அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தும்... சம்பளத்தை ஏற்றாத விஜய் சேதுபதி!

சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி.

தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அதற்கு முன் சில படங்களில் துணை நடிகராக நடித்து போராடித்தான் ஹீரோவானார்.

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்தும்... சம்பளத்தை ஏற்றாத விஜய் சேதுபதி!

அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி. அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன. இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது. பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள்.

ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது.

அடுத்து விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி.

சென்னையில் சமந்தாவுக்கு ரகசிய சிகிச்சை

சென்னை: சரும ஒவ்வாமை நோயால் அவதிப்படும் சமந்தாவுக்கு சென்னையில் ரகசியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நோய் காரணமாக சமந்தா பல பெரிய பட வாய்ப்புகளை கடந்த ஆண்டு இழந்தார்.

எனவே முற்றாக குணப்படுத்த ஹைதராபாத்தில் வெளிநாட்டு மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை பெற்றார்.

சென்னையில் சமந்தாவுக்கு ரகசிய சிகிச்சை

ஆனால் மீண்டும் முகத்தில் பெரிய பருக்களும், உடலில் சில மாற்றங்களும் ஏற்பட்டதால், சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையை மாற்றிவிட்டாராம் சமந்தா.

‘அஞ்சான்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி சென்னைக்கு வந்த சமந்தா, ஒரு தனியார் மருத்துவமனையில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறாராம்.

'பட்டைய கிளப்பணும் பாண்டியா'!

எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டய கிளப்பணும் பாண்டியா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடந்தது.

பொன்மனம், அழகர்மலை, சுறா போன்ற படங்களை இயக்கியவர் எஸ் பி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கும் படம் பட்டைய கிளப்பணும் பாண்டியா.

இதில் விதார்த் நாயகனாகவும், மனிஷா நாயகியாகவும் நடித்துள்ளார். ஹீரோவுக்கு இணையான வேடத்தில் சூரி நடித்துள்ளார்.

'பட்டைய கிளப்பணும் பாண்டியா'!

அருள்தேவ் இசையில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாரே எழுதியுள்ளார்.

இசை வெளியீட்டு விழா இன்று காலை கமலா திரையரங்கில் நடந்தது.

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முதல் குறுந்தகடை வெளியிட, அதை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார்.

படத்தின் ட்ரைலரை இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் வெளியிட, நடிகர் ராதாரவி பெற்றுக் கொண்டார்.

மலேசியாவைச் சேர்ந்த ஆணிமுத்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ஹரி- விஷால் படம்... தீபாவளி ஸ்பெஷலாக தயாராகிறது!

நான் சிகப்பு மனிதனுக்குப் பிறகு ஹரி இயக்க, விஷால் நடித்து தயாரிக்கும் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது.

சமீபத்தில் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை விஷால் தொடங்கி, அவரே கதாநாயகனாக நடித்து, ‘பாண்டிய நாடு' படத்தை தயாரித்தார். சுசீந்திரன் டைரக்டு செய்த அந்த படம் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார்.

ஹரி- விஷால் படம்... தீபாவளி ஸ்பெஷலாக தயாராகிறது!

‘நான் சிகப்பு மனிதன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை திரு இயக்கி வருகிறார். இந்த படத்திலும் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர விஷால் திட்டமிட்டு இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விஷால் தனது மூன்றாவது தயாரிப்பை கடந்த மாதமே அறிவித்தார் விஷால். இந்தப் படத்தை ஹரி இயக்குகிறார். ஏற்கனவே விஷாலை வைத்து, ‘தாமிரபரணி' என்ற படத்தை இயக்கி வெற்றி பெற வைத்தவர் ஹரி.

விஷால்-ஹரி இணையும் படத்தில், கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர்.

பாண்டிய நாடு படத்தை ஆரம்பித்த போதே, இது 2013 தீபாவளி ரிலீஸ் என உறுதியாக அறிவித்து, சொன்ன மாதிரியே ரிலீஸ் செய்து வெளியிட்டு வெற்றி பெற்றார் விஷால். இந்தப் படத்துக்கும் அதே போன்ற திட்டமிடலை செய்து வருகிறார்.

நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!

சென்னை: மறைந்த நடிகை அஞ்சலிதேவி, நடிகர் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடந்தது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.

நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், ‘பிலிம் சேம்பர்' பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் எடிட்டர் மோகன், சித்ரா லட்சுமணன், வாசுதேவன், ‘கில்டு' தலைவர் ஹேம்நாக்பாபு, நடிகர் ராஜேஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், நளினி, சத்யபிரியா, பாத்திமாபாபு, கவிஞர் பிறைசூடன், மற்றும் அஞ்சலிதேவியின் மகன்கள் சின்னாராவ், நிரஞ்சன்குமார் மருமகள்கள் விஜயலட்சுமி, பாரதிதேவி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!
 
பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் 'மொழிவது யாதெனில்’!

நடிகர் விஜய்யின் தாய் மாமாவும் பின்னணி பாடகருமான எஸ் என் சுரேந்தர் தன் மகன் விராஜை ஹீரோவாகக் களமிறக்குகிறார்.

யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர். மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘மொழிவது யாதெனில்' என்று தலைப்பிட்டுள்ளனர்.

முழுக்க முழுக்க நட்பை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன். இதில் கதாநாயகனாக பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ் நடிக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக அந்நியன் படத்தில் சிறு வயது ‘அம்பி' விக்ரம் வேடத்தில் நடித்தவர். மேலும் சில படங்களில் சிறுவனாக நடித்து பாராட்டு பெற்றவர், முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் 'மொழிவது யாதெனில்’!

இவருடன் ராஜன், ரியாஸ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கவுரவ வேடத்தில் எஸ்.என்.சுரேந்தர் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை பாடி நடிக்கிறார்.

நித்யன் கார்த்திக் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தம்பி' சிவா நடனம் அமைக்க, ‘மிரட்டல்' செல்வா சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார். திரைக்கதை, வசனத்தை இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக், இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர். படத்தொகுப்பு வில்சி.

பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் 'மொழிவது யாதெனில்’!

படம் பற்றி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக, தங்களது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதை. அதை நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன். ஈரோடு, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியிருக்கிறேன்," என்றார்.

சொல்லாமல் கொள்ளாமல் விலகிய அனிருத் - தயாரிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம்

சொல்லாமல் கொள்ளாமல் விலகிய அனிருத் - தயாரிப்பாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு கடிதம்

படத்துக்கு இசையமைப்பதாக ஒப்புக் கொண்டு, அட்வான்ஸ் வாங்கிய பிறகு, அந்தப் படத்திலிருந்து விலகியதற்காக தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் இசையமைப்பாளர் அனிருத்.

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அனிருத். அவர் இசையமைத்து ஒரு படம் வெளியான உடனே, ஆன்ட்ரியாவுக்கு லிப் டு லிப் கிஸ்ஸடித்த படத்தை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டினார்.

அடுத்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ பாடல் உருவாக்கியதற்காக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, இப்போது தயாரிப்பாளரிடம் பிரச்சினை.

ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்துக்காக வாயை மூடி பேசவும் என்ற படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பாலாஜி மோகன். துல்கர் சல்மான் - நஸ்ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸும் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் வருண் மணியன்.

ஆனால் பின்னர் இசையமைக்காமல் விலகிக் கொண்டார் அனிருத். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அனிருத் மீது புகார் கொடுத்தார் வருண் மணியன்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக அட்வான்ஸை திருப்பித் தருவதாகக் கூறியுள்ள அனிருத், தனது தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் கடிதம் அனுப்பியுள்ளார்.

தனது கடிதத்தில், தொடர்ச்சியான வேலைப் பளு காரணமாக வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை என்றும், இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் எழுதியுள்ள அனிருத், அடுத்த படத்தில் பணியாற்ற முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்துக்கு ரூ 5 லட்சத்தை அட்வான்ஸாக பெற்றிருந்தார் அனிருத். அந்தத் தொகையை உடனடியாக திருப்பிக் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார் அவர்.

அனிருத் மீதான ஆபாச வீடியோ புகார் - ரஜினி மைத்துனர் நேரில் விளக்கம்

சென்னை: பெண்களை கேவலப்படுத்தும் வக்கிரமான ஆபாச வீடியோ வெளியிட்டது தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் மீது தரப்பட்டுள்ள போலீஸ் புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் அனிருத்தின் தந்தை.

சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஜெபதாஸ் பாண்டியன், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒரு புகார் மனு அளித்தார்.

அனிருத் மீதான ஆபாச வீடியோ புகார் - ரஜினி மைத்துனர் நேரில் விளக்கம்

ஆபாச வீடியோ

அந்த மனுவில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த "எய்ன்ட் நோபடி' என்ற ஆங்கில இசை ஆல்பத்தின் டிரெய்லர் "யூ-டியூப்' உள்ளிட்ட இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் பெண்களையும், தாய்மையையும் கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பாடல்களில் பெண்களுக்கு எதிராகவும், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். மேலும் இந்த ஆல்பம், உரிய அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.

விசாரணைக்கு உத்தரவு

இந்தப் புகார் குறித்து விசாரணை செய்ய ஆணையர் ஜார்ஜ், மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனரும், அனிருத்தின் தந்தையும், நடிகருமான ரவி ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார்.

ரவி ராகவேந்தர் விளக்கம்

இது தொடர்பாக ரவி ராகவேந்தர் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரை சந்திதார். அவரிடம் ஆல்பம் குறித்து ரவி ராகவேந்தர் விளக்கமளித்தார்.

நீக்கம்

மேலும் புகாரில் கூறப்பட்டுள்ள இணையதளங்களில் இருந்து அந்த ஆல்பத்தின் டிரெய்லர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறினாராம். இதையடுத்து போலீஸ் தரப்பில் அந்த புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தால் முழு ஒத்துழைப்பு தரும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஜிவி பிரகாஷை விரட்டிவிட்டு மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன பாலா

கரகாட்டத்தை மையமாக வைத்து தான் இயக்கும் அடுத்த படத்துக்கு இசையமைத்துத் தருமாறு மீண்டும் இளையராஜாவிடமே போய்விட்டார் இயக்குநர் பாலா.

பாலாவின் முதல் படமான சேதுவை மறக்கமுடியாத படமாக்கியதில் கணிசமான பங்கு இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு.

இளையராஜா அல்லது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோரை மட்டுமே தன் படங்களில் பயன்படுத்தி வந்த பாலா, முதல் முறையாக பரதேசி படத்துக்கு ஜிவி பிரகாஷை இசையமைக்க வைத்தார்.

படமும் சுமார், பாடல்கள் - இசை படு சுமார் என்றாகிப் போனது. இருந்தாலும், தனது அடுத்த படத்துக்கும் முதலில் ஜி.வி.பிரகாஷ்தான் ஒப்பந்தம் செய்தாரம் பாலா.

ஜிவி பிரகாஷை விரட்டிவிட்டு மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன பாலா

ஆனால் ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள் எதுவும் பாலாவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லையாம். அதுவும் கரகாட்ட சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாத இசையைக் கொடுத்தாராம். சரி, சொல்லிப் புரிய வைக்கலாம் என்றால், அவர் அடிக்கடி தான் ஹீரோவாக நடிக்கும் பென்சில் படத்தில் கவனம் செலுத்தி வந்தது பாலாவை எரிமலையாக்கிவிட்டதாம்.

இதனால் 'உன் பாட்டும் வேணாம்... நீயும் வேணாம்.. போய் நடிக்கிற வேலையை கவனி' என்று நேரடியாகவே கூறிவிட்டாராம் பாலா.

இப்போது மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவிடமே சென்றுவிட்டார் பாலா. சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களுக்குப் பின் இளையராஜா - பாலா இணையும் நான்காவது படம் இது.

டப்பிங் படமாக இருந்தாலும் சொந்தக் குரலில் பேசிய மோகன் லால்!

டப்பிங் படமாக இருந்தாலும் சொந்தக் குரலில் பேசிய மோகன் லால்!

தான் நிஜமாகவே ஒரு முழுமையான நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.

மலையாளத்தில் தான் நடித்து வெளியான கர்மயோதா படத்தை தமிழ் மொழியாக்கியபோது, தானே முன்வந்து தமிழில் டப்பிங் பேசி அசர வைத்துள்ளார் மனிதர்.

மேஜர் ரவி இயக்கியுள்ள படம் இது. தமிழில் வெற்றிமாறன் ஐபிஎஸ் என்று தலைப்பிட்டுள்ளனர்.

மலையாளத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தாலும், பாக்ஸல் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது.

இந்தப் படத்தை வெற்றி மாறன் ஐபிஎஸ் என்ற பெயரில் வி நாராயணன் டப் செய்துள்ளார்.

படத்தில் மோகன் லாலுக்கு முதலில் வேறு ஒருவரை டப் செய் வைக்கலாம் என்றுதான் யோசித்தார்களாம். எதற்கும் மோகன்லாலிடம் கேட்டு விடலாம் என்று கேட்டபோது உடனடியாக தானே பேசித் தருவதாகக் கூறினாராம்.

அதுமட்டுமல்ல, படத்தின் ட்ரைலரிலும், இந்தப் படம் குறித்து மோகன் லால் தன் சொந்தக் குரலில் தமிழில் அறிமுகம் செய்துள்ளார்.

ஒரு டப்பிங் படத்துக்கு மோகன் லால் இந்த அளவு மெனக்கெட்டதை, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பாராட்டினார்கள், படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில்.

அஜீத்- கவுதம் மேனன் படம்: பிப்ரவரி 6-ல் பூஜை

அஜித்-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் பூஜை வருகிற 6ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

வீரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, முதல் முறையாக நடிக்கிரார் அனுஷ்கா.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்டதால், வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி பூஜை போடுகிறார்கள்.

அஜீத்- கவுதம் மேனன் படம்: பிப்ரவரி 6-ல் பூஜை

வழக்கமாக தனது படங்களிந் பூஜையை வியாழக்கிழமை அன்றுதான் வைப்பார் ரத்நம். ஆரம்பம் படத்துக்கும் அப்படித்தான் நடந்தது.

அந்த சென்டிமென்ட்படியே தற்போது அஜித்தின் படத்தையும் பிப்ரவரி 6-ஆம் தேதி வியாழக்கிழமை அன்றே துவங்குகிறார்கள்.

முற்றிலும் வெளிநாட்டில் படமாகவுள்ளது இந்தப் படம்.

படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்!

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இந்திப் படத்தின் படப்பிடிப்பின்போது காயமடைந்தார்.

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஹேப்பி நியூ இயர் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இன்று படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட சிறிய விபத்தில் ஷாருக் கான் காயமடைந்தார்.

படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்!

காயமடைந்து துடித்த அவரை உடனடியாக நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஷாருக் கானுக்கு ஏற்பட்டுள்ளது பெரிய காயமா அல்லது சாதாரணமான காயமா என்பது தெரியவில்லை.

ஐந்து நட்சத்தர ஹோட்டலில்தான் இந்தப் படப்பிடிப்பு நடந்தது. அப்போது திடீரென ஒரு கதவு அவர் மீது பலமாக மோதியதில் அவர் காயமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைப்பு - நேரில் வருவாரா?

சென்னை: நடிகை அஞ்சலி மீது இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னணி தமிழ் மற்றும் தெலுங்கு கதாநாயகி வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக மீடியாக்களிடம் புகார் கூறி இருந்தார்.

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி களஞ்சியம் தரப்பில் சைதாப்பேட்டை பெருநகர 17- வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10-ம் தேதிக்கு தள்ளி வைப்பு - நேரில் வருவாரா?

இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்குமாறு அஞ்சலி கேட்டுக் கொண்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

எனவே அவர் சென்னைக்கே வராமல் ஹைதராபாதிலேயே தங்கியுள்ளார்.

நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை 17-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உமாராணி முன்பு வந்தது. அப்போது இந்த வழக்கை வருகிற பிப்ரவரி 10-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

பத்தாம் தேதியும் அஞ்சலி நேரில் ஆஜராவாரா என்பது சந்தேகமே.