மேலும் ஒரு மாதம் தள்ளிப் போனது 'மயக்கம் என்ன'!


நவம்பரில் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்ட செல்வராகவனின் மயக்கம் என்ன திரைப்படம் டிசம்பருக்கு தள்ளிப் போனது.

தனுஷ் - ரிச்சா நடித்துள்ள படம் மயக்கம் என்ன. தீபாவளிக்கே வருவதாக அறிவிக்கப்பட்ட படம் இது. ஆனால் ஏழாம் அறிவு, வேலாயுதம் படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியானதால், இந்தப் படம் இரு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டது.

நவம்பர் 25-ம் தேதி மயக்கம் என்ன வெளியாகும் என்று கூறப்பட்டது. இதே தேதியில் சிம்பு நடித்துள்ள ஒஸ்தியும் ரிலீசாகும் என்றனர்.

ஆனால் இப்போது மேலும் ஒரு வாரத்துக்கு மயக்கம் என்ன தள்ளிப் போய்விட்டது. டிசம்பர் 2-ம் தேதி வெளியாகிறது. இதற்கான தியேட்டர் புக்கிங் வேலைகளில் ஜெமினி நிறுவனம் பிஸியாக உள்ளது.

இயக்குநர் செல்வராகவனும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
 

பெங்காலி படத்தில் பத்மப்ரியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெங்காலி படத்தில் நடிக்கிறார் பத்மப்பிரியா. பிரபல பெங்காலி நாவலாசிரியர் சுனில் கங்கோபாத்யாயா எழுதிய நாவல் ஒன்று 'அபராஜிதா துபி' என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் பத்மப்பரியா நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பொதுவாக எல்லா தென்னிந்திய நடிகைகளுக்கும் இந்தி கமர்சியல் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். எனக்கு இருந்த ஆசை பெங்காலி படத்தில் நடிக்க வேண்டும் என்பது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. அதுவும் எனக்குப் பிடித்த எழுத்தாளரின் கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சான்பிரான்ஸிஸ்கோவில் பிறந்து பெங்காலி வரும் பெண்ணின் முழு நீள வாழ்க்கைதான் படம். எனக்கு பெங்காலி மொழி தெரியாது. இருந்தாலும் அடிப்படையான விஷயங்களை கற்று நானே பேசி நடித்தேன். நான் பேச வேண்டிய வசனத்தை மனப்பாடம் செய்து டப்பிங் பேசியிருக்கிறேன். எனது கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும்.


 

இந்திக்குப் போகிறது போராளி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமுத்திரக்கனி இயக்கியுள்ள 'போராளி' படம் இந்தியில் தயாராகிறது. சசிகுமார், நரேஷ், ஸ்வாதி, நிவேதா நடிக்கும் படம், 'போராளி'. கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரிக்கிறார். படத்தை இயக்கும் சமுத்திரக்கனி கூறியதாவது: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கிறது. அந்த கனவை, லட்சியத்தை நோக்கிதான் எல்லாரும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியொரு பயணத்தை தேடும் நான்கு பேரின் கதைதான் போராளி. இது வித்தியாசமான கதைதான். ஒரு வகையில் நம் எல்லோருமே போராளிதான். நினைத்ததற்காகப் போராடும் போராளி. இந்தக் கருத்தை எளிமையாக, கமர்சியலாக படத்தில் சொல்லியிருக்கிறோம். 'நாடோடிகள்' படத்திலிருந்து இது மாறுபட்ட தளத்தில் இருக்கும். சசிகுமார் இரண்டு கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காமெடி இருக்கும். தமிழ், தெலுங்கில் டிசம்பர் முதல்வாரம் ரிலீஸ் ஆகிறது. இந்தியில் ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு சமுத்திரக்கனி கூறினார்.


 

நயன்தாராவின் கடைசிபடம் தமிழில் டப் ஆகிறது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நயன்தாராவின் கடைசி படமான தெலுங்கு, 'ஸ்ரீராமராஜ்யம்', தமிழிலும் இதே பெயரில் டப் ஆகிறது. சீதையாக நயன்தாரா, ராமராக பாலகிருஷ்ணா நடித்துள்ளனர். மற்றும் நாகேஸ்வரராவ், பிரம்மானந்தம், கே.ஆர்.விஜயா, ஜெயசுதா, ரோஜா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ஆர்.கே.ராஜூ. இசை, இளையராஜா. வசனம் மற்றும் பாடல்கள், பிறைசூடன். பியூச்சர் பிலிம்ஸ் சார்பில், கிரண் தயாரிக்கிறார். பாபு இயக்குகிறார். ராமாயணத்தில் லவா-குசா பற்றிய பகுதிகள், பரபரப்பான சம்பவங்களை உள்ளடக்கியது. அதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.


 

பூமிகா-அனூஷ்கா மோதலா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கில் 'தகிட தகிட' என்ற பெயரில் வெளியான படம், தமிழில் 'துள்ளி எழுந்தது காதல்' என்று ரிலீஸ் ஆகிறது. விளம்பர படங்களில் நடித்துள்ள ராஜா ஹீரோ. ஹரிப்பிரியா ஹீரோயின். இந்தப் படத்தில் பூமிகாவுக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி இயக்குனர் ஸ்ரீஹரி நானு கூறியதாவது: இது இளைஞர்களை பற்றிய படம். படத்தில் பூமிகா, ஹரிப்ரியா தவிர 50 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதனால் கமர்சியல் வேல்யூவுக்காக தயாரிப்பாளர் பூமிகா, அனுஷ்காவை ஒரு பாட்டுக்கு ஆட அழைத்தார். அவர் மறுத்தது உண்மை. 'ஒரு பாட்டுக்கு ஆடினால் தொடர்ந்து நண்பர்கள் பலரும் அழைப்பார்கள். அதை தவிர்க்க முடியாது. வேண்டுமானால் கவுரவ வேடத்தில் நடித்து தருகிறேன்' என்றார். பிறகு அவர் ஆடும் திட்டத்தை கைவிட்டோம். கல்லூரி மாணவர்கள் சிலர் அனுஷ்காவின் பேஸ்புக் நண்பர்களாக இருப்பது போலவும் விடுமுறை நாளில் அனுஷ்கா அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பது போலவும் காட்சிகளை அமைத்தோம். இது அனுஷ்காவுக்கு பிடித்துப்போனதால் நடித்துக் கொடுத்தார். இதனால் பூமிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் எந்த மனவருத்தமும் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள்.


 

பிப் 4-ல் ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் திருமணம்?


வரும் பிப்ரவரி 4-ம் தேதி, நடிகை ஜெனிலியாவுக்கும் நடிகரும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிலியா - ரிதேஷ் இருவரும் சேர்ந்து நடித்த முதல் படமான துஜே மேரி கஸம் 2003ல் வெளியானது. அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் இந்தக் காதலுக்கு ரிதேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனால் இருவரும் காதலில் உறுதியாக நின்றதால், திருமணத்துக்கு சம்மதித்துவிட்டனர் பெற்றோர்.

சமீபத்தில்தான் இருவருக்கும் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம்.

வரும் பிப்ரவரி 4-ம் தேதி ஜெனிலியா - ரிதேஷ் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் மட்டும் அழைக்க இரு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிலியா நடித்த தமிழ்ப் படம் வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளது. அவர் நடித்த உருமி படம் மலையாளத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. தமிழிலும் இந்தப் படம் வெளியாகிறது. அடுத்து தனுஷ் படத்திலும் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

பெண்கள் மனநல விடுதிகளில் நடக்கும் பாலியல் அக்கிரமங்களை சொல்லும் ‘மயங்கினேன் தயங்கினேன்’


தாய்மண் திரையகம் தயாரிக்கும் முதல் படம் ‘மயங்கினேன் தயங்கினேன்’.'இன்பா' படத்தை இயக்கிய எஸ்டி வேந்தன் இயக்கும் படம் இது. தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுவர் எஸ் டி வேந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக அவலத்தை தோலுரிக்கும் படமாக மயங்கினேன் தயங்கினேன் வருகிறது.

இந்தப் படத்தில் நிதின் சத்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ‘தமிழ்ப் படம்’ புகழ் திஷா பாண்டே. இன்னொரு நாயகனாக தருண் சத்ரியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

ரேணிகுண்டாவில் நடித்த சஞ்சனா சிங் ஒரு அட்டகாசமான குத்துப் பாடலுக்கு ஆடியுள்ளார். கிராமத்தில் நடக்கும் கோயில் திருவிழாப் பாடல் இது. பாபி நடனம் அமைத்துள்ளார்.

மயங்கினேன் தயங்கினேன் இசையை ‘தமிழ் படம்’ கண்ணன் அமைத்துள்ளார். யுகபாரதி, விவேகா, இளையகம்பன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

மயங்கினேன் தயங்கினேன் படத்தின் ஒளிப்பதிவை ராமேஸ்வரன் கவனிக்க, போக்கிரி உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய வி பிரபாகர் வசனத்தை எழுதியுள்ளார்.

படத்தொகுப்பு - உதயசங்கர், கலை – பி எல் தேவா. தாய்மண் திரையகம் சார்பில் ராஜேஸ்வரி வேந்தன் தயாரிக்கிறார்.

நான்கு இளைஞர்களைச் சுற்றி நடக்கிறது கதை. இதுகுறித்து இயக்குநர் எஸ்டி வேந்தன் கூறுகையில், “சென்னை நகரில் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நான்கு இளைஞர்கள், அவர்களின் ஆசைகள், கனவுகள், காதல் மற்றும் உணர்வுகளை மிக அழகான திரைப்படமாக்கியிருக்கிறோம்.

வெறுமனே காதல், நண்பர்கள் அரட்டை என்று இல்லாமல், ஒரு சமூகக் கருத்தை இந்தப்படத்தில் வலியுறுத்தியுள்ளோம். சென்னை சூழலில் வாழ்க்கையை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளோம்.

மொத்தம் 5 பாடல்கள். மிக அருமையாக வந்துள்ளன. சஞ்சனா சிங் ஆடும் குத்துப் பாடல் இந்த ஆண்டில் இளைஞர்களின் மனம் கவர்ந்த பாடலாக அமையும். றிவரும் ரசனை, இளைஞர்களின் எதிர்ப்பார்ப்புக்கேற்ப இந்தப் படம் உருவாகியுள்ளது. காதல்-நகைச்சுவை-சமூக அக்கறை என அனைத்து வகையிலும் மேம்பட்ட படமாக வருகிறது மயங்கினேன் தயங்கினேன்,” என்றார்.

அப்படியென்ன சமூகக் கருத்தைப் புதிதாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்று கேட்டபோது, இயக்குநர் வேந்தன் சொன்ன விஷயம் உண்மையிலேயே அதிர வைத்தது.

“நானே நேரில் பார்த்த ஒரு விஷயம்தான் இந்தப் படத்தை எடுக்க உந்துதலாக அமைந்தது. ஒரு பெண்கள் மனநல காப்பகம் அது. கணவனை இழந்த ஒரு பெண்ணையும் அவரது வயதுக்கு வந்த மகளையும் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். பெரிய தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொண்டனர். ஆனால் அந்த அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சொல்ல முடியாத அளவு பாலியல் கொடுமை அங்கே நடந்துள்ளது. எதிர்த்துக் கேட்கப் போனவர்களையும் விரட்டியனுப்பினர். எங்களிடம் விஷயத்தைச் சொன்னபோது, நாங்களே நேரில் போய், கதவை உடைத்து அந்தப் பெண்களை மீட்டு வந்தோம்.

இப்படி எத்தனையோ மனநல விடுதிகளில் பெணகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அரங்கேறி வருவதை பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத்தான் இந்தப் படத்தில் நேர்மையாக படம்பிடித்துள்ளோம். இதன்மூலம், எல்லா மனநல விடுதிகளுமே தவறானவை என்று நாங்கள் சொல்ல வரவில்லை. உண்மையிலேயே சேவை உள்ளத்தோடு காப்பகங்கள் நடத்திவருபவர்களையும் நாம் அறிவோம். அவர்களை நாம் குறை சொல்லவில்லை,” என்றார் எஸ்டி வேந்தன்.
 

எங்கப்பாவுக்கு பாரத ரத்னா கொடுக்கணும்: தீபிகா


எனது தந்தையும், முன்னாள் பேட்மின்டன் வீரருமான பிரகாஷ் படுகோனேவின் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா. அந்த விருதுக்கு யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆள் ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றனர். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(25). ஆனால் அவர் பரிந்துரைக்கும் நபர் வேறு யாருமில்லை அவரது தந்தையும், பிரபல முன்னாள் பேட்மின்டன் வீரருமான பிரகாஷ் படுகோனே.

இது குறித்து அவர் கூறியதாவது,

எனது தந்தை தனது வாழ்க்கையை பேட்மின்டனுக்காக அர்பனித்தவர். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பேட்மின்டனை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை என் தந்தையைச் சேரும். ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர் அவர் தான்.

அக்ஷய் குமார், சித்ராங்கடா சிங் ஆகியோருடன் சேர்ந்து அவர் நடித்த தேசி பாய்ஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.

கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்திராத சாதனைகள் எல்லாம் படைத்துள்ள சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என பலர் பரிந்துரைத்தும் அவருக்கு இந்த விருது கொடுக்கவில்லை. அதற்கு காரணம் விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்க முடியாது என்பது தான். இந்த விஷயம் தீபிகாவுக்கு தெரியாதா என்ன?
 

சோனியா படத்தில் 8 இயக்குனர்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புன்னகைப்பூ கீதா தயாரிப்பில், ராஜ்கிருஷ்ணா இயக்கும் படம், 'ஒரு நடிகையின் வாக்கு மூலம்'. சினிமா ஹீரோயின் வேடத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். இதில் அவர் சில படங்களில் ஹீரோயினாக நடிப்பது போன்ற காட்சிகள் ஏவி.எம் ஸ்டுடியோவிலும், டி.ஆர் கார்டனிலும் படமாக்கப்பட்டது. சோனியா அகர்வாலை இயக்குனர்கள் விக்ரமன், ராசு மதுரவன், ஏ.வெங்கடேஷ், சுராஜ் ஆகியோர் இயக்கினர். இவர்களை தவிர ராஜ்கபூர், மனோபாலா, வேல்முருகன், ராஜ்கிருஷ்ணா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.


 

ஷூட்டிங்கிலிருந்து சொல்லாமல் சென்றுவிட்டார் தருண்கோபி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தருண்கோபி, சரண்யா நாக் நடிக்கும் படம் 'சரவணகுடில்'. இந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் புஷ்பராஜ் கூறியதாவது: கிராமத்தை மையமாக கொண்ட உணர்வுபூர்வமான கதை. அதற்கு தருண்கோபி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதியதால் தயாரிப்பாளர் சுந்தரவரதனும் நானும் அவரை ஒப்பந்தம் செய்தோம். அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. முதல் கட்டமாக மூன்றரை லட்சம் கொடுக்கப்பட்டது. வள்ளியூரில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு கிளம்பினோம். 23 நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தருண்கோபி, தான் அடுத்து இயக்க இருக்கும் 'காட்டுப்பய' என்ற படத்துக்கான டிரைலரை எங்கள் பட கால்ஷீட்டிலும், எங்கள் கேமராவிலும், எங்கள் பிலிமிலும் எடுக்க முயற்சித்தார். இதை தட்டிக் கேட்டேன். அவருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து பிரச்னை செய்ய ஆரம்பித்து, பிறகு சொல்லாமல் கொள்ளாமல் சென்னை திரும்பி விட்டார். இதனால் 23 நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில், நாங்களும் திரும்ப வேண்டியதாயிற்று. இதுவரை 55 லட்சம் செலவாகியுள்ளது. நாங்கள் தருண்கோபியை எவ்வளவோ சமாதானம் செய்தோம். அவர், 'இப்போது என்னோட ரேஞ்சே வேறு, 20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன்' என்று சொல்கிறார். இதனால் படம் தொடங்க முடியாமல் பாதியில் நிற்கிறது. இயக்குனராக எனது எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்து வருகிறோம். உண்மையில்லை: தருண்கோபி இதுகுறித்து தருண் கோபியிடம் கேட்டபோது, கூறியதாவது:

'சரவணகுடில்' இயக்குனர் சொல்வதில் உண்மை இல்லை. இன்னொருவர் படத்தில் நடிக்கும்போது எப்படி என் படத்து டிரைலரை எடுக்க முடியும். நானும் இயக்குனர்தான். நடன இயக்குனர் காதல் கந்தாஸ் எடுக்கச் சொன்ன சில ஷாட்கள்தான் எடுக்கப்பட்டது. அதை அவர் தவறாகப் புரிந்து கொண்டு கேட்க கூசுகிற ஆபாச வா£த்தைகளை பேசியதால் சொல்லிவிட்டுதான் திரும்பினேன். அப்படி இருந்தும் மதுரையில் காத்திருந்தேன். யாரும் அழைக்கவில்லை. சென்னை வந்து விட்டேன். அதன் பிறகு 30 முறை தேதி குறித்தார்கள். படப்பிடிப்பை நடத்தவில்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? படத்துக்காகப் பேசப்பட்ட சம்பளத்தில் ஒரு பைசா கூட கூடுதலாக கேட்வில்லை. நாளைக்கே ஷூட்டிங் வைத்தாலும் நடிக்கத் தயார்தான். சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் என் பெயரைக் கெடுக்க சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் அதில் இதுவும் ஒன்று.


 

இயக்குனருடன் நடிப்பது கடினம்: பூர்ணா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனருடன் நடிப்பது கடினமானது என்று பூர்ணா கூறினார். பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் 'வித்தகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூர்ணா. வரும் 18-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி பூர்ணா கூறியதாவது: நிறைய ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் முதன் முதலாக இயக்குனருடன் நடித்திருப்பது 'வித்தகன்' படத்தில்தான். பொதுவாக கமர்சியல் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிய வேலை இருக்காது என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு பெரிய பங்கு இருக்கிறது. கிறிஸ்தவ பெண் கேரக்டர். பார்த்திபன் செய்யும் எல்லாவற்றுக்கும் நான் மட்டுமே சாட்சி. ஆக்ஷன் காட்சிகளில் கூட நடித்திருக்கிறேன். வியட்நாம், செக் குடியரசு நாடுகளுக்கு சென்று பாடல் காட்சியில் வெளிநாட்டு நடன கலைஞர்களுடன் ஆடியது புதிய அனுபவமாக இருந்தது. பார்த்திபன் இல்லாத காட்சிகளில் எளிதாக நடித்து விட்டேன். அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் நடிப்பது கோச்சுடன் சேர்ந்து விளையாடு மாதிரி இருந்தது. சிறிய தவறையும் உடனே கண்டுபிடித்து விடுவார். அதனால் பயந்து கொண்டே நடித்தேன். இயக்குனர்களே ஹீரோவாக நடிக்கும்போது அவர்களுடன் நடிப்பது கடினமானது என்பது புரிந்தது. மற்ற படங்களை விட இதில் நான் கூடுதல் அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.




 

சந்தோஷ் சிவனின் உறுமி தமிழிலும் வெளியாகிறது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கில் வெளியான சந்தோஷ் சிவனின் உறுமி தமிழிலும் வெளியாகிறது. வருகிற 15ஆம் தேதி இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. வாஸ்கோடகாமாவின் மரணத்தின் பின்னணியில் சந்தோஷ் சிவன் உருவாக்கியிருக்கும் ச‌ரித்திரப் படமான இதில் பிருத்விரா‌ஜ், ஜெனிலியா, பிரபுதேவா, பிந்து மாதவி, வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழில் உறுமி என்ற பெய‌ரில் வெளியிடுகின்றனர். முன்னதாக 15ஆம் தேதி ஆடியோ விழா நடக்கிறது. இந்த விழாவில் விஜய், ஆர்யா, முருகதாஸ், மணிரத்னம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தீபக் தேவ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.



 

இலியானாவையும் விரட்டியடித்த தெலுங்கானா போராட்டக் குழு!


நடிகை ஸ்ரேயாவை கல்வீசி விரட்டியடித்தது போலவே, மற்றொரு முன்னணி நடிகையான இலியானாவையும் விரட்டியடித்துள்ளது தெலுங்கானா ஆர்ப்பாட்டக்காரர்கள்.

தனி தெலுங்கானா கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர் ஆந்திர மக்களில் ஒரு பகுதியினர்.

சினிமா நட்சத்திரங்களோ, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு காட்டுகின்றனர். காரணம், இருமாநிலங்களாக ஆந்திரா பிரிந்தால், பெரிய பாதிப்பு தங்கள் தொழிலுக்கு ஏற்படும் என்பது அவர்கள் கருத்து.

சமீபத்தில் ஸ்ரேயா நடித்த தெலுங்கு படப்பிடிப்பில் தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கானாவை வாழ்த்தி கோஷமிடும்படி ஸ்ரேயாவிடம் அவர்கள் நிர்ப்பந்தித்தனர். அவர் மறுத்தார். இதனால் கோபமடைந்து படப்பிடிப்பு கருவிகளை உடைத்தனர். ஸ்ரேயா கார் மீது கல்வீசி கண்ணாடிகளையும் உடைத்தனர். ஸ்ரேயா அங்கிருந்து பாதுகாவலர்கள் துணையோடு தப்பி ஓடினார்.

இதுபோல் இலியானா படப்பிடிப்பிலும் நேற்று தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லுஅரவிந்த் மகன் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் இலியானா.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள கே.பி.எச்.வி. காலனியில் நேற்று நடந்தது. இலியானா அல்லு அர்ஜுன் நடித்த காட்சிகள் படமாகிக் கொண்டு இருந்தது. அப்போது தெலுங்கானா ஆதரவாளர்கள் கும்பலாக உள்ளே புகுந்தனர். படப்பிடிப்பு நடத்த கூடாது என தகராறு செய்தார்கள். சிரஞ்சீவி ஒன்று பட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக உள்ளார். அவர் குடும்பத்தினர் நடிக்கும் படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.

மீறி படப்பிடிப்பை நடத்தினால் கேமராவை உடைப்போம் என மிரட்டினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இலியானாவை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ரகளை செய்த 10 பேரை கேபிவிஎச் காலனி போலீஸார் கைது செய்தனர்.
 

புதிய பெயர், புதிய கதையுடன் மீண்டும் ஆரம்பமாகும் சுல்தான்!


ரஜினியின் சிவாஜி - தி பாஸ் படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் சுல்தான் தி வாரியர். சௌந்தர்யா ரஜினி இயக்க, அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்க ரஜினியின் அனிமேஷன் படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

இந்திய நடிகர் ஒருவருக்காக அனிமேஷனில் படம் தயாராவது இதுவே முதல்முறை என்பதால் பெரும் ஆர்வம் காட்டினர் ரசிகர்கள்.

ரஜினியும் வியட்நாம், கம்போடியா என வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்தார்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் படம் குறித்த காலத்துக்குள் முடியவில்லை. அதற்குள் ரஜினி எந்திரனில் படுபிஸியாகிவிட்டார்.

எந்திரன் படம் வெளியான சூட்டோடு ராணாவை அறிவித்தார் ரஜினி. இந்தப் படம் சுல்தானின் மறுவடிவம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அதை சௌந்தர்யா மற்றும் ராணாவை இயக்கும் கேஎஸ் ரவிக்குமார் திட்டவட்டமாக மறுத்தனர். சுல்தான் வேறு, ராணா வேறு. ராணா வெளியான பிறகு சுல்தான் வரும் என்று இவர்கள் அறிவித்த பிறகே வதந்திகள் அடங்கின.

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை, ஓய்வு என நாட்கள் கடந்த நிலையில், சுல்தான் வருமா வராதா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் சுல்தான் வருவது உறுதி என்று தெளிவாக அறிவித்திருந்தார் சௌந்தர்யா. இப்போது தனு ட்விட்டர் பக்கத்தில் அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று ட்விட்டரில் (@sound_d_rajini)பதிவிட்டிருந்த செய்தியில், "எல்லோரும் எனது அடுத்த புராஜெக்டுகள் பற்றியும் அப்பா பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பா மிகவும் நலமாக இருக்கிறார்.

சுல்தான் எனது கனவுப் படம்.அதை உருவாக்குவதில் சில தடங்கல்கள் வந்தன, தேவையற்ற தவறான திருப்பங்கள் நேர்ந்தன. இப்போது அந்தப் படத்தை புதிய தலைப்பு மற்றும் கதையுடன் தொடங்குகிறேன்," என்று கூறியுள்ளார்.
 

கமல்.. மயில்சாமி..மண்சட்டி..மீன்குழம்பு!


உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்றால் அவர் அழைப்பது நடிகர் மயில்சாமியைத் தான்.

கமல் ஹாசனுக்கு மீன் குழம்பு என்றால் இஷ்டம். எப்பொழுதெல்லாம் மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் முதலில் அழைப்பது நகைச்சுவை நடிகர் மயில்சாமியைத் தான். மயில்சாமி அவ்வளவு அருமையாகவா மீன் குழம்பு வைப்பார் என்று நினைக்க வேண்டாம்.

மயில்சாமியின் மனைவி கைப்பக்குவம் பிடித்திருப்பதால் தான் அவரை கமல் அழைப்பார். உடனே மயில்சாமி நல்ல மீனாக வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து மணக்க, மணக்க மீன் குழம்பு வைக்கச் சொல்வாராம்.

குக்கர், அவன் என்று வந்துவிட்ட காலத்திலும் மயில்சாமியின் மனைவி மண்சட்டியில் குழம்பு வைப்பதால் தான் அதில் அப்படி ஒரு ருசி இருக்கிறதாம். அதனால் தான் கமலுக்கு மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. இந்த பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளதாம்.

மண்வாசனை மாறாத கமல்...!
 

ஆயிரத்தில் ஒருவன்... இரண்டாம் பாகம் உருவாக்கும் செல்வராகவன்!


செல்வராகவன் இயக்கத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் வந்து பெரிய அளவு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களைச் சந்தித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா நடித்த இந்தப் படத்தின் கதை, சரித்திரத்தையும் சமகாலத்தையும் இணைத்து சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. கொஞ்சம் இடைவெறிவிட்டு இந்தப் படத்தை எடுக்கும் திட்டமுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈழப் போராட்டத்தை மறைமுகமாகக் குறிக்கும் வகையில் காட்சிகளும் வசனங்களும் ஆயிரத்தில் ஒருவனின் அமைந்திருந்ததால், இந்த இரண்டாம் பாகம் குறித்த ஆர்வமான விசாரிப்புகள் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளன.