4/4/2011 1:04:15 PM
இந்தியாவில், வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு தமிழ் திரைப்படத்துறையில் புதுமுகங்கள் அறிமுகம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 55 ஹீரோக்களும், 60 ஹீரோயின்களும் அறிமுகமானார்கள். அவர்களில் சிலர் மட்டுமே இந்த ஆண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே புதுமுகங்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த மூன்று மாதத்தில் 35 நேரடி தமிழ் படங்களும், 15 மொழிமாற்று திரைப்படங்களும் வெளிவந்துள்ளது. இந்த படங்களின் மூலம் 24 இயக்குனர்கள், 18 ஹீரோ, 20 ஹீரோயின்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அறிமுகமான 20 ஹீரோயின்களில் 'ஆடுகளம்' டாப்ஸி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்கள் தவிர 15 புது இசை அமைப்பாளர்களும் களத்தில் இறங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கையை ஒப்பிடும்போது படங்கள் வெளிவந்ததும், புதுமுகங்கள் அறிமுகமானதும் இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது. எனவே 2011ம் ஆண்டும் புதுமுகங்களின் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிகிறது.