருத்தம் அடைகிறேன். என் இசைப் பயணத்தில் இதை ஒரு கரும்புள்ளியாக் கருதுகிறேன்.

எதுவும் பிரச்சனை இருக்காது என்று இந்திய காலாசார கமிஷன் உறுதியளித்தது அந்த நம்பிக்கையில்தான் அங்கு சென்றேன். இருந்தாலும் இப்படி நடந்து விட்டது.

இனி இது போல ஒன்று நிச்சயமாக நடக்காது என்று உறுதியளிக்கிறேன். எப்போதும் போல் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் உங்களில் ஒருவனாக என்னை ஏற்று ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலகெங்கும் நான் ஈழத் தமிழர்களின் மேடைகளில் பாடும் போது -

' அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை...', ' எங்கள் தேசத்தில் இடி விழுந்தது...',
'பூக்கள் வாசம் வீசும் காற்றில்...' - போன்ற பாடல்களைப் பாடும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கும்.

ஈழத் தமிழர்களின் விடுதலை சார்ந்த அவர்களின் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்துகிற பல பாடல்களை பாடும்போது, கேட்கிற மக்களும் உள்ளம் மல்க ஈழத்தின் கோர வடுக்களை தங்கி நிற்பதை நான் நேரில் பல முறை பார்த்திருக்கிறேன். நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்த வகையில்தான் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ்பாணம் சென்றேன். யாழ்பாணம் மக்களின் துயரங்களில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணியே யாழ்பாணம் சென்றேன்.

எதிர்பாராது நடந்த இந்த தவறுக்காக மீண்டும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

 

செல்வராகவன் வைத்த விருந்தில் அனுஷ்காவை நாய் கட்சிடிச்சிப்பா!

Pet Dog Bites Anushka At Party   

சென்னை: இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை நாய் கடித்துவிட்டது. அவருக்கு ஊசிகள் போட்டு சிகிச்சை செய்து வருகின்றனர்.

டாப் நடிகையான அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்' மற்றும் ‘தாண்டவம்' படங்களில் நடித்து வருகிறார்.

‘இரண்டாம் உலகம்' படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து, கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா.

எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். சென்னை நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. ‘இரண்டாம் உலகம்' படத்தில் நடித்த இதர நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களும் விருந்தில் பங்கேற்றார்கள்.

அப்போது விருந்தில் சாப்பிட்ட ஒருவர் கையை துடைத்து டிஷ்யூ பேப்பரை வீசி எறிய, அதை ஒரு நாய் கவ்வி எடுத்துத் தின்றதாம். பேப்பரை தின்றால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடுமே என பதைப்பில், அனுஷ்கா விரைந்து போய் நாய் வாயில் கையை விட்டு பேப்பரை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.

அதைப் புரிந்து கொள்ளாத அந்த செல்ல நாய் அனுஷ்கா கையைக் கடித்துவிட்டது.

இதனால் வலி தாங்காமல் துடித்தார் அனுஷ்கா. உடனடியாக அனுஷ்காவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சிகிச்சை அளித்தனர். அடுத்தடுத்து 3 ஊசிகள் போட்டனர். இன்னும் சிகிச்சை தொடர்கிறதாம்...

நாய் உயிரோட இருக்குல்ல?!

 

2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்ற நயன்!

Nayanthara Attends Shooting Chennai

சென்னை: 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகை நயன்தாரா.

பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு, சினிமாவில் தீவிரமாகிவிட்டார் நயன்தாரா. கோடிகளில் சம்பளம். இன்றும் முதலிட அந்தஸ்து என அவர் செழிப்பாகவே உள்ளார்.

தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் இப்போதுதான் முதல் முறையாகப் பங்கேற்கிறாராம் (இடையில் வந்தது ஷூட்டிங்குக்காக அல்ல!).

கடைசியாக தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திலும் தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்யம்' படத்திலும் நடித்தார். அதன்பிறகு திருமணத்துக்கு தயாரானார்.

ஆனால் திருமணம் ரத்தானதால் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் அஜீத்துடன் நயன்தாரா நடித்த காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டன.

சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பங்கேற்பது தனக்கு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார் நயன்தாரா.

படப்பிடிப்பில் அனைவருடனும் சிரித்து சகஜமாக பேசி பழகிய அவர், தொடர்ந்து இரு வாரத்துக்கு சென்னையில் தங்கி தனது பகுதிகளை முடித்துத் தருகிறார்.

 

கேஸ் போட்ருவேன்! - மிரட்டும் அசின்

Asin Vows Sue Against Gossip Monger   

நடிகர்களுடன் இணைத்து என்னைப் பற்றி கிசு கிசு எழுதினால் கேஸ் போடுவேன், என மிரட்ட ஆரம்பித்துள்ளார் நடிகை அசின்.

பாலிவுட்டும் கிசுகிசுவும் பிரிக்க முடியாதது. எப்பேர்ப்பட்ட நடிகையாக இருந்தாலும் மும்பை பத்திரிகைகளிடம் அவலாக சிக்கி அந்து வெந்து போவது தொடர்கிறது. அதற்கேற்பத்தான் நடிகைகளின் வாழ்க்கை முறையும் அங்குள்ளது.

தமிழில் நடித்த வரை மீடியாவில் நல்ல பெயரோடு இருந்த அசின், மும்பை போனதும் படத்துக்கொரு நடிகருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

ஆமீர்கானுடன் ரகசிய உறவு, சல்மான்கான் வீடு வாங்கிக் கொடுத்தார், சல்மான் படுக்கையறையில் இருந்தார் என்றெல்லாம் தொடர்கின்றன செய்திகள். ஷாரூக்குடனும் இணைத்து கிசுகிசு வந்துவிட்டது.

இப்போது மீண்டும் சல்மான்கானுடன். இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அசின் செம டென்ஷனாகி மிரட்ட ஆரம்பித்துள்ளார்.

அந்த மிரட்டலின் சுருக்கம் இது!

"நிறைய நடிகர்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்களை தொடர்ந்து எழுதி வருகிறார்கள், இதை என்னால் சகிக்கவே முடியவில்லை. நானும் குடும்பப் பெண்தான். நடிகர்களுடன் இதுபோல் ஒன்றாக சேர்ந்து வாழ நான் நினைத்து இருந்தால் சினிமாவுக்கு வந்துதான் அதை செய்ய வேண்டும் என்று இல்லை.

இனி இப்படி கிசுகிசு பரப்பினால் பொறுத்துக் கொள்ள மாட்டேன். கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்!"

அய்யய்யோ பயமா இருக்கே!

 

தலைப்பு பிரச்சினை: இந்த வாரம் ரிலீஸாகவிருக்கும் சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' படத்துக்கு தடை!

Court Impose Ban On Sundarapandiyan  

தமிழ் சினிமாவில் தலைப்பு சண்டை தலை விரித்தாட ஆரம்பித்துவிட்டது. புதிதாக யோசிப்பதில் அத்தனை சிக்கல், படைப்பாளிகளுக்கு!!

இந்த சண்டையில் லேட்டஸ்ட் வரவு சசிகுமார் நடித்து, இந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகவிருக்கும் சுந்தரபாண்டியன்!

சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அவரது சிஷ்யர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள படம் சுந்தரபாண்டியன்.

இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் சமயத்தில், இன்னொரு 'சுந்தரபாண்டியன்' விளம்பரம் வந்தது. இது நடிகர் கார்த்திக் முன்னணி நடிகராக இருந்த காலகட்டத்தில் உருவான படம். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது வெளியிடப் போவதாக விளம்பரம் வர ஒரே குழப்பம்.

இதுகுறித்து சசிகுமாரிடம் சுந்தரபாண்டியன் பிரஸ்மீட்டில் கேட்டபோது, "இந்தத் தலைப்பை வைக்க எங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது," என்றார்.

இப்போது, கார்த்திக் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் தயாரிப்பாளர்களான் ஜூபிடர் பிலிம் மேக்கர்ஸ், சசிகுமார் படத்துக்கு எதிராக வழக்குப் போட, நீதி மன்றம் புதிய சுந்தரபாண்டியனுக்கு தடைவிதித்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை சசிகுமாரின் படம் வெளியாகவிருப்பதாக விளம்பரங்கள் வந்த நிலையில் இந்தத் தடையுத்தரவு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமையலோடு சில சங்கதிகள்: அசத்தல் அலுமேலு

All All Alamelu Nalini S Cooking

கே டிவியில் ஒளிபரப்பாகும் ஆல் இன் ஆல் அலமேலு நிகழ்ச்சி நகைச்சுவை தொடர் மட்டுமல்ல அதில் சத்தான சமையலும் செய்து காண்பிக்கப்படுகிறது. இந்த தொடரின் நாயகி நளினி செய்யும் சமையல் எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருப்பதால் நேயர்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சமையல் நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து சேனல்களிலும் ஏதாவது ஒரு நேரத்தில் யாராவது சமைத்து, ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கே டிவியில் ஒளிபரப்பாகும் ஆல் இன் ஆல் அலமேலு நகைச்சுவை தொடரைப்போல இருந்தாலும் எபிசோடின் கடைசிப் பகுதியில் தொடரின் நாயகி நளினி சத்தான சமையல் குறிப்புகளை சொல்வதோடு அவற்றை சமைத்தும் காட்டுகிறார்.

சில தினங்களுக்கு முன் நளினி செய்த இஞ்சிப்புளி ஊறுகாய் செயல்முறையை பார்க்கும் போதே நா ஊறியது. இது தவிர குழி பணியாரம், பால் அப்பம், என தினம் ஒரு வெரைட்டியாக செய்து அசத்துகிறார் நளினி. சமையல் செய்வதற்கு ஒரு கைப்பக்குவம் வேண்டும். அதை சொல்லிக்கொண்டே செய்து காண்பிப்பதற்கு தனி திறமை வேண்டும். நளினிக்கு இந்த இரண்டுமே இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.