ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்

3/21/2011 10:28:35 AM

'அவதார்' பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்க இருப்பதாக லட்சுமி ராய் கூறியுள்ளார். பிரியதர்ஷன் இயக்கும், 'அரபியும் ஒட்டகமும் பி. மாதவன் நாயரும்' என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமி ராய். இந்த படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் உள்ள அல் கதீனா பாலைவனத்தில் நடந்து வருகிறது. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பாலைவனத்தில் செல்லும் சிறப்பு ஜீப் ஸ்பாட்டுக்கு வந்து நின்றது. இதையடுத்து பிரியதர்ஷன் உட்பட படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ச்சிக்கு காரணம் ஹாலிவுட் பட இயக்குனர், கேமரூன் அதிலிருந்து இறங்கியது தான். இதுபற்றி பிரியதர்ஷன் கூறும்போது, 'அபுதாபி மீடியா சப்மிட்' என்ற கருத்தரங்கில் 3-டி பற்றி பேச வந்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். அவர் வந்திருப்பதை அறிந்து முந்தைய நாளே டின்னருக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தேன். அப்போது, 'எப்படி நீங்கள் ஷூட்டிங் நடத்துகிறீர்கள் என்பதை அறிய ஆசை. நான் செட்டுக்கு வருகிறேன்' என்றார். இதையடுத்து மறுநாள் செட்டுக்கு வந்ததும் எங்களுக்கு புல்லரித்துவிட்டது. பிறகு எல்லோரையும் பாராட்டிவிட்டு சென்றார்' என்று கூறினார்.

லட்சுமி ராயிடம் கேட்டபோது கூறியதாவது: பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தேன். அப்போது அதிக நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. இந்திய சினிமா பற்றியும் அதற்கான வியாபாரம் பற்றியும் கேட்டார். அவரது அனைத்துப் படங்களுக்கும் நான் ரசிகை என்றேன். அவருடன் இணைந்து பணிபுரிவது பற்றி கேட்டேன். 'அவதாரி'ன் அடுத்த பாகம் உட்பட சில படங்களை அவர் இயக்க இருக்கிறார். இதில் ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விரைவில் கலிபோர்னியாவில் கேமரூனை மீண்டும் சந்தித்து பேச இருக்கிறேன். இதையடுத்து ஹாலிவுட்டில் இருந்து அறிவிப்பு வந்தாலும் வரும். இவ்வாறு லட்சுமி ராய் கூறினார்.


Source: Dinakaran
 

கல்யாணத்துக்கு ஆயிரம் பொய் காதலிக்க லட்சம் பொய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கல்யாணத்துக்கு ஆயிரம் பொய் காதலிக்க லட்சம் பொய்

3/21/2011 10:31:30 AM

ஸ்ரீசிவ செல்வநாயகி அம்மன் மூவிஸ் சார்பில் டிசிஎஸ் தயாரிக்கும் படம் 'கண்டேன்'. இதில் சாந்தனு ஹீரோ. அவர் ஜோடியாக ரேஷ்மி நடிக்கிறார். படத்தை இயக்கும் ஏ.சி.முகில் கூறியதாவது: ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்து வைக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், காதலுக்காக லட்சம் பொய் சொல்லலாம் என்பது இந்தப் படத்தின் கதை. சாந்தனு இப்படி பல பொய்கள் சொல்லி எப்படி ரேஷ்மியை காதலிக்கிறார் என்பது திரைக்கதை. இந்தப் படத்தில் காதலுக்கும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். சந்தானம் தனி டிராக்காக இல்லாமல் படம் முழுவதும் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. மலேசிய தமிழிசை பாப் பாடகர் பர்ன், எழுதி, பாடியுள்ள பாடலுக்கு அவரே நடித்துள்ளார். படம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு முகில் கூறினார்.


Source: Dinakaran
 

மனதுக்கு பிடித்தவரை தேடுகிறார் சமீரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மனதுக்கு பிடித்தவரை தேடுகிறார் சமீரா

3/21/2011 10:30:09 AM

'காதலுக்கு நான் எதிரி இல்லை. என் மனதுக்குப் பிடித்தவரை தேடிக் கொண்டிருக்கிறேன்' என்றார் சமீரா ரெட்டி. இதுபற்றி அவர் கூறியதாவது: 'நடுநிசி நாய்கள்' படத்தின் புரமோஷன், பிரபுதேவா பட ஷூட்டிங், கோழிகோடில் நடந்த கலைநிகழ்ச்சி என்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததால் உடல் நலம் சரியில்லாமல் போனது. இப்போது குணமாகிவிட்டேன். தமிழில் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்துவருகிறேன். இதனுடன் விஷால் நடிக்கும் படம், பிரியதர்ஷன் இயக்கும் இந்திபடம், கவுதம் மேனம் இயக்கும் படம் என இந்த வருடம் முழுவதும் பிசியாக இருக்கிறேன். யாரையும் காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். காதலுக்கு நான் எதிரி இல்லை. இவ்வளவு பிசியாக இருக்கும்போது நான் யாரை போய் காதலிப்பது? இருந்தாலும் என மனதுக்குப் பிடித்தவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.


Source: Dinakaran
 

வளர்ந்து வரும் ரீ ரிலீஸ் கலாசாரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வளர்ந்து வரும் ரீ ரிலீஸ் கலாசாரம்

3/21/2011 10:32:54 AM

தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு மறு வெளியீடு (ரீ ரிலீஸ்) கலாசாரம் வளர்ந்து வருகிறது. மறு வெளியீடு என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மறு திரையீடு செய்வது வழக்கமான ஒன்று. குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்து பெரிய வெற்றி பெற்ற படங்கள் அவ்வப்போது மறு வெளியீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏற்கெனவே வெளிவந்து ரசிகர்களை சென்று அடையாத அல்லது தோல்வியை தழுவிய படங்களை மறு வெளியீடு செய்யும் கலாசாரம் வளர்ந்து வருகிறது.

மக்கள் கவனத்தை பெறாமல் போன சில கவர்ச்சிப் படங்கள் வேறு பெயர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு சமீபத்தில் தியேட்டர்களில் ஓடியது. 'ஸ்வேதா கேர் ஆஃப் வெலிங்டன் ரோடு', 'அந்தரங்கம்' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இது ஒரு புறம் இருக்க, சரியான திட்டமிடுதலுடன் வெளியிடப்படாத, அல்லது தோல்வியடைந்த படங்களை மறு திரையீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய 'தா' படம் மீடியாவால் பாராட்டப்பட்டது. ஆனால், அந்தப் படம் ஒருவாரம் கூட தியேட்டரில் ஓடவில்லை. இப்போது அந்தப் படத்தை மறு வெளியீடு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. 'நில் கவனி செல்லாதே', 'முன்தினம் பார்த்தேனே', 'நானே என்னுள் இல்லை' உட்பட சில படங்கள் மறு திரையீடலுக்கு தயாராகி வருகிறது.

'மிஷ்கின் இயக்கிய முதல் படமான 'சித்திரம் பேசுதடி' ரிலீசானசில நாட்களிலேயே படப் பெட்டிகள் திரும்பியது. படத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு தயாரிப்பாளர் அதை ரீ ரிலீஸ் செய்தார். 50 நாட்களை தாண்டி ஓடியது. 'ஒரு தலை ராகம்', 'சேது' போன்ற பல படங்களுக்கு இத்தகைய அனுபவங்கள் உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், மறுவெளியீடு செய்ய சில தயாரிப்பாளர்கள் முயற்சிக்கிறார்கள். அதில் வெற்றி பெறவும் கூடும்' என்கிறார் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் ஒருவர்.

'பொதுவாக சிறு பட்ஜெட் படங்கள்தான் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அதுவும் சினிமா துறையில் போதிய அனுபவம் இல்லாதவர்கள், படம் வெளியிடும்போது சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு படங்களை வெளியிடுவதில்லை. உரிய முறையில் விளம்பரமும் செய்வதில்லை. அதனால்தான் இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில படத்தின் இயக்குனர்கள், நடிகர்களுக்கு தங்கள் படத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நல்ல படம் மக்களை போய் சேரவில்லை என்று கருதிக் கொண்டு மீண்டும் செலவு செய்து படத்தை வெளியிடுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறிதான்' என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன்.


Source: Dinakaran
 

கார்த்திகாவுக்கு திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்த்திகாவுக்கு திருமணம்

3/21/2011 10:25:16 AM

'தூத்துக்குடி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கார்த்திகா. அதன் பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது படங்கள் எதுவும் இல்லாத நிலையில் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். இதற்கிடையில் கார்த்திகாவுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தனது சொந்தத்திலேயே அவருக்கேற்ற மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். இதுகுறித்து கார்த்திகாவின் அம்மா மாலினி கூறும்போது, 'கார்த்திகாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எதுவும் அவளுக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த ஆண்டுக்குள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.


Source: Dinakaran
 

பாடல் வெளியீட்டில் த்ரிஷா டான்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாடல் வெளியீட்டில் த்ரிஷா டான்ஸ்

3/21/2011 10:22:14 AM

தெலுங்கு பட பாடல் வெளியீட்டு விழாவில், மேடையில் டான்ஸ் ஆடுகிறார் த்ரிஷா. பவன் கல்யாண், த்ரிஷா நடித்துள்ள தெலுங்கு படம் 'தீன்மார்'. இதன் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ஷிபா கலா வேதிகா அரங்கில் இன்று நடக்கிறது. மேடை நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாத த்ரிஷா, இந்த விழாவில் டான்ஸ் ஆட சம்மதித்துள்ளார். ஏற்கனவே 'ஷக்தி' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜூனியர் என்டிஆருடன் இலியானா மேடையில் டான்ஸ் ஆடினார். இதையடுத்து போட்டியை சமாளிக்க த்ரிஷாவும் டான்ஸுக்கு சம்மதித்துள்ளதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Source: Dinakaran