80-களின் நாயக - நாயகியர் சந்திப்பு.. முதல்முறையாக கமல் பங்கேற்கிறார்!

கடந்த சில ஆண்டுகளாக எண்பதுகளில் பிரபலமாகத் திகழ்ந்த நாயக - நாயகியர் சந்தித்து விருந்துண்ணும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

நடிகை லிஸிதான் இந்த நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்து வைத்தார். அதில் ரஜினிகாந்த் உள்பட பலரும் பங்கேற்றனர்.

ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வாகிவிட்ட 'எண்பதுகளின் நாயக நாயகியர் சந்திப்பு' நிகழ்ச்சி, இந்த ஆண்டும் நடக்கவிருக்கிறது.

80-களின் நாயக - நாயகியர் சந்திப்பு.. முதல்முறையாக கமல் பங்கேற்கிறார்!

இந்த முறை ரஜினியுடன் கமலும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

இந்த நிகழ்வுக்கு வரும் நடிக நடிகையர் குறிப்பிட்ட சீருடையில்தான் வரவேண்டும். சந்திப்பு தேதி விரைவில் தெரிவிக்கப்படும்.

இந்த சந்திப்பு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இந்த முறை சீனியர்களுடன், இன்றைய இளம் ஹீரோக்களும் ஹீரோயின்களும் கலந்து கொள்கிறார்கள்.

மோகன், சுதாகர், மம்முட்டி, கார்த்திக், சுரேஷ், விஜய்பாபு, விஜயகுமார், அம்பரீஷ், கன்னட ரவிச்சந்திரன், கதாநாயகிகள் பூர்ணிமா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, ரேவதி, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், ராதிகா, லிசி, சசிகலா, நதியா, மாதவி, ஊர்வசி, சுமலதா, சுவப்னா, சரிதா, மதுபாலா உள்ளிட்ட பலர் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

23ல் த்ரிஷாவுக்கு நிச்சயம், 25ல் சோஹாவுக்கு திருமணம்: இந்த வாரம் டும்டும்டும் வாரம்

மும்பை: பாலிவுட் நடிகை சோஹா அலி கான் தனது காதலரும், நடிகருமான குனால் கேமுவை வரும் 25ம் தேதி பதிவு திருமணம் செய்து கொள்கிறார்.

பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் தங்கையும், நடிகையுமானவர் சோஹா அலி கான். 36 வயதாகும் சோஹாவும், 31 வயதாகும் நடிகர் குனால் கேமுவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்.

23ல் த்ரிஷாவுக்கு நிச்சயம், 25ல் சோஹாவுக்கு திருமணம்: இந்த வாரம் டும்டும்டும் வாரம்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதல் நகரமான பாரீஸுக்கு சென்ற இடத்தில் குனால் சோஹாவின் விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு திருமணத்தை நிச்சயம் செய்தார். ஆனால் அவர்களின் திருமண தேதி தான் முடிவாகாமல் இருந்தது.

இந்நிலையில் சோஹாவும், குனாலும் வரும் 25ம் தேதி சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த திருமணத்திற்கு அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

நடிகை ஷர்மிளா தாகூர் தனது மகள் சோஹாவுக்கு திருமண பரிசாக அளிக்க 2012ம் ஆண்டிலேயே மும்பையில் ரூ.9 கோடிக்கு வீடு வாங்கி வைத்துள்ளார். நவாப் குடும்பத்தைச் சேர்ந்த சோஹாவின் திருமணம் படாடோபமாக நடக்காமல் மிகவும் எளிமையாக நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஷாலை வைத்து உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி படம் தர ஆசை! - சுந்தர் சி

நடிகர் விஷாலை வைத்து உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு படத்தை உருவாக்க விரும்புகிறேன் என்று இயக்குநர் சுந்தர் சி கூறினார்.

விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகி பொங்கலுக்கு வெளியான ஆம்பள படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு கிரீன் பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.

விஷாலை வைத்து உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி படம் தர ஆசை! - சுந்தர் சி

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, "ஆம்பள படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மீண்டும் விஷாலை வைத்து படம் இயக்கவிருக்கிறேன்.

எனக்கு எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் மிகவும் பிடிக்கும். விஷாலை வைத்து உலகின் பல்வேறு நாடுகளில் உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு படத்தை எடுக்க விரும்கிறேன்," என்றார்.

ஏழு அல்லது எட்டு நாடுகளில் இந்தப் படத்தை எடுக்கப் போகிறாராம் சுந்தர் சி. இந்த ஆண்டு இறுதியில் படத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது ஐ... விக்ரம் வரலாற்றில் புதிய சாதனை!

சென்னை: விக்ரம் நடிப்பில் மிரட்டியுள்ள ஐ படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இது விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் புதிய மைல் கல்லாகும்.

அவரது படம் ஒன்று முதல் முறையாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூலைப் பார்த்துள்ளது விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது ஐ... விக்ரம் வரலாற்றில் புதிய சாதனை!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான படம் ஐ. படத்தை பார்த்தவர்கள் ஷங்கர் படத்திற்குரிய விஷயங்கள் இதில் இல்லை, படத்தை விக்ரம் தனது நடிப்பால் ஓட வைக்கிறார் என்றனர்.

படத்தை பார்த்தவர்கள் அனைவரும் விக்ரமின் மிரட்டல் நடிப்பை பற்றியே பேசுகிறார்கள். ஐ படம் தமிழகம் தவிர கேரளாவிலும் நல்ல வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸான முதல் வார இறுதியில் உலக அளவில் மொத்தமாக ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என்று சினிமா வர்த்தக நிபுணர் த்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஐ படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மனோகருடு என்ற பெயரில் ரிலீஸாகியுள்ளது. தெலுங்கில் ரிலீஸான அன்றே மனோகருடு ரூ.9 கோடி வசூல் செய்துள்ளது. டப் செய்யப்பட்ட ஒரு படம் இவ்வளவு வசூல் செய்துள்ளது மிகப் பெரிய விஷயம். இந்தியில் ஐ இதுவரை ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது என்றார்.

 

சரத்குமாரின் சூப்பர் ஸ்டார் சர்ச்சை பேச்சு... அஜீத் - விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதல்

அடுத்த சூப்பர் ஸ்டார்... இப்படி ஒரு பட்டத்தை உருவாக்கியதிலிருந்து பெரும் சர்ச்சையும் சண்டையுமாக இருக்கிறது தமிழ் சினிமாவிலும் இணைய உலகிலும்.

தமிழ் சினிமாவில் அவரவர்க்கு ஒரு பட்டம். அந்த வகையில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம். பொதுவாக ஒருவரின் பட்டப் பெயரை இன்னொருவர் சூட்டிக் கொள்ள முயன்றதில்லை. மக்கள் திலகம் என்றால் எம்ஜிஆர்தான். நடிகர் திலகம் என்றால் சிவாஜிதான். அது போல ரஜினிக்கு சூப்பர் ஸ்டார்.

சரத்குமாரின் சூப்பர் ஸ்டார் சர்ச்சை பேச்சு... அஜீத் - விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதல்

ஆனால் இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர் சினிமாவின் முதலிடத்தில் உள்ள நடிகரைத்தான் குறிக்கும் எனும் அளவுக்கு கடந்த 35 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார் ரஜினிகாந்த்.

எனவே சூப்பர் ஸ்டார் பட்டம் இருந்தால்தான் முதலிடத்தில் உள்ளதாக அர்த்தம் என்று நினைத்துக் கொண்ட இன்றைய நடிகர்கள் பலரும் அந்தப் படத்தை தங்கள் பெயருக்கு முன் சூட்டிக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

கொஞ்ச நாள் அஜீத் இதற்கான முயற்சியில் இறங்கினார். பின்னர் அவரே பக்குவப்பட்ட பிறகு, பட்டங்களே எனக்கு வேண்டாம். நடிகனாக நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்று விலகிக் கொண்டார்.

இந்த சூப்பர் ஸ்டார் படத்தின் மீதான தன் ஆசை குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்லாத விஜய், அப்படி பட்டம் கொடுத்த பத்திரிகைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைத் தர விழா எடுக்கும் ஏற்பாடுகளையும் அமைதியாக ஏற்றார். ஆனால் தமிழக அரசு அப்படி ஒரு விழா நடப்பதைத் தடுத்துவிட்டது.

அதன் பிறகு இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை அமுங்கிப் போனது. ஆனால் அதை மீண்டும் கிளறியுள்ளார் சரத்குமார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என எனக்கு முன்பே தெரியும்.. ஆனால் விஜய்யை ரஜினியோடு ஒப்பிடுவதாக யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்று அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேச, அதை விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். உடனே அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அஜீத் ரசிகர்கள், மிகக் கடுமையாக சமூக வலைத் தளங்களில் எழுத ஆரம்பித்துள்ளனர்.

 

பிக்அப் நடிகருக்கு நோ சொன்ன ‘மெத்’ நடிகை

கப்பல் படம் கமர்சியல் ஹிட் அடித்ததில் மகிழ்ந்து போன பிக்அப் நடிகர் மீண்டும் அந்த இயக்குநருடன் இணைய சம்மதம் சொல்லியிருக்கிறாராம். எல்லாம் வெற்றிக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகத்தானாம்.

ஹீரோயினாக யாரைப் போடலாம் நட்பான நம்பரா என்று கேட்டதற்கு, ‘மெத்' நடிகையையே நடிக்க வைக்கலாம் என்று டிஸ்கசன் நடந்துள்ளது.

மெத் நடிகையை குழுவினர் முயற்சிக்கவே, நோ சொல்லிவிட்டாராம் அவர். எல்லாம் இயக்குநர் மீதான கோபம்தானாம்.

கப்பல் படத்தில் தன்னை டம்மியாக்கியதோடு ஊத்தை வாய், பவுடர் டப்பா என்றெல்லாம் டப்பிங்கில் டயலாக்கை சேர்த்து விட்டார் கோபம்தானம்.

என்னோட இமேஜ் தெரியாம விளையாடிட்டாங்களே என்று கருவுகிறார் மெத்.

 

சிபிஎஃசி தலைவரானார் பஹ்லாஜ் நிஹாலினி: எஸ்.வி.சேகர், ஜீவிதா உறுப்பினர்களாக நியமனம்

டெல்லி: மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (சிபிஎஃப்சி) புதிய தலைவராக, சினிமா தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹாலினி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உறுப்பினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ஜீவிதா ராஜசேகர் உள்ளிட்ட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் நடித்துள்ள, 'மெஸஞ்சர் ஆப் காட்' என்ற திரைப்படத்துக்கு தணிக்கை குழு சான்றளிக்க மறுப்பு தெரிவித்தது. இந்தப் படம் சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் படத்துக்கு அனுமதி வழங்கியது.

சிபிஎஃசி தலைவரானார் பஹ்லாஜ் நிஹாலினி: எஸ்.வி.சேகர், ஜீவிதா உறுப்பினர்களாக நியமனம்

இதையடுத்து தணிக்கைக் குழு தலைவர் லீலா சாம்சன், தனது பதவியை ராஜினாமா செய்தார். ''தணிக்கை குழுவில் அரசின் தலையீடு, உறுப்பினர்களிடம் முறைகேடு போன்றவை அதிகரித்து விட்டது'' என்று லீலா சாம்சன் குற்றம் சாட்டினார். அதை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

அந்தப் பரபரப்பான சூழ்நிலையில் லீலா சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்தும், தணிக்கைக் குழுவுக்கு மதிப்பளிக்க மத்திய அரசு தவறி விட்டது என்று கூறியும், குழுவின் 9 உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவராக பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், இன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவர் தனது பொறுப்பில் இருப்பார் என்றும் மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அவருடன் மிஹிர் பூட்டா, பேராசிரியர் சையது அப்துல் பாரி, ரமேஷ் படாங்கே, ஜார்ஜ் பேக்கர், சந்திர பிரகாஷ் துவிவேதி, வாணி திரிபாதி டிக்கூ, ஜீவிதா, எஸ்.வி.சேகர், அசோக் பண்டிட் ஆகிய 9 பேர் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பஹ்லாஜ் நிஹாலினி 'ஷோலே அவுர் ஷப்னம்', 'அந்தாஸ்' உள்ளிட்ட பல திரைப்படத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'வலைப்பூ விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா?'

ப்ளாக் என்பபடும் வலைப்பூவில் விமர்சனம் எழுதி வந்தவர் கேபிள் சங்கர். இவர் முதல்முறையாக ஒரு முழு நீளப் படம் எடுக்கிறார். தலைப்பு தொட்டால் தொடரும்.

வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா?

இந்தக் கேள்வி, அவர் படம் தொடங்கிய நாளிலிருந்து தொடர்கிறது.

'வலைப்பூ விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா?'

அவர் என்ன பதில் சொல்கிறார்?

'நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க வந்திருக்கிறேன். விமர்சகனாக வெற்றி பெற்று அந்த அடையாளம் பெற்று விட்டதால் இப்படிக் கேள்வி வருகிறது.

நிச்சயம் இது நியாயமான கேள்விதான். நிச்சயமாக விமர்சனம் மட்டும் செய்பவர்கள் படமெடுக்க முடியாதுதான். ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எல்லா விமர்சகர்களும் அந்த தகுதியை வைத்துக் கொண்டு படமெடுக்க முடியாது. ஆனால் விமர்சகர்கள் இயக்குநர்களாகியும் இருக்கிறார்கள்.

'வலைப்பூ விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா?'

நான் வெறும் விமர்சகனல்ல. நான் முன்பே சொன்ன மாதிரி பல துறைகளில் ஈடுபட்டு அனுபவ அறிவைப் பெற்றிருக்கிறேன். தியேட்டர் நடத்தியிருக்கிறேன். விநியோகம் செய்துள்ளேன். பல கதை விவாதங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். வசன உதவி, திரைக்கதை உதவி என்று பணியற்றிய அனுபவம் உண்டு. உதவி
இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என்று பலதரப்பட்ட பணிகளை செய்துள்ளேன். ஏன் போஸ்டர் கூட ஒட்டியுள்ளேன்," என்கிறார்.

காதல் த்ரில்லர் வகைப் படமாக உருவாகியுள்ளதாம் இந்த தொட்டால் தொடரும். படத்தை பலருக்கும் போட்டிக் காட்டினாராம் இயக்குநர். யாரும் குறை சொல்லவில்லை என்பதால் நம்பிக்கையுடன் விரைவில் படத்தை வெளியிடவிருக்கிறார்.

 

ஒல்லியை கரெக்ட் பண்ணா கில்லியாகலாம்: சமர்த்துவின் பிளான்

காதலில் விரிசல் என்றாலும் கவலைப்படாமல் புது காதல் பற்றி விளம்பரத்தில் விழி விரிய பேசியவர் சமர்த்து நடிகை. பில்டப் படம் ஊற்றிக்கொண்டாலும் ஆயுத படம் கை கொடுத்த குஷியில் இருக்கிறார்.

தமிழில் கைவசம் இரண்டு படங்கள் இருந்தாலும் பாலிவுட் பறக்கவேண்டும் என்பது பட்சியின் ஆசையாம். யாரை பிடித்தால் பாலிவுட் போகலாம் என்று யோசித்த சமர்த்துவிக்கு வகையாக மாட்டியது ஒல்லி நடிகரின் படம்.

வகை தொகையில்லாமல் கவர்ச்சி காட்ட முடிவு செய்துவிட்டாராம். இவருக்கு மட்டும் ஏன் இந்த தாராளம் என்று கேட்பவர்களுக்கு, ஒல்லியை கவர்ந்தால் கில்லியாக பாலிவும் போகலாம் என்று கண் சிமிட்டுகிறாராம் சமர்த்து.

கவர்ச்சி காட்டினால் பிழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லாமல் சொல்கிறார் சமர்த்து.

 

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் 'தல'! - ‘ஸ்டண்ட்’ சில்வா

மங்காத்தா, வீரம், தற்போது என்னை அறிந்தால் என வரிசையாய் அஜீத் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ‘ஸ்டண்ட்' சில்வா மாஸ்டர்.

அப்படி என்னதான் உங்க கெமிஸ்ட்ரி என்று கேட்க அவருக்கே போன் செய்தால், காதல் ததும்ப ஒரு மெலோடி பாடல் ரிங்க்டோனாய் நம்மை வருடுகிறது. நொடிப் பொழுதில் நம்பர் மாறி உள்ளதா என்று பார்க்க. ‘Hello!' சொல்லுங்க , எப்படி இருக்கீங்க என்று கனிவாய் நலம் விசாரிக்க தொடங்கியவரை நிறுத்தி நமது பேட்டியை ஆரம்பித்தோம்.

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் 'தல'! - ‘ஸ்டண்ட்’ சில்வா

தொடர்ந்து ‘தல' படங்கள் ஸ்டண்ட் செய்வதன் கரணம் என்ன?

"அது எனக்கு தெரியலங்க, இயக்குநர் வெங்கட்பிரபு தான் என்னை அஜித் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மங்காத்தாவின் சண்டை காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. சிவா சார்கூட முன்னரே பணி புரிந்திருந்ததால் வீரம் கிடைத்தது. அதில் ரயில் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. இந்த படத்தில் அதே கூட்டணியை தொடர்ந்துள்ளார் கவுதம் சார். அவருடனும் விண்ணைத்தாண்டி வருவாயா , நடுநிசி நாய்கள் என நான்கு படங்கள் வேலை செய்துள்ளோம். அஜித்துக்கும் என்னை பிடிக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்".

‘வீரம்' ரயில் சண்டைக் காட்சி மாதிரி ‘என்னை அறிந்தால்' படத்தில் ஷ்பெஷல் ஏதும் உள்ளதா?

"எல்லா ஸ்டண்ட்டும் ‘Live'ஆ செய்திருக்கிறோம். சில விஷயங்கள் படம் ரிலீஸ் முன்னாடி எப்படி சொல்வது..." என ஜகா வாங்கியவரை சமாளித்து பதிலை வாங்கினோம்.

"அஜித் சார் எதாவது ஒரு ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார். நாங்க எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இந்த படத்தில் ‘தல' தன் தலையை வைத்து உண்மையான கண்ணாடியை உடைத்திருக்கிறார்."

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் 'தல'! - ‘ஸ்டண்ட்’ சில்வா

டிரைலர்ல உங்க முகம் தெரிஞ்சதே... உங்க கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்க...

"என்னங்க, என்ன மாட்டி விடுறிங்க. சின்ன ரோல் தான் கவுதம் மேனன் நடிக்கச் சொன்னார் நடிச்சிட்டேன்."

எல்லா ஸ்டண்ட் மாஸ்டர்க்கும் ஒரு முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.. உங்களுக்கு அப்படி ஏதும் ஆசை இருக்கா?

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் 'தல'! - ‘ஸ்டண்ட்’ சில்வா

எனக்கு தனியாக எந்த பெயரும் வாங்க வேண்டும் என்று ஆசையில்லை. படத்தின் கதையை மீறாமல், கதாபாத்திரத்தின் எல்லைகளை மீறாமல் சண்டை காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

‘தல'கூட ஷூட்டிங் போன அனுபவம் எப்படி இருந்தது?

"சென்னைல நிறைய ஷூட் பண்ணினோம். எல்லாரிடமும் அக்கறையா இருப்பார். சண்டை காட்சிகளின்போது ஸ்பாட்டில் அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் கொள்வார். சிறு தவறு செய்தாலும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் உடனே ‘ஸாரி' கேட்டு விடுவார். ஸாரி மற்றும் தேங்ஸ் மனிதனின் ஈகோவைக் குறைத்து விடும் என்று அடிக்கடி கூறுவார். அவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவரது விடா முயற்சி என்னை பெரிதும் மலைக்க வைத்த ஒன்று. எதையும் முடியாது என்று கூறமாட்டார்."

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழில் படங்களில் வேலை செய்கிறார்கள். அது பற்றி...

அது ஆரோக்கியமான விஷயம். அவர்களது ‘பாணி‘ வேற மாதிரி இருக்கும். முன்னரே அனைத்தையும் திட்டமிட்டு வேலை செய்வார்கள் . எல்லா வகையிலும் பாதுகாப்பு வழிமுறைகளை ஆய்வு செய்து வேலையை தொடங்குவார்கள்.

எப்படி ‘ஆன் தி ஸ்பாட்'ல திட்டமிடுகிறீர்கள் என்று அவர்கள் நம்மை பார்த்து கேட்பதுமுண்டு. ஹாலிவுட், பாலிவுட் என்று நமது ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் வேலை செய்து வருகிறார்கள்," என்றார் ஸ்டன்ட் சிவா.

 

இளையராஜாவின் சாதனையை யாராலும் தொட முடியாது - அமிதாப் புகழாரம்

இளையராஜாவின் இசை சாதனையை யாராலும் தொடக்க கூட முடியாது, என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

"ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்து 1,000 படங்கள் என்ற மைல் கல்லைத் தாண்டியிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பை பாலிவுட் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இளையராஜாவின் சாதனையை யாராலும் தொட முடியாது - அமிதாப் புகழாரம்

அமிதாப் பச்சன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவுக்கு இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக அமிதாப்பச்சன் தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விடியோ பதிவில், "இளையராஜா, 1,000 படங்களுக்கு மேல் இசை அமைத்த ஒரு இசை மேதை. ஒவ்வொரு படத்துக்கும் 5 பாடல்கள் என்றால் கூட மொத்தம் 5000 பாடல்கள். அவற்றில் 3,500 பாடல்களுக்கு மேல் மெகா ஹிட் கொடுத்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்.

இந்தப் புள்ளி விவரங்கள் உலக அளவில் வரலாற்றுக்குரிய ஒன்று. இளையராஜாவின் இசை சாதனையைத் தொடுவது மிகவும் கடினம். ஒரு இசையமைப்பாளர் தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர்கள் என எல்லோரையும் ஈர்த்ததோடு, தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

வருகிற 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பாராட்டு விழாவிற்கு "ஷமிதாப்' படக்குழுவினர் சார்பாக இளையராஜாவை வரவேற்கிறோம்," என அதில் தெரிவித்துள்ளார்.

 

ஜனவரி 29-ம் தேதி என்னை அறிந்தால் படம் வெளியாகிறது! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் வரும் ஜனவரி 29-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார். படத்தில் நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்துள்ளனர். இந்த படத்தில் அருண் விஜயும் நடித்து உள்ளார்.

அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஷங்கரின் 'ஐ' படத்தோடு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜனவரி 29-ம் தேதி என்னை அறிந்தால் படம் வெளியாகிறது! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால் பட வேலைகள் முடியாததால் ஜனவரி 29ஆம் தேதிக்கு திடீரென தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி அஜீத் படம் போட்டியின்றி தன்னந்தனியாக வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து என்னை அறிந்தால் பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறுகையில், "என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஜனவரி 21-ந்தேதி படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். வருகிற 29-ந்தேதி நிச்சயம் படம் ரிலீசாகும்," என்றார்.

 

மீண்டும் தூசு தட்டப்படும் புலன் விசாரணை பாகம் 2

பல ஆண்டுகளுக்கு முன் தயாராகி இன்னும் கிடப்பில் உள்ள புலன் விசாரணை படத்தின் இரண்டாம் பாகத்தை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர் படத்தின் இயக்கநரும் தயாரிப்பாளரும்.

விஜயகாந்த், ரூபிணி ஜோடியாக நடித்து 1990ல் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘புலன் விசாரணை'. இந்தப் படத்தை இயக்கிய ஆர்கே செல்வமணி, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

இதில் பிரசாந்த் நாயகனாக நடித்தார். ஆனால் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

இப்போது படத்தை வெளியிட முயன்று வருகின்றனர்.

மீண்டும் தூசு தட்டப்படும் புலன் விசாரணை பாகம் 2

இப்படம் குறித்து ஆர்கே செல்வமணி கூறுகையில், "ஆட்டோ சங்கர் கதையை மையமாக வைத்து ‘புலன் விசாரணை' படத்தை எடுத்து இருந்தேன். ஆட்டோ சங்கர் கேரக்டரில் ஆனந்தராஜ் வந்தார். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறேன்.

இதில் ஆட்டோ சங்கர் ஜெயிலில் இருந்து தப்புவதுபோல் காட்சி துவங்குகிறது. அவனை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். நாயகியாக கார்த்திகா நடிக்கிறார். அஸ்வினி, பிரமிட் நடராஜன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஆர்.கே. வில்லனாக வருகிறார்.

பெட்ரோலியத்தை கண்டுபிடித்து எடுக்கும் முயற்சியில் நடக்கும் ஒரு குற்றத்தை மையமாக வைத்து ‘புலன் விசாரணை 2-ம் பாகம்' தயாராகிறது. பெட்ரோலிய கிணறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மாலத்தீவிலும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

படத்தின் இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீசாக உள்ளது," என்றார்.

படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார்.

ராஜாராஜன், எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கின்றனர். ராவுத்தர் தியேட்டர் பிரைவேட் லிமிடெட் சார்பில் மன்சூர் அம்பலம் தயாரிக்கிறார்.