ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்தை மிரளவைத்த மாயா!- சக்சஸ் மீட்டில் படக்குழு தகவல்

நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தைப் பார்த்து ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்து மிரண்டு விட்டதாக படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Maya (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

மாயா படத்தின் வெற்றிச் சந்திப்பு இன்று சென்னை ரெசிடென்சி டவர்ஸில் நடந்தது.

Maaya Stuns Hollywood Director Eric England

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் அஷ்வின் சரவணன், நடிகர்கள் ஆரி, அம்ஜத் கான், ஒளிப்பதிவாளர் சத்யா, படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முதலாவதாக பேசிய நடிகர் ஆரி, "மாயா படத்தின் வெற்றி எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த முழுமையான வெற்றியை சுவைக்கத்தான் நான் வெகுநாட்களாக காத்துக்கொண்டு இருந்தேன். நான் மாயா படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம் ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள் என்று என்னிடம் துக்கம் விசாரிக்காத குறையாகக் கேட்டார்கள்.

அவர்களுக்கு மாயாவின் வெற்றி பதில் சொல்லி உள்ளது. படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நேற்று தெலுங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்னை பார்த்த ஒருவர் நான் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பின்னர் சுதாரித்த அவர், "நீங்கள் மயூரி (தெலுங்கில் படத்தின் தலைப்பு இது) படத்தின் நாயகன்தானே" என்று கேட்டு உறுதி செய்து கொண்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்த் மாயா படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து பேசியுள்ளது எங்களுக்கு மிக பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது," என்றார்.

Maaya Stuns Hollywood Director Eric England

படத்தின் தெலுங்கு விநியோஸ்தகர் கல்யான் பேசுகையில், "நான் மாயா படத்தை முதல்முறை பார்த்தவுடன் இந்தப் படத்தை நான்தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மாயா திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் ஐந்தரை கோடியை வசூலித்துள்ளது. இது மிக பெரிய சாதனை," என்றார்.

 

மாயா இரண்டாம் பாகம் எடுப்பேன்!- இயக்குநர் அஸ்வின் சரவணன்

சரியான கதை அமைந்ததும் மாயாவின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குநர் அஸ்வின் சரவணன் கூறினார்.

Maya (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

மாயா படத்தின் வெற்றிக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அஸ்வின் சரவணன் கூறுகையில், "மாயா படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. எனக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்ணை மூடிக் கொண்டு நம்பி இந்தப் படத்தை தயாரித்தார். மாயா படத்தை எடுக்கும் போது படத்தின் முடிவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறி தான் முடித்தேன்.

Director Ashwin Saravanan hints sequel to Maaya

இப்போது எனக்கு இரண்டாம் பாகத்தை இப்படி எடுக்கலாம், அப்படி எடுக்கலாம் என்று புதுப்புதுகதைகளை என்னை சந்திக்கும் பலர் கூறி வருகிறார்கள். அவர்கள் என்னிடம் இப்படி கதைகளைச் சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் பாகம் இரண்டை எடுப்பேன்," என்றார்.

 

இது ஆர்வக் கோளாறா... திட்டமிட்ட சதியா?

பெரிய பட்ஜெட் படங்கள் அல்லது பெரிய ஹீரோக்களின் படங்களை இணையவாசிகளிடமிருந்து காப்பாற்றுவதே இன்றைக்குப் பெரும் பாடாகிவிட்டது.

இந்தப் படங்களின் ரகசியம் என்று எதையும் காத்து வைத்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தர வழியே இல்லாமல் போய்விட்டது. விஞ்ஞான வளர்ச்சி இது என்பதை அனைவருமே ஒப்புக் கொண்டாலும், அதையும் தாண்டி இந்தப் படங்களின் காட்சிகள் வெளியாகாமல் தடுக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் குழுவினரும்.

Social Media turns big head ache for big budget producers

சமீபத்தில் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின இரு வீடியோக்கள்.

ஒன்று, முதல் நிலை நடிகரான ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படத்தின் முக்கியமான படக்காட்சி படமாக்கப்பட்ட போதே, செல்போனில் துல்லியமாகப் படம்பிடித்து அதை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துவிட்டனர்.

மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ரஜினி வருவது போன்ற காட்சி அது. இயக்குநர் அந்தக் காட்சியை ஓகே செய்யும் தருணமாகப் பார்த்து பதிவு செய்துள்ளனர். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

விமான நிலையத்துக்குள் இருந்த ரசிகர் ஒருவர்தான் இப்படிச் செய்துவிட்டார் என்று தெரிய வந்ததும், இதுபோல இனி பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்து, அஜீத்தின் வேதாளம் படக் காட்சி ஒன்றும் நேற்று வெளியானது.

இதற்கு முன்பு விஜய் நடித்த புலி படத்தின் டீசர், ட்ரைலர், ஸ்டில்கள் இப்படி வெளியாகி, அது போலீஸ் வழக்கு வரை போனது நினைவிருக்கலாம்.

ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், சிலர் இதை வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் செய்கிறார்களோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளது கோலிவுட்!

 

அக்டோபர் 9-ம் தேதி முதல் இஞ்சி இடுப்பழகி

அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் என பிவிவி சினிமா அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

Inji Iduppazhagi to release on the 9th of October

சோனல் சவுஹான், பிரகாஷ் ராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் இஞ்சி இடுப்பழகி. தெலுங்கில் இந்தப் படம் சைஸ் ஜீரோ என்ற பெயரில் நேரடிப் படமாகவே தயாராகி உள்ளது.

இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 4 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Inji Iduppazhagi to release on the 9th of October

மரகதமணி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் கோவேலமுடி இயக்கியுள்ளார்.

இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்படி வரும் அக்டோபர் 9-ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் தமிழ், தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது.

 

'சீண்ட ஆள் இல்லையா?' - ப்ரியாமணிக்கு வந்த நிலைமையைப் பாருங்க!

'என்ன ஒத்தைப் பாட்டுக்கு இறங்கி வந்துட்டீங்க... சீண்ட ஆளில்லையா?' - ஒரு பிரஸ் மீட்டில் ப்ரியாமணியைப் பார்த்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்வி இது.

இந்தக் கேள்வியால் நிலைகுலைந்த ப்ரியாமணி கட்டுப்பாட்டை இழந்து நிருபரை அடிக்கப் பாய்ந்து, பின் மன்னிப்புக் கேட்டது தனிக்கதை.

How Priyamani depromoted as item dancer?

ஆனால் ஏன் ப்ரியாமணிக்கு இப்படி ஒரு நிலை வந்தது?

பருத்தி வீரனின் முத்தழகு கேரக்டர்தான் ப்ரியாமணிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பிறகு அந்த மாதிரி கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வந்தன. கண்ணை மூடிக் கொண்டு அத்தனைப் படங்களையும் வேண்டாம் என்றவர், கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களில் நடிப்பதையே தவிர்த்தார்.

How Priyamani depromoted as item dancer?

சில ஆண்டுகள்தான்... தமிழ் சினிமா ப்ரியாமணியைக் கண்டுகொள்ளவே இல்லை. தெலுங்கில் மேக்ஸிமம் கவர்ச்சி காட்டப் போவதாகக் கூறி சில படங்கள் நடித்தார். டோலிவுட்டுக்கு அம்மணி போரடித்திவிட அங்கும் படங்கள் இல்லை.

மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன்.. இனி இந்தி வாய்ப்புகள் குவியும் பாருங்கள் என்றார். ஆனால் ராவணன் கவிழ்த்ததில் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்த மாதிரி ஆகிவிட்டது.

How Priyamani depromoted as item dancer?

ப்ரியாமணிக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ள நேரத்தில், மீண்டும் சினிமா வாய்ப்புக்காக தனது ஆல்பங்களைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

How Priyamani depromoted as item dancer?

தெலுங்கில் பன்னி (Bunny) என்ற படத்தில் ஒரு குத்துப்பாட்டு ஆட்டம் போட்டுள்ளாராம். இதுதான் தலைப்பில் நீங்கள் படித்த கேள்விக்குக் காரணம்!

 

ஆஸ்கர் போட்டி... ஒன்றரை நாள் விவாதத்தைக் கிளப்பிய காக்கா முட்டை!

ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகாவிட்டாலும், ஒன்றரை நாள் கடும் வாக்குவாதத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது காக்கா முட்டை.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் படங்களை நடிகர், இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான ஒரு குழு தேர்வு செய்தது.

Kakka Muttai causes for an one and half day debate

இதில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. தேர்வுக் குழுவில் நடந்தது எதுவும் சரியில்லை என்று கூறி உறுப்பினர் ராகுல் ரவைல் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். பாலேகருடனான கருத்துவேறுபாடு தொடர்பாகவே குழுவிலிருந்து விலகுவதாகக் கூறினார்.

இப்போது தேர்வுக்குழுவில் இடம்பெற்ற மற்றொரு இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில், கோர்ட் படத் தேர்வு தொடர்பான சில உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஆஸ்கர் தேர்வில் இடம்பெற்ற முறைகேடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஓட்டெடுப்பில் பல படிகள் இருந்தன. ஒரு இடைநிலை ஓட்டெடுப்பின்போது நான்கு படங்களின் முடிவுகளில் மாற்றம் செய்யப்பட்டன. அவை - மார்கரிட்டா வித் ஏ ஸ்டிரா, காக்கா முட்டை, மசான், கோர்ட்.

மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது தேர்வுக்குழுத் தலைவர் அமோல் பாலேகர் கொடுத்த முடிவு தவறு எனத் தெரிந்தது. கோர்ட் படத்தை அவர் வெளியேற்ற நினைத்தார். நானும் இயக்குநர் கமலேஷ்வர் முகர்ஜியும் கோர்ட் படத்துக்கு ஆதரவாகப் பேசினோம். அதிலிருந்து நிலைமை மாறியது.

எனக்கு காக்கா முட்டை படம் மீது எந்த வெறுப்பும் கிடையாது. கடைசியில், ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட்டா இல்லை காக்கா முட்டையா என ஒன்றரை நாள் விவாதித்தோம். இது மிகவும் கடினமான தேர்வுதான். கடைசியில் நாங்கள் எல்லோரும் ஒருமனதாக கோர்ட் படத்தைத் தேர்வு செய்தோம். நானும் பதவி விலகி இருந்தால் கோர்ட் படமே தேர்வாகியிருக்காது," என்றார்.

 

சாதி, பணத்தால் நடிகர் சங்கத்தை பிளவுபடுத்த நினைக்கின்றனர் விஷால் அணியினர்!- சரத்குமார்

மதுரை: சாதி, பணத்தால் நடிகர் சங்கத்தை பிளவுபடுத்த நினைக்கின்றனர் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டினார்.

நடிகர் சங்கத் தேர்தலையொட்டி சரத்குமார், ராதாரவி, ராம்கி, ராதிகா, பசி சத்யா, பாத்திமா பாபு உள்ளிட்டோர் மதுரையில் நாடக நடிகர்களை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினர்.

Sarathkumar alleges Vishal team

பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதற்கு பல முறை விளக்கம் அளித்த போதும் புரிதல் இல்லாமல் இன்னும் அதே புகாரைக் கூறி வருகின்றனர். கட்டடம் தொடர்பான ஒப்பந்தம் வெளிப்படையாகவே போடப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டுக்குப் பிறகு இப்போது புகார் கூறுகின்றனர்.

இப்போதைய நிர்வாகிகள் மீது எவ்வித குற்றச்சாட்டும் சொல்ல முடியாத நிலையில் தற்போது பணம், சாதியின் பெயரால் பிளவுபடுத்த நினைக்கின்றனர். நான் உள்பட சங்க நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்த போதும் இதுவரை சங்க நடவடிக்கைகளில் அரசியலைப் புகுத்தியது கிடையாது. ஆனால், சங்கப் பிரச்னையில் தேவையின்றி அரசியலை புகுத்துகின்றனர்.

விஷால், எஸ்வி சேகர் மீது மான நஷ்ட வழக்கு

சங்கக் கட்டடம் தொடர்பாக விளக்கம் அளித்த பிறகும் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதால், நடிகர் விஷால் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். எங்களது தலைமையில் எந்தெந்த பதவிக்கு யார் போட்டியிட உள்ளனர் என்பதை செப்.30ஆம் தேதிக்குள் அறிவிக்க உள்ளோம்," என்றார்.

 

'தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி!' - வைகோ, பாரதிராஜா

நரேன் - சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார்.

படம் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போக தனது செலவிலேயே அடுத்த பிரத்யேகக் காட்சியை சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் ஏற்பாடு செய்துள்ளார் வைகோ.

படத்தைப் பார்வையிட இயக்குநர் பாரதிராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, தோழர் தியாகு, வழக்கறிஞர் சங்கர சுப்பு உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தார்.

Vaiko, Bharathiraja praises Kaththukkutti

படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்வையிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, ''ஒரு படத்தைப் பார்க்க வைகோ அழைக்கிறார் என்றாலே அந்தப் படம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை என்னால் யோசிக்க முடிந்தது. காரணம், வைகோ அந்தளவுக்குத் தேர்ந்த சினிமா ரசிகர். ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரின் நுணுக்கத்தை விட சிறப்பாகக் கவனிக்கக் கூடியவர். அதனால் 'கத்துக்குட்டி' படத்தில் ஏதோவொரு நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும் என நம்பித்தான் படம் பார்க்க வந்தேன்.

ஒரு நல்ல விஷயம் அல்ல. பல நல்ல விஷயங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியோடு கலகலப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தம்பி சரவணன். குறிப்பாக படத்தில் சூரியின் காமெடி பெரிதாகக் கொண்டாட வைக்கும். நல்ல விஷயங்களை நாடக பாணியில் சொல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லி, பார்ப்பவர் மனதைக் கொக்கிப் போட்டு இழுக்க இந்த இயக்குநர் கற்று வைத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு கூர்மையாக இருக்கின்றன. தஞ்சை மக்களின் கொண்டாட்டங்களையும் கூடவே அவர்களின் அன்றாடத் துயரங்களையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கும் 'கத்துக்குட்டி' திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும். இந்தப் படத்தை ஜெயிக்க வைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை!" என்றார் சிலிர்ப்போடு.

வைகோ

Vaiko, Bharathiraja praises Kaththukkutti

அடுத்து பேசிய வைகோ, ''அரசியல் கட்சிகளின் போராட்டங்களால் சாதிக்க முடியாததை ஒரு திரைப்படத்தால் சாதிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தம்பி இரா.சரவணன். கிராமத்து வாழவியலை அவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த 'கத்துக்குட்டி' படம். முள்ளி வாய்க்கால் கொடுமைக்குப் பிறகு நான் படம் பார்ப்பதை அடியோடு குறைத்துக் கொண்டேன். ஆனால், 'கத்துக்குட்டி' படத்தை சில நாட்களுக்குள்ளேயே இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் அடிநாதமான விவசாயப் பிடிப்பான கதையும், திரைக்கதைத் திருப்பங்களும், நுட்பமான வசனங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியமைப்புகளும், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரியான கருத்துச் சொல்லும் பாணியும் என்னை இந்தப் படத்தின் பெரிய ரசிகனாக்கிவிட்டன," எனப் பாராட்டியவர் ஒருகட்டத்தில் கையெடுத்துக் கும்பிட்டு, ''இந்தப் படத்தை பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாற்றி நமக்காக சோறு போடும் விவசாய ஜீவன்களுக்கு நன்றி காட்டுபவர்களாக தமிழக ரசிகர்கள் பெரும்பணி செய்ய வேண்டும். 'கத்துக்குட்டி' படத்தைக் கடைக்கோடி மக்களின் பார்வைக்கும் கொண்டு சென்று மாபெரும் புரட்சியை நாம் நிகழ்த்த வேண்டும். 'கத்துக்குட்டி' தரணி போற்றும்
தஞ்சை தமிழ் மக்களின் பேரழகான காவியம் என்றால் அதில் கொஞ்சமும் மிகை இல்லை!" என்றார் நெகிழ்வுடன்.

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ''மக்களின் வலியைப் பேசுகின்ற படங்கள் பெரிதாக ஓடுவது கிடையாது. இந்த விஷயத்தை நன்றாகப் புரிந்துகொண்டு சொல்லும் விதமாகச் சொன்னால் எதையும் சரியாகச் சொல்லலாம் என நிரூபித்திருக்கிறார் 'கத்துக்குட்டி' இயக்குநர். விவசாய மக்களின் துயரங்களை இவ்வளவு ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருப்பதும், அதனை அனைத்து தரப்பிலான மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நகைச்சுவையாகச் சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கது. 'கத்துக்குட்டி' மக்களுக்கான படம்... மாபெரும் புரட்சியை இந்த மண்ணில் நிகழ்த்தக்கூடிய படம்!" என்றார்.

Vaiko, Bharathiraja praises Kaththukkutti

வன்னியரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, ''இந்த 'கத்துக்குட்டி' படத்தில் சொல்லப்படாத அரசியல் இல்லை. பேசப்படாத பிரச்னைகள் இல்லை. அலசப்படாத விவாதங்கள் இல்லை. ஆனால், இவ்வளவு விஷயங்களையும் சீரியஸாகச் சொல்லாமல், எப்படி எல்லாவிதத் துயரங்களையும் சிரித்த முகத்தோடு தாங்கிக் கொண்டு விவசாய ஜீவன்கள் இந்த உலகுக்குப் படியளக்கிறார்களோ... அதே பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இன்றைக்கும் கிராமங்களை ஆட்டிப் படைக்கும் சாதியக் கொடூரத்தை அட்மாஸ்பியரில் இருக்கும் ஒரு பாட்டியை வைத்துப் போகிற போக்கில் நெஞ்சைப் பிளந்திருக்கிறார் இயக்குநர் சரவணன். இத்தகைய படைப்புகளை தமிழ் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும்," என்றார்.

இத்தனை பாராட்டுகளையும் பெற்றிருக்கும் 'கத்துக்குட்டி' திரைப்படம் அக்டோபர் முதல் தேதி, காந்தி பிறந்த நாளையொட்டி திரைக்கு வருகிறது.

 

இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே சோனா!!

என்னதான் வயதானாலும், இன்னமும் ஷகிலா, ஷர்மிளி, சோனாவின் கவர்ச்சிப் படங்களைத் தேடும் கூட்டம் இணையத்தில் இருக்கவே செய்கிறார்கள்.

இந்த மாதிரி கவர்ச்சிப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் சோனா.

Sona says no to glam roles

இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்பதுதான் அவர் தந்திருக்கும் அதிர்ச்சி.

இதோ அவர் நேற்று விடுத்த ஸ்டேட்மென்ட்:

Sona says no to glam roles

அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இப்போது எனக்கே கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது.

Sona says no to glam roles

இனி அப்படி இப்படி நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க முடுவெடுத்திருக்கிறேன்.

கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர்ன்னு வரும் போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள்... நான் நல்ல கேரக்டர்களில் நடிக்கக் காத்திருக்கிறேன்!"

 

”பஜ்ரங்கி பைஜான்” திரைப்படத்துக்கு முதலில் கேட்கப்பட்ட ஹீரோ யார் தெரியுமா?

மும்பை: இந்தியில் வெளியாகி சக்கைப் போடு போட்ட திரைப்படமான பஜ்ரங்கி பைஜானுக்கு முதன்முதலில் நடிக்க சல்மான்கானுக்கு பதிலாக கேட்கப்பட்டவர் ரஜினிகாந்த் என்ற தகவலை அப்படத்தின் கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் வெளியிட்டது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.

ஏற்கனவே வெளியான இத்தகவலை அடுத்து இவ்வீடியோ வைரலாகப் பரவி வருகின்றது. பாகுபலி இயக்குனரான ராஜமெளலியின் தந்தையும், அப்படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத்தின் கதைதான் பஜ்ரங்கி பாய்ஜான் திரைப்படமும்.

bajrangi

கடந்த ஜூலையில் வெளியாகி தியேட்டர்களில் செமையாக ஓடிய இத்திரைப்படங்களின் கதையாசிரியரான இவர் அதுகுறித்த பேட்டியின்போது இத்தகவலை வெளியிட்டார். முதலில் அவர் இக்கதைக்கு ரஜினி காந்த், அமிர் கான், அல்லு அர்ஜூன் ஆகியோரைத்தான் கேட்டாராம்.

Rajinikanth refused to act in Bajrangi Bhaijaan

"ரஜினிகாந்துடன் கூடவே, புனித் ராஜ்குமார், அல்லு அர்ஜூன் ஆகியோரும் இக்கதைக்காக தேர்வு செய்யப்பட்டனர். எனினும், கடைசியில் சல்மான்கான் உடனடியாக இப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொல்லிவிட்டார்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சித்திரைத் திருநாளில் திரைக்கு வருகிறது ரஜினியின் கபாலி?

கபாலி ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள், வீடியோக்கள் தினசரி இணையத்தில் கசிய ஆரம்பித்திருப்பது இயக்குநருக்கும் ரஜினிக்கும் பெரிய தர்மசங்கடத்தைத் தந்துள்ளது.

இனி இந்த மாதிரி ஸ்டில்களைப் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Rajini's Kabali on April 14?

இந்த நிலையில் படத்தை எப்போது வெளியிடுவது என்பதில் ஒரு இறுதியான முடிவுக்கு வந்திருக்கிறாராம் தாணு.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை பொங்கல் வெளியீடு என்று கூறி வந்தனர். ஆனால் ஷெட்யூல்படி படம் வரும் ஜனவரியில்தான் முடிகிறது. போஸ்ட் புரொடக்ஷனுக்கு குறைந்தது 3 மாதங்களாவது தேவை.

எனவே பக்கா திட்டமிடலோடு படத்தை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் சித்திரைத் திருநாளில் வெளியிட்டுவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டில் வெளியான ரஜினி படங்கள் வசூலில் சக்கைப் போட்டிருக்கின்றன. அந்த சென்டிமென்டும் கூட, இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.

 

பாகுபலி அனுஷ்கா மாதிரி ஒரு ரோல் கொடுத்துப் பாருங்க! - தம் கட்டும் ஸ்ரேயா

பாகுபலி அனுஷ்கா மாதிரி ஒரு வேடம் தந்தால் என் திறமையை முழுமையாக நிரூபிக்க முடியும் என்கிறார் ஸ்ரேயா.

Shriya trying for another round in Tamil

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரேயாவுக்கு இப்போது படங்களே இல்லை. கடைசியாக அவர் நடித்த த்ரிஷ்யம் இந்திப் படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் போகவில்லை.

Shriya trying for another round in Tamil

ஆனால் எப்படியாவது மீண்டும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற ஆசையில் தமிழ், தெலுங்குப் பட உலகில் வலம் வர ஆரம்பித்துள்ளார்.

Shriya trying for another round in Tamil

சமீபத்தில் அவர் கூறுகையில், "தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. ஆனாலும் எனது திறமை முழுமையாக இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவி நடித்தது போலவோ, அல்லது ‘பாகுபலி' படத்தில் அனுஷ்கா நடித்ததுபோன்ற வேடங்களோ கிடைத்தால் என் திறமையை முழுமையாக நிரூபிப்பேன்," என்றார்.

 

சன்னி லியோனின் ஜன்னி வரவைக்கும் உடற்பயிற்சி வீடியோ! இளசுகளை ஜிம்முக்கு இழுக்கிறாராம்

மும்பை: பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் வகையிலான, உடற்பயிற்சி வீடியோக்களை பாலிவுட் நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன், சமீபத்தில் சூப்பர் ஹாட் சன்னி மார்னிங்ஸ் என்ற பெயரில் உடற்ப்யிற்சி போஸ்களுடன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதன் சக்சசை தொடர்ந்து தற்போது, மற்றொரு வொர்க்-அவுட் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நீச்சல் குளத்தின் ஓரத்தில் இருந்தபடி பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை சன்னி இந்த வீடியோவில் செய்து காண்பித்துள்ளார். இதன் பின்னணியில் ஒலிக்கும் பாடலை தர்ஷன் ராவல் மற்றும் ரிமி நிக்யூ ஆகியோர் பாடியுள்ளனர்.

இளசுகளின் நெஞ்சத்துடிப்பை அதிகரிக்க செய்வதாக இந்த வீடியோக்கள் அமைந்துள்ளன. சன்னியை பார்த்துவிட்டு ஜிம்முக்கு கூட்டம்போகுமா, அல்லது, சன்னி எபெக்ட்டில் ஜன்னி வந்து படுத்துகொள்வார்களா என்பது வரும் நாட்களில் தெரியும்.