சென்னை: சூது கவ்வும் படத்தில் மாமா, மாமா என கொஞ்சும் அழகு கனவுத் தேவதையாக வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
இவரும் பாண்டிய நாடு படத்தில் விஷாலைப் பார்த்து கலாய்ச்சிஃபை செய்த நடிகை லட்சுமி மேனனும் தற்போது பெஸ்ட் பிரண்டுகளாகி விட்டார்களாம்.
இது தொடர்பான டுவிட்டர் பதிவில், ‘நான் என் பெஸ்ட் பிரண்டைக் கண்டுபிடித்து விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி.
My new found bestie ☺️ pic.twitter.com/AJilZxqLfB
— Sanchita Shetty (@iSanchita) September 23, 2014 மேலும், லட்சுமிமேனனுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். கூடவே கன்னங்களில் ரோஸ் கலர் பூசியது போன்ற ஸ்மைலி வேறு.
சமீபகாலமாக நடிகைகள் வெளிப்படையாகவே தங்களது சக நடிகைகளைத் தோழமையுடன் பார்ப்பது அதிகரித்துள்ளது.
நடிகை எமி ஜாக்சன் தனக்குப் பிடித்த நடிகை திரிஷா தான் எனக் கூறியதும், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் எமி ஜாக்சனின் நடிப்பு பிரமாதம் என திரிஷா பாராட்டியதும் நினைவுக் கூறத் தக்கது.
போட்டி இருக்கும் இடத்தில் பொறாமையும் இருக்கத்தானே செய்யும்.. அதையும் தாண்டி வரும் இந்த மாதிரியான சில அரிய நட்புகள் பார்க்கவே சந்தோஷமாகத்தான் இருக்கிறது.