என் மகன் ரஜினி சார் ஆசியோடு நடிக்க வந்துள்ளான்: பிரபு பெருமிதம்

My Son Ll Be Successful Prabhu
தனது மகன் விக்ரம் பிரபு நிச்சயம் பெரிய நடிகர் ஆவார் என்று நடிகர் பிரபு நம்பிக்கை தெரிவி்த்துள்ளார்.

நடிகர் திலகத்தின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இந்நிலையில் தனது மகன் நிச்சயம் பெரிய நடிகராக வருவார் என்று இளைய திலகம் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் மகன் என்னைப் போன்றே குண்டாகத் தான் இருந்தான். ஆனால் கும்கி படத்திற்காக கடும் உடற்பயிற்ச்சி செய்து 25 கிலோ எடையை குறைத்துள்ளான். நான் இன்னும் கும்கி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அவன் நடிப்பதைப் பார்க்கவில்லை. ஆனால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்பது எனக்கு தெரியும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். அவர் விக்ரமை சின்ன குழந்தையில் இருந்தே பார்த்து வருகிறார். கும்கி பட வாய்ப்பு கிடைத்தவுடன் விக்ரம் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றான் என்றார்.

கும்கி படத்தை பார்த்த ரஜினி விக்ரம் பிரபுவை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அக்காவா எல்லாம் நடிக்க முடியாது: லிங்குசாமியை விரட்டிவிட்ட அசின்

Asin Says No Lingusamy   
வேட்டை இந்தி ரீமேக்கில் சமீரா ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க அசின் மறுத்துவிட்டார்.

நடிகை அசின் பாலிவுட்டில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு நடித்து வருகிறார். ஷங்கரின் புதிய படத்தில் அவர் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அம்மணி இலங்கை போய் போட்ட ஆட்டத்தை மறக்காத தமிழகம் அவரை ஹீரோயினாக்க கடும் எதிர்ப்பு தெரிவி்த்தது. இதையடுத்து அசின் ஷங்கரின் ஹீரோயின் இல்லை என்றாகிவிட்டது.

இந்நிலையில் லிங்குசாமி மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பாலை வைத்து எடுத்த வேட்டையை இந்திக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளார். நம்ம ஊர்ல இருந்து அங்க போன பொண்ணாச்சே என்று நினைத்து சமீரா ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க அசினை அணுகியுள்ளார். அதற்கு அசின் ஆளை விடுங்க என்று நைசாக நழுவி விட்டார்.

இதற்கு அசின் கொடுத்துள்ள விளக்கம்,

பல ஹீரோயின்கள் உள்ள படத்தில் நடிக்க நான் ரெடியாக இல்லை. அதிலும் அக்கா ரோலுக்கு நான் ஆளில்லை. மேலும் எனக்கு கால்ஷீட் பிரச்சனையும் உள்ளது என்று கூறியுள்ளார்.
 

'லெஸ்பியன் வேடத்தில் நானா... சீச்சீ, நான் பொம்பள சிங்கம்... கோடி ரூபா கொடுத்தாலும் மாட்டேன்!'

Sona Rules Lesbian Roles
"நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும் லெஸ்பியனாக நடிக்க மாட்டேன்'' என்கிறார் நடிகை சோனா.

நேற்று தன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை சோனா, செய்தியாளர்களிடம் கூறுகையில், " 86 கிலோ எடை இருந்த நான் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் 70 கிலோவாக குறைந்து இருக்கிறேன். இன்னும் உடல் எடையை குறைத்து, சினிமா உலகையே திரும்பி பார்க்க செய்ய வேண்டும். இதுதான் என் பிறந்த நாள் சபதம்.

இந்த பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 வயது பெண் குழந்தையை தத்து எடுக்கப் போகிறேன்.

நிச்சயமாக என் சொந்த வாழ்க்கையை படமாக தயாரிப்பேன். அதன்மூலம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வெளியுலகம் தெரிந்து கொள்ளச் செய்வேன்," என்றார்.

நமீதா ஒரு படத்தில் லெஸ்பியனாக நடிக்க மறுத்து இருக்கிறார். அப்படி ஒரு வேடம் உங்களுக்கு வந்தால், நடிப்பீர்களா?, என்று கேட்டதற்கு, "நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும், லெஸ்பியனாக நடிக்க மாட்டேன். அதேபோல் நிர்வாணமாகவும் நடிக்க மாட்டேன். பணம்தான் பெரிது என்று நினைத்திருந்தால், வருடத்துக்கு 50 படங்களில் நான் நடித்திருப்பேன்," என்றார் அசராமல்.
 

மீன்கொத்தி - அழகன் தமிழ்மணி மகன் அஜய் கிரு ஹீரோவாகிறார்!

Azhagan Tamil Mani Launch His Son Hero
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான அழகன் தமிழ்மணியின் மகன் அஜய் கிரு ஹீரோவாக அறிமுகமாகிறார். படம் மீன்கொத்தி.

அன்புள்ள ரஜினிகாந்த், தர்மபத்தினி, சோலைக்குயில், சித்திரைப் பூக்கள் உள்பட பல படங்களைத் தயாரித்தவர் அழகன் தமிழ்மணி. நான் கடவுள் மூலம் குணச்சித்திர நடிகரானார். அழகர்சாமியின் குதிரையில் அவர் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இப்போது தன் மகனும் ஓஏகே தேவரின் அஜய் கிருவை ஹீரோவாக வைத்து புதிய படம் தயாரிக்கிறார். மீன்கொத்தி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தனது நாச்சியாரம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

அஜய் கிருவுக்கு ஜோடியாக ஷோபனா நாயுடு நடிக்கிறார். இவர் மூன்று தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.

கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, காதல் சுகுமார், நிகிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினா இசையமைக்கிறார். மறைந்த சந்திரபோஸின் மகன் போஸ் சந்தோஷ் பின்னணி இசையை கவனிக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சஞ்சய் ராம்.

ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள மீன்கொத்தியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெளியாகிறது!
 

சின்ன சின்ன ஆசை: மக்கள் தொலைக்காட்சியின் மகத்தான நிகழ்ச்சி

Chinna Chinna Aasai Makkal Tv Help Poor Children
நம் ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன ஆசை உண்டு. விமானத்தில் பறக்கவோ, மழையில் நனையவோ, மீன்பிடிக்கவோ ஏதாவது ஆசை அடி ஆழத்தில் இருந்து கொண்டு இருக்கும். வசதியானவர்களுக்கு இந்த ஆசைகள் எளிதில் கைகூடும் ஆனால் வசதியற்ற ஏழை குழந்தைகளுக்கு இது சாத்தியமே இல்லை. இதை கருத்தில் கொண்டு சாலையோரம் வசிக்கும், குடிசைகளில் வசிக்கும் ஏழை சிறுவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

புதுச்சட்டை, ஐஸ்கிரீம், சைக்கிள், செருப்பு, பொம்மை இப்படி அந்த ஏழைக் குழந்தைகளின் தேவைகள் உலகமே சிறியதுதான். இத்தகைய ஆசைகளை உடைய சிறுவர் சிறுமியர் வசிக்கும் வாழ்விடங்களுக்கேச் சென்று சந்தித்து, அவர்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் கேட்டு அறிகிறார் தொகுப்பாளர் ஆர்த்தி ஆசைகளைக் கேட்டு அறிவது மட்டும் அல்லாமல், அவற்றை நிறைவேற்றுவதும் தான் இந்நிகழ்சியின் முக்கிய அம்சமாகும்.

அவர்களின் சின்ன சின்ன ஆசைகள், நமக்கு மிகவும் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர்களுக்கு என்னவோ அது மிகப் பெரிய, கைக்கு எட்டாத ஆசைகள் என்கிறார் தொகுப்பாளர் ஆர்த்தி. இந்த நிகழ்ச்சி நடத்தும் போது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

'சின்ன சின்ன ஆசை' நிகழ்ச்சியில வரும் குழந்தைகள் என்னை ரொம்பவே பாதித்திருக்கிறார்கள். ''இந்த நிகழ்ச்சிக்கான குழந்தைகளை செலக்ட் பண்றதுக்காக ஒரு ஏரியாவுக்கு போனப்ப, அங்கிருந்த குழந்தைங்க கூவத்துல குளிச்சிக்கிட்டு இருந்தாங்க. 'ஏன் இதுல குளிக்கறீங்க'ன்னு கேட்டா, 'நாங்க இங்கேதானே குளிக்க முடியும்'னு சொல்லிட்டு என்னையும் அவங்களோட விளையாட கூப்பிட்டாங்க. நானும் அவங்களோட கூவத்துல கால் நனைச்சுட்டு வந்தேன்.

அதேமாதிரி ஒரு பையனோட ஆசையை என்னால நிறைவேத்தி வைக்க முடியலை. அவனோட அப்பாவும் அம்மாவும் வேறொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாங்க. 'எனக்கு எங்கம்மா வேணும்'னு கேட்டப்போ என்ன பதில் சொல்றதுனு தெரியாம கலங்கிட்டேன். உடனே அந்தப் பையன், 'நான் உங்களை அம்மான்னு கூப்பிடட்டுமா'ன்னு கேட்டான். அவனைப் பார்த்து அந்த நிகழ்ச்சியில இருந்த மத்த குழந்தைங்களும் என்னை அம்மான்னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. கல்யாணத்துக்கு முன்னாலயே 'தாய்'ங்கற பட்டத்தை எனக்கு அவங்க தந்துட்டாங்க''என்று ஆர்த்தி சொல்லும்போதே அவரது கண் கலங்கியது.
 

தெரு ஓர கோவிலில் நடந்த திருமணம் - மணமக்களுக்கு நமீதா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Namithaa Gives Sweet Shock New Couples   
கரூருக்கு ஒரு தனியார் நிகழ்ச்சிக்குப் போன கவர்ச்சிப் புயல் நமீதா, போகிற வழியில் நடந்த ஒரு திருமணத்துக்கு முன்னறிவிப்பின்றிப் போய் கலந்து கொண்டதோடு, மணமக்களுக்கு ரொக்கப் பரிசும் கொடுத்து அசத்தினார்!

கரூரில், ஈமு கோழிப்பண்ணை ஒன்று திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை நமீதா நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவர் கார் மூலம் கரூருக்கு போய்க்கொண்டிருந்தார்.

வழியில், திருச்சி முக்கொம்பு என்ற கிராமம் வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் உள்ள கோவிலில், ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்ன நமீதா, இறங்கி நேராக திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த கோவிலை நோக்கிச் சென்றார். நமீதாவை பார்த்ததும் திருமண வீட்டாருக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நமீதா நேராக மணமக்களை நோக்கி நடந்தார். அவர்கள் இருவருடனும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மணமக்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து, இன்ப அதிர்ச்சி அளித்ததுடன், அவர்களுடன் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

இந்தத் திருமணத்தை என்றென்றும் நினைவிலிருக்கும்படி செய்துவிட்ட நமீதாவுக்கு நன்றி தெரிவித்தனர் மணமக்களும் குடும்பத்தினரும்.
 

கார்த்திக்கு பாட்டு எழுதிய சூர்யா ரசிகர்

Suriya Fan Turns Lyricist Sakuni
கார்த்தியின் சகுணி படத்தில் அவரது அண்ணன் சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் பாடல் எழுதியுள்ளார்.

கார்த்தி, புதுமுகம் பிரணிதா நடிக்கும் படம் சகுணி. படம் வெளி வரும் முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில் பிரணிதாவும் பல்வேறு கன்டிஷன்களைப் போட்டு கோலிவுட்டை அரள வைத்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிராகஷ் கூறுகையில்,

சகுணி படத்திற்கு இசையமைத்தது புதுமையான அனுபவம். ஏனென்றால் இது ஒரு கமர்ஷியல் படம். இதில் குத்துப்பாட்டு, காதல், மெலடி என்று அனைத்து வகை பாடல்களும் உள்ளன. இந்த படத்தில் சூர்யாவின் தீவிர ரசிகர் ஒருவர் பாடல் எழுதியுள்ளார். தெலுங்கு பாக்ஸ் ஆபீஸிலும் கலக்கும் திறமை கார்த்திக்கு உள்ளது. சகுணி தெலுங்கிலும் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

சூர்யாவுக்கு எப்படி கஜினியோ, கார்த்திக்கு அப்படி சகுணி அமையும் என்று கூறப்படுகிறது.