பணகுடியில் "புதுமுகங்கள் தேவை" படபிடிப்பு


புதுமுகங்கள் தேவை... இது விளம்பரமல்ல.... ஒரு தமிழ்ப் படத்தின் தலைப்பு. படத்தின் தலைப்புக்கேற்ற மாதிரியே முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பணகுடி பகுதியில் நடக்கிறது.

வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகன்களாக சிவாஜி தேவ், ராஜேஸ் யாதவ், ஆதிஸ் மற்றும் கதாநாயகிகளாக தாமிரபரணி பானு, விஸ்ணு பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தை மஜா படத்தை இயக்கியர் மணீஸ்பாபு இயக்குகிறார். ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், கதை அபிமான், வசனம் கவிதா பாரதி, கலை மோகன் மகேந்திரன்.

இப்படத்தின் படபிடிப்பு கடந்த 3 தினங்களாக பணகுடி, ரோஸ்மியாபுரம் பகுதியில் நடநது வருகிறது. இங்கு கதாநாயகன் மற்றும் கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹோட்டல் போன்ற செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. கதாநாயகி தோழிகளுடன் துணி துவைப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.

இது குறித்து படத்தின் தயாரிப்பு மேற்பார்வை இயக்குனர் சுகுமார் கூறுகையில், "கடந்த மூன்று தினங்களாக இப்பகுதியில் செட் அமைத்து படபிடிப்பு நடத்தி வருகிறோம். இது ஒரு கமர்ஷியல் படம். இதில் பலர் அறிமுகம் ஆகிறார்கள். ரோஸ்மியாபுரத்தை தொடர்ந்து காவல்கிணறு, அம்பை, குற்றாலம், சேரன்மகாதேவி, திற்பரப்பு, முட்டம் ஆகிய இடங்களில் 40 நாட்கள் ஒரு கட்டமாக படபிடிப்பு நடத்த உள்ளோம். இந்த படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும்," என்றார்.
 

மைனா பட கன்னட ரீமேக் படப்பிடிப்பில் காயம்-நடிகை பாமா காயம்


கன்னடத்தில் ரீமேக் ஆகி வரும் மைனா பட ஷூட்டிங்கின்போது நடிகை பாமாவுக்கு காயம் ஏற்பட்டு விட்டது. அவரது கால்களில் கண்ணாடிகள் உடைந்து குத்தி விட்டன.

தமிழில் அமலா பால், விதார்த் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் மைனா. இப்படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் விதார்த் வேடத்தில் கணேஷ் என்பவரும், அமலா பால் வேடத்தில் நடிகை பாமாவும் நடிக்கின்றனர்.

பாமா தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகையான பாமா இப்போது கன்னடத்தில் நடித்து வருகிறார்.

கன்னட மைனா படத்தின் ஷூட்டிங் மூணாறில் உள்ள காட்டுப் பகுதிகளில் படமாக்கி வருகின்றனர். பஸ்சில் நாயகனும், நாயகியும் பயணிப்பது போலவும், அதில் வரும் நடனக் காட்சிக்குப் பின்னர் பஸ் விபத்துக்குள்ளாவது போலவும் படமாக்கினர்.

அப்போது பஸ் கண்ணாடி உடைந்து பாமாவின் கால்களில் குத்தி விட்டது. இதனால் ரத்தம் கொட்டியது. அதேபோல கணேஷின் கண்களிலும் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து விட்டன.

இதையடுத்து இருவரையும் மூணாறு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் இருவரும் படப்பிடிப்புக்குத் திரும்பினர்.

தமிழில் மைனா என்ற பெயரில் வெளியான இப்படம் கன்னடத்தில் ஷைலு என்ற பெயரில் படமாகிறது.
 

சல்மானுடன் காதலா? - மறுக்கும் ஸ்ரேயா


சல்மான் கானுக்கும் தனக்கும் காதல் என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

சல்மான்கானுக்கும் ஸ்ரேயாவுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசுகிசு பரவியது. அதற்கு ஏற்றார்போல இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர். சல்மான் கான் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் உருவானது.

சமீபத்தில் நடிகர், நடிகைகள் இணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இப்போட்டியின் விளம்பரதாரராக ஸ்ரேயா இருந்தார்.

மும்பையில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது சல்மான்கானும் ஸ்ரேயாவும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

ஸ்டண்ட் நடிகர் பெப்சி விஜயன் மார்க்கண்டேயன் படத்தில் தனது மகனை நாயகனாக்கி உள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. சமீபத்தில் சென்னையில் வெளியிட்ட போது சல்மான்கானும், ஸ்ரேயாவும் இணைந்து பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள். சல்மான்கானை பார்ப்பதற்காகவே ஸ்ரேயா இவ்விழாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான்கான் சகோதரி அர்பிதாகான் பிறந்தநாள் விருந்து மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விருந்துக்கு ஸ்ரேயா அழைக்கப்பட்டு இருந்தார். விருந்தில் சல்மான்கானும் ஸ்ரேயாவும் நெருக்கமாக இருந்தனர்.

இதையெல்லாம் வைத்து மீடியாவில் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தன.

சல்மான்கானை காதலிக்கிறீர்களா என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது, மறுத்தார். "சல்மான்கான் நல்லவர். மனிதாபமானம் மிக்கவர். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் என கிசு கிசுக்கள் பரவுவது வருத்தமாக உள்ளது. இது போன்ற சர்ச்சைகளில் தயவு செய்து என்னை இழுத்து விடாதீர்கள்," என்றார்
 

ராக்கியின் ரியாலிட்டி ஷோவில் பாபா ராம்தேவ்?


ராக்கி சாவந்த் நடத்தும் ரியாலிட்டி ஷோவில் அவரது 'கனவுக் கண்ணன்' பாபா ராம்தேவ் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிகிறது.

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அன்மையில் தான் பாபா ராம்தேவ் மிகவும் செக்ஸியாக இருப்பதாகவும். அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது பாபா ராம்தேவ் தனது ரியாலிட்டி ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம், போராட்டம் என்றிருக்கிறார். ஆனால் ராக்கியோ அவரை தனது கணவராக்க விரும்புகிறார்.

இது குறித்து அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

நான் பாபா ராம்தேவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தொலைக்காட்சியில் தெரிவித்தேன். ஆனால் அது குறித்து அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதனால் அந்த விஷயம் பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் சொன்னது கண்டிப்பாக அவர் காதுகளுக்கு சென்றிருக்கும். சரி, என்ன செய்வது? மறந்துவிடுங்கள்.

எனக்கு பாபா ராம்தேவ் என்றால் ரொம்ப இஷ்டம். நான் அவர் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் மக்கள் நான் காமெடியடிப்பதாக நினைக்கிறார்கள்.

நான் பாபாவைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியவுடன் பலர் என்னிடம் ஏன் பாபாவைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்கின்றனர். அதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். விடையைப் பெறத்தான் அவரை எனது ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளுமாறு அழைத்தேன். அவரும் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அவர் வரும்போது நான் அவரைப் புகழ்ந்து தள்ளுவேன், பிரணயானம் செய்து காட்டுவேன், அவருக்காக ஒரு நடனம் கூட ஆடவிருக்கிறேன் என்றார்.

பாபா ராம்தேவ் ஏற்கனவே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இதில் ராக்கி வேறா?

கடவுள் தான் பாபா ராம்தேவை ராக்கியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
 

குழந்தையுடன் திருப்பதியில் சாமி கும்பிட்டார் நடிகை ரம்பா


நடிகை ரம்பா தனது குழந்தையுடன் திருப்பதி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார்.

கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தொழிலதிபரான இந்திரனுக்கும், நடிகை ரம்பாவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதியில் வைத்துத் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவருடன் இனிய இல்லறத்தைத் தொடங்கினார் ரம்பா. இதன் விளைவாக அவர் கர்ப்பமானார்.

கடந்த ஜனவரியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கனடாவில் பிறந்த இக்குழந்தைக்கு லன்யா என அழகிய பெயரைச் சூட்டியுள்ளனர் ரம்பா, இந்திரன் தம்பதியினர்.

இந்த நிலையில் தனது குழந்தையுடன் ரம்பா திருப்பதிக்கு வந்தார். அங்கு தனது குழந்தையுடன் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். சிறப்பு அபிஷேகமும் செய்தார்.

திடீர் திருப்பதி விஜயம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நல்லபடியாக சுகப்பிரசவம் நடந்தால் குழந்தையுடன் வந்து சாமி கும்பிடுவதாக நேர்ந்திருந்தேன். அதன்படி நல்லபடியாக பிரசவம் நடந்ததால் வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறேன் என்றார்.

மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, கல்யாணத்துக்குப் பின்னர் நடிக்கவில்லை. இருந்தாலும் நல்ல படங்கள் கிடைத்தால் நடிப்பேன் என்றார்.
 

அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பி.சி.ரெட்டியின் பேத்தியை மணக்கிறார் சிரஞ்சீவி மகன்


ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி உபாசனாவுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது.

நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா. தெலுங்கில் முன்னணி கதாநாயகன்களில் ஒருவர். அவர் நடித்த மகதீரா சூப்பர் டூப்பர் ஹிட். அந்த படம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது.

ராம்சரண் தேஜாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. மணமகள் அவர் காதலி உபாசனா. அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் வழி பேத்தி. உபாசனாவின் தந்தை அனில் காமினேனி, தாய் ஷோபனா. அவர்கள் ஹைதராபாத்தில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

அந்த மருத்துவமனையில் உபாசனா முக்கிய பொறுப்பில் உள்ளார். ராம்சரண் தேஜாவும், உபாசனாவும் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்த போதில் இருந்து காதலித்து வருகின்றனர். இரு வீட்டாரும் காதலுக்கு மரியாதை அளித்து பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. ராம்சரண் தேஜா படுபிசியாக இருப்பதால் இன்னும் 1 ஆண்டு கழித்து தான் திருமணமாம்.

வாழ்த்துக்கள் மாவீரா!
 

வரி ஏய்ப்பு: மும்பை விமான நிலையத்தில் ஏக்தா கபூரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை


மும்பை: பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பாங்காக்கிலிருந்து மும்பை திரும்பிய அவரிடம் வரி செலுத்தப்படாத ரூ 90 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், அவரைத் தடுத்து, 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் எந்தக் கேள்விக்கும் அவர் சரியான பதிலை அளிக்கவில்லை. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மும்பை விமான நிலையத்தில் பிரபலங்கள் வரிகட்டாத பொருளுடன் வந்து மாட்டிக் கொள்வது இது முதல்முறை அல்ல. அனுஷ்கா சர்மா, பிபாஷா பாசு, மின்னிஷா லம்பா ஆகியோர் சமீபத்தில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருள்களுடன் வந்து மாட்டிக் கொண்டது நினைவிருக்கலாம்.
 

ரேடியோ மிர்ச்சியில் மங்காத்தா ஆடியோ ரிலீஸ்!


அஜீத்தின் பொன் விழா படமான மங்காத்தாவின் இசை வெளியீடு ரேடியோ மிர்ச்சி எப் எம் ஸ்டேஷனில் வரும் 10-ம் தேதி நடக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வானொலி நிலையத்துக்கே வந்து இசை ஆல்பத்தை வெளியிடுகிறார்கள்.

அன்றைய தினம் மங்காத்தா பாடல்கள் வானொலியில் ஒவ்வொன்றாக ஒலிபரப்பாகும். இடையிடையே யுவன், வெங்கட் பிரபுவின் பேட்டியும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் இவர்கள் பதிலளிக்க உள்ளனர்.

மங்காத்தா பாடல்களை சட்டப்பூர்வமாக நோக்கியாவின் ஓவி ஸ்டோர் மூலம் பதிவிறக்கிக் கொள்ளலாம் என சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அஜீத்துடன் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய் உள்பட பலரும் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
 

உதயம் தியேட்டரில் குண்டு மிரட்டல்... அலறிடித்து ஓடிய ரசிகர்கள்!


சென்னை: பிரபல உதயம் சினிமா திரையரங்குக்கு நேற்று பகலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் சினிமா பாக்க வந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பகல் 12 மணி அளவில் பேசிய மர்ம நபர் ஒருவர், "சென்னை கே.கே.நகர் உதயம் சினிமா தியேட்டரில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் குண்டு வெடித்து, தியேட்டர் சிதறப் போகிறது. இதை அந்த தியேட்டரின் காவலாளி தடியனிடம் சொல்லுங்கள்'' என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இது பற்றி உடனடியாக கே.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், மோப்பநாய், மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று உதயம் தியேட்டரில் சோதனை போட்டார்கள்.

அப்போதுதான் காலை காட்சி தொடங்க தயாராக இருந்தது. உடனடியாக ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை நடந்தது. ஆனால் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சினிமா காட்சி நடந்தது.

மிரட்டல் ஆசாமி, தியேட்டர் காவலாளியை திட்டியதால், அந்த காவலாளிக்கு வேண்டாத நபர் யாரோ, இது போல் போனில் பேசி மிரட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.