சுல்தான், ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்த தொடர்பும் இல்லை! - சவுந்தர்யா

சென்னை: ஏற்கெனவே அறிவித்து நின்று சுல்தான் - தி வாரியர் மற்றும் ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இயக்குநர் சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் முதல் 3டி திரைப்படம் 'கோச்சடையான்'. ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ருக்மினி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சுல்தான், ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்த தொடர்பும் இல்லை! - சவுந்தர்யா

செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற எங்கே போகுதோ வானம்... இன்று வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் வரும் ரஜினியின் தோற்றம் சுல்தான் தி வாரியரை நினைவுபடுத்துவதால், அந்தக் கதையின் தொடர்ச்சியாக கோச்சடையான் இருக்குமோ என சிலர் கூறியிருந்தனர். மேலும் ராணாவின் கதையைத்தான் கோச்சடையானாக எடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே மறுத்து வரும் சவுந்தர்யா, இப்போது மேலும் ஒரு முறை மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "இந்தப் படம் சுல்தான் தி வாரியரோ, ராணாவோ கிடையாது. அந்தப் படங்களில் இருந்து 'கோச்சடையான்' முற்றிலும் வேறுபட்டது. சுல்தான் தி வாரியரை ஏற்கெனவே கைவிட்டுவிட்டேன். அந்தப் படத்துக்காக செய்த செய்த எதையும் கோச்சடையானில் பயன்படுத்தவில்லை.

'அவரை என் அப்பாவாக நினைத்து இயக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள பல கோடி ரசிகர்களில் ஒருத்தியாக நினைத்துதான் இயக்கினேன்," என்றார்.

 

விரைவில் கல்யாணம்... கமல் பட வாய்ப்பையும் உதறிய அனுஷ்கா!

விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டாராம் அனுஷ்கா.

கிட்டத்தட்ட கடந்த எட்டு ஆண்டுகளாக தெலுங்கு, தமிழில் நடித்து வருகிறார் அனுஷ்கா. தமிழில் முதலில் அறிமுகமானது ரெண்டு படத்தில்.

ஆனால், அந்தப் படம் சரியாகப் போகாததால் மீண்டும் தெலுங்கிலேயே கவனம் செலுத்தி வந்த அனுஷ்காவுக்கு, மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்புகளைத் தந்தது அருந்ததி டப்பிங் படம்.

விரைவில் கல்யாணம்... கமல் பட வாய்ப்பையும் உதறிய அனுஷ்கா!

விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா என முன்னணி ஹீரோக்களின் விருப்ப நாயகியாக மாறி கலக்க ஆரம்பித்த அனுஷ்கா தற்போது தெலுங்கில் 'ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' என இரண்டு மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்கள் வெளியாகும் போதே திருமணம் செய்து செட்டிலாக முடிவு செய்துள்ளாராம். வயதும் 31 ஆகிவிட்டதால், இதற்கு மேல் திருமணத்தைத் தள்ளிப்போடு சரியல்ல என்ற அறிவுரைகளும் இதற்கு முக்கிய காரணமாம்.

விரைவில் கல்யாணம்... கமல் பட வாய்ப்பையும் உதறிய அனுஷ்கா!

இந்த நேரம் பார்த்துதான் கமலின் தமிழ் - தெலுங்குப் படமான உத்தம வில்லனில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் இதில் நடிக்க ஆரம்பித்தால், முடியும்போது 33 வயதாகிவிடும் என்பதால், 'ஸாரி...' என்று நாசூக்காக சொல்லி ஒதுங்கிக் கொண்டாராம் இந்த யோகா டீச்சர்!

 

13-ம் தேதி பாண்டிய நாடு பாட்டு!

விஷால் நடித்து தயாரித்துள்ள பாண்டிய நாடு படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 13-ம் தேதி வெளியிடுகிறார்கள்.

விஷால் - லட்சுமி மேனன் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாண்டிய நாடு.

13-ம் தேதி பாண்டிய நாடு பாட்டு!  

இந்தப் படத்தை விஷாலே தனது விஷால் பிலிம் சர்க்யூட் மூலம் தயாரித்துள்ளார்.

டி இமான் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் படத்தின் ஒத்தக் கடை மச்சான் என்ற ஒரு பாடலை மட்டும் லயோலா பொறியியல் கல்லூரியில் வைத்து வெளியிட்டனர்.

இப்போது மொத்த பாடல்களையும் வரும் அக்டோபர் 13-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் வெளியிடுகிறார்கள்.

தீபாவளி ஸ்பெஷலாகக் களமிறங்கும் பாண்டிய நாடு, 300 அரங்குகளில் வெளியாகிறது.

 

பாலிவுட்டில் அதிகம் இன்கம் டாக்ஸ் கட்டிய அமிதாப் பச்சன்

மும்பை: 2012-2013ம் நிதியாண்டில் பாலிவுட்டிலேயே அமிதாப் பச்சன் தான் அதிக அளவில் வரி செலுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படங்கள் தவிர்த்து ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 2012-2013ம் நிதியாண்டில் மும்பையில் அதிகமாக வருமான வரி கட்டிய பாலிவுட் பிரபலம் என்றால் அது அமிதாப் பச்சன் தான். அவர் ரூ.25 கோடி வரி கட்டியுள்ளார்.

பாலிவுட்டில் அதிகம் இன்கம் டாக்ஸ் கட்டிய அமிதாப் பச்சன்

நடப்பு நிதியாண்டையும் சேர்த்தால் அவர் ரூ. 37 கோடி வரியாக கட்டுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் அமிதாப் பச்சனை சந்தித்து அதிகமாக வரி கட்டியவராக இருப்பதற்காக பாராட்டினர்.

பச்சன் குடும்பம்(அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன்) ரூ.53.81 கோடி வரி செலுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் அதிகம் வரி செலுத்தியவர்களில் ஒருவராக பச்சன் குடும்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'டூப் தொப்புள்' விவகாரம்... தனுஷ் ஆதரவு எனக்குள்ளது - நஸ்ரியா

சென்னை: நையாண்டி படத்தில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரத்தில் தனக்கு படத்தின் ஹீரோ தனுஷின் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா.

எது எதெற்கோ டூப் போடும் தமிழ் சினிமாவில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளது.

'டூப் தொப்புள்' விவகாரம்... தனுஷ் ஆதரவு எனக்குள்ளது - நஸ்ரியா  

டூப் போட்டு எனக்குப் பதில் வேறு ஒரு தொப்புளை சேர்த்து விட்டதாக புகார் கூறியுள்ள நஸ்ரியா இந்த விவகாரம் காரணமாக அப்செட்டாகியுள்ளாராம்.

ஏற்கனவே ஹாட் நாயகியாக பார்க்கப்படும் நஸ்ரியா, ராஜா ராணி ஹிட் ஆகியுள்ளதால் சூப்பர் ஹிட் நாயகியாகியுள்ளார்.

தற்போது தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள படம்தான் நய்யாண்டி. அதில்தான் சர்ச்சை கிளம்பியுள்ளது. தொப்புளுக்கு டூப் போட்டு விட்டதாக கூறுகிறார் நஸ்ரியா. இந்த விவகாரத்தில் தனக்கு நடிகர் தனுஷின் ஆதரவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது நய்யாண்டி தவிர எட்டுப் படங்கள் கையில் இருப்பதாக கூறுகிறார் நஸ்ரியா. இந்த நிலையில் அவரது தொப்புள் விவகாரம் வெடித்துள்ளது கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எங்கே போகுதோ வானம்... - ரஜினியின் கோச்சடையான் பாடல் இன்று வெளியானது!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் ஒற்றைப் பாடல் இன்று உலகெங்கும் வெளியானது.

எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் எனத் தொடங்கும் அந்தப் பாடலை யுட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் 3டியில் வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.

இந்தப் படத்தின் முதல் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி, 4 மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது.

எங்கே போகுதோ வானம்... - ரஜினியின் கோச்சடையான் பாடல் இன்று வெளியானது!

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஒற்றைப் பாடல் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி எங்கே போகுதோ வானம், அங்கே போகிறோம் நாமும் என்ற பாடல் இன்று அதிகாலையிலேயே யு ட்யூபில் வெளியாகியுள்ளது.

சோனி மியூசிக் நிறுனத்தின் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வைரமுத்து எழுதி, எஸ் பி பாலசுப்பிரமணியம் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். முத்து படத்தில் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு இணையாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கோச்சடையான் பாடல்களை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் முதல் பாடலை யு ட்யூபில் வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான்... எங்கே போகுதோ வானம் - முழுப் பாடல்

 

வாழ்வில் மீண்டாய், வையம் வென்றாய், எல்லை உனக்கில்லை தலைவா…! - கோச்சடையான் முழு பாடல்

"எங்கே போகுதோ வானம்...
அங்கே போகிறோம் நாமும்

வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா...

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது..
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது ஓயாது...

ஹே... உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு...
ஹே... எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு!

வாழ்வில் மீண்டாய், வையம் வென்றாய், எல்லை உனக்கில்லை தலைவா…! - கோச்சடையான் முழு பாடல்

கோச்சடையான்... எங்கே போகுதோ வானம் - முழுப் பாடல்

ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால்
காற்றாய் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்

வீரா... வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா

எங்கே போகுதோ வானம்...
அங்கே போகிறோம் நாமும்

வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா...

எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே
எழுந்து போராடு போராடு

வீரா...வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு
எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு என்
வாழ்க்கையை வழங்கி விட்டேன்.

ஹே... உனது வாளால்
ஒரு சூரியனை உண்டாக்கு..
ஹே... எனது தோழா
நம் தாய்நாட்டை பொன்னாக்கு
எங்கே போகுதோ வானம்...

அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா...

காற்றின் பாடல்கள் என்றுமே தீராது..
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது... ஓயாது!

பாடல் - வைரமுத்து, இசை - ஏ ஆர் ரஹ்மான்.

 

படப்பிடிப்பில் ஹீரோவின் வேஷ்டி அவிழ்ந்து விழுந்து ஒரே ஷேம் ஷேம் ஆயிடுச்சு

படப்பிடிப்பில் ஹீரோவின் வேஷ்டி அவிழ்ந்து விழுந்து ஒரே ஷேம் ஷேம் ஆயிடுச்சு

ராம் லீலா படப்பிடிப்பின்போது ரன்வீர் சிங் கட்டியிருந்த வேஷ்டி அவிழுந்து விழுந்து அவருக்கு சங்கடமான நிலை ஏற்பட்டுவிட்டது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ராம் லீலா. இந்த படத்தின் ஒரு காட்சிக்காக ஹீரோ ரன்வீர் வேஷ்டி கட்டியுள்ளார். படப்பிடிப்பு நடக்கையில் அவரது வேஷ்டி திடீர் என்று அவிழ்ந்து தரையில் விழுந்தது.

இதனால் அவருக்கு ஒரே சங்கடமாகிவிட்டது. படப்பிடிப்பின்போது இருந்தவர்கள் அன்றைய தினம் முழுவதும் அவரை கிண்டல் செய்துள்ளனர். மேலும் அவருக்கு அடிக்கிற கலர்களில் உள்ளாடை வேறு வாங்கிக் கொடுத்து மேலும் சங்கடப்படுத்திவிட்டனர்.

ரன்வீர் சிங் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை தான் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேக்கப் சொதப்பல்: பொது நிகழ்ச்சியில் முகம் சிவந்த ஸ்ரீதேவி

மேக்கப் சொதப்பல்: பொது நிகழ்ச்சியில் முகம் சிவந்த ஸ்ரீதேவி

மும்பை: நடிகை ஸ்ரீதேவி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தபோது மேக்கப் வெளுத்து அவரது முகத்தை அலங்கோலப்படுத்திவிட்டது.

50 வயதானாலும் ஸ்ரீதேவி இன்னும் நச்சென்று மேக்கப் போட்டு குட்டி, குட்டி ஆடைகள் அணிந்து விழாக்களுக்கு வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவரது மேக்கப் சரியாக இல்லாமல் கண்ணுக்கு கீழும், மூக்கிலும் பவுடர் வெள்ளை வெள்ளையாக திட்டுத் திட்டாக இருந்தது. அவரது மேக்கப் ஆர்டிஸ்ட் அன்று அவருக்கு ஒழுங்காக மேக்கப் போட்டுவிடாததால் பொது இடத்தில் அவர் சங்கடப்பட வேண்டியதாகிவிட்டது.

வழக்கமாக ஸ்டைலுக்கு பெயர் போன ஸ்ரீதேவி தற்போது மேக்கப்பால் சிரிப்புக்கு ஆளாகிவிட்டார்.