எந்த நேரத்தில படத்துக்கு பியர்லெஸ்னு பேரு வச்சாங்களோ தெரியலை, படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்தே ஏழரைதான் எட்டிப்பார்த்தது.
டீசருக்கு கேக் வெட்டி கொண்டாடி வாங்கிக் கட்டிக்கொண்டதோடு இல்லாமல் ஓவர் பில்டப் கொடுத்து கடைசியில் அதுவே ஓவராகிவிட்டது பியர்லெஸ் படத்துக்கு.
படம் ஓடாதது கூட பிரச்சினையில்லை ஆனால் 50 நாள் ஆகும் முன்பே டிவியில் ஒளிபரப்ப முடிவு செய்ததுதான் நாயகனுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்திவிட்டதாம். ஒருவழியாக போராடி படத்தை டிவியில் போடாமல் தடுத்துவிட்டனர்.
இதனையடுத்து ஓவர் பில்டப் கதைகளை கேட்பதை கொஞ்சகாலத்திற்கு நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளாராம்.
இப்போது மற்றொரு பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளதாம் பியர்லெஸ் ஹீரோவுக்கு மற்றொரு பயமும் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளதாம். பணம் கொடுத்து யு சர்ட்டிபிகேட் வாங்கிய சிக்கலில் தன்னையும் இழுத்துவிட்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் இப்போது ஆட்டிப்படைக்கிறதாம் அந்த ஹீரோவுக்கு.