கடவுள் ஆசீர்வதித்தால் அடுத்த குழந்தை! : ஐஸ்வர்யா

I Ve Never Endorsed Size Zero Says Aishwarya Rai
குண்டாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஏனெனில் இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார் அழகு அம்மா ஐஸ்வர்யா. கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 10 ஆண்டுகளாக பங்கெடுத்து வரும் ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பின்னர் இந்த ஆண்டு பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றாமல் தனது குழந்தையுடன் பங்கேற்றார் ஐஸ்வர்யா. தாய்மையின் பூரிப்பு முகத்தில் தெரிய ஃபிப்டி கேஜி தாஜ்மகால் சற்றே எடை கூடி 60 கேஜியாக மாறியிருந்தார். ஐஸ்வர்யா குண்டானதைப் பற்றிதான் மீடியா உலகில் பேச்சாக இருந்தது.

ஆனால் ஐஸ்வர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், இதுதான் உண்மை. நான் ஒரு குழந்தையின் அம்மாவாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறேன். என் உடம்பை குறைக்க வேண்டும் என்பதற்காக நான் டயட்டில் எல்லாம் இல்லை.
 
எனக்கு பிடித்த உணவை நன்றாக சாப்பிடுகிறேன் அப்பொழுது தானே குழந்தையை நன்றாக கவனிக்க முடியும். என் மீது அக்கறை எடுத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி என்று கூறிய ஐஸ்வர்யா கடவுள் ஆசீர்வதித்தால் அடுத்த குழந்தைக்கு தாயாராவேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் நிரந்தர அழகிக்கு அடுத்து பிறக்கப்போவது ஆணா, பெண்ணா இப்பவே ஜோசியம் சொல்ல ஆரம்பிங்கப்பா !
 

ஹிம்மத்வாலா ரீமேக்கில் நடிக்க அனுஷ்கா, தமன்னா போட்டி?

Anushka Or Tamanna Himmatwala Remake
80களில் வெளிவந்த சூப்பர் ஹிட் இந்தி படமான ஹிம்மத்வாலாவின் ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவும், தமன்னாவும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலிவுட், டோலிவுட்டில் ராணியாக இருந்த ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் ஹிம்மத்வாலா. 1983ல் வெளிவந்த இந்த படத்தில் இந்தி நடிகர் ஜிதேந்திராவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். அன்று முதல் பல ஆண்டுகள் பாலிவுட்டின் ராணியாக இருந்தார் அவர். தற்போது அந்த ஹிம்மத்வாலா படத்தை இயக்குனர் சஜீத் கான் ரீமேக் செய்கிறார்.

இந்த படத்தில் அஜய் தேவ்கன் ஜிதேந்திரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக அஜய் தேவ்கனுக்கு ரூ.18 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதில் கத்ரீனா கைப், அனுஷ்கா சர்மா அல்லது தீபிகா படுகோன் ஆகியோரில் யாரையாவது நடிக்க வைக்க சஜீத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியும், தமன்னாவும் சஜீத் கானுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் மூலமாக தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

போட்டி கடுமையாகத் தான் உள்ளது. யார் ஜெயிப்பார்கள் என்று பார்க்கலாம்.
 

இந்த வருஷத்துல 2 தமிழ் படத்திலாவது நடிக்கணும்: தமன்னா ஆசை

Will Kollywood Fulfill Tamanna Wish   
இந்த வருடத்தில் 2 தமிழ் படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தமன்னாவின் தற்போதைய ஆசை.

நடிகை தமன்னாவுக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஏன் என்றால் காதல் என்பேன் என்ற ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கு பட உலகில் அவர் செம்ம பிசி. கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் தமன்னாவின் பார்வை கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

என்னை நடிக்கத் தெரிந்தவளாக காட்டியதே தமிழ் படங்கள் தான். தெலுங்கில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் தமிழ் படங்களுக்கு ஒரு குட்டி பிரேக் விட்டேன். தற்போது தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளேன். இங்கு தான் புதுமையை விரும்பும் ரசிகர்கள் உள்ளனர். இந்த ஆண்டுக்குள் 2 தமிழ் படங்களிலாவது நடித்து விடுவேன் என்றார்.
 

வரலாறு கன்னட ரீமேக்கிற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்

Ar Rahman Gets Rs 1 5 Crore Godfather Kannada Movie
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கன்னட படம் ஒன்றுக்கு இசையமைக்க ரூ.1.5 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் இசை உலகிற்கு அறிமுகப்படுத்திய பொக்கிஷம் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் மொழிகளைத் தாண்டி, நாடுகளைத் தாண்டி இசையமைத்து வருகிறார். தனது ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கார் விருதுகள் வாங்கி உலக அரங்கில் இந்தியாவை பெருமைபடச் செய்தவர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் காட்பாதர் என்ற கன்னட படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அஜீத் குமார் நடித்த வரலாறு படத்தின் கன்னட ரீமேக்கான இந்த படத்திற்கு ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளம். இது எந்த இசையமைப்பாளரும் இதுவரை வாங்காதது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் உபேந்திரா அஜீத் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று பாரத் பந்த் என்பதால் விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு பெங்களூரில் உள்ள சான்சலரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ரஹ்மான் கலந்து கொண்டு பேசினார்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் மஞ்சு கூறுகையில்,

சேன்டல் உட் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் 2 பாடல்களுக்கு அவர் புது மெட்டு போட்டுள்ளார். மீதமுள்ள பாடல்களுக்கு தமிழ் பாடல்களில் இருந்து மெட்டெடுத்துக் கொடுத்துள்ளார். தற்போது பின்னணி இசை வேலையில் பிசியாக இருக்கிறார் என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே சஜினி என்ற கன்னட படத்திற்கு இசையமைத்துள்ளார். அந்த படத்திற்கு ஜோடி படப் பாடல்களின் இசையை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது : நடிகை ரோஜா

Roja Confident Ysr Congress Victory By Polls
ஹைதராபாத்: ஆந்திராவில் ஜெகனுக்கு எதிராக சிபிஐயை தூண்டிவிடும் காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது என்று நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரதிநிதியுமான ரோஜா கூறியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஹைதராபாத் சஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் வந்துள்ள நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சோனியா காந்தி தனது அரசியல் எதிரிகளை சிபிஐ மூலம் பழி தீர்த்து வருகிறார். எங்கள் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியதால் கடும் ஆத்திரத்தில் உள்ளார். முன்பெல்லாம் சிபிஐ மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிபிஐ சோனியா காந்தியின் கைப்பாவையாக செயல்படுகிறது.

ஜெகனை பழிவாங்குவதற்காக தனது கைப்பாவையான சிபிஐ போலீசார் மூலம் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இடைத்தேர்தலில் ஜெகன் பிரச்சாரம் செய்தால் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று கருதி அவர் கைது செய்துள்ளார். சோனியா காந்தியின் பழிவாங்கும் போக்கை ஆந்திர மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இந்த தேர்தலில் அவர்கள் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவார்கள். நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. 18 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு டெபாசிட் கிடைக்காது என்றார்.
 

வில்லியாக நடிக்க ரொம்ப பிடிச்சிருக்கு: மகாலட்சுமி

Love Act Negative Roles Serial Actor Mahalakshmi
சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று சீரியல் ராணியாக வலம் வரும் மகாலட்சுமி ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு கெட்டப்பில் அசத்தி வருகிறார். ஒரு சீரியலில் புடவை கட்டி நிஜ மகாலட்சுமியாகவே காட்சி அளிக்கும் அவர் மற்றொன்றில் மாடர்ன் ட்ரஸ் மங்காத்தாவாக மாறிவிடுகிறார். வில்லி கெட்டப்பிலும் பின்னி எடுக்கிறார். இதைத் தவிர ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹரிச்சந்தனா சீரியலில் பணக்கார வில்லியாக களம் இறங்கியுள்ளார். ஒரே நாளில் இப்படி விதம் விதமாக நடிக்க எப்படி முடிகிறது என்று அவரிடமே கேட்டோம். இதோ மகாலட்சுமி கூறுவதை நீங்களும் படியுங்களேன்.

சன் மியூசிக்கில் டிவியில் கல கலப்பாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்ப பார்த்தாலும் போன்ல பேசி "ஒரே மாதிரி காம்பியர் பண்றது, நடிக்குறதுன்னு அலுத்துப்போயிதான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன்.

வில்லியாக நெகடிவ் ரோல் பண்றது ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு. நிறைய பேரு திட்டி, சாபம் விட்டாலும் அதை என் கேரக்டருக்கான் கிரெடிட்டா எடுத்துக்குறேன். சிலர் ஓவரா கோவத்தைக் காட்டும்போது அதை மகாலட்சுமி கிட்ட காட்டாதீங்க, கேரக்டர்கிட்ட காட்டுங்கன்னு சொல்லிடுவேன்.

நான் நடிக்கும் கதாபாத்திரம் முடிந்த உடன் வீட்டைப் பற்றிய சிந்தனை வந்து விடும். அவள் சீரியலில் நான் சஞ்சீவ் ஜோடியா நடிக்குறேன். சஞ்சீவை ஷூட்டிங்லதான் நேர்ல பார்த்தேன். ரொம்ப ஃபிரண்ட்லி.. ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம கலாய்ப்பாரு. செட்டே கலகலன்னு இருக்கும்.

கணவர் அனில்குமார் எப்போ பார்த்தாலும் கிரிக்கெட்டே கதின்னு கிடப்பாரு. சீரியல்,படம் பார்க்கவே முடியலன்னு 52 இன்ச் எல்.சி.டி டி.வி வாங்கிட்டேன். இனிமே நான் நடிச்ச அத்தனை சீரியல்களையும் ஒரு எபிசோடு கூட விடாம பார்த்துடுவேன் என்கிறார் இந்த வில்லாதி வில்லி.
 

கத்ரீனா கைப் ஒரு வெங்கங்கெட்டவர்: சோனம் கபூர் தாக்கு

Sonam Kapoor Calls Katrina Kaif Shameless   
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் வெக்கம் கெட்டவர் என்று இந்தி நடிகை சோனம் கபூர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூர் தேவையில்லாமல் கத்ரீனா கைபை வம்புக்கு இழுத்துள்ளார்.

சோனமிடம் அவர் படங்களை தேர்வு செய்யும் முறை குறித்து கேட்டதற்கு (குறிப்பாக பிளேயர்ஸ், மௌசம்), அவர் கூறிய பதில் வருமாறு,

நான் கதையைப் பாத்துவிட்டு எதை ஒதுக்குவது என்று முடிவு செய்வேன். நான் கத்ரீனா கைபுக்கு பூங்கொத்து கொடுக்க விரும்புகிறேன். அவர் ஏன் இப்படி செய்கிறார் என்றே தெரியவில்லை. அவ்வாறு செய்ய வெட்கம் கெட்டவராக இருக்க வேண்டும். அதனால் அவருக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைக்கலாம். டாப் படங்களில் நடிக்கும் முன்பு நான் அவரைப் போன்று செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல் கூறினார்.

உங்கள் நடிப்பை விட ஆடை, அலங்காரத்திற்காகத் தானே நீங்கள் பேசப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு, படங்களைப் பற்றி பலர் பேசலாம். ஆனால் பேஷன் பற்றி என்னால் மட்டுமே முடியும் என்றார்.

இந்நிலையில் தான் கத்ரீனா பற்றி கூறியதை ஊடகங்கள் தான் தவறாகப் புரிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

குஷ்பு மணிக்கட்டில் மகள்கள், முதுகில் மயில் டாட்டூ

Kushboo Tattooes National Animal On Her Back
நடிகை குஷ்பு தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த நமது தேசிய பறவையான மயிலை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளார்.

திரை நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் பச்சைக் குத்தி வருகிறார்கள். நடிகர் அர்ஜூன் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தனது கையில் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது முதல் படமான ஓ.கே.ஓ.கே.வை பச்சைக்குத்தியுள்ளார். முன்னதாக அவர் தனது மகன் மற்றும் மகளின் பெயர்களை பச்சைக் குத்தியுள்ளார். சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்காக ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி நமீதா தனது முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சைக்குத்தியுள்ளார்.

தற்போது குஷ்புவும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். குஷ்பு தனது நாட்டுப்பற்றை காட்ட நம் தேசிய பறவையான மயிலை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளார். மேலும் அவர் தனது மணிக்கட்டில் தனது மகள்கள் அவந்திகா, அனந்திதா ஆகியோரின் பெயர்களை பச்சைக்குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மும்பைக்கு சென்ற குஷ்பு பிரபுதேவாவின் ரவுடி ரத்தோர் படக்குழுவை தனது மகள்களுடன் சென்று சந்தித்துள்ளார். குஷ்புவின் இளைய மகள் அனந்திதா அக்ஷ்ய குமாரின் தீவிர ரசிகை. தனது ஹீரோவைப் பார்த்த அனந்திதாவுக்கு ஒரே குஷி. அதிலும் அக்ஷய் தனது குட்டி ரசிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தில் அனந்திதாவுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அக்ஷய் சிறிதும் பந்தா இல்லாதவர், எளிமையானவர் என்று குஷ்பு அவர் புகழ் பாட ஆரம்பி்த்துவி்ட்டார்.
 

அஜீத் குமார் ஓய்வு கிடைத்தால் எங்கே போகிறார்?

Whats Ajith Doing Leisure
தல அஜீத் குமார் ஓய்வு நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


திரையுலக பிரபலங்கள் தங்களுக்கு ஓய்வு கிடைத்தால் ரெஸ்ட் எடுக்க குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு புதுப்பொழிவுடன் நாடு திரும்பி மீண்டும் ஷூட்டிங் செல்வார்கள். ஆனால் அஜீத் குமார் சற்றே வித்தியாசமானவராக உள்ளார்.

அவர் தனக்கு ஓய்வு கிடைத்தால் உடனே வெளிநாடுகளுக்கு பறப்பதில்லை. மாறாக மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகிறார். மேலும் சென்னையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அவர் ஓய்வெடுக்க வெளிநாடு செல்லாவிட்டாலும் தனது குடும்பத்தாரை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 31ம் தேதி துவங்கிய இந்த படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 

த்ரிஷா, ராணா காதலை முறிய வைத்த பிபாஷா பாசு?

Bipasha Behind Rana Daggubati Trisha Split
தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியும், த்ரிஷாவும் பிரிய பாலிவுட் கவர்ச்சிக் கன்னி பிபாஷா பாசு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஜான் ஆபிரகாமை பிரிந்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், ராணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவின. இதைக் கேட்டு பதறிய ராணா ச்சே, ச்சே நானும் பிபாஷாவும் காதலர்கள் எல்லாம் கிடையாது நல்ல நண்பர்கள் மட்டுமே என்றார். மேலும் தனது நீண்ட நாள் காதலியான த்ரிஷாவுடனான உறவு நன்றாக இருப்பதாகவும், அவரை பிரியும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ராணா, த்ரிஷா காதல் முறிந்துவிட்டதாகவும், அதற்கு காரணம் பிபாஷா என்றும் பேச்சு அடிபடுகிறது.

இது குறித்து ராணாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,
பிபாஷாவுடன் ராணா நெருக்கமானது த்ரிஷாவை கடுப்பாக்கியுள்ளது. மேலும் ராணா பாலிவுட்டில் பிசியாக இருப்பதால் அவர் ஹைதராபாத் வர நேரம் கிடைப்பதில்லை. அதே சமயம் கட்டா, மீட்டாவில் நடித்தாலும் த்ரிஷாவின் பாலிவுட் கனவு நிறைவேறவில்லை என்றார்.
த்ரிஷாவுக்கு முன்பு ஸ்ரேயாவை டேட் செய்தார் ராணா. த்ரிஷா என்ட்ரியால் ஸ்ரேயா காதல் முறிந்தது. தற்போது பிபாஷாவால் த்ரிஷா காதல் முறிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
 

சினிமா சான்ஸுக்காக முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சைகுத்திய நமீதா

Namitha Tattooes 27 Stars Her Back   
வாய்ப்புகள் வற்றிப்போன நடிகை நமீதா ஜோதிடர் ஒருவரின் அறிவுறைப்படி தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளாராம்.

நடிகை நமீதாவுக்கு பட வாய்ப்புகள் வற்றிப்போய்விட்டன. இதனால் அவர் கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்தியா தவிர துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கடைகளைத் திறந்து வைப்பதுடன் அங்கு நடக்கும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்.

கடைதிறப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு அழைப்பவர்கள் பணத்தோடு, அன்பளிப்புகளையும் வாரி வழங்குகிறார்களாம். இதற்கிடையே சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது பற்றி அவர் ஒரு ஜோதிடரை சென்று பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர் உங்கள் முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சை குத்தினால் வாயப்புகள் வந்து குவியும் என்று கூறியுள்ளார்.

உடனே நமீதாவும் தனது முதுகில் 27 நட்சத்திரங்களைப் பச்சைக் குத்திவிட்டார். வாய்ப்புகள் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Admissions Open At Mgr Film Tv Institute
சென்னை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல் படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும்

பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இயக்குதல் பிரிவிலும், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல் படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும்

பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இயக்குதல் பிரிவிலும் சேரலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை Principal, MGR., Government Film and Television Institute, Tharamani, Chennai-600 113, எனும் பெயரில் ரூ.200- க்கான வங்கி வரைவோலையையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சாதி சான்றின் ஜெராக்ஸ் நகலுடன் ரூ.60-க்கான வங்கி வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.

சென்னையில் வசிப்பவர்கள், ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய 2 கவர்கள் ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விண்ணப்படிவம், தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதளம் மூலம் பெற்று, பூர்த்தி செய்தும் அனுப்பிவைக்கலாம்.

விண்ணப்பஙகள் முறையாக பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன், அரசு தொலைக்காட்சி நிலையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி ஜூன்- 15 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

பக்திப் பழமாய் மாறிய நயன்தாரா

Nayanthara Turns Cool   
நடிகை நயன்தாரா தியானம், யோகா என்று ஆன்மீகவாதியாகியுள்ளார்.

கிறிஸ்தவரான நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்தை தழுவினார். அதில் இருந்து அவர் திருப்பதி ஏழுமலையான் கோவில், குருவாயூர் பகவதி அம்மன் கோவில் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து வருகிறார்.

தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் அவர் சீதையாக நடித்தபோது கூட மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தியானம், யோகா என்று ஆன்மீகவாதியாக மாறியுள்ளார். ஷூட்டிங்கில் நேரம் கிடைத்தாலும் கூட கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பி்ததுவிடுகிறாராம்.

நயன்தாரா முன்பெல்லாம் கோபம் வந்தால் கையில் கிடைப்பதை தூக்கி எறிவார். ஆனால் தற்போது கோபம் வந்தால் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறாராம்.

யோகா, தியானம் மூலம் தனது கோபத்தை கட்டுப்படுத்தி வருகிறார் போலும். தான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் தான் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அவர் முகத்தில் விரக்தியோ, கவலையோ இல்லை மாறாக சாந்தம் குடி கொண்டுள்ளது.
 

கருணாநிதிக்கு வயசு 89: பெங்களூரில் இருந்து தொலைபேசியில் ரஜினிகாந்த் வாழ்த்து

Rajinikanth Wishes Karunanidhi On His 89 Birthday
பெங்களூர்: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரில் இருந்து தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக தொண்டர்கள் அவரது வீட்டுக்கு முன்பு கூடி மேள, தாளங்கள் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மத்திய அமைசச்ர் நாராயணசாமி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவி்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பெங்களூரில் உள்ளார். அவர் அங்கிருந்து கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
 

என் படத்தை விற்க சல்மானும், ஷாருக்கும் தேவையில்லை: கமல் ஹாசன்

Don T Need Salman Shah Rukh Khan Kamal Haasan
தனது படத்தை போணி செய்ய பாலிவுட் ஹீரோக்கள் சல்மான் கானும், ஷாருக்கானும் தேவையில்லை என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவி்த்துள்ளார்.

கமல் ஹாசன் தற்போது விஸ்வரூபம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ஊழலை மையமாக வைத்து அமர் ஹை என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் பாலிவுட் ஜாம்பவான்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின். ஆனால் இதை கமல் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் இரு கான்களையும் சரி, ஜாக்கி சான், டாம் க்ரூஸையும் சரி எனது புதிய படத்திற்காக அணுகவில்லை. அது வெறும் வதந்தி. எனது படத்தை போணி செய்ய சல்மான், ஷாருக்கான் தேவையில்லை.

நான் தற்போது எடுத்து வரும் சினிமாவே எனக்கு திருப்தியாக உள்ளது. எனக்கு பாலிவுட் நடிகர் திலிப் குமாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விஸ்வரூபம் ரிலீஸ் ஆன பிறகு அமர் ஹை பற்றி சொல்கிறேன் என்றார்.



 

சீரியலில் வக்கீலாக கலக்க வரும் சிம்ரன்

Chinnathirai Serial Simran
ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் அழகு மயிலாக தொகுத்து வழங்கும் சிம்ரன், தெலுங்கு சீரியலில் வக்கீலாக களம் இறங்கியுள்ளார். ‘சுந்தரகாண்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாம். இதனால் விரைவில் இதனை தமிழ் பேச வைக்கப்போகின்றனராம்.

ஆந்திராவில் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதுமே விசாரிக்காமல் பெண் கொடுக்கும் நிலை அதிகமாக இருக்கிறதாம். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் அமெரிக்கா போகும் பெண்கள், புகுந்த வீட்டில் சந்திக்கும் கொடுமைகள், கடுங்காவல் தண்டனையை விட மோசமானதாம். பெண்களுக்கு நடக்கும் இந்தக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைதான் 'சுந்தர காண்டா'.

பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் வக்கீலாக வருகிறார் சிம்ரன். இதில் சிம்ரன் ஹீரோயின் இல்லை என்றாலும் சீரியலின் முக்கிய கதாபாத்திரமே தான்தான் என்பதால் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். வெளிநாட்டு மாப்பிள்ளையால் பாதிக்கப்படும் ஹீரோயினைத் தன் வாதத் திறமையால் காப்பாற்றும் வக்கீலாக வருகிறார்.

அமெரிக்க மாப்பிள்ளையாக, கையில் ஒரு கோடி புகழ் ரிஷியும் அவரது மனைவியாக சுஜிதாவும் நடிக்கின்றனர். கூடிய விரைவில் தமிழ் பேசப்போகிறது 'சுந்தர காண்டா!' இதனை சோலைராஜனிடம் உதவியாளராக இருந்த ஜெய் கி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

அமீர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும்!: டாக்டர்கள் போர்கொடி

Doctors Want Aamir Khan Apologise Satyamev Jayate
நடிகர் அமீர்கான் தான் நடத்தி வரும் ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் டாக்டர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதாக டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு எதிரான கருத்துக்களை திரும்ப பெறவேண்டும் என்றும் அமீர்கான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார்ப்ளஸ், டிடி, விஜய் டிவி ஆகிய மூன்று தொலைக்காட்சிகளிலும் சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமீர்கான் தொகுப்பாளராக உள்ள இந்த நிகழ்ச்சி சில வாரங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் டாக்டர்கள் எப்படி எல்லாம் நோயாளிகளை ஏமாற்றுகின்றனர் என்று ஆதாரங்களுடன் விளக்கினார். மருத்துவ சிகிச்சையில் முறைகேடுகள் நடக்கின்றன. மெத்தனம், லஞ்சம், தவறான சிகிச்சை, முறை தவறிய நடத்தைகள் போன்றவை டாக்டர் தொழிலில் காணப்படுகின்றன என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

அமீர்கானின் இந்த கருத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர். 21 மருத்துவக்கல்வி நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுள்ள மெட்ஸ்கேப் இந்தியா என்ற அமைப்பு, நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, அந்த அமைப்பு அமீர்கானுக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

எல்லா டாக்டர்களையும் ஒரே மாதிரியாக பாவித்து, அவதூறான கருத்துக்களை தாங்கள் வெளியிட்டது, வெட்கக் கேடானது. மற்றவர்களுக்கு எந்த மாதிரியான சமூக சட்ட சூழல்கள் வகுக்கப்பட்டுள்ளதோ, அதன்படியே டாக்டர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த தொழிலில், நேர்மையின்மை, லஞ்சம், ஊழல் போன்றவை நிலவுவதாக சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை மருத்துவ முறையிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பிற துறைகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

லஞ்சம், ஊழல், நேர்மையின்மை போன்ற அவலங்களை இந்த சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தவோ, ஒதுக்கித் தள்ளவோ முடியாது. இந்த அவலம் உயர்ந்த நிலையில் நீடித்துக் கொண்டே இருக்கும். பொது மக்கள் மாதிரியே லைசென்ஸ்கள் பெற டாக்டர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

சமூகத்துக்கு நிவாரணம் அளிக்கவும், சேவை செய்யும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்தான், டாக்டர்கள். டாக்டர்களுக்கு நீதி போதிக்கும் தாங்கள், நோயாளிகள் டாக்டர்களை தாக்கும் நிலையை வசதியாக மறந்து விட்டீர்கள். தங்கள் கருத்தால், கோடிக் கணக்கானோர் மனதில் டாக்டர்கள் பற்றி எதிர்மறையான சிந்தனையை பரப்பி விட்டுள்ளீர்கள்.

நம்பிக்கை தான் மிகப் பெரிய நிவாரணி எனவே, உங்கள் டாக்டரிடம் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லாமல் ஒரு டாக்டரை நோயாளி அணுகினால் இது நமது சமூகத்தில் மோசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தி விடும். எனவே டாக்டர்கள் குறித்து தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பும், வருத்தமும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அமீர்கான் தரப்பில் இருந்து என்ன சொல்லப்போகிறார்களோ பார்க்கலாம்.