என் காதலை படமாக்குவதா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'என் காதல் கதையை படமாக்க யாருக்கும் உரிமை இல்லை' என்று முன்னாள் காதலனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தீபிகா படுகோன்.பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தமிழில் ரஜினி ஜோடியாக 'ராணா'வில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தீபிகாவின் முன்னாள் காதலன் பாலிவுட் ஹீரோ நிஹர் பாண்டே. ஆண்டுக்கணக்கில் காதல் பறவைகளாக வலம் வந்த இவர்கள் திடீரென்று பிரிந்தனர்.இந்நிலையில் நிஹர் பாண்டே, தீபிகாவுடன் தனது காதல் அனுபவ கதையை பிரபல இயக்குனர் பிரசாந்த் சாத்தாவுக்கு விற்றிருக்கிறார். அதில் அவரே ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். படத்துக்கு 'தீபிகா ஓ மை டார்லிங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதையறிந்த தீபிகா கடும் கோபம் அடைந்தார். 'இது கீழ்த்தரமான ரசனை. மற்றொருவரின் காதல் வாழ்க்கையை படமாக்க வேறு யாரோ ஒருவர் எப்படி முடிவு செய்யலாம். இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள். இதை என்னால் ஏற்க முடியாது' என்று கூறி உள்ளார். பாலிவுட்டில் நடிகைகளின் காதல் வாழ்க்கை படமாவது இதுமுதல்முறை அல்ல. சுஷ்மிதா சென், பர்வீன்பாபி போன்றவர்களின் உண்மை காதல் கதைகள் ஏற்கனவே இதுபோல் படமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது.  பாய்ஸ், 'சந்தோஷ் சுப்பிரமணியம்' 'வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் நடந்தது. திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், அஜய் தேவ்கான் மற்றும் காஜோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் புகுந்தார் ஸ்ரேயா

புதுமுக நடிகை வெளியேறிய படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. சமீபகாலமாக தமிழில் ஸ்ரேயா புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தி, தெலுங்கில் மட்டும் நடித்து வருகிறார். புதுமுக நடிகைகளின் வரவும், படத்தின் வெற்றி தோல்வியின் அதிர்ஷ்ட சென்டிமென்டாலும் ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நடிகர்களை நம்பாமல் புதுமுகங்களை நம்பி படம் எடுப்பவர் பாலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா. 'லைப் ஈஸ் பியூட்டிபுல்' என்ற படத்தை இவர் இயக்குகிறார். வழக்கம்போல் இப்படத்திலும் புதுமுக ஜோடிகளை தேர்வு செய்தார். கடந்த நவம்பர் மாதமே படத்தை முடித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட புதுமுக ஹீரோயின் அமெரிக்காவில் வாழும் இந்தியர். கால்ஷீட் கொடுத்த நடிகை குறிப்பிட்ட தினத்தில் வரவில்லை. இதையடுத்து ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவரை நம்பி ஷூட்டிங்கை தள்ளி வைத்ததுதான் மிச்சம். ஆனால் அமெரிக்கா சென்றவர் திரும்பவில்லை. மாதக்கணக்கில் காத்திருந்த இயக்குனர் சேகர் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். ஸ்ரேயாவை அணுகி நிலைமையை விளக்கி கால்ஷீட் கேட்டார். உடனடியாக ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்தார். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது.

படிப்பதில் கிடைக்கும் ஆனந்தமும், சுகமும் வேறு எதிலும் கிடைக்காது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ் ணன் கனடா நாட்டின் இயல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள் ளார். இதையொட்டி சென்னையில் நேற்று அவருக்கு பாராட்டு விழா நடந்தது. 'உயிர்மை' மனுஷ்யபுத்ரன் வரவேற்றார். எஸ்.ஏ.பெருமாள், வெ.இறையன்பு, கவிஞர் வைரமுத்து, விஜயசங்கர், கு.ஞானசம்பந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  
விழாவில் ரஜினி பேசியதாவது:

வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதுதான் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். என்னுடைய வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுத முயற்சித்தபோது, எனது பண்ணை வீட்டிற்கு வந்து 15 நாள் ராமகிருஷ்ணன் எழுதினார். படித்தபோது, அதில் நிறைய உண்மைகள் இருந்தது. இது யாருடைய மனதையாவது புண்படுத்துமே என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன்.  

நான் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும்தான் படித்தேன். ஆனால், வாழ்க்கையை தெரிந்துகொள்ள வெவ்வேறு புத்தகங்களைப் படித்தேன். நான் படித்த புத்தகங்கள்தான், என் வாழ்க்கையில் உதவிகள் செய்திருக்கின்றன. எனவே, எல்லோரும் நிறைய படிக்க வேண்டும். படிப்பதில் கிடைக்கும் ஆனந்தமும், சுகமும் வேறு எதிலும் கிடைக்காது. எழுத்து என்பது பவர்புல் விஷயம். சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசிய பேச்சு, இந்த உலகையே மாற்றியதை எல்லோரும் அறிவார்கள்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு காலத்தில் நாத்திகவாதியாக இருந்தார். அவரிடம், கம்பராமாயணத்தை எரிக்க கொடுத்தார்கள். எரிப்பதற்கு முன் அதில் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமோ என்று படித்தார். படித்து முடித்து, அன்று முதல் ஆத்திகவாதியாக மாறிவிட்டார். படைப்புக்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது.   பணம் என்ற கஷ்டம் எழுத்தாளர்களுக்கு வரக்கூடாது. படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களும், பத்திரிகைகளும் நல்ல ஊதியம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மேலும் நன்றாக எழுதுவார்கள். நல்ல, நல்ல சிந்தனைகள் வளரும். இவ்வாறு ரஜினி பேசினார்.