25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!

மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம்.

25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!

இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன.

ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் வருகிறார் 6.99 சதவீத வாக்குகளுடன். அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், ஏ ஆர் ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13 வது இடமும் கிடைத்துள்ளன.

 

சல்மான்கான் வீட்டுமுன் கோஷமிட்ட 2 பெண்கள் கைது

மும்பை: நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டுக்கு வெளியே நடு ராத்திரியில் வந்து கோஷம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர் இரண்டு பெண்கள். அவர்கள் மீது போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர்.

மும்பை பந்த்ராவில் சல்மானின் வீடு உள்ளது. அங்கு நேற்று இரவு ஒரு தாயும், மகளும் காரில் வந்தனர். அங்குள்ள பாதுகாவலர்களிடம் சல்மான் கானைப் பார்க்க வேண்டும் என்று கூறினர். பாதுகாவலர் விட மறுத்தார். இதையடுத்து அத்துமீறி உள்ளே நுழையப் பார்த்தனர்.

சல்மான்கான் வீட்டுமுன் கோஷமிட்ட 2 பெண்கள் கைது

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் போனது. போலீஸார் வருவதைப் பார்த்த தாயும் மகளும் வேகமாக காரில் ஏறிப் பறந்தனர். படு வேகமாக அவர்கள் கார் ஓட்டிச் சென்றபோது, வழியில் ஒரு பைக் மீது இடித்து விட்டனர். பைக்கில் வந்த நபர் அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இதையடுத்து கோபத்தில் அந்தப் பெண்கள் இருவரும் சேர்ந்து அந்த ஆணைத் தாக்கி விட்டுப் பறந்தனர்.

இந்த நிலையில் இருவரையும் தேடி வந்த போலீஸார் அவர்கள மறித்து நிறுத்தி அவர்கள் மீது அதி வேகமாக கார் ஓட்டிச் சென்றதாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்களது முகவரி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு விடுவித்தனர்.

நேற்று அவர்களின் வீட்டுக்குப் போலீஸார் போனபோது இருவரும் அங்கு இல்லை. நள்ளிரவில் பெண்களைக் கைது செய்யக் கூடாது என்பதற்காக அவர்களை முதல் நாளே போலீஸார் கைது செய்யவில்லையாம்.

அந்தப் பெண்களின் பெயர் ஜஸ்மித் சேத்தி மற்றும் அம்ரிதா என்று தெரிய வந்துள்ளது.

இருவரும் படத் தயாரிப்பாளர்கள் என்று கூறப்படுகிறது. சல்மானைச் சந்திக்க அவரது செயலாளர் ரேஷ்மா ஷெட்டி ரூ. 10 லடசம் கேட்டதாகவும், இதனால்தான் கோபமடைந்து நேரடியாக சல்மான் வீட்டுக்கே அவர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தப் புகாரை ரேஷ்மா மறுத்துள்ளார். மேலும் சல்மானின் தந்தை சலீம் கானும் இப்புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து சலீம் கான் கூறுகையில், சில தினங்களாகவே அவர் தொந்தரவு செய்து வருகிறார். காங்கிரஸ் தலைவரைத் தெரியும், பிரச்சினை செய்வேன் எனறும் மிரட்டி வருகிறார் என்றார்.

 

தங்க மீன்களைத் தொடர்ந்து ராம் இயக்கும் 'தரமணி'!

கற்றது தமிழ், தங்க மீன்களைத் தொடர்ந்து இயக்குநர் ராம் உருவாக்கும் புதிய படத்துக்கு தரமணி என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்தப் படத்தை ஜேஎஸ்கே பிலிம்ஸஸ் தயாரிக்கிறது.

தங்க மீன்களைத் தொடர்ந்து ராம் இயக்கும் 'தரமணி'!

ராம் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘தங்க மீன்கள்' நேற்று வெளியானது. அதே நாளில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் ராம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புதிய படத்துக்கு ‘தரமணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் வழங்க, கட்டுமரம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

'சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் காதல்' என்ற வாக்கியத்துடன் இப்படம் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. தரமணி என்பது ஐடி நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களின் குறியீடாகிவிட்டதால், இந்தக் கதைக் களம் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

கற்றது தமிழ் மாதிரி, இளையோரின் சமூக அவலங்கள் குறித்த ராமின் அழுத்தமான பார்வை நிச்சயம் இடம்பெரும் என நம்பலாம்!

 

பலாத்கார வழக்கில் தீர்ப்பு.. சிறுவன்னா மறந்துடலாமா? மன்னிச்சுடலாமா?: கொந்தளிக்கும் குஷ்பு!

சென்னை: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனை மன்னித்தோ மறந்தோவிடலாமா? என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிக்கிய சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோரே இந்த தண்டனை போதாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பலாத்கார வழக்கில் தீர்ப்பு.. சிறுவன்னா மறந்துடலாமா? மன்னிச்சுடலாமா?: கொந்தளிக்கும் குஷ்பு!

இந்த நிலையில் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், பலாத்காரத்தில் ஈடுபட்டவன் சிறுவன் என்பதால் மறந்துவிடலாமா? மன்னித்துவிடலாமா? நாம் வேண்டுமானால் மறந்துவிடலாம்? ஆனால் அவனை மனிக்கிற உரிமை நமக்கு கிடையாது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரால் எப்படி மறக்கவோ? மன்னிக்கவோ முடியும்?

இன்னொருபுறம் இளம் பெண்ணை சீரழித்த அசாராம்பாபு இன்னமும் சுதந்திரமாக உலவ முடிகிறது என்பதையும் பார்க்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

 

எல்லோரையும் சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க!- சிவகார்த்திகேயன்

எல்லோரையும் சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க!- சிவகார்த்திகேயன்

கோவை: உலகில் ஒரு சூரியன், ஒரு சந்திரன் மாதிரி, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினிகாந்த். என்னையோ மற்றவர்களையோ அப்படிக் கூப்பிடாதீங்க, கூச்சமா இருக்கு, என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கோவை பாபா காம்ப்ளெக்ஸில் வருத்தப்படாத வாலிபர் சங்க இசை வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் ஆளுயர மாலை அணிவித்தனர்.

விழாவில் அவரை இளைய சூப்பர் ஸ்டார் என்று கூவி அழைத்தனர் ஆர்வமிகுதியால் ரசிகர்கள்.

அவர்களை அமைதியாக இருக்கச் சொன்ன சிவகார்த்திகேயன் பேசுகையில், "சென்னையில் மழை பெய்தும்போது கூட வியர்க்கும், ஆனால் கோவையில் எப்போதுமே ஜில்லென்று இருக்கிறது.

இந்த மக்களின் அன்பும், பாசமும் வித்தியாசமாக உள்ளது. இந்த படத்தின் சி.டி. மற்றும் டிரைலர் கோவை, சேலம், திருச்சி, ஆகிய இடங்களில் வெளியிடப்பட இருந்தது. அதன்படி கோவையில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் ஹாலிவுட் படம்போல் இருக்காது. குடும்பத்துடன் தைரியமாக பார்த்து ரசிக்கலாம். அடுத்த வாரம் ரிலீசாகிறது. நிச்சயம் 100 நாள் ஓடும்.

என்னை இளைய சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் அழைக்காதீர்கள். என்னை என்றல்ல.. வேறு யாரையுமே கூட அப்படி அழைக்காதீர்கள். உலகில் ஒரே சூரியன், ஒரே சந்திரன்தான். அதுபோல் ஒரே சூப்பர் ஸ்டார்தான். அவர் தலைவர் ரஜினிகாந்த். எனக்கு கை தட்டி ஆரவாரம் செய்தது உற்சாகமாக உள்ளது. ஒரு நடிகனாக எனக்கு இதுவே போதும்," என்றார்.

 

தன் அறிக்கையை தானே பொய்யாக்கிய மகிழ் திருமேனி... ஆர்யாவை இயக்குவதாக அறிவிப்பு!

அடுத்து ஆர்யைவை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக முன்பு வெளியான செய்திகளை மறுத்து வந்த மகிழ் திருமேனி, இப்போது அதே ஆர்யாவை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

முன்தினம் பார்த்தேனே, அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடையற தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை ‘நான் அவன் இல்லை', ‘அஞ்சாதே', ‘மாப்பிள்ளை', ‘போடா போடி' ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்.

தன் அறிக்கையை தானே பொய்யாக்கிய மகிழ் திருமேனி... ஆர்யாவை இயக்குவதாக அறிவிப்பு!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகனாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகையரின் தேர்வு நடைபெற்று வருகிறது.

முற்றிலும் மாறுபட்ட, மிக வித்தியாசமான ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, மும்பை மற்றும் லண்டனிலும் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர். அடுத்த வருடம் மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

இதே அறிவிப்பை முன்பு மறுத்தவர்...

இதே போன்ற ஒரு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அப்போது, ஆர்யாவை தான் இயக்கவில்லை என்றும், தேவையில்லாமல் என் பெயரையும் அவர் பெயரையும் சேர்த்து செய்தி வெளியிட வேண்டாம் என்றும் மகிழ்திருமேனி அறிக்கை விட்டது நினைவிருக்கலாம்!

 

தன் சொந்தப் படத்தில் வேறு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த ஜீவி பிரகாஷ்!

சென்னை: தான் சொந்தமாகத் தயாரிக்கும் புதிய படத்துக்கு வேறு இசை அமைப்பாளரை நியமித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் முன்னணி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார்.

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 30 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளவர் ஜீவி பிரகாஷ் குமார். ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகன் இவர்.

தன் சொந்தப் படத்தில் வேறு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்த ஜீவி பிரகாஷ்!

பாடகி சைந்தவியை திருமணம் செய்த கையோடு, முதன்முறையாக புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். ‘மதயானைக் கூட்டம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதிர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் வே.வ.ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பாலு மகேந்திராவிடம் இணை இயக்குனராகவும், வெற்றிமாறனுடன் ‘ஆடுகளம்' படத்தில் வசனகர்த்தா மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய விக்ரம் சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள இரு முக்கிய குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் தேனி மற்றும் கேரளாவைச் சுற்றியே நடந்து முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இசையை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். அக்டோபரில் படத்தை வெளியிடவிருக்கின்றனர்.

தான் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும், தனது சொந்தத் தயாரிப்பான இந்தப் படத்துக்கு ரகுநந்தனை இசையைக்க வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஜீவி பிரகாஷ். நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ரகுநந்தன்.

நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. சின்னச் சின்னதா நல்ல, புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதால்தான் தன் சொந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தாராம் ஜீவி.

 

பெண்களுக்கு கவுன்சிலிங் தரும் கேளடி பெண்ணே!

பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கேளடி பெண்ணே' நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

உயிர் யாரிடம்?' என்ற பகுதியில் வாழ்வின் வெற்றிக்கான வழிமுறைகளையும் சொல்லித் தரப்படுகிறது. மேலும், ‘உங்கள் நினைவிற்கு' என்ற பகுதியில் மருத்துவ ஆய்வுகள், வீட்டு மருத்துவம், எளிய முதலுதவி போன்ற பல்வேறு பயனுள்ள தகவல்களை டாக்டர் பிரியா கண்ணன் தொகுத்து வழங்குகிறார்.

பெண்களுக்கு கவுன்சிலிங் தரும் கேளடி பெண்ணே!

கல்யாணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். பத்துப் பொருத்தம் பார்த்து மணம் முடிப்பார்கள். ஆணை விட பெண்ணுக்கு ஐந்து வயதாவது குறைவாக இருந்தால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பார்கள். இந்த வரைமுறை எல்லாம் இப்போது மாறிவிட்டது.

பெரும்பாலான துறைகளில் ஆணும், பெண்ணும் இரவு பகல் பாராது வேலை செய்யும் சூழல் வந்து விட்டது. அதனால் ஏற்படும் நெருக்கம் காரணமாக உடன் பணி புரிபவர்களை திருமணம் செய்வதும் அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்னவென்றால் ஆணும், பெண்ணும் சம வயதினராக இருப்பதும், தன்னை விட வயதில் மூத்த பெண்ணை ஆண்கள் திருமணம் முடிப்பதும் தான். இது மருத்துவரீதியிலும், சமுதாய ரீதியிலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக விளக்குகிறார் டாக்டர் ஜெயம் கண்ணன்.

இந்த நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கேளடி பெண்ணே' நிகழ்ச்சியில் சிறப்புப் பகுதியாக இடம்பெறுகிறது. கேளடி பெண்ணே நிகழ்ச்சியை, ஏ.கே.கம்யூனிகேஷன் சார்பில் அரசு கிருத்திகா தயாரித்து வழங்குகிறார்.

 

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

மும்பை டானைப் பிடிக்கும் போலீசாக நடித்த வேளையோ என்னமோ... நடிகை அமலா பால் பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார். அதுவும் இந்திப் பட உலகில் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில்!

தமிழில் விஜயகாந்த் நடிக்க, முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

இதில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். படத்துக்கு கப்பார் என தலைப்பு கூட சூட்டிவிட்டனர்.

வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் கப்பாரில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாஸன் அல்லது இலியானா நடிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இப்போது இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமலா பாலை ஓகே செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.

இந்தப் படத்தின் நாயகி தென்னிந்திய முக சாயல் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும், ஸ்ருதி, இலியானாவை விட அமலா பால்தான் அந்த வகையில் பொருத்தமாக இருப்பார் என்றும் தயாரிப்பாளர் கருதியதால், அமலாவை அறிமுகப்படுத்துகிறார்களாம்!

ரமணா இந்தி ரீமேக்கில் நாயகியாக அமலா பால்!

இந்தப் படத்துக்கான போட்டோ ஷூட் மற்றும் டிஸ்கஷன்களுக்காக இப்போது அடிக்கடி மும்பை பறந்து கொண்டிருக்கிறார் அமலா.

 

ப்ரோ, காட்டு ராஜா மறைமுகமாக மோதும் தேர்தல்

சென்னை: படத்தை தயாரிக்கிறவங்க கவுன்சில் தேர்தல் ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.

படத்தை தயாரிக்கிறவங்க கவுன்சிலுக்கு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கிறது. கவுன்சில் தேர்தல் தானே என்று சாதாரணமாக நினைக்காதீர்கள். பொது தேர்தலை விட பரபரப்பாக வேலைகள் நடக்கிறதாம்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரின் ஆட்களும் தீயா வேலை செய்கிறார்களாம். இது தவிர ஓட்டுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கொடுக்கிறார்களாம்(அடடா நம்மால் ஓட்டு போட முடியாதே என்று தானே ஃபீல் பண்ணுகிறீர்கள்).

இந்நிலையில் ஒரு அணி தன் ஆதரவாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் தடபுடல் பார்ட்டி கொடுத்துள்ளது. பார்ட்டிக்கான செலவு மட்டும் ரூ.15 லட்சமாம். இதென்ன பார்ட்டி நாங்கள் கொடுக்கிறோம் பார் என்று எதிர் அணி ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறதாம்.

ப்ரோவின் தந்தை தன் பக்கம் வெற்றி பெற பணத்தை தண்ணீராக செலவழிக்கிறாராம். மேலும் எதிர் அணி சார்பாக வைட்டமின் ப. வை வாரி இறைப்பது காட்டு ராஜாவின் சித்தி மகனாம். இது கவுன்சில் தேர்தல் என்றாலும் நிஜத்தில் இது ப்ரோவுக்கும், காட்டு ராஜாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாம்.

போட்டியில் ப்ரோ வெற்றி பெறுகிறாரா அல்லது காட்டு ராஜா கையோங்குகிறதா என்பதை அறிய வரும் 9ம் தேதி இரவு வரை காத்திருங்கள்.

 

நானா லூஸு: ஃபேஷன் டிசைனர்கள் மீது பாய்ந்த நடிகை கல்கி கொச்லின்

நானா லூஸு: ஃபேஷன் டிசைனர்கள் மீது பாய்ந்த நடிகை கல்கி கொச்லின்

மும்பை: பேஷன் ஷோவில் கலந்து கொண்ட இந்தி நடிகை கல்கி கொச்லினுக்கும், ஃபேஷன் டிசைனர்கள் ரித்தி, சித்திக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த போஷன் ஷோவில் பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் ரித்தி, சித்தி ஆகிய டிசனைர்கள் வடிவமைத்தவற்றை அணிந்து ராம்ப் வாக் செய்தார். ஷோ ஸ்டாப்பரான அவர் இறுதியில் டிசைனர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு வர மறந்துவிட்டார். இதனால் கடுப்பான டிசைனர்கள் கல்கியை மனநலம் சரியில்லாதவர் என்றார்களாம்.

இது குறித்து அறிந்த கல்கி ட்விட்டரில் கூறுகையில்,

லெஹங்கா மற்றும் நகைகள் அணிந்து 4 மணிநேரம் காத்திருந்ததற்கு என்னை மனநலம் சரியில்லாதவர் என்றுள்ளார்கள். நான் ஒன்றும் ராம்ப்பை விட்டு வெளியே செல்லவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் என்னை அழைத்து மீடியாவுக்கு பேட்டி கொடுக்க சொன்னார்கள். நானும் டிசைனர்களை புகழ்ந்து பேட்டி கொடுத்தேன் என்றார்.

இது குறித்து ரித்தி, சித்தி கூறுகையில்,

கல்கியின் குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் அவரை தவறாக பேசவில்லை. ட்விட்டரில் கருத்து போடும் முன்பு தனது ஏஜெண்ட் மூலம் அது உண்மையா என்று எங்களிடம் கேட்டிருக்கலாம் என்றனர்.

 

சிங்கம் 2: அமெரிக்காவில் முதல் முறையாக 50 வது நாளை கொண்டாடிய சூர்யா படம்!

ஃபிரிமாண்ட்(யு.எஸ்) : அமெரிக்காவில் முதன் முறையாக சூர்யாவின் சிங்கம் 2 ஐம்பதாவது நாளை கொண்டாடியது.

தமிழகத்தில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஜூலை 4ம் தேதி அமெரிக்கா முழுவதும் சிங்கம் 2 வெளியானது.

தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் கலிஃபோர்னியாவின் சிலிக்கான் வேலியில் மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அவற்றும் ஃப்ரிமாண்ட் பிக் சினிமாஸ் திரையரங்கத்தில் தொடர்ச்சியாக ஐம்பது நாள் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது.

சிங்கம் 2: அமெரிக்காவில் முதல் முறையாக 50 வது நாளை கொண்டாடிய சூர்யா படம்!

அமெரிக்காவில் ரஜினி - கமல் படங்கள் மட்டுமே இதுவரை ஐம்பது நாட்களை கடந்து வெற்றியடைந்துள்ளன. மற்ற படங்கள் மூன்று வாரங்களைக் கடந்தாலே பெரிய விஷயமாகும். ரஜினி - கமலுக்கு அடுத்து, அஜீத் மற்றும் சூர்யாவுக்கு அமெரிக்கா முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்களுக்குப் பிறகுதான் மற நடிகர்கள். தமிழகத்தில் சுமாராக ஓடிய ஏழாம் அறிவு, மாற்றான் படங்கள் கூட அமெரிக்காவில் வெற்றிகரமாக ஓடின.

இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு சிங்கம் 2, அமெரிக்க தமிழ் சிநிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சூர்யாவின் இறால் மீசையை போல் மீசை வளர்த்த ரசிகர்களும் அமெரிக்காவில் உண்டு.

திரைப்படம் தாண்டி, பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தது, அகரம் ஃபவுண்டேஷன் மூலம் உதவி உள்ளிட்டவைகளால் சூர்யா மீது அமெரிக்கத் தமிழர்களிடையே பெரிய நல்லெண்ணம் உருவாகி உள்ளது.

சிங்கம் 2: அமெரிக்காவில் முதல் முறையாக 50 வது நாளை கொண்டாடிய சூர்யா படம்!

எந்த திரைப்படமும் அமெரிக்காவில் பெரும் வெற்றி அடைய வேண்டுமானால், குடும்பத்தோடு பார்க்க வரும் ரசிகர்களால் மட்டுமே சாத்தியமாகும். ரஜினி படங்களை மட்டுமே, எந்த தயக்கமும் இல்லாமல், முதல் நாள் காட்சியிலே குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள் அமெரிக்காவில். மற்ற நடிகர்களில் சூர்யாவுக்குத்தான் இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

ஐம்பதாவது நாள், 175 வது காட்சியுடன் சிலிக்கான் வேலியிலிருந்து விடைபெற்றுள்ளது சிங்கம் 2. எந்தெந்த தியேட்டர்களில், எத்தனை காட்சிகள் விவரங்கள் அனைத்தையும் சூர்யா ரசிகன் இணையத்தளத்தில் விவரமாக வெளியிட்டுள்ளார்கள்.

 

துவங்கிய கையோடு பரண் மேல் போடப்பட்ட ஆமீர், சல்மான் கானின் 3டி அவதார் படம்

துவங்கிய கையோடு பரண் மேல் போடப்பட்ட ஆமீர், சல்மான் கானின் 3டி அவதார் படம்

மும்பை: ஆமீர் கான், சல்மான் கான் இணைந்து நடித்த படத்தை 3டியில் எடுக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த படத்தின் வேலைகளை தற்போது நிறுத்துவிட்டனர்.

1994ம் ஆண்டு வெளியான காமெடி படம் அந்தாஸ் அப்னா அப்னா என்னும் இந்தி படம். ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இப்படத்தில் ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை தற்போது 3டி அனிமேஷன் படமாக எடுக்க முடிவு செய்தனர்.

படத்தை சித்தார்த் ஜெயின் தயாரிக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

அனிமேஷனுக்கு இந்தியாவில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது இல்லை. இந்த நிலை மாறினால் நான் மீண்டும் படத்தை எடுப்பேன் என்றார்.

ரூ.15 கோடி செலவில் எடுப்பதாக இருந்த படத்தின் வேலைகள் 35 சதவீதம் முடிந்துவிட்டன. ஆனால் மவுசு இல்லாமை மற்றும் பணப் பிரச்சனையால் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க மறுத்த நயன்தாரா

சென்னை: வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்க மறுத்த நயன்தாரா  

இதையடுத்து கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நயன்தாராவிடம் கேட்டுள்ளார் தயாரிப்பாளர். அதற்கு நயனோ, பணம் என்னிடமே இருக்கட்டும். வேண்டும் என்றால் அதே முன்பணத்தில் என்னை வைத்து வேறு ஒரு படம் எடுங்களேன் என்றாராம். அதன் பிறகு தான் தயாரிப்பாளர் புதிய இயக்குனரை பிடித்து வேறு ஒரு கதையை படமாக எடுக்கிறார்.

படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டாலும், ஹீரோ, ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட முன்பணத்திற்கு எந்த பங்கமும் வரவில்லை.