அது என்ன ஜனனி.. அய்யர்?

Karu Pazhaniyappan Objects Heroines

சாதி அடையாளங்களை பெயரோடு சுமந்து திரியும் வழக்கத்தை ஆண்கள் பெரும்பாலும் விட்டுவிட்டார்கள். ஆனால் பெண்கள் இப்போது ஆரம்பித்திருக்கிறார்கள்.

குறிப்பாக பிரபலமாக உள்ள பல பெண்கள் தங்கள் பெயரோடு அய்யர், ரெட்டி, பிள்ளை, நாயுடு என போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

மேலே குறிப்பிட்ட அத்தனை சாதி அடையாளங்களோடும் இங்கே நடிகைகள் உள்ளனர்.

நடிக்க சான்ஸ் கேட்டு வரும்போது, பெயரையோ, அதனுடன் ஒட்டியிருக்கும் சாதி அடையாளத்தையோ மாற்றக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறார்கள்.

இதனை எந்த இயக்குநரும் கண்டிப்பதில்லை. பாலா கூட தன் படத்தின் நாயகி ஜனனி, அய்யர் என்ற சாதி அடையாளத்துடன் நடிக்க அனுமதித்தார்.

அதே ஜனனி அய்யர் நடித்துள்ள இன்னொரு படம் பாகன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார்.

"இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன்," என்றார்.

 

ரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் நீரையும் தாருங்கள்.. கர்நாடக எம்.பிக்கள் முன் அமீர் பேச்சு

சென்னை: ரஜினி, அர்ஜுன் போன்றவர்களை தந்தது போல, கொஞ்சம் காவிரித் தண்ணீரையும் தமிழகத்துக்கு அனுப்பி வையுங்கள், சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம், என்று இயக்குநர் அமீர் கூறினார்.
ameer requests karnataka mps mlas cauvery water
ஸ்ரீகாந்த் - ஜனனி நடிக்க, அஸ்லாம் இயக்கத்தில் உருவாகியுள்ள பாகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யாம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால், விழாவிற்கு கர்நாடக எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் வந்திருந்தார்கள்.

ரஜினிகாந்த், அர்ஜூன் உட்பட பலர் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழில் வெற்றிவாகை சூடியதை நினைவூட்டி அவர்கள் பேசினார்கள்.

"தமிழ்நாட்டு மீது எங்களுக்கு அன்பு அதிகம். அந்த அன்புதான் எங்களை இங்கே வரவழைத்தது. அந்த அன்புதான் அனைவரையும் அரவணைத்து வாழ வைத்திருக்கிறது," என்று பேசினர்.

இயக்குநர் அமீர் பேசியது விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேச்சு:

'பாகன்' படம் சைக்கிளோடு தொடர்புடையது. எனது சைக்கிள் அனுபவம் புதுமையானது. காதலி போல கடைசி வரை அது எனக்கு கிடைக்கவே இல்லை. வசதியான குடும்பத்தில பிறந்தாலும் 3 வயதிலேயே தந்தையை இழந்தேன். அம்மா படிக்காதவள். அவளுக்கு எனக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருந்ததால் சைக்கிள் வாங்கித் தரவில்லை. மேல் படிப்பு படிக்கும்போதும் சைக்கிள் வாங்கித் தரவில்லை. என் அண்ணன்களுக்குகூட அம்மா சைக்கிள் வாங்கித் தரவில்லை. எங்காவது விழுந்து விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.

பக்கத்து வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அதனால் அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுப்பேன். காரணம் அவர்கள் சைக்கிள் தருவார்கள். அழகான சைக்கிள் என்பது வெறும் கனவாகவே இருந்தது. கல்லூரி 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததால் பஸ்சில் சென்றேன். அப்போதும் சைக்கிள் வாங்கவில்லை. பிற்காலத்தில் இயக்குனராகி சம்பாதித்த பிறகு முதலில் வாங்கியது கார்தான். கடைசிவரை சைக்கிள் எனக்கு கைகூடாமலே போய்விட்டது.

எனது உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குனர் அஸ்லம். அவரும், சமுத்திரகனியும் எனக்கு பூசாரியாக இருந்தாக சொன்னார்கள். பூசாரியாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை. கடவுள் ஒருவர்தான். அப்படிப் பார்த்தால் பாலாவிடம் நான் 15 ஆண்டுகள் பூசாரியாக இருந்தேன். திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு எப்படி வேண்டுமானோலும் வரும். திண்டுக்கல் தியேட்டரில்தான் என் தயாரிப்பாளர் என்னை இயக்குனராக அறிவித்தார்.

அப்போது அறிமுகமானவவர்தான் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவரைப் பற்றி சசிகுமார் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார். சுப்பிரமணிபுரத்துக்கு ஜேம்ஸ் வசந்தனை புக் பண்ணியபோது நான் சசியிடம் யோசித்து செய் என்றேன். பின்னர் ஒரு நாள் பாடலை போட்டுக் காட்டியபோது சரியாக வருமா என்று கேட்டேன். பின்னர் அதை படத்தில் பார்த்து வியந்தேன்.

இயக்குனர் அஸ்லம் என்னிடம் பணியாற்றினார். இந்த கதையை அவர் பல வருடம் வைத்திருந்தார். என்னிடம் சொல்லாமல் ஒரு சாதாரண கம்பெனிக்கு அந்த கதையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த தயாரிப்பாளின் மகன் நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார். இப்படி அவசரப்பட்டு விட்டானே இனி அவன் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வணங்கிய கடவுள் அவனை கைவிடவில்லை. படத்தை அந்த தயாரிப்பாளர் கைவிட்டார். நான் ஸ்ரீகாந்த் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது படம் அழகாக உருவாகியிருக்கிறது.

சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். அந்த கலாச்சாரம் இப்போது வளர்ந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்கிறார்கள். சிலர் நாம் எழுந்து விட்டால் நம் இடத்தில் இன்னொருவர் உட்கார்ந்து விடுவாரோ என்ற நினைக்கிறார்கள். அது தவறு. சினிமா ஒன்றும் முக்கு சந்தல்ல. அது பெரிய பீச். நாம் இங்கிருந்து சென்றால், வெறொருவர் இன்னொரு திசையிலிருந்து நம்மை விட வேகமாக வந்து கொண்டிருப்பார். எல்லோரையும் அள்ளி அணைத்துக் கொள்ளும் இடம் சினிமா.

வேறு மாநிலம், வேறு மொழி கலைஞர்களைகூட அன்பாக அள்ளி அணைத்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை கன்னடத்தை சேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் பார்க்காமல் இங்கு அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம்.

இங்கே பேசிய கர்நாடக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள். நாங்கள் உங்களுக்கு ரஜினியையும், அர்ஜுனையும் தந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இன்னும் நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தாருங்கள் அள்ளி அணைத்துக் கொள்கிறோம். அதோடு கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு நாங்கள் செலுத்தும் அன்பை உங்களுக்கு நாங்கள் தரும் ஆதரவை உங்கள் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை வரும்போது சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.," என்றார்.

அமீர் பேச்சை வரவேற்ற கர்நாடக பிரதிநிதிகள், நிச்சயம் பேசுவதாகக் கூறினர்.

விழாவில், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சுசீந்திரன், கரு பழனியப்பன், பிரபு சாலமன், ஏ எல் விஜய், நடிகர் ஜெயம் ரவி, நமீதா, சுஜா வருணீ, கவிஞர் நா முத்துக்குமார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, வேந்தர் மூவீஸ் ரகு உள்பட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

 

'ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன்' - ஸ்ரீதேவி

Sridevi Proud Rajini Kamal S Co Sta

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன், என்று நடிகை .தேவி கூறினார்.

14 ஆண்டுகளுக்கு முன் இந்திப் படத் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை நாயகியாக்கும் முயற்சியிலும் உள்ளார் ஸ்ரீதேவி.

இந்த நிலையில் 14 வருடங்களுக்குப்பின் அவர், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் 'இங்கிலீஷ்-விங்கிலீஷ்' என்ற படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்து இருக்கிறார்.

இந்த படத்தின் `டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை பி.வி.ஆர். தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, நிருபர்களிடம் கூறுகையில், "இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்," என்றார்.

உங்களுக்கு ஜோடியாக நடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்னமும் முதல் நிலை கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, "பெருமையாக உணர்கிறேன்.. அவர்களின் இணையற்ற உழைப்பின் பலன் அது. அவர்களுடன் பல ஆண்டுகள் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?, என்று கேட்டபோது,

"நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும்," என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் பால்கியிடம், 'உங்கள் படங்களுக்கு இளையராஜாதானே இசை அமைப்பார். இந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளரை போட்டிருப்பதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த பால்கி, "இந்தப் படத்துக்கு நான் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என விரும்பினேன். காரணம் நான் ராஜா இசை கேட்டு வளர்ந்தவன். ஆனால் என் மனைவி அப்படி இல்லை. அவர்தான் இந்தப் படத்துக்கு இயக்குநர்.

என்னைப் பொருத்தவரை, எந்த இயக்குநராக இருந்தாலும் இளையராஜாவின் இசையைத்தான் பரிந்துரைப்பேன்,' என்றார்.

 

கவுண்டமணி தாயார் மரணம்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87) உடல்நலக் குறைவு காரணமாக உடுமலைப்பேட்டையில் நேற்று காலமானார்.

உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார் காளியம்மாள். கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவருடைய காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.

அதற்காக வீட்டில் இருந்தபடி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.

முன்தினமே உடுமலைக்கு வந்துவிட்ட கவுண்டமணிக்கு பலரும் ஆறுதல் கூறினர்.

 

ஆபாச தளத்தில் போன் நம்பருடன் படங்கள்- நடிகை சுமா அதிர்ச்சி - போலீசில் புகார்!

Tamil Actress Photos In Adult Website

தமிழில் நடித்து வரும் சுமா என்ற நடிகையின் படங்கள் ஆபாச இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது.

நடிகை சுமா என்றே ரிஷிகா, பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர். அர்ஜூன் ஜோடியாக ‘துரை' படத்தில் நடித்தார். 2008-ல் இப்படம் ரிலீசானது.

தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘வனயுத்தம்' படத்தில் நடித்து வருகிறார்.

சுமாவின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சுமாவின் ஆபாச படங்களுடன் செல்போன் நம்பரையும் பதிவு செய்து, 'விருப்பம் இருந்தா கூப்பிடுங்க... கொடுக்கும் விலைக்கு ஏற்ற சேவை' என்றெல்லாம் தன் 'சேவை' பற்றி அவரை கூறுவது போல ஆங்கிலத்தில் ப்ரொபைல் உருவாக்கி வைத்துள்ளனர்.

தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சுமா, இன்டர்நெட்டில் தன்னை இழிவுபடுத்தி படங்கள் வெளியிட்டுள்ளதாக மும்பை போலீசில் சுமா புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், "நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னை தப்பானவள்போல் சித்தரித்து இன்டர்நெட்டில் படங்கள் வெளியிட்டு உள்ளனர். அதில் என் போன் நம்பரையும் குறித்துள்ளனர். இதனால் எனக்கு தவறான எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.

எனது தாய் ஆசிரியை வேலை பார்க்கிறார். தந்தை சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் மாடலிங் செய்து நடிக்க வந்தேன். என்னை இழிவுபடுத்தி படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

'நான்' விஜய் ஆன்டனியின் அடுத்த படம் திருடன்!

Vijay Antony S Next Thirudan   

நான் படத்துக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடிக்கும் புதிய படம் திருடன் என தலைப்பிடப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக அறிமுகமான முதல் படம் நான். அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது இந்தப் படம். படத்தை அவரே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்போது அடுத்த புதுப்படத்தைத் தயாரிக்க களமிறங்கிவிட்டார் விஜய் ஆன்டனி.

இந்தப் படத்துக்கு திருடன் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். படத்தின் நாயகி உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, இசையமைப்பாளராக தான் பணியாற்றும் படங்களின் வேலைகளும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்கிறாராம். ஹரிதாஸ், எம்ஜிஆர், சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்களின் இசையமைப்புப் பணிகளையும் அவர் வேகவேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார்!

 

அம்மாடி... புடவை விளம்பரத்தில் நடிக்க வித்யாபாலனுக்கு ரூ 5 கோடி!

மும்பை: ஒரு ஜவுளிக்கடையின் புடவை விளம்பரத்தில் தோன்ற வித்யா பாலனுக்கு ரூ 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா, கத்ரீனா போன்றவர்கள் படங்களில் வாங்கும் சம்பளத்தை விட, விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் மிக அதிகம்.

இவர்களுக்கு சளைத்தவரல்ல வித்யாபாலனும். அதுவும் தி டர்ட்டி பிக்சர் படம் வெளியாகி வெற்றிகளைக் குவித்த பிறகு, அவர் வாங்கும் சம்பளம் ஏகத்துக்கும் அதிகரித்துவிட்டது. விளம்பர வாய்ப்புகள் வாசலில் க்யூவில் நிற்கின்றன.

இவற்றில் புடவை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக வித்யாபாலனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி, அட்வான்ஸ் கொடுத்துள்ளனர்.

அவர் செய்ய வேண்டியதெல்லாம், குறிப்பிட்ட சேலையின் விளம்பரங்களில் நடிப்பதோடு, தான் போகும் நிகழ்ச்சிகளுக்கும் அந்த பிராண்ட் புடவையை அணிந்து செல்ல வேண்டுமாம்!!