உமா ரியாஸை மீண்டும் சேர்த்துக் கொண்ட கமல்!

அன்பே சிவம் படம் பார்த்தவர்களுக்கு, கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோயின் எனும் அளவுக்கு கமலை ஒருதலையாய் காதலிக்கும் உமா ரியாஸை மறந்திருக்க முடியாது.

அதுவும், கமல் வேறு பெண்ணை காதலிப்பது தெரிந்து, உமா பொறுமும் அந்தக் காட்சி அத்தனை இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெரிய பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

Kamal calls Uma Riaz for Thoonga Vanam

இப்போது மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அடுத்து தான் நடிக்கும் தூங்கா வனம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உமா ரியாஸை அழைத்துள்ளாராம் கமல்.

கமலின் தீவிர ரசிகைகளுள் ஒருவர் உமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்க, த்ரிஷா, அனைகா, மனீஷா கொய்ராலா, பிரகாஷ் ராஜ் உடன் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜூனில் படம் தொடங்குகிறது.

 

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா

ஒளிப்பதிவு: என் கே ஏகாம்பரம்

இசை: ஸ்ரீகாந்த் தேவா & வர்ஷன்

தயாரிப்பு: எஸ்பி ஜனநாதன் - சித்தார்த் ராய் கபூர்

எழுத்து - இயக்கம்: எஸ்பி ஜனநாதன்

பொதுவுடைமை என்ற சொல்லை ஏதோ தீண்டத் தகாத ஒன்றாகத்தான் தமிழ் சினிமா பார்த்துவந்தது. எப்போது அரிதாக சில குறிஞ்சிகள் பூக்கும், ஆனால் கவனிக்கப்படாமல் போகும் சோகம் தொடரும்.

ஆனால் எஸ்பி ஜனநாதன் அதே பொதுவுடைமைக் கருத்துக்களை இன்றைய வணிக சினிமாவில் குறைந்தபட்ச சமரசங்களோடு சொல்லி வெற்றியைப் பெற்று வருகிறார். இந்த பனிரெண்டு ஆண்டுகளில் நான்கு சினிமாக்களை மட்டுமே எடுத்துள்ள அவர், அவற்றில் மூன்று படங்களில் பொதுவுடைமை சித்தாந்தத்தை இலைமறை காயாக வைத்திருக்கிறார்.

Purambokku Engira Pothuvudaimai Review  

இந்த புறம்போக்கு எனும் பொதுவுடைமை ஒரு நக்ஸலைட் இயக்கத்தைப் பின்புலமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஆர்யா, மனித வெடி குண்டாகச் செயல்பட்டதாகக் கூறி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு, குற்றங்களை ஒழிக்க சரியான தண்டனை தூக்குதான் என நம்பும் காவல் அதிகாரியான ஷாமுக்கு.

Purambokku Engira Pothuvudaimai Review

ஆர்யாவுக்கு தூக்கு மாட்டும் வேலையைச் செய்ய விஜய் சேதுபதியைத் தேடிப் போகிறார்கள். அவரோ அந்த வேலையை வெறுத்து ஒதுங்கி, சதா போதையில் மிதக்கிறார். அவரிடம் ஷாம் விஷயத்தைச் சொல்லி, சிறைக்கு அழைக்கிறார். ஆனால் மறுக்கும் விஜய் சேதுபதி, கார்த்திகாவைச் சந்தித்த பின்னர் அந்த வேலைக்கு ஒப்புக் கொள்கிறார்.

ஏன் ஒப்புக் கொண்டார்? ஆர்யாவுக்கு தூக்கை நிறைவேற்றினார்களா இல்லையா? என்பதை கட்டாயம் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலை என்பது மக்களுக்கானது என்ற பொதுவுடைமைத் தத்துவத்தை ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜனநாதன். கூடவே தமிழ் தேசிய உணர்வையும் ஆங்காங்க குறியீடுகளாகக் காட்டியிருக்கிறார்.

Purambokku Engira Pothuvudaimai Review

ஒரு அப்பாவி இளைஞனை கற்பழிப்புக் குற்றத்தில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தி, அடித்தே அவன் செய்யாத குற்றத்தைச் செய்ய வைத்து நீதிமன்றத்தில் நிறுத்த, அங்கே அவனை நிரபராதி என நீதிபதி அறிவிக்கும்போது, அந்த நிரபராதி கேட்கும் கேள்விகள் இந்த நாட்டு சட்ட நடைமுறை மீது விழும் சவுக்கடிகள்.

தமிழ் சினிமாவில் ஒருபோதும் பார்க்க முடியாத சர்வதேச அரசியல், போராளிகள் பக்க நியாயங்களை தன் பாணியில் சொல்லிப் போகிறார் ஜனா.

Purambokku Engira Pothuvudaimai Review

ஆர்யாவுக்கு இது மிக முக்கியமான படம். அழுத்தமான காட்சிகளால் மனதில் இடம்பிடிக்கிறார். குறிப்பாக, தனக்கான தூக்குக் கயிறை தானே சோதித்துப் பார்க்க முயலும் அந்தக் காட்சி. ஆனால் வசன உச்சரிப்பில் இன்னும் கம்பீரம் இருந்திருக்கலாம்.

எமலிங்கமாக வரும் விஜய் சேதுபதியை சமூகத்தின் மனசாட்சியாக்கி திருப்பிக் கேட்க வைத்திருக்கிறார் இயக்குநர். உணர்ந்து நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. என்ன ஒரு அற்புதமான நடிகன்!

Purambokku Engira Pothuvudaimai Review

கிட்டத்தட்ட வில்லன் ரேஞ்சுக்கு இருந்தாலும், ஷாம் மிரட்டியிருக்கிறார் நடிப்பில். இந்த நல்ல நடிகனை தமிழ் சினிமா இத்தனை காலம் எவ்வளவு வீணடித்திருக்கிறது பாருங்கள்!

கார்த்திகாவுக்கு இனி இதுபோல ஒரு வேடம் அமையுமா தெரியவில்லை. போராளிப் பெண்ணாக மாறியிருக்கிறார்.

Purambokku Engira Pothuvudaimai Review

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என் கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் அத்தனை இயல்பாக, நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

வர்ஷனின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஓகே என்றாலும், எல்லாக் காட்சிகளையும் இப்படி இசையால் இட்டு நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன... மவுனமும், இயற்கையின் ஒலிகளும் கூட இசைதானே!

படத்தின் வசனங்களை தனி புத்தகமாகப் போட்டுத் தரலாம். ஒலிச் சித்திரமாக வெளியிடலாம். இத்தனைக்கும் எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லை. ஸ்ட்ரெயிட் ட்ரைவ்!

Purambokku Engira Pothuvudaimai Review

முதல் பாதியை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம்.

மக்கள் விழிப்புணர்வை, இந்த சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வை மனதில் வைத்து படமெடுக்கும் இயக்குநர்களில் யாரையாவது காட்டச் சொன்னால் எந்தத் தயக்கமும் இன்றி எஸ்பி ஜனநாதனைக் கை காட்டலாம்.

போங்க மக்களே.. இந்த புறம்போக்கை பார்க்க அவசியம் போங்க!

 

ஜாக்கெட் அணியாமல்.... - ராதிகா ஆப்தேவின் அடுத்த பரபர!

தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் ராதிகா ஆப்தே, அடுத்த பரபரப்பை ஆரம்பித்துள்ளார். ஒரு டிவி சீரியலில் ஜாக்கெட் அணியாமல் நடிக்கப் போகிறாராம்.

ராதிகா ஆப்தேவின் ஆபாசப் படங்கள் இணையதளம், ‘வாட்ஸ் அப்'களில் இன்னும் உலா வந்து கொண்டுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நிர்வாணமாகமாக நடித்துள்ளார் ராதிகா ஆப்தே.

Radhika Apte's next avatar

நிர்வாண செல்பி, அடுத்து ஆங்கிலப் படத்தில் நிர்வாணமாக நடித்தது என அவரது ஆபாச அவதாரம் அடுத்தடுத்த கட்டத்தைத் தாண்டிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஜாக்கெட் அணியாமல் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளாராம்.

ரவீந்திரநாத் தாகூரின் பிரபலமான சிறுகதை ஒன்று இயக்குனர் அனுராக் பாசு தொலைக்காட்சி தொடராக தயாரிக்கிறார். இதில் இளம் விதவை கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறாராம்.

 

ஹைகூ படப்பிடிப்பு முடிந்தது... மாஸ் வெளியாகும் தேதியில் ட்ரைலர்!

சூர்யா நடித்துள்ள ஹைகூ படத்தின் ட்ரைலர், அவரது மாஸ் படம் ரிலீசாகும் தேதியன்று வெளியாக உள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்'. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

Haiku trailer from May 29th

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் மே 29ம் தேதி வெளியாகிறது.

இந்த தேதியில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘ஹைக்கூ' படத்தின் டிரைலரையும் வெளியிடவுள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் சிறுவர்களுக்கானது. இதில் சூர்யாவும் அமலா பாலும் ஜோடியாக நடித்துள்ளனர்.

 

தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரிலேயே படம் வெளியாக வேண்டும்! - ரஜினி கண்டிப்பு

லிங்கா படத்தில் தனக்கு நேர்ந்த நெருக்கடிகள், நடந்தேறிய சூழ்ச்சிகள் அனைத்தையும் பார்த்த ரஜினி, தனது அடுத்த புதுப்படத்தில் இப்படி எந்த விஷயமும் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

ரஞ்சித் இயக்கும் இப்படத்துக்குத் தாணுதான் தயாரிப்பாளர் என்பதை முதலிலேயே உறுதியாகக் கூறிவிட்டாராம் ரஜினி.

Rajini's new condition to Thaanu

ஆனால் 'லிங்கா' படத்தைப் போலப் பல தயாரிப்பாளர்கள் மாறக் கூடாது என்று முடிவு செய்து, "எந்த ஒரு நிறுவனத்துடனும் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யாதீர்கள். உங்கள் பட நிறுவனத்தின் பெயரில்தான் முழுப் படமும் இருக்க வேண்டும், வெளியாகவும் வேண்டும்" என்று ரஜினி கூறினாராம். இதைப் பட ஒப்பந்தத்திலும் சேர்க்க வேண்டும் என்றாராம் ரஜினி. எந்திரன் படத்தில் இப்படித்தான் செய்தார். அதை தாணு படத்திலும் தொடரவிருக்கிறார்.

அதேபோல, ரஜினி படம் என்றாலே அவருக்கு சில ஏரியாக்கள் விநியோக உரிமை கொடுப்பார்கள். இப்படத்தில் அது போல எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்ட அவர், சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுப்பதோடு சரி.

வெளியீட்டுச் சமயத்தில் எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தாணு மட்டுமே பொறுப்பு என்பதை படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்போதே அறிவிக்கவும் படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

ரஜினி படம் என்பதால் எந்த வடிவிலாவது தொல்லை கொடுக்க நினைப்போருக்கு எச்சரிக்கை அளிக்கவே இத்தனை முன் ஜாக்கிரதை!

 

கைவிட்ட சினிமா கட்டிடம் கட்டப்போன கதாநாயகி!

கனவு தொழிற்சாலையான சினிமா எல்லோரையும் கடைசி வரை காப்பாற்றும் என்று சொல்ல முடியாது. சினிமா கைவிட்டாலும் இருக்கவே இருக்கிறது சீரியல் என்று சின்னத்திரைக்கு வந்து ஜொலிக்கும் நாயகிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதுவும் கை கொடுக்கவில்லையா இருக்கவே இருக்கிறது. பியூட்டி பார்லர், பேஷன் ஜூவல்லரி ஷாப், ஜவுளிக்கடை என்று செட்டில் ஆகிவிடுவார்கள். சில நடிகைகளோ தொழிலதிபரைப் பார்த்து திருமணம் செய்து கொண்டு காணாமலே போய்விடுவார்கள். ஒருசிலர் அரசியலில் குதித்து அவ்வப்போது பிரசாரத்திற்கு வந்து போவார்கள்.

நம்முடைய நாயகியின் கதையோ வேறு. ஒளி ஓவியரின் படத்தில் வண்ண வண்ணமாய் அறிமுகமானார். அழகான நாயகன்... இரண்டு நாயகி என்ற அந்த படத்தில் நாயகியை மேக் அப் இல்லாமலேயே நடிக்க வைத்தார் ஒளி ஓவியரான இயக்குநர்.

ஒரு நடிகை இயக்குநருடனேயே செட்டில் ஆகிவிட்டார். சீரியலிலும் வந்து போனார். ஆனால் நம்முடைய நாயகியின் கதையோ வினோதமானது. சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து அக்கா, அண்ணி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது. அதனால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார். சின்னத்திரையிலும் சொல்லிக்கொள்ளும்படியாக வாய்ப்புகள் அமையவில்லை. அவரது பெயரில் சில நடிகைகள் வந்து போனார்கள்.

நம் நடிகையோ நல்ல பில்டராக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சும்மா ஏன் இருக்கவேண்டும்? கட்டிடம் கட்டி வித்தால் கையில் நாலு காசாவது பார்க்கலாம் என்று கணவர் கொடுத்த ஐடியாவை கேட்டு கட்டுமான தொழிலில் காலூன்றி விட்டாராம். சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இவர் கட்டி வரும் கட்டிடங்கள் நடிகையின் பேர் சொல்கிறதாம். சின்னத்திரை நடிகை சங்கத்தின் தலைவிக்கு இவர்தான் கட்டிட காண்டிராக்டராம்.

 

அப்பா அர்ஜூன் இயக்கும் படத்தில் ”கதக்” கலைஞராக அசத்தும் மகள் ஐஸ்!

சென்னை: அர்ஜூனின் இயக்கத்தில் அவரது மகள் ஐஸ்வர்யா புதிய படமொன்றில் நடித்து வருகின்றார்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா "பட்டத்து யானை" படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

 Daughter Aishwarya's new film with father Arjun

இந்நிலையில் இது குறித்து "ஒரு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

நல்ல கதையம்சம் உள்ள படம் வந்தால் நடிக்கலாம். இல்லையென்றால் வேறு வேலையில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கின்றேன்" என்று தெரிவித்திருந்தார்.

தற்போது அப்பா அர்ஜூன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் ஐஸ்வர்யா. அப்படத்தில் கதக் நடனம் ஆடும் வேடத்தில் நடிக்கு ஐஸ்வர்யா, அதற்காக கதக் கற்று வருகின்றாராம்.

தந்தையின் நிறைவிற்காக கடினமாக பயிற்சி எடுத்து வருகின்றாராம் ஐஸ்... அம்மாவே ஒரு அருமையான நடனக்கலைஞர்... அப்போ மகளுக்கு இதெல்லாம் ரொம்ப ஈசிதான்... நடக்கட்டும்... நடக்கட்டும்...!

 

பாராட்டுகளைக் குவிக்கும் புறம்போக்கு எனும் பொதுவுடைமை.. மகிழ்ச்சியில் ஜனநாதன்

எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புறம்போக்கு எனும் பொதுவுடையமை அனைத்துத் தரப்பினரிடையேயும் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இயக்குநர் ஜனநாதனுக்கு மிகுந்த நிறைவைத் தந்துள்ளது இந்த வரவேற்பு.

ஒரு மரணதண்டனைக் கைதி, அவரைத் தூக்கில் தொங்கவிடும் கடமையை ஏற்றுக்கொண்ட காவல்அதிகாரி, தூக்குப்போடுகிற வேலையைச் செய்கிற ஊழியர் ஆகிய மூவருக்கிடையிலான நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியல் படம் மக்களுக்கான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக பாராட்டுகள் குவிந்துள்ளன.

Purambokku Enum Pothuvudaimai gets rave reviews

குறிப்பாக நக்ஸலைட்டுகள் எனும் மாவோயிஸ்டுகள் பற்றி தமிழில் அழுத்தமான படம் ஒன்று வந்ததே இல்லை. முன்பு ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன்தான் அப்படி வந்த படம். ஆனால் அது வணிக ரீதியான ஒருதலைப்பட்சமான பார்வையாகவே அமைந்துவிட்டது.

வெறும் சினிமாவுக்கான கதையாக இல்லாமல், படத்தின் காட்சிகளில் இன்றைய அரசியல் அவலங்களைச் சொன்னது, குரலற்றவர்களுக்கான குரலாய் சில காட்சிகள் வைத்திருப்பது.. என படம் தமிழ் சினிமாவின் புதிய முகமாகத் தெரிவதாக நேற்று படம் பார்த்த மூத்த அரசியல் தலைவவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படத்தில் நடித்துள்ள ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் ஆகியோருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

 

ரஜினி - ரஞ்சித் படத்தில் நயன்தாரா?

ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கப் போகும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கோடம்பாக்கம் முழுக்க ரஜினியின் அடுத்தடுத்த படங்கள், அவற்றின் இயக்குநர்கள், நடிக்கப் போகிறவர்கள் பற்றித்தான் பேச்சாக உள்ளது.

Nayanthara to play female lead in Rajini movie

ரஜினி முதலில் நடிக்கப் போவது கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கும் படத்தைத்தான். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வராத நிலையில் படத்துக்கும் தனக்கும் கிடைத்திருக்கும் பப்ளிசிட்டியைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறரார் ரஞ்சித்.

அதான் ரஜினி சார்... என்று அவரிடம் கூறி, திரைக்கதையை பக்காவாக முடிக்குமாறு தாணு கூறியுள்ளாராம்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு டூயட் இல்லை என்றாலும், நாயகி இல்லாமல் சரியாக இருக்காது என்பதால், நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

ரஜினியுடன் நடிப்பது நயன்தாராவுக்கு இது நான்காவது முறை. சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன், பின்னர் சிவாஜியில் ஒரு குத்துப்பாடலுக்கு ரஜினியுடன் துள்ளாட்டம் போட்டார். குசேலனில் ஜோடியாக வந்தார். இப்போது ரஞ்சித் படத்தில் ரஜினியின் நாயகியாகியிருக்கிறார்.

 

ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு... தொடர்ந்து தலைமறைவில் அல்போன்சா!

கவர்ச்சி நடிகை அல்போன்சாவுக்கு முன்ஜாமீன் தர கடும் எதிர்ப்பு எழுந்ததால், அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

தமிழ் பட உலகில் கவர்ச்சி நடிகையான அல்போன்சா அடிக்கடி பரபரப்பில் சிக்கிக் கொள்கிறார்.

Actress Alphonsa absconded

ஏற்கனவே இவர் வீட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒரு பெண்ணின் கணவரை அபகரித்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் சுமத்ரா. தன் கணவர் ஜெய்சங்கரை அல்போன்சா அபகரித்துக் கொண்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். .

இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த புகாரில் தான் கைதாகலாம் என கருதி அல்போன்சா முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அல்போன்சாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

மான்வேட்டை வழக்கு: சல்மான்கான் மனு தள்ளுபடி

ஜோத்பூர்: அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகள் 5 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி, நடிகர் சல்மான் கான் தாக்கல் செய்த மனுவை ஜோத்பூர் அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு இந்திப் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக கடந்த 1998ஆம் ஆண்டு சென்றபோது, சக நடிகைகளுடன் போய் அரிய வகை சிங்காரா மான்களை சல்மான் கான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Jodhpur Court rejects Salman Khan's revision petition

அத்துடன் மான்களை வேட்டையாடியபோது, பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கான உரிமங்கள் காலாவதியானவை என்றும் அவருக்கு எதிராக வனத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு ஜோத்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிந்த அரசுத் தரப்பு சாட்சியங்கள் ஐந்துபேரை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய மனு தாக்கல் செய்தார் சல்மான் கான்.

இதனை விசாரித்த ஜோத்பூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் வியாஸ்,

"சல்மான் கானின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சிகள் 5 பேரும், அரசுத் தரப்பு சாட்சிகள் ஆவர். அவர்களிடம் ஏற்கெனவே விசாரணை நிறைவடைந்து விட்டது. எனவே குறுக்கு விசாரணை தேவையில்லை," என்று உத்தரவிட்டார்.

ஏற்கெனவே மும்பையின் பாந்த்ரா பகுதியில் காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில், அரிய வகை மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் சல்மான்கானின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து சல்மான் கானின் வழக்குரைஞர் எச்.எம். சாரஸ்வத் கூறுகையில், "எந்த அடிப்படையில், மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரமும் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டமும் உள்ளது. ஆனால், தீர்ப்பு முழுவதும் கிடைத்த பிறகே, அதுகுறித்து இறுதி முடிவு எடுப்போம்," என்றார் அவர்.