அண்ணன் மீது நடிகை ரோஜா கொலை மிரட்டல் புகார்!

சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா, தனது அண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.

தொன்னூறுகளில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகை ரோஜா. 2002-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தமிழ் சினிமாவில் அண்ணி, அம்மா, வில்லி வேடங்களில் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் அதனால் ஆந்திர அரசியலிலும் தீவிரமாக களமிறங்கி, பல கட்சிகள் தாவி, இப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக உள்ளார்.

அண்ணன் மீது நடிகை ரோஜா கொலை மிரட்டல் புகார்!

இந்நிலையில், ரோஜா அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கம் போலிசீல் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "என்னுடைய அண்ணனும் ரியல் எஸ்டேட் அதிபருமான ராம்பிரசாத் ரெட்டியும், தனது மேனேஜர் பிரசாத் ராஜூம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

நான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை இருவரும் பறித்துக் கொண்டதால், இப்போது தொலைக்காட்சியில் நடித்து சம்பாதித்து வருகிறேன். என்னுடைய அண்ணனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் நான் பேசுவதில்லை.

இந்நிலையில், கடந்த 3-ந் தேதி இருவரும் என்னிடம் வந்து உன் சொத்தை எங்களுடைய பெயருக்கு மாற்றி எழுதி தரவேண்டும். இல்லையென்றால், உன்னை ஒழித்து விடுவோம் என மிரட்டி விட்டுச்சென்றனர். ஆகையால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் ராயதுர்கம் போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

அதெல்லாம் முடியாது... அந்த தொப்புள் சீனை தூக்கியே ஆகணும் - நஸ்ரியா அடம்

ஆனாலும் இந்தப் பொண்ணுக்கு இவ்வளவு...இவ்வளவு அடம் ஆகாதுய்யா என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் கதிரேசனும் இயக்குநர் சற்குணமும்.,

அந்தப் பொண்ணு... யெஸ்.. நஸ்ரியாவேதான்.

அதெல்லாம் முடியாது... அந்த தொப்புள் சீனை தூக்கியே ஆகணும் - நஸ்ரியா அடம்  

தன் அனுமதியில்லாமல் வேறு பெண்ணின் தொப்புளையும் தன் தலையையும் ஒட்ட வைத்து கவர்ச்சியாகக் காட்டி விட்டார்கள் என்பது நஸ்ரியாவின் புகார்.

இந்தப் புகாரை விசாரித்த நடிகர் சங்கம், 'சரி... ஆனது ஆச்சு... அதான் அந்த தொப்புள் உங்களுடையதில்லை என மீடியாவில் பிரபலமாயிடுச்சில்ல.. மேட்டரை இதோட விட்டுட்டு, அடுத்த வேலையைப் பாருங்க,' என்று சமாதானம் செய்தார்களாம்.

ஆனால் நஸ்ரியா அதை விடுவதாகவே இல்லை.

"இது மிகப் பெரிய தவறு. நான்தான் ஆரம்பத்திலிருந்தே இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மறுத்து வருகிறேனே. இருந்தும் இப்படிச் செய்திருப்பது மோசடிதானே. புது பெண்தானே... என்ன செய்துவிடப் போகிறாள் என்ற நினைப்பில் இதுபோல செய்திருக்கிறார்கள். எந்த சமாதானத்துக்கும் நான் தயாராக இல்லை. அந்தக் காட்சியை நீக்கியே தீர வேண்டும்," என பிடிவாதமாகக் கூறிவிட்டாராம் நஸ்ரியா.

இதைக் கேட்டுத்தான், அப்படிக் கமெண்ட் அடித்தார்களாம் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

 

தேவைப்பட்டால் கோர்ட்டுக்கும் போவேன்... - 'நய்யாண்டி'யை 'வில்லங்க'மாக்கும் நஸ்ரியா

தேவைப்பட்டால் கோர்ட்டுக்கும் போவேன்... - 'நய்யாண்டி'யை 'வில்லங்க'மாக்கும் நஸ்ரியா

சென்னை: இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவேன் என்று நஸ்ரியா நஸீம் அறிவித்துள்ளார்.

படத்தின் டைட்டில் நய்யாண்டி என்றாலும், நடப்பதையெல்லாம் பார்த்தால் வில்லங்கம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் இருவரையும் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன் எனக் கிளம்பியுள்ளனர் நஸ்ரியாவும் அவர் தந்தையும்.

நய்யாண்டி படம் தொடங்கும்போதே கவர்ச்சிக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். ஆனால் ஒரு முறை கவர்ச்சியாக ஒரு ஆடை கொடுத்து அணியச் சொன்னாராம் இயக்குநர். உடனே அதை அணிய மறுத்து கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம், மணிக்கணக்கில். பின்னர் தனுஷ் போய் சமாதானம் செய்து கூட்டி வந்தாராம்.

அடுத்த சில தினங்களில்தான் இந்த தொப்புள் விவகாரம் வந்துவிட்டது.

இந்தக் காட்சியை வேறு ஒரு பெண் மற்றும் தனுஷ் போன்ற தோற்றமுடைய ஒருவரை வைத்து எடுத்துவிட்டு, அதை பாடி டபுள் செய்து, ட்ரைலரில் சேர்த்துவிட்டாராம் சற்குணம். இதைக் கேட்கப் போய்தான் இவ்வளவு வில்லங்கமும் வெடித்தது.

நஸ்ரியாவின் தந்தை இதுபற்றி கேட்டபோது, தன் அரசியல் பின்புலத்தைச் சொல்லி சற்குணம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் கதிரேசனும் மிரட்டினாராம்.

இதனால் என் சொத்தே போனாலும் கவலையில்லை, உன்னை ஒரு வழி பண்ணுகிறேன் பார் என்று வரிந்து கட்டிக் கொண்டு இப்போது போலீசுக்குப் போயிருக்கிறார்கள்.

"முதலில் சினிமா அமைப்பில் முறைப்படி புகார் தந்தேன். அங்கே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த மோசடியை எதிர்த்து கமிஷனர் அலுவலகத்துக்குப் போக வேண்டியதாயிற்று. நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளேன்," என்கிறார் நஸ்ரியா.

 

விரைவில், 'காக்கி’க்கு மாறப் போகும் காமெடி நடிகர்....

சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்த அந்த காமெடி கதாநாயகன் விரைவில் காக்கி அணிந்து பட்டையைக் கிளப்பப் போகிறாராம். படத்தில் அவர் காமெடி போலீசா இல்லை கறார் போலீசா எனத் தெரியவில்லை. ஆனால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தப்படம் முதலில் நடிகரின் காட்பாதரான சுள்ளானுக்குத் தான் வந்ததாம். அவர் தான் தன்னை விட இந்த கதாபாத்திரத்திற்கு காமெடி பொருத்தமாக இருப்பார் என பரிந்துரை செய்தாராம்.

நண்பரும், காட்பாதருமான சுள்ளானின் அறிவுரைப்படி தான் படங்களைத் தேர்வு செய்கிறாராம் காமெடி. திரையுலக நட்பு மட்டுமின்றி குடும்ப விஷயங்களையும் காட்பாதரிடம் பகிர்ந்து கொள்ளும் நடிகர், சமீபத்தில் காதல் மனைவியை விவாகரத்துசெய்யப் போவதாக கிளம்பிய வதந்தியின் போது கூட, மனைவி கையால் சமைத்த விருந்தை காட்பாதருக்கு பரிமாறி, திருமண நாள் ஆசி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

செக் மோசடி - நடிகை ஜீவிதாவுக்கு பிடி ஆணை!

ஹைதராபாத்: நடிகர் டாக்டர் ராஜசேகர் மனைவியும் நடிகையுமான ஜீவிதாவுக்கு செக் மோசடி வழக்கில் பிடி ஆணை பிறப்பித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.

நடிகை ஜீவிதா, பரந்தாமரெட்டி என்பவரிடம் ரூ.34 லட்சம் கடனாக வாங்கினார். 3 மாதங்களில் திருப்பிக் கொடுப்பதாக கூறிய ஜீவிதா, சொன்னபடி பணத்தைக் கொடுக்கவில்லை.

செக் மோசடி - நடிகை ஜீவிதாவுக்கு பிடி ஆணை!

அவர் ஏற்கனவே கொடுத்த 'செக்'கை பரந்தாமரெட்டி வங்கியில் போட்டபோது, அது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதனால் பரந்தாமரெட்டி ஜூபிலி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் 2 முறை நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியும் ஜீவிதா கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதனால் ஜீவிதாவுக்கு நேற்று ஐதராபாத் கோர்ட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்தது. நடிகை ஜீவிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜூபிலி ஹில்ஸ் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

இந்திய சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைப்பாரா ரஜினிகாந்த்?

இந்திய சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைப்பாரா ரஜினிகாந்த்?

பனாஜி: கோவாவில் நடக்கவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவைத் துவங்கி வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விழாவை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் துவங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ஆண்டு விழா வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி துவங்குகிறது. இந்த விழாவை துவங்கி வைக்குமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழா ஏற்பாட்டாளரான என்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆப் கோவாவின் துணை தலைவர் விஷ்ணு வாக் கூறுகையில்,

ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம். அவர் தரப்பில் இருந்து ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் இந்த விழாவை துவங்கி வைத்தால் அது கௌரவம். இந்த மாத இறுதி வரை ரஜினியின் ஒப்புதலுக்காக காத்திருப்போம் என்றார்.

ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொள்வார் என்று விழா ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

 

இசையமைப்பாளர் கட்டிய ஆடம்பர பங்களா...

இசையமைக்க வெளிநாடு சென்றால் தான் முடியும் என அடம் பிடித்து தயாரிப்பாளர் செலவில் இலவச வெளிநாட்டு சுற்றுலா சென்று வரும் இசையமைப்பாளர் இவர்.

சமீபத்தில் இவர் சென்னையில் ஒரு புது வீடு கட்டியுள்ளார். இசையைப் பார்ப்பதற்காக அவரது திரை உலக நண்பர்கள் சிலர் புது வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டைப் பார்த்து விட்டு, சுமார் 10 கிரவுண்ட் பரப்பளவில் கட்டப் பட்ட அது வீடே அல்ல அரண்மனை என வாய் பிளக்கிறார்களாம் நண்பர்கள்.

வீட்டைப் போலவே, கார்கள் விஷயத்திலும் இசையின் ரசனையே தனி தானாம். ஹம்மர் கார் உட்பட நான்கைந்து வெளிநாட்டுக் கார்கள் உள்ளதாம் இசையிடம்.

இந்த இசையிடம் சில ட்யூன்களே உள்ளதால், எல்லாப் படத்திலும் ஒரே மாதிரியான பாடல்களையே கேட்க முடிவதாக பலரும் புலம்புகிறார்களாம் - திரையுலகிலேயே. ஆனால் இசையோ கவலைப்படுவதாகவே உள்ளதாம். மேலும் ரொம்ப ரொம்ப லேட்டாக பாட்டுக்களைப் போட்டுத் தருவதால் பலர் இவரிடமிருந்து விலகவும் ஆரம்பித்து விட்டனராம்.

இருந்தாலும் கவலைப்படாத இசை.. தமிழ் கைவிட்டால் என்ன தெலுங்கில் தேட்டையைப் போடுவேனே என்று மிக்கி மவுஸ் கணக்கில் பேசிச் சிரிக்கிறாராம்....!

 

வயசானாலும் உங்க அழகும், திறமையும் குறையல...நடிகையைச் சுற்றும் தயாரிப்பாளர்கள்

நம்பர் நடிகைக்கு படவாய்ப்புகள் வந்து குவிகிறதாம். வயது கூடிக் கொண்டே செல்கின்ற போதும், அவரை விட இளமையான நடிகைகள் பலர் அறிமுகம் ஆன போதும் வயது வித்தியாசமின்றி இளவயது நடிகர்கள் முதல் வயதான நடிகர் வரை அனைவரது சாய்ஸ்சும் அம்மணி தானாம்.

சொந்த வாழ்க்கையில் காதல், திருமண ஆசை என அடிக்கடி காயம் பட்ட நடிகை இனி, தன் முழு கவனமும் நடிப்பின் மீது தான் என தீர்மானித்து விட்டாராம். பழைய சர்ச்சைகளை எல்லாம் மறக்க கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்த முடிவெடுத்துள்ளாராம் நடிகை.

தமிழ்-தெலுங்கு ஆகிய இருமொழி பட உலகிலும் அம்மணி தான் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார். அதனால் தனது குடும்ப வாழ்க்கை ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டாராம் இந்த ராணி.

நடிகையின் முடிவைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் எண்ண முடியாத காசோலைகளோடு அம்மணியின் வீட்டு வாசலில் தவமிருக்கிறார்களாம் கால்ஷீட்டுக்காக.

 

இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனரிடம் புகார்- நஸ்ரியா அதிரடி

சென்னை: வேறு பெண்ணின் தொப்புளோடு தன் தலையை ஒட்ட வைத்து படமெடுத்துவிட்டார் என இயக்குநர் சற்குணம் மீது புகார் கூறி வந்த நஸ்ரியா, அடுத்து இதே புகாரை சென்னை போலீஸ் கமிஷனரிடமும் இன்று பிற்பகல் தந்தார்.

இன்று பகல் 12 மணிக்கு கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நஸ்ரியா, இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் மீது புகார் தந்தார்.

இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனரிடம் புகார்- நஸ்ரியா அதிரடி

நய்யாண்டி படத்தில் தனுஷுடன் காதல் காட்சியில் நடித்த போது, க்ளோஸ் அப்பில் தொப்புள் தெரிகிற மாதிரி ஒரு காட்சி இருந்ததாம். ஆனால் அதில் நஸ்ரியா நடிக்க மறுத்துவிட்டாராம். உடனே வேறு பெண்ணை வைத்து தொப்புள் காட்சியை மட்டும் எடுத்துவிட்டு, அந்த உடலோடு நஸ்ரியாவின் தலையை கிராபிக்ஸில் பொருத்திவிட்டார்களாம்.

விஷயம் தெரிந்ததும் கொந்தளித்துவிட்ட நஸ்ரியா, இதை பெரிய விஷயமாக்கி நடிகர் சங்கத்தில் புகார் தந்துவிட்டார். அவர்களோ சமாதான முயற்சியில் இறங்க, நஸ்ரியா அதற்கெல்லாம் இறங்கி வரவில்லை.

இப்போது விஷயத்தை கமிஷனர் ஆபீஸுக்குக் கொண்டு போய்விட்டார் நஸ்ரியா.

இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனரிடம் புகார்- நஸ்ரியா அதிரடி

தன்னை மோசடி செய்துவிட்டதாகக் கூறி, இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் தந்தார்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு அவர் கமிஷனர் அலுவலகத்துக்கு வருவது தெரிந்ததும், ஏராளமான மீடியாக்காரர்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்துவிட்டனர்.

புகார் கொடுத்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் தன் புகாரை விவரமாகக் கூறிவிட்டுச் சென்றார் நஸ்ரியா.

இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனரிடம் புகார்- நஸ்ரியா அதிரடி
 

எனக்கு போட்டுக் காட்டாவிட்டால் நய்யாண்டி படத்தையே நிறுத்தணும்! - நஸ்ரியா

சென்னை: நய்யாண்டி படத்தை ரிலீசுக்கு முன் எனக்கு போட்டுக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் படத்தை நிறுத்த வேண்டும், என படத்தின் நாயகி நஸ்ரியா நஸீம் கமிஷனரிடம் வற்புறுத்தியுள்ளார்.

நஸ்ரியா இன்று பிற்பகல் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு எதிராக புகார் கொடுத்தார்.

அப்போது நய்யாண்டி படம் வெளியாகாமல் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எனக்கு போட்டுக் காட்டாவிட்டால் நய்யாண்டி படத்தையே நிறுத்தணும்! - நஸ்ரியா

அவரது குற்றச்சாட்டின் முக்கியமான பகுதி இது:

நான் நடித்த நய்யாண்டி படத்தில் என் அனுமதி இல்லாமல், நான் நடிக்காத பகுதியை நடித்தது போல காட்டியுள்ளனர். இது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் சார்ந்த மதத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

இயக்குநர் சற்குணம் இதன் மூலம் மோசடியானவர் என்பது அம்பலமாகியுள்ளது. இதுபோல மேலும் எத்தனை காட்சிகளை படத்தில் வைத்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன் அந்தப் படத்தை எனக்கு முழுவதுமாகப் போட்டுக் காட்டி, நான் ஆட்சேபிக்கிற காட்சிகளை தூக்க வேண்டும்.

இல்லாவிட்டால் படம் வெளியாவதையே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் என் குடும்பமும் மதமும் ரசிகர்களும் கடுமையாக எதிர்ப்பார்கள்.

-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் நஸ்ரியா.

 

புதுமாப்பிள்ளை சீமானுக்கு விருந்து வைத்த பாரதிராஜா!

சென்னை: சமீபத்தில் திருமணம் செய்த இயக்குநர் சீமான் - கயல்விழி தம்பதிகளுக்கு இயக்குநர் பாரதிராஜா தன் இல்லத்தில் விருந்து வைத்தார்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்தார்.

புதுமாப்பிள்ளை சீமானுக்கு விருந்து வைத்த பாரதிராஜா!

இந்த திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் பிரமாண்டமாக அசைவ விருந்து கொடுத்தார் சீமான்.

புதுமணத் தம்பதிகளான சீமானையயும் கயல்விழியையும் இப்போது நண்பர்களும் நலம் விரும்பிகளும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இயக்குநர் பாரதிராஜ் தனது நீலாங்கரை வீட்டுக்கு கடந்த 6-ம் தேதி சீமானையும் அவர் மனைவியையும் அழைத்திருந்தார்.

ஆடு, கோழி, நண்டு, மீன் என அசைவத்தில் எத்தனை வகையிருக்கிறதோ அவ்வளவையும் சமைத்து விருந்தளித்தாராம் இயக்குநர்.

இந்த விருந்து பற்றித்தான் அக்கம்பக்கத்திலெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது இன்னும்!

 

என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம்!- நஸ்ரியா

சென்னை: என்னையும் என் குடும்பத்தாரையும் கேவலமாகப் பேசினார் இயக்குநர் சற்குணம் என்று நடிகை நஸ்ரியா கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நஸ்ரியா கொடுத்துள்ள புகார் விவரம்:

Nazria Complaint Nazria ComplaintNazria Complaint

நான் கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள். தமிழ்- மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.

தமிழில் தற்போது நய்யாண்டி என்ற படத்தில் நடித்துள்ளேன். அந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் நான் நடிக்காத ஒரு காட்சி, நான் நடித்தது போல எடுக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரை வைத்து எடுத்த அந்தக் காட்சியை படத்தின் ட்ரைலரில் சேர்த்து யு ட்யூபில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

படப்பிடிப்பின்போது, குறிப்பிட்ட அந்தக் காட்சி எனக்கும் என் குடும்பத்துக்கும் என் மதத்துக்கும் சரியாக வராது என்று தெரிந்ததால் அந்தக் காட்சியில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.

இது தொடர்பாக எனக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்து, முடிவில் அந்தக் காட்சி இல்லாமலேயே பாடலை முடிக்க ஒப்புக் கொண்டார்கள்.

ட்ரைலரைப் பார்த்த பிறகு இயக்குநர் சற்குணத்துக்கு போன் செய்து ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்டேன். உடனே அவர் என்னை மோசமாகத் திட்டினார். என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டியதோடு, நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார். முதல்வர் அலுவலகத்தில் எனக்கு எதிராகப் புகார் தருவதாகக் கூறி மிரட்டினார்...

இதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசனைத் தொடர்பு கொண்ட போது அவர் வேண்டுமென்றே தவிர்த்தார்.

கமிஷனர் அவர்களே, எனக்கும், என் குடும்பத்துக்கும், நான் சார்ந்த மதத்துக்கும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!"

-இவ்வாறு நஸ்ரியா புகார் செய்துள்ளார்.

 

இயக்குனர் லிங்குசாமி வீடு மற்றும் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

இயக்குனர் லிங்குசாமி வீடு மற்றும் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

திரைப்பட இயக்குநர் லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து ‘ரன்', ‘ஜி', ‘சண்டக்கோழி' பையா, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

வளசரவாக்கத்தில் இருக்கும் லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் பற்றி இதுவரை எந்த தகவலையிலும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

லிங்குசாமி சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லிங்குசாமி.

இந்த நிறுவனம் மூலம் ‘வழக்கு எண் 18/9', ‘கும்கி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தார்.

இவர் தற்போது சூர்யா நடிப்பில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மேலும், கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்', விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனராக வெற்றிபெற்ற லிங்குசாமி தயாரிப்பாளராகவும் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சீரியல் நடிகை கல்யாணிக்கு கல்யாணம்...

குட்டிப் பெண்ணாய் ஏராளமான டிவி சீரியல்களிலும், ஓரிரு தமிழ்ப் படங்களிலும் தலை காட்டியவர் கல்யாணி. இப்போது பூர்ணிதா என்று பெயரை மாற்றிகொண்டுள்ளார்.

பீச் கேர்ல்ஸ் நிகழ்ச்சியை ராஜ் டிவியில் தொகுத்து வழங்கினார். தற்போது விஜய் டிவியில் தாயுமானவன் சீரியலில் ரிப்போர்ட்டராக நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை கல்யாணிக்கு கல்யாணம்...

நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல. கல்யாணிக்கு (பூர்ணிதா) கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறதாம். பொண்ணு, இப்பதான் குட்டிக் குழந்தையா... பிரபுதேவா கூட டான்ஸ் ஆடுன மாதிரி இருக்கு. அதுக்குள்ள கல்யாண வயசு வந்துடுச்சா என்று கேட்பவர்களுக்கு அவரே வெட்கத்துடன் ஆமாம் கூறியுள்ளார்.

கல்யாணியின் கணவர் ரோஹித். சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் இப்போது மும்பையில் செட்டில் ஆன டாக்டராம். சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

கல்யாணி நடித்துக் கொண்டிருக்கும் 'தாயுமானவன்' சீரியலை முதல் ஆளாக உக்காந்து பாக்கறது மாமியார் வீட்டில்தானாம். அந்த அளவுக்கு எல்லாரும் முழு சப்போர்ட் என்கின்றனர். திருமணத்திற்கு பிறகு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பா நடிப்பேன் என்கிறார்.