6 டேக் எடுத்து ஆர்யாவுக்கு லிப் டூ லிப் கொடுத்த அஞ்சலி

சென்னை: ஆர்யாவுடன் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் ரொம்ப ரொம்ப தயங்கி கடைசியில் ஒரு வழியாக முத்தமிட்டு நடித்துக் கொடுத்துள்ளாராம் அஞ்சலி. ஆனால் 6 டேக் போய் விட்டதாம், முத்தத்தை முழுசாக படம் பிடிக்க...

anjali s liplock with arya takes 6 takes   
Close
 

சேட்டை என்ற பெயரில் ஆர்யா, அஞ்சலி நடித்து வரும் புதுப் படத்தை கண்ணன் இயக்குகிறார்.இது இந்தியில் வெளியான டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். டெல்லி பெல்லியில் ஆழமான முத்தக் காட்சி மற்றும் படுக்கை அறைக்காட்சி இருந்தது. ஆனால் அதே போல தமிழில் வைக்கலாம் என்றால் நாயகி அஞ்சலி ரொம்பவே தயங்கினாராம். இதனால் முத்தக் காட்சியை மட்டும் எப்படியாவது எடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் கண்ணனும், நாயகன் ஆர்யாவும்.

சமீ்பத்தில் இந்தக் காட்சியைப் படமாக்கினர். ஆனால் அஞ்சலி கடைசி நேரத்தில் மறுத்து விட்டாராம். இதனால் ஷாக் ஆகிப் போன கண்ணனும், ஆர்யாவும், அஞ்சலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ரொம்ப நேரம் இந்த் காட்சி பற்றி விளக்கினார்களாம். ரொம்ப நேர சமாதானப் பேச்சுக்குப் பின்னர் உதட்டைக் கொடுக்க முன் வந்தாராம் அஞ்சலி.

அதன்பின்னர் முத்தக் காட்சியைப் படமாக்கினராம். ஆனால் 6 டேக் வரை ஆகி விட்டதாம், முத்தத்தை முழுமையாக படம் பிடிக்க. ஆனால் காட்சி படு பக்காவாக வந்திருப்பதாக முத்தமிட்டதை கூட இருந்து பார்த்த யூனிட்காரர்கள் சூடாகப் பேசிக் கொள்கிறார்கள்.

 

துப்பாக்கி தள்ளிப் போனதால் கோபத்தில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்!

Overseas Distributors Slammed Tuppakki Producer   

இன்று வெளியாகவிருந்த துப்பாக்கி படம், மர்மமான காரணங்களால் 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளதாக கோபத்துடன் புலம்பிக் கொண்டிருக்கின்றனர் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்.

விஜய்யின் துப்பாக்கி படம் தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னதாக, அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, விளம்பரங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால் கடைசி நேரத்தில் இசையமைப்பாளர் பிரச்சினை, இயக்குநர் - ஹீரோ லடாய் என சில பல காரணங்களால் நான்கு தினங்கள் தள்ளிப் போய்விட்டது படம்.
செவ்வாய்க்கிழமைதான் ரிலீஸ் தேதி மாற்றியதை அறிவித்துள்ளனர்.

இதில் உள்ளூர்க்காரர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். ஆனால் வெளிநாடுகளில் இவர்களை நம்பி திரையரங்குகளை புக் பண்ண விநியோகஸ்தர்கள், அவர்களை நம்பி டிக்கெட் விற்ற தியேட்டர்காரர்கள் பெரும் சிக்கலுக்குள்ளாகிவிட்டனர். பல லட்சத்தை இழக்க வேண்டிவந்துள்ளது.

மொத்தம் 50000 டிக்கெட்டுகள் வரை விற்றுள்ளனர். ஆனால் படம் தள்ளிப் போனதால் மிகுந்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர் அந்த விநியோகஸ்தர்கள். ரசிகர்களுக்கு பணம் திருப்பித் தந்தனர். சில இடங்களில் 13-ம் தேதிக்கு டிக்கெட்டை மாற்றித் தந்தனர்.

ஆனால் புக் பண்ண தியேட்டர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார்களாம்.

ஐரோப்பாவில் இந்தப் படம் 12 நாடுகளில் வெளியாகவிருந்தது இந்தப் படம். அங்கெல்லாம் 9-ம் தேதிக்கு பெரிய அரங்குகளை புக் பண்ணியிருந்தார்களாம். ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு கொடுக்கவிருந்த அரங்கைக்கூட பிடிவாதமாக துப்பாக்கி படத்துக்காக கேட்டு வாங்கினார்களாம்.

நார்வேயில் மட்டும் 6 நகரங்களில் இந்தப் படத்தை திரையிட இருந்துள்ளார் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் இந்தப் படத்தை வெளியிடும் வசீகரன். ஆனால் இப்போது அனைத்தையும் கேன்சல் செய்துள்ளார். இதில் அவருக்கு பெரிய நஷ்டமாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐரோப்பாவில் துப்பாக்கி படம் பெரிய அளவில் வெளியாகவிருந்தது. ஆனால் தேதியை மாற்றி குழப்பிவிட்டதால் எங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

லண்டனில் மட்டும் 25 தியேட்டர்களில், 300 ஷோக்கள் கேன்சலாகிவிட்டன. சுவிஸ்ஸில் 7 தியேட்டர்களில் 40 ஷோக்கள் கேன்சலாகிவிட்டன. ஜெர்மனியில் 6 அரங்குகளில் 30 ஷோக்களும், நார்வேயில் 7 அரங்குகளில் 15 காட்சிகளும், ஹாலந்தில் 2 தியேட்டர்களில் 7 ஷோக்களும், இத்தாலியில் 2 தியேட்டர்களில் 6 ஷோக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் நான் உள்ளிட்ட பிறநாட்டு விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் கொஞ்சமல்ல.

கடைசி நேரத்தில் படங்களை ரத்து செய்வது இது முதல்முறையல்ல. குறிப்பாக ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் அல்லது வெளியிடும் படங்களுக்கு இது அடிக்கடி நேர்கிறது. அப்படி தள்ளிப்போடுவதையாவது முறைப்படி முன்கூட்டியே அறிவிப்பதும் இல்லை. நாங்கள் தொடர்பு கொண்டாலோ போனைக் கூட எடுப்பதில்லை.

இது மிகவும் துரதிருஷ்டவசமானது, தமிழ் சினிமா மீதான நம்பகத்தன்மை மீது விழுந்த அடி. இனி நிச்சயம், பெரிய பட்ஜெட் படம் குறித்த தேதியில் ரிலீசாகிறதென்றால், வெளிநாட்டு ரசிகர்கள் அதை நம்ப மாட்டார்கள். படம் ரிலீசான பிறகுதான் வருவார்கள்.

தமிழகத்தில் எப்படியோ, இங்கு வெளிநாட்டுக்கு படங்களை அனுப்பும்போது, குறைந்தது மூன்று தினங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் கீயை அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் சரியான நேரத்தில் வெளியிட முடியும்.

ஹாலிவுட் படங்கள் மாதிரி சொன்ன தேதிக்கு சரியாக படத்தை வெளியிட தமிழ் சினிமாக்காரர்கள் எப்போது கற்றுக் கொள்வார்களோ தெரியவில்லை," என்றார்.

 

டாப்ஸிக்கு பாவாடை, தாவணி நச்சுன்னு இருக்கு: சொல்கிறார் ஆதி

Aadhi Praises Tapsee   

சென்னை: மறந்தேன் மன்னித்தேன் படத்தில் வரும் நெருக்கமான காட்சிகளில் டாப்ஸி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் என்று நாயகன் ஆதி தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் படம் மறந்தேன் மன்னித்தேன். ஆதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு லக்ஷ்மி மஞ்சு, டாப்ஸி என்று 2 ஜோடி. இந்த படத்தை லக்ஷ்மி மஞ்சு தயாரித்துள்ளார். படத்தில் ஆதியும், டாப்ஸியும் நெருக்கமாக வரும் ராத்திரி நேரத்து என்ற பாடல் காட்சியில் இருவரின் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம்.

இது குறித்து நாயகன் ஆதி கூறுகையில்,

ராத்திரி நேரத்து பாடல் காட்சியில் நானும் டாப்ஸியும் நெருக்கமாக நடித்துள்ளோம். படுக்கையறையில் போர்வைக்குள் என்று நெருக்கமாகவே நடித்துள்ளோம். இது போன்ற காட்சிகளில் நடிக்க உடன் நடிக்கும் நடிகை நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் தான் காட்சி நன்றாக வரும். அப்படி பார்க்கையில் டாப்ஸி நல்ல ஒத்துழைப்பு தந்தார். பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருந்தார் என்றார்.

 

ரஜினிக்கு கமல் கொடுத்த பார்ட்டி

Kaml gave party to Rajini கமல்ஹாசன் தனது 58வது பிறந்தநாளையொட்டி தனது வீட்டில் திரையுலக நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார். இதில் ரஜினிகாந்த், மம்முட்டி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் விருந்துக்கு முன்பாகவே தனியாக வந்து கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளாகும். இந்த ஆண்டு 57 வயதை முடித்து 58வது வயதை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். அன்று காலை விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படம் குறித்துப் பேசிய கமல், இரவில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் ரஜினிகாந்த், மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப், நரேன் உள்ளிட்ட நடிகர்களும், முன்னணித் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் வந்திருந்தனர்.

விஜய்க்கும் அழைப்பு போயிருந்தது. இருப்பினும் அவர் விருந்துக்கு வரவில்லை. ஆனால் முன்னதாகவே வந்து கமல் ஹாசனை சந்தித்துப் பேசிச் சென்றார். விருந்துக்கு வந்த ஒவ்வொருவரிடமும் கமல்ஹாசன் தனித் தனியாக நேரம் செலவிட்டுப் பேசி மகிழ்ந்தாராம்.
 

வித்யாபாலனுக்கு இயக்குனர் திடீர் நிபந்தனை

Director put Condition to Vidhya Balan வித்யாபாலனுக்கு இயக்குனர் திடீர் நிபந்தனை விதித்தார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக உருவான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' இந்தி படத்தில் கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யா பாலன். இப்படத்துக்காக இவர் உடல் எடையை அதிகரித்து குண்டானார். இதையடுத்து 'கஹானி' படத்தில் நடித்தார். இப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க இயக்குனர் சுஜாய் முடிவு செய்துள்ளார். இதில் மீண்டும் வித்யா பாலனே நடிக்கிறார். இப்படத்திற்காக அவரை உடல் எடையை குறைக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போதைக்கு உடல் எடையை குறைக்க முடியாது என்று வித்யா பாலன் கூறி இருக்கிறார். இதுபற்றி சுஜோய் கூறும்போது,'அடுத்த வருடம் மே மாதம் கஹானி படத்தின் 2ம் பாகம் ஷூட்டிங் தொடங்க உள்ளேன்.

அதற்கு முன்னதாக வித்யா பாலனை உடல் எடையை குறைக்கும்படி கூறினேன். ஆனால் அவர் தற்போதைக்கு உடல் எடையை குறைக்கக்கூடாது என்று 'கான்சக்கர்' என்ற படத்தை இயக்கும் ராஜ் குமார் குப்தா நிபந்தனை விதித்திருக்கிறார். தற்போதுள்ள உடல் எடையுடன் வித்யா பாலன் நடித்த பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எடையை குறைத்தால் அது படத்தில் வித்தியாசமாக தெரியும். எனவே எடையை குறைக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார். ஆனால் வித்யா பாலனுக்கு எடை குறைப்பது என்பது பிரச்னையாக இருக்காது. அவர் இப்படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு கஹானி 2 பட ஷூட்டிங் வருவதற்குள் மெலிய முடியும். எடை குறைப்பது, ஏற்றுவது என்ற இரண்டும் அவரால் எளிதாக செய்ய முடியும்' என்றார்.
 

ராணாவுடன் காதலா? த்ரிஷா கோபம்

Am I love with Rana : Thrisha angry ராணாவை காதலிப்பதாக எழுதுவதா என்று மீடியாக்கள் மீது பாய்ந்திருக்கிறார் த்ரிஷா. த்ரிஷாவும், டோலிவுட் நடிகர் ராணாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்றனர். வெளிநாடுக்கும் சென்றிருக்கிறார்கள். இதையடுத்து இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்று திரையுலகில் கிசுகிசு பரவியது. இதை த்ரிஷா மறுத்து வந்தாலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. சமீபத்தில் த்ரிஷாவின் தந்தை  காலமானார். த்ரிஷாவுடன் நடித்த நடிகர்கள் யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. ராணா மட்டும் நேரில் வந்து ஆறுதல் கூறியதுடன் இறுதி சடங்கு நடக்கும் வரை உடனிருந்தார்.

இதை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. இதை பார்த்து த்ரிஷா கோபம் அடைந்தார். 'எனக்கும் ராணாவுக்கும் நட்பு தான் உண்டு. என்னைப்பற்றி அவருக்கு எல்லாம் தெரியும். 10 வருடமாக இருவரும் பழகி வருகிறோம். வேறு எந்த உறவும் இல்லை. இதை பலமுறை சொல்லியும் மீண்டும் மீண்டும் காதலிப்பதாக மீடியாக்களில் எழுதுகிறார்கள். இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்று த்ரிஷா பொங்கி இருக்கிறார். த்ரிஷாவுடனான காதல் கிசுகிசுக்கு பதில் அளிக்காமல் இருந்த ராணா தற்போது பதில் அளித்தார். 'நாங்கள் காதலிப்பதாக இதுவரை சொல்லவில்லை. எனவே இருவரையும் இணைத்து எழுத வேண்டாம்' என்றார்.
 

ஆர்யாவுடன் லிப் டு லிப் : அஞ்சலி மறுப்பு

Anjali refused to lip to lip kiss with Arya ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க அஞ்சலி மறுத்தார். நடித்தே ஆக வேண்டும் என்று இயக்குனர் பிடிவாதமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' படங்களை இயக்கியவர் கண்ணன். அடுத்து 'சேட்டை' என்ற படத்தை இயக்குகிறார். இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'டெல்லி பெல்லி' என்ற படமே தமிழில் 'சேட்டை' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. ஒரு காட்சியில் அஞ்சலிக்கு உதட்டோடு உதடு வைத்து ஆர்யா முத்தமிடும் காட்சியை படமாக்க இயக்குனர் தயாரானார். அஞ்சலியிடம் கூறியபோது நடிக்க மறுத்ததுடன் அறையில் போய் அமர்ந்துவிட்டார். இதனால் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அஞ்சலியிடம் சென்று இயக்குனர் காட்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். ஏற்கனவே இந்தி படத்தில் இக்காட்சி முக்கிய அம்சமாக இருந்ததையும் விளக்கினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆர்யா, அஞ்சலியிடம் காட்சியில் நடிக்க வேண்டிய அவசியம் பற்றி கூறினார். அரை மணிநேர போராட்டத்துக்கு பிறகு அஞ்சலி முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்தார். இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது,'முத்தக்காட்சி வலுக்கட்டாயமாக திணிக்கப்படவில்லை. முக்கிய தேவை என்பதால் அஞ்சலியிடம் நடிக்கச் சொன்னேன். நடிக்க மறுத்தார். ஆர்யாவும் அஞ்சலியிடம் எடுத்துக் கூறியபிறகு சம்மதித்தார். 6 டேக் எடுக்கப்பட்டது. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்தார். தமன் இசை அமைக்கிறார். யுடிவி தயாரிக்கிறது' என்றார்.
 

கிசு கிசு - மறுத்த காமெடி அதிர்ந்த இயக்கம்

Kodambakkam Kodangi நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

கேப்டன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தயாரிக்கற படத்துல காமெடி வேஷத்துக்கு வேலு காமெடிய பிக்ஸ் பண்ண கேட்டாராம்... கேட்டாராம்... ஏற்கனவே இருந்த மனக்கசப்பால நடிகர் நடிக்க மறுத்துட்டாராம். இதயடுத்து அந்த வேஷம் சந்தன காமெடிக்கு கைமாறிடுச்சாம். திடீர்னு கட்சிக்காரர் கேப்டனவிட்டு பிரிஞ்சிட்டாராம். இத காரணம் காட்டி வேலு காமெடியன்கிட்ட கால்ஷீட் கேட்டு வாங்கிட்டாராம். கட்சி தலைவருக்கும் வேலு நடிகருக்குமான மோதல்ல தனக்கு கால்ஷீட் கெடக்கலான்னு தயாரிப்பு நட்புங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...

சில இயக்கங்க ஹீரோவோட லந்து பண்றதுலயிருந்து சரக்கு அடிக்கறவர ஒட்டிகிட்டிருப்பாங்களாம்... இருப்பாங்களாம்... ஆனா காட்டன் வீர இயக்கம் எப்பவுமே இறுக்கமா இருப்பாராம். ஷூட்டிங் நேரத்துல காட்சிய விளக்கறதோட சரி அதுக்கப்பறம் ஹீரோவோட சிரிச்சி பேசறது, கமென்ட் அடிக்கறதுன்னு எந்த அரட்டைலயும் கலந்துக்க மாட்டாராம். இதால எந்த ஹீரோ அவர் படத்துல நடிச்சாலும் இயக்கத்தவிட்டு தள்ளியே நிப்பாங்களாம்... நிப்பாங்களாம்...

குறைஞ்ச பட்ஜெட்ல தயாரான ஆரோக பட ரிலீசுக்கு பின்னால பெரிய பிரச்னை நடந்துச்சாம்... நடந்துச்சாம்... பட ரிலீசுக்கு முதநாள்  லேபுக்கு லெட்டர் கொடுத்து பிரின்ட் தரக்கூடாதுன்னு தடை போட்டுட்டாங்களாம். அந்த படத்த ரிலீஸ் பண்ற தயாரிப்பு ஏற்கனவே ஒரு மேட்டர்ல பாக்கி தர வேண்டி இருக்கு. அந்த பிரச்னை முடிஞ்சப்பறம்தான் பிரின்ட் தரணும்னு சொல்லிட்டாங்களாம். தகவல கேட்டு படத்த இயக்கன பெண் இயக்கம் அதிர்ச்சியாயிட்டாராம். சங்கத்து நிர்வாகிகிட்ட கெஞ்சற மாதிரி பேசினாராம். அவரோட அப்ரோச் பிடிச்சிருந்ததால தடைய நீக்கி பிரின்ட் தர கிரீன் சிக்னல் கொடுத்தாங்களாம்... கொடுத்தாங்களாம்...
 

கமல் கொடுத்த விருந்து... ரஜினி நேரில் வாழ்த்து- விஜய் தனியாக வந்தார்!

Rajinikanth Vijay Others Meet Kamal

சென்னை: கமல்ஹாசன் தனது 58வது பிறந்தநாளையொட்டி தனது வீட்டில் திரையுலக நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார். இதில் ரஜினிகாந்த், மம்முட்டி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் விருந்துக்கு முன்பாகவே தனியாக வந்து கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளாகும். இந்த ஆண்டு 57 வயதை முடித்து 58வது வயதை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். அன்று காலை விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படம் குறித்துப் பேசிய கமல், இரவில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் ரஜினிகாந்த், மலையாள நடிகர்கள் மம்முட்டி, திலீப், நரேன் உள்ளிட்ட நடிகர்களும், முன்னணித் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் வந்திருந்தனர்.

விஜய்க்கும் அழைப்பு போயிருந்தது. இருப்பினும் அவர் விருந்துக்கு வரவில்லை. ஆனால் முன்னதாகவே வந்து கமல் ஹாசனை சந்தித்துப் பேசிச் சென்றார். விருந்துக்கு வந்த ஒவ்வொருவரிடமும் கமல்ஹாசன் தனித் தனியாக நேரம் செலவிட்டுப் பேசி மகிழ்ந்தாராம்.

 

நீர்பறவைக்கு வரிவிலக்கு மறுப்பு: ஜெ அரசைக் கண்டித்து இயக்குநர் சீனு ராமசாமி உண்ணாவிரதம்!

Seenu Ramasamy Observe Fast

சென்னை: தான் இயக்கியுள்ள நீர்ப்பறவை படத்துக்கு யு சான்று கிடைத்தும், தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துள்ளதைக் கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி, நீர்ப்பறவை என்ற பெயரில் புதிய படம் இயக்கி உள்ளார். இந்தப் படம் மீனவர் அவலத்தைச் சொல்லும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், அனைவரும் பார்க்கத்தக்க படம் என்று யு சான்றளித்துள்ளது.

தமிழில் தலைப்பு வைக்கப்பட்டு, யு சான்று அளிக்கப்பட்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு அந்த வரிவிலக்கை தமிழக அரசு அளிக்க மறுத்துவிட்டது.

முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள படம் இது என்பதுதான் பிரதான காரணமாகும். ஏற்கெனவே உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடிக்கும் இதே போல கேளிக்கை வரி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார் சீனு ராமசாமி.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனது படத்திற்கு தணிக்கை துறையினர், யூ சர்டிபிகேட்கொடுத்துள்ளனர். ஆனால் எனது படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க மறுக்கிறார்கள். இதை கண்டித்து வருகிற சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அல்லது ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன்," என்றார்.