சினிமாவில் கடன் வாங்குவது சகஜம். அதே போல, படம் படுத்துவிட்டால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை வரை போவதும் சகஜம். முன்னணி தயாரிப்பாளர்களே கூட இதற்கு விலக்கில்லை.
அதுவும் மதுரையின் 'அன்பான' பைனான்சியர் மாதிரியானவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பட்ட பாடுகளை தேவயானிகள், ரம்பாக்கள் கதை கதையாக சொல்வார்கள்.
இப்போது இதே அன்பானவரிடம் பெரும் தொகை ஒன்றை கடனாகப் பெற்றிருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். அவர்தான் பிரம்மன் படத் தயாரிப்பாளர்.
(பிரம்மன்)
சசிகுமார் ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராக இருக்கலாம். ஆனால் நடிகராக? அவருக்கென்று பெரிய சந்தை மதிப்பு இல்லாதது புரிந்தும், அளவுக்கு அதிகமான பட்ஜெட் பிரம்மன் படத்தை தயாரித்துவிட்டார் தயாரிப்பாளர்.
விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் விலை சொன்னபோது வாங்க மறுத்துவிட்டார்களாம். இதனால் அன்பானவரிடம் ரூ 14 கோடி கடன் வாங்கி இந்தப் படத்தை தானே சொந்தமாக வெளியிடுகிறாராம். அஞ்சு வட்டிக்கு இந்தக் கடனை வாங்கியிருக்கிறாராம்.
மதுரை - ராமநாதபுரம் ஏரியாவை மட்டும் சசிகுமாருக்கு கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். அதை நல்ல விலைக்கு விற்கும் முயற்சியில் உள்ளார் சசியின் தம்பி. எப்படிப் பார்த்தாலும் சசிகுமாருக்கு லாபம்தான்.
தயாரிப்பாளருக்கு?!