இந்திக்குப் போகும் நான் ஈ!


Naan Ee Be Released Hindi On Oct 12   
சென்னை: தமிழ், தெலுங்கில் பெரும் வெற்றிப் பெற்ற நான் ஈ திரைப்படம் அடுத்து இந்தியில் டப்பாகிறது.

மாக்கி என்ற பெயரில் வரும் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது இந்தப் படம்.

நான் ஈ படத்தில் சுதீப், நானி, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தான் விரும்பும் பெண்ணின் காதலனை கொன்றுவிடுகிறான் ஒரு பணக்காரன். இறந்த காதலன் ஈயாக வந்து கொலைகாரனை பழிவாங்குவதுதான் கதை.

தெலுங்கில் ஈகா என்ற பெயரில் வெளியான இந்தப் படம் ரூ 80 கோடிக்கும் மேல் வசூல் குவித்துள்ளது.

தமிழில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘நான் ஈ '. தமிழில் மட்டும் 25 கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது. இந்திக்கேற்ப சில காட்சிகள் கிராபிக்ஸில் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 

எல்லோரையும் திருப்திப்படுத்தறது கஷ்டம்! - சொல்கிறார் ஜீவா


I Ve Delivered What Was Required Me Jiiva   
இவரது முகமூடி படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் வசூல் தேறிவிட்டதாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து ஜீவா கூறுகையில், "முகமூடி படம் எங்களுக்கு திருப்தியாக இருந்தது. தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக உள்ளார். விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி.

ஆனால் சிலர் விமர்சித்துள்ளனர். அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், ரசிகர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிகபட்சம் 70 சதவீதம் பேரை திருப்திப்படுத்தலாம். மிச்சம் உள்ளவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள்.

அடுத்த படங்களில் என்னை விமர்சிப்பவர்களும் விரும்பும் வகையில் நடிப்பேன். மிஷ்கினுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல் செய்திகள் பரவி உள்ளன. எங்களுக்குள் எந்த மனக்கஷ்டமும் இல்லை.

அடுத்து கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்த நீதானே என் பொன்வசந்தம் படம் ரிலீசாக உள்ளது. இளையராஜா சார் இசையில் பாடல்கள் ஏற்கனவே பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டன. ரொம்ப நம்பிக்கையாக காத்திருக்கிறேன்,' என்றார்.
 

சாட்டை - சிறப்பு விமர்சனம்!

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமய்யா, ஜூனியர் பாலையா, யுவன், பாவா லட்சுமணன், கருத்தபாண்டி, மகிமா, சுவாசிகா
ஒளிப்பதிவு: ஜீவன்
இசை: டி இமான்
பிஆர்ஓ: மவுனம் ரவி
தயாரிப்பு: இயக்குநர் பிரபு சாலமன் (ஷாலோம் ஸ்டுடியோஸ்)
எழுத்து - இயக்கம்: எம் அன்பழகன்

சமூக அக்கறையும் சமரசமில்லாத திரைக்கதையும் இயல்பான பாத்திரங்களுமாய் வந்து அவ்வப்போது மனதை வெல்லும் படங்களின் வரிசையில் இன்னும் ஒரு படம், சாட்டை.

saattai movie review
Close
 
ஓரிரு இடங்களில் சினிமாத்தனமான உணர்ச்சிக் குவியலாய் காட்சிகள் அமைந்தாலும், அவற்றில் பெரிதாக நெருடலேதும் இல்லாததால், படத்துடன் ஒன்ற முடிகிறது.

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்த அரசுப் பள்ளி, ஆசியர்களின் அக்கறையின்மை, சோம்பேறித்தனம், ஒழுங்கின்மையின் உச்சத்தால் உருப்படாமல் போகிறது. புதிதாக அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வருகிறார் இளம் ஆசிரியர் தயாளன். ஒரே ஆண்டில் அந்தப் பள்ளி ஒழுக்கம், கட்டுப்பாடு, கலைகள், விளையாட்டு என அனைத்திலும் மேன்மை பெற்று மாவட்டத்திலேயே முதலாவது பள்ளியாக வருகிறது...

எப்படி இது சாத்தியமானது? இந்தக் கேள்விக்கான விடையை ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்... குறிப்பாக பெற்றோர்களும் தவறாமல் பார்த்துத் தெளிய வேண்டியது இன்றைய அவசியம்!

நேர்மை, ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை, எதற்கும் கலங்காத நேரிய சிந்தனை கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி. சற்றும் அலட்டிக் கொள்ளாத, நடிப்பென்று சொல்ல முடியாத நடிப்பு.

ஒழுங்கீனமான மாணவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வெல்வதும், கடைசி வரை ஒத்துழைக்க மறுக்கும் சக ஆசிரியர்கள், கடைசியில் தங்களை அறியாமலேயே கற்றுத் தருதலில் மகா ஆர்வத்துடன் இயங்கச் செய்வதும், அந்த ஸ்போர்ட்ஸ் மீட்டை அவர் நடத்தும் விதமும்... ஒரு பள்ளியின் நிகழ்வுகளை அசலாகக் கண்முன் நிறுத்தின.

அரசுப் பள்ளிகளில் படித்த ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு தயாளனைச் சந்தித்திருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றிரண்டல்ல.. குறைந்தது அரை டஜன் சிங்கப்பெருமாள்களாவது (தம்பி ராமய்யா) ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் இருக்கவே செய்கிறார்கள். தங்கள் பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த தயாளனுக்காக தலைமையாசிரியர் கைத்தட்டச் சொல்லும் இடத்தில் தம்பி ராமையா ஒரு பாவம் காட்டுகிறாரே... க்ளாஸ்!

உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும் அந்த அழுக்கு சாக்ஸ்.. அழுத்தமான குறியீடு!

தன் காலத்தில் பள்ளி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பாதா... என்ற ஆதங்கமும், சக ஆசிரியர்களைக் கட்டுப்படுத்த முடியாத இயலாமையும் சதா முகத்தில் இழையோட வரும் தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. மனதை நெகிழ்த்துகிறார்.

இந்தக் கதையில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் - மாணவி காதலும் உண்டு. அந்தக் காட்சி வரும்போதெல்லாம் மனசு பதறுகிறது. நல்ல வேளை, அந்தக் காதலின் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதில் ஒரு நிம்மதி. இந்தப் பாத்திரங்களில் நடித்துள்ள யுவன், மகிமா இருவருமே ப்ளஸ் டூ மாணவர்களுக்கே உரிய உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளனர். கருத்த பாண்டி வரும் காட்சிகள் கலகல!

சாட்டையில் ஓட்டைகளும் உண்டு. ஒரே பாடலில் பணக்காரனாவது போன்ற க்ளீஷேக்கள் இந்தப் படத்திலும் உண்டு. ஒட்டுமொத்தப் பள்ளியும் ஒரு ஆசிரியரை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டுவது கொஞ்சம் சினிமாத்தனமான மிகைதானே! மன்னிப்பும் அளவு கடந்த நம்பிக்கையும் சில நேரங்களில் பிழையாகப் போகவும் வாய்ப்பிருக்கிறதல்லவா..

ஆனால் இன்றைக்கு மோசமாக உள்ள அரசுப் பள்ளி ஒவ்வொன்றும் இந்தப் படத்தில் வரும் பள்ளி மாதிரி திருந்தி உயர்ந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம், அந்தக் காட்சிகளை ஏற்றுக் கொள்ள வைக்கிறது என்பதே உண்மை. பேதமில்லாத கல்விதான் நோக்கம் எனும்போது, அது அரசுப் பள்ளிகளிலேயே கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு இந்த பாழாய்ப் போன மிடில்கிளாஸ் என்றைக்குதான் வருமோ?

இமானின் இசை சுமார். இந்தப் படத்துக்கு அது ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். ஜீவனின் ஒளிப்பதிவு, கதையின் யதார்த்தத்தை மீறாமல் அமைந்திருக்கிறது.

புதிய இயக்குநர் அன்பழகன் தன் கதையில் எந்த வணிகத் திணிப்புகளுக்கும் இடம் கொடுக்காதது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

படைப்புகள் படைப்பாளிகளுக்கானவை அல்ல, சமூகத்துக்கானவை என்பதை உணர்ந்து புதிய இயக்குநருக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர்கள் சமுத்திரக்கனி, பிரபு சாலமனுக்குப் பாராட்டுகள்.

 

சூப்பர்கார்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஈஷா குப்தாவின் புதிய அவதாரம்!

Model Actress Esha Gupta Makes Tv Debut

முன்னாள் மிஸ் இந்தியா அழகியும் பாலிவுட் நடிகையுமான ஈஷாகுப்தா நேசனல் ஜியாகிராபிக் சேனலில் சூப்பர் கார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

23 வயதான ஈஷா குப்தா, ஜன்னத் 2 படத்தில் அறிமுகமானவர். இம்ரான்ஹஸ்மியின் காதல் விளையாட்டில் உறைந்து போனவர். அவரது 2வது படமான ராஸ் 3 யில் துணிகரமான நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். இந்த பிரபலத்துடனே என்.ஜி.சி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

அழகான இந்தக் கன்னி கார்களின் வடிவமைப்பு, தொழில்நுட்பம், உற்பத்தி போன்றியவைகளைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். இதுவரை நடிகையாக மட்டுமே பார்த்திருந்த எனது ரசிகர்கள் தனது புதிய முயற்சிக்கு ஆதரவு தருவார்கள் என்றும் கூறியுள்ளார் ஈஷா. நேசனல் ஜியாகிராபிக் சேனலில் அக்டோபர் மாதம் முதல் ‘சூப்பர் கார்ஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

 

தமிழில் நடிக்கவிடாமல் எனக்கெதிராக பெரிய சதி நடக்கிறது! - தமன்னா பரபரப்பு புகார்

Tamanna Doubts Conspiracy Against Her In Tamil   

சென்னை: தமிழ்ப் படங்களில் என்னை நடிக்க விடாமல் செய்ய பெரிய சதி நடக்கிறது என்று நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளார்.

'கேடி' படம் மூலம் 2005-ல் அறிமுகமானார் தமன்னா. அப்போது அவருக்கு வயது 16தான். முதல் படம் தோற்றாலும் அடுத்த படமான கல்லூரியில் அவர் தேர்ந்த நடிகையாக பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த "அயன்" படம் அவரை முதல் நிலை நாயகியாக்கியது.

2011-ல் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெற்றிப் படங்களின் நாயகியாகத் திகழ்ந்தார்.

கார்த்தியுடன் பையா. சிறுத்தை என இரு படங்களில் நடித்தார். ஆனால் திடீரென்று அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதே நின்றுபோனது.

தெலுங்கில் மட்டும் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் தமன்னா, இப்போதும் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ஹிம்மத் வாலா படத்தில் நடிக்கிறார்.

தமன்னாவுக்கு இந்தியில் மேலும் இரு படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. அதில் ஒன்று விஜயகாந்த் நடித்து தமிழில் ஹிட்டான ரமணாவின் ரீமேக்.

ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. தமிழ்ப்பட உலகினர் தன்னை ஒதுக்குவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்க விடாமல் யாரோ மறைமுகமாக சதி செய்வதாக தமன்னா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்பவே ஆசையாக உள்ளது. ஆனால் இது நிறைவேறுமா என்று தெரியவில்லை. எனக்கெதிராக அந்த அளவுக்கு சதி நடக்கிறது," என்றார்.

 

ஐஸ்வர்யா ராய் குழந்தை.. படமெடுத்து வெளியிட்ட புகைப்படக்காரர்கள்!

Aishwarya Rai Daughter Aaradhya Face Finally Revealed   

முன்னாள் உலக அழகியும் டாப் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதிலிருந்து குழந்தை பிறந்து இப்போது வெளியே நடமாடத் தொடங்கியது வரை எல்லாமே பரபரப்புச் செய்தியாகிவிட்டன.

அமிதாப் பச்சன் குடும்பத்தினர் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யாவை பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தனர். குறிப்பாக குழந்தையின் முகத்தை யாரும் படமெடுக்காத வகையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கணவரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் சென்றபோது விமான நிலையத்தில் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துத் தள்ளிவிட்டனர். இந்த முறை ஐஸ்வர்யா ராயால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அபிஷேக்பச்சன் சிக்காகோவில் ‘டூம் 3' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காகத்தான் ஐஸ்வர்யா ராய் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நியூயார்க் சென்றார்.

சிகாகோ மற்றும் நியூயார்க் விமான நிலையங்களில் ஐஸ்வர்யா ராயைப் பார்க்க ஏராளமானோர் கூடிவிட்டதால், பாதுகாவலர்கள் அவரையும் குழந்தையையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

 

கிராமத்து விளையாட்டை கண்முன் நிறுத்தும் ஹோம் சுவீட் ஹோம்!

Home Sweet Home Game Show

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று 7சி சீரியல் குடும்பத்தினர் பங்கேற்று விளையாடினர். தலைமையாசிரியர், ஸ்டாலின் ஆசிரியர் ஒரு டீம், துணை தலைமை ஆசிரியர், ஐஸ்வர்யா மற்றொரு டீமாக விளையாடினர்.

நிகழ்ச்சியின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. 7சியின் பாடலைப் பாடி மாணவ, மாணவிகள் அசத்தினர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்சினியே சிறுவர், சிறுமிகளின் லூட்டியைப் பார்த்து வாயடைத்துப் போனார்.

அன்றைய நிகழ்ச்சியில் கிராமத்து விளையாட்டினை கண் முன் நிறுத்தினர். பலூன் உடைத்தல், பானை உடைத்தல், உண்டி வில் அடித்தல் என அணியினர் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் இடை இடையே நடனம் ஆடி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தினர் மாணவர்கள். பானை உடைத்தல் போட்டியில் தலைமை ஆசிரியர் அற்புதமான பானை உடைத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஹோம் சுவீட் ஹோம் கனவு இல்லத்திற்கான விளையாட்டு என்றாலும் விநாயகர் சதுர்த்திப் ஸ்பெசல் நிகழ்ச்சி அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

சனிக்கிழமையன்று நிகழ்ச்சியில் கதாநாயகிகள் மோதிக்கொள்கிறார்கள். கஸ்தூரியும், சொர்ணமால்யாவும், எதிரெதிராக விளையாடி தங்களின் திறமையை நிரூபிக்க உள்ளனர்.

 

த்ரிஷாவை திருமணம் செய்ய ராணாவுக்கு குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு?

Raana S Family Opposes His Love With Trisha   

ஹைதராபாத்: நடிகை த்ரிஷாவை திருமணம் செய்ய தெலுங்கு நடிகர் ராணாவுக்கு அவர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

முன்னணி நடிகை திரிஷாவும் நடிகர் ராணாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். அதனை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் படவிழாக்களுக்கும் ஜோடியாக போய் வருவது வழக்கம்.

சமீபத்தில் ஒரு பத்திரிகைக்காக இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட கணவன் மனைவி ரேஞ்சுக்கு நெருக்கமாக இருந்தனர் இருவரும்.

இதனால் அவர்கள் காதல் உறுதியாகிவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வந்தது.

ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் பேரன்தான் இந்த ராணா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் ராணாவுக்கு உறவினர். ஆந்திராவில் ராணாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏராளமான பங்களா வீடுகள் உள்ளன.

த்ரிஷாவை காதலிப்பது ராணா பெற்றோருக்கு பிடிக்கவில்லையாம்.

த்ரிஷாவைப் பிரிந்துவிடுவதுதான் நல்லது என ராணாவுக்கு அட்வைஸ் பண்ணி வருவதாக ஆந்திர பத்திரிகைகள் பரபரப்பு கிளப்பியுள்ளன.

 

நிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை! - சொல்கிறார் பரத்

Bharat Refuses His Affair With Pooja Gandhi

படங்கள் இருக்கிறதோ இல்லையோ... தொடர்ந்து கிசுகிசுவில் அடிபட்டுக் கொண்டிருப்பவர் நடிகர் பரத். அடுத்து இவர் நடித்த திருத்தணி வரவிருக்கிறது. இதை விட இவர் பெரிதாக நம்புவது சசி இயக்கி வரும் 555 படத்தைத்தான்.

இப்போது பரத் பற்றிக் கிளம்பியுள்ள லேட்டஸ்ட் கிசுகிசு, பூஜா காந்தி எனும் நடிகை சஞ்சனாவுக்கும் இவருக்கும் காதல் என்பதுதான்.

பூஜா காந்தி தமிழில் கொக்கி படத்தில் நடித்தவர். இப்போது கன்னடத்தில் பிரபல நடிகை.

ஆனால் இந்த கிசுகிசுக்களை மறுத்துள்ள பரத், "இந்த கிசுகிசுவில் உண்மை எதுவும் இல்லை. உண்மையில் நான் நிறைய பெண்களுடன் பழகுகிறேன். ஆனால் யாருடனும் காதல் இல்லை.

இவர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் என்னுடன் நடித்த சீனியர் நடிகை ஒருவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். இதற்கெல்லாம் மறுப்பு சொல்வது வீண் வேலை.

எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். இன்னும் எனக்கான இடத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறேன்," என்றார்.

 

இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: நடிகை சின்டி

I Was Deceived Innocence Muslims Actress Cindy

வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டனர் என்று நடிகை சின்டி லீ கார்சியா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் சேர்ந்து ''இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.

அதன் சில பகுதிகளை யூ டியூப்பில் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் எகிப்திலும், லிபியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. அதிலும் லிபியாவில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஏமன், கெய்ரோ, வங்கதேசம், ஈரான், மொராக்கோ, சூடான், டுனிசியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு கலவரம் பரவியுள்ளது.

இதற்கிடையே அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த நடிகை சின்டி லீ கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், à®'ரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது இஸ்லாத்தை, முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான் என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர்.

மேலும் படத்தை எடுக்கையில் முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர் ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும், இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.

இதுவரை நான்கு பேர் கொல்லப்படவும் உலகளவில் பல நாடுகளில் கலவரங்களுக்கும் காரணமாகவும் இருந்த படத்தில் நடித்துள்ளேன் என்று நினைக்கையி்ல் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சின்டியிடம் டைரக்டர் தனது பெயர் சாம் பெசிலி என்றும், தான் à®'ரு எகிப்தியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் பெயர் நகௌலா பெசிலி. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

இந் நிலையில் சாம் மீது வழக்கு தொடர சின்டி முடிவு செய்துள்ளார்.

சின்டி தவிர அந்த படத்தில் பணியாற்றிய 80 பேரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு்ள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் தூதரகத்துக்கு தீ வைப்பு:

இந்நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் கார்டூம் நகரி்ல் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் அந்த தூதரகத்திற்கு அருகில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.