வெளியாகும் முன்பே காப்பிரைட் பிரச்சினையில் மாட்டிய ரா ஒன்... ரூ 1 கோடி தர உத்தரவு!


மும்பை: படம் வெளியாகும் முன்பே காப்பிரைட் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளது ஷாரூக்கானின் ரா ஒன்.

ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ள விஞ்ஞானப் படம் ரா ஒன். இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் காப்பிரைட் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

ரா ஒன் படத்தின் கதை தங்களுடையது என யாஷ் பட்நாயக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் தால்வி, இந்தப் பசத்தை வெளியிடும் முன், நீதிமன்றத்தில் ரூ 1 கோடியை ஷாரூக்கான் செலுத்த வேண்டும். அதன் பிறகே வெளியிட வேண்டும். தவறினார் இடைக்காலத் தடை விதிக்க வேண்டி வரும் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் தங்கள் தீர்ப்பில், "திரையுலகில் அடுத்தவர் கதையை காப்பியடிப்பது தொடர் கதையாகிவருவது வேதனைக்குரியது," என குறிப்பிட்டுள்ளனர்.

ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த ரோபோ படமும் கதைத் திருட்டு பிரச்சினையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
 

ஆர்யாவை அலற வைத்த பவர் ஸ்டார்!


கோடம்பாக்கத்தில் எதற்கு பயப்படுகிறார்களோ இல்லையோ... பவர் ஸ்டார் சீனிவாசனைப் பார்த்தாலே கொஞ்சம் நடுக்கம்தான். எனக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார்தான் என்பவரைப் பார்த்தால் வேறு என்னதான் செய்வது!

அவர் தலையைக் கண்டதும் பாசத்தோடு தாவி ஓடுபவர்களில் பலர், காந்தி தாத்தா படம் போட்ட நோட்டைக் கவ்வத் துடிப்பவர்கள். பார்த்ததும் எஸ் ஆகிறவர்கள், எதுக்கு இந்த 'ஆனந்தத் தொல்லை' என்ற ரகத்தினர்!

சமீபத்தில் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழா. ஒரே இளவட்ட நடிகர்கள் கூட்டம். சரக்கென்று வந்து அவர்கள் மத்தியில் பவர் ஸ்டார் நிற்க, பதறிப் போய் என்ன செய்யலாம் என தவித்தார்கள்.

புகைப்படக்காரர்களோ நல்ல சான்ஸ் விடாதீங்கப்பா என்று குஷியாக 'சுட்டு'த் தள்ள தெறித்து ஓடினார்கள் இளம் நடிகர்கள்.

ஒரு கட்டத்தில் நடிகர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தபோது, திடுமென்று அவர்கள் மத்தியில் நின்ற பவர் ஸ்டார், பக்கத்திலிருந்த ஆர்யா தோள்மீது கை போடுவது போல இறுகப் பற்றிக் கொண்டார் (ஓடிப் போயிட்டா?!). ஆர்யாவுக்கு வேறு வழியில்லை. பவர் ஸ்டாருடன் பக்கா போஸ் கொடுத்துவிட்டே கிளம்பினார்.

கிளம்பும்போது போட்டோகிராபர்களிடம், இந்த போட்டோவை மட்டும் ரிலீஸ் பண்ணிடாதீங்க பிரதர் என்று அன்புக்கட்டளை போட்டபடி கிளம்பினார் மனுஷன்!
 

கலெக்டர் உத்தரவிட்டும் வறுமையில் வாடும் தந்தைக்கு உதவ நடிகை லிஸி மறுப்பு!


சென்னை: வறுமையில் வாடும் தனது தந்தை வர்கிக்கு நடிகை லிஸி மாதந்தோறும் ரூ 5500 உதவி வழங்க வேண்டும் என்று கொச்சி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் வர்கி என்பவர் எனது தந்தையே இல்லை என்றும், தனது தந்தைதான் என்பதற்கு ஆதாரம் காட்டினால் பணம் தருவேன் என்றும் லிஸி கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மனைவி லிசி. இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். லிசியின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புக்கட்டுப்பாடி. லிசியின் தந்தை வர்கி சொந்த ஊரில் வறுமையில் கஷ்டப்படுவதாகவும் அவரை லிசி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.

சமீபத்தில் லிசி தனக்கு பண உதவி செய்ய உத்தரவிட கோரி கொச்சி கோர்ட்டில் வர்கி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மாதந்தோறும் வர்கிக்கு லிசி ரூ.5500 வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். ஆனால் லிசி பண உதவி செய்யவில்லை.

வர்கி எனது தந்தை இல்லை என மறுத்தார். கோர்ட்டு உத்தரவு நகல் தனக்கு வரவில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது கொச்சி மாவட்ட கலெக்டர் சேக்பிரீத் நடிகை லிசி தனது தந்தை வர்கியின் பராமரிப்பு செலவுகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். வர்கி தன்னை நேரில் சந்தித்து புகார் அளித்ததாகவும் வருவாய் அதிகாரியிடம் இப்பிரச்சினையை கவனித்துக் கொள்ளும்படி கூறி இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

மாவட்ட தலைமை நீதிபதி என்ற அந்தஸ்தில் இருப்பவர் என்பதால் கலெக்டர் உத்தரவு நீதிமன்ற உத்தரவுக்குச் சமமாகும்.

இது குறித்து லிசியிடம் கேட்ட போது வர்கி எனது தந்தையே இல்லை என்று மீண்டும் மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "சிறு வயது முதல் என் தந்தையை நான் பார்த்ததே இல்லை. எனக்கு தெரியாத ஒருவருக்கு பண உதவி செய்ய முடியாது. எனது பள்ளி சான்றிதழில் தந்தை பெயர் ஜார்ஜ் என்று இருக்கிறது. வர்கி பெயர் இல்லை. எனது தந்தை என்றால் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டட்டும் அதன் பிறகு பண உதவி செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது தாய்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார்

எனக்கு தந்தை இருந்திருந்தால் படிப்பு செலவை கவனித்து இருப்பார். சாப்பாடு, சீருடை புத்தகங்கள் எல்லாவற்றையும் தந்து இருப்பார். எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு தந்தை என்று சொல்பவரை பார்த்ததே இல்லை. அவர்களிடம் நேரில் கூட விசாரித்துக் கொள்ளலாம். தந்தைக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு இருப்பது பற்றி என் கவனத்துக்கு எதுவும் வர வில்லை," என்றார்.
 

இ.பி.கோ ஆனது கடமை கண்ணியம் கட்டுப்பாடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'புலி வேசம்' ரிலீசுக்குப் பிறகு ஆர்.கே ஹீரோவாக நடிக்கும் படம், 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'. ஆப்பிள் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் விவேக், மீனாட்சி தீக்ஷித் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சஞ்சீவ் சங்கர். இசை, ஸ்ரீகாந்த் தேவா. திரைக்கதை, வசனம்: வி.பிரபாகர். இயக்கம், ஷாஜி கைலாஷ். முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் 30 நாட்கள் நடந்தது. இந்நிலையில், படத்தின் பெயர் 'இ.பி.கோ' என்று மாற்றப்பட்டுள்ளதாக, பட வட்டாரம் தெரிவித்தது. அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.


 

திருமலை ஏழுமலையான் கோயிலில் ரஜினிகாந்த் தரிசனம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
''ஏழுமலையான் அருளால் பூரண குணம் அடைந்துள்ளேன்'' என நடிகர் ரஜினி காந்த் கூறினார். சிகிச்சைக்குப் பின்னர் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய நேற்று மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7.30 மணி அளவில் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். ரஜினி காந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் அவர் மட்டும் மகாதுவாரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருடைய குடும்பத்தினர் வைகுண்டம் வழியாக சென்று தரிசனம் செய்தனர்.

பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்துக்கு வந்த அவர்களுக்கு தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் கோயில் சார்பில் பிரசாதம் வழங்கினர். வேண்டுதலுக்காக, துலாபாரத்தில் தனது எடைக்கு எடையாக 85 கிலோ கற்கண்டை காணிக்கையாக ரஜினி காந்த் வழங்கினார். பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்தை பக்தர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

அப்போது ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ''தற்போது நான் நன்றாக உள்ளேன். ஏழுமலையான் அருளால் பூரண குணம் அடைந்துள்ளேன். சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஷ்வின், நடிகர் மோகன்பாபு மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர்.


 

இரண்டு ஹீரோயின்களுடன் நடிப்பதில் தவறில்லை : டாப்ஸி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பது நல்ல அனுபவம்தான் என்றார் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்துவரும் டாப்ஸி, கூறியதாவது: ஒவ்வொரு படத்தின் இயக்குனர்தான் ஹீரோயின்களை தேர்வு செய்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் கேரக்டருக்கு யார் பொருந்துவார் என்பதை அவர்தான் முடிவு செய்கிறார். அதனால் இப்படி நடித்திருக்கலாமே, அதை செய்திருக்கலாமே என்று கூறுவது நான் பொருட்படுத்தமாட்டேன். தெலுங்கு படங்களில் இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. கேரக்டரை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர, உடன் நடிப்பது எத்தனை ஹீரோயின், எத்தனை ஹீரோ என்று பார்ப்பதில்லை. சிலர், 'படத்தில் இவர்கள் முதல் ஜோடி. அவர்கள் இரண்டாவது ஜோடி' என்று சொல்வதை கேட்டு வெறுப்புதான் வருகிறது. இதை நான் விரும்பவில்லை. ஒரு படம் என்றால் அனைவருமே முக்கியமானவர்கள்தான். இதில் சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்க முடியாது. தமிழ், தெலுங்கை அடுத்து இந்தியில் டேவிட் தாவன் படத்தில் நடிக்கிறேன். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.


 

வல்லினம் படத்துக்கு தொடர்ந்து 72 மணிநேரம் ஷூட்டிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஈரம்' படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கும் படம் 'வல்லினம்'. நகுல், பிந்து மாதவி, அதுல் குல்கர்னி உட்பட பலர் நடிக்கின்றனர். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் 72 மணிநேரம் செங்கல்பட்டு அருகே நடந்துள்ளது. இதுபற்றி இயக்குனர் அறிவழகனிடம் கேட்டபோது கூறியதாவது: இது பேஸ்கட் பாலை மையப்படுத்திய ஆக்ஷன் கதை. தமிழில் அதிகமாக ஸ்போர்ட்ஸ் படங்கள் வரவில்லை என்றாலும் இது முற்றிலும் அது தொடர்பான கதை கிடையாது. கமர்சியல் அம்சங்கள் நிறைந்த கதை. படத்தில் ரயில் தொடர்பான காட்சி முக்கியமானதாக வருகிறது. இதனால் சிறப்பு அனுமதி பெற்று, செங்கல்பட்டில் ஷூட்டிங் நடத்தினோம். இந்தி நடிகர் அதுல் குல்கர்னி வேறு படத்துக்கு செல்ல வேண்டி இருந்ததால் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். 72 மணிநேரம் ஷூட்டிங் தொடர்ந்து நடந்தது. நகுல், நான் உட்பட எல்லோருமே சோர்வடைந்து விட்டோம். இதுவரை இப்படி யாரும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்களா தெரியவில்லை. தமன் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். இவ்வாறு அறிவழகன் கூறினார்.


 

3 கோடி செலவில் ராஜபாட்டை கிளைமாக்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம், தீக்ஷா சேத் நடிக்கும் படம் 'ராஜபாட்டை'. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி ஸி3 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு நாட்கள் எடுக்கப்பட்ட இக்காட்சியில் விக்ரம் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி பட யூனிட் கூறும்போது, ''இதில் ஜிம் மாஸ்டராக விக்ரம் நடிக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் பிரமாண்டமாக இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் நினைத்தார். அதன்படி செயற்கை மழையில் ஷூட்டிங் நடந்தது. இக்காட்சி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். இதோடு படம் முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி. இதற்காக அடுத்த மாதம் ஐரோப்பா செல்ல இருக்கிறோம்'' என்றனர்.


 

ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது:

சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வருகிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். அனுஷ்கா நடிகை என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம்தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் 'மாஸ்' படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் அபார்ட்மென்ட் வாங்க போகிறேன். என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்தார் என்று எழுதிவிடுகிறார்கள்.

இதே போல பூனர் கவுருடன் 'பயணம்' படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு ஷாட் கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லையே. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அறுவறுப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப அப்செட் பண்ணியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து சொல்லவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.


 

காதல் பற்றி கூற சாரா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் சாரா ஜானே டயஸ். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக 'பாஞ்சா' படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கில் என்னை நிலை நிறுத்தும் என நினைக்கிறேன். இந்தியில் அபிஷேக் பச்சனுடன் நடித்த 'கேம்' படத்துக்குப் பிறகு ஏக்தா கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். சினிமா துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது நடிகைகள் வந்துகொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். ஒரு சிலர் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்குப் போரடித்துவிடும். அதனால் இதை போட்டியாகப் பார்க்கவில்லை. இங்கு யாரும் யாருக்குப் போட்டியல்ல. நான் சினிமா பின்னணி இல்லாமல்தான் இத்துறைக்கு வந்தேன். என்னையும் அரவணைத்து ஏற்றுக்கொண்ட சினிமாதுறை நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு சாரா கூறினார். அவரிடம், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை காதலிக்கிறீர்களாமே என்று கேட்டதும் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றார். பின்னர், 'நான் தனியாகத்தான் இருக்கிறேன். இதையே பெரிதும் விரும்புகிறேன்' என்று சொன்னார்.


 

விமரிசையாக நடந்தது சீமந்தம் : ஐஸ்வர்யா ராய்க்கு பாலிவுட் பட்டாளம் வாழ்த்து!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மும்பை புறநகரில் உள்ள வீட்டில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நேற்று சீமந்தம் விமரிசையாக நடந்தது.  தற்போது ஐஸ்வர்யா ராய் 9 மாத கர்ப்பிணி. அவருக்கு சீமந்தம் நடத்த அமிதாப்பச்சன் குடும்பம் முடிவு செய்தது. இதையடுத்து சீமந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது ஐஸ்வர்யா ராய் ஆரஞ்சு நிறத்தில் பாரம்பரிய உடை மற்றும் பாரம்பரிய நகைகள் அணிந்து ஜொலித்தார்.

அவரை பாலிவுட் நடிகைகள் ஆஷா பரேக், சோனாலி பிந்த்ரே, டிவிங்கிள் கன்னா, டிம்பிள் கபாடியா, ஊர்மிளா, சாய்னா, பிபாஷா பாசு, சாய்ரா பானு ஆகியோர் வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் வரவேற்றார். பாட்டும், குதூகமுமாக விழா இருந்ததாக நடிகைகள் கூறினர். விழாவில் கலந்து கொண்டு, ஐஸ்வர்யாவை வாழ்த்தியவர்களுக்கு டிவிட்டரில் அபிஷேக் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.


 

விக்ரம் படம்.... மூன்று கோடியில் ஒரு க்ளைமாக்ஸ்!


விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை படத்துக்காக மூன்றுகோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் போட்டுள்ளனர்.

விக்ரம் - தீக்ஷா சேத் நடிப்பில், உருவாகும் படம் ராஜபாட்டை. பிவிபி சினிமா தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.

இயக்குநர் கே விஸ்வநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நில அபகரிப்பு விவகாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜிம்பாயாக நடிக்கிறார் விக்ரம். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக ரூ 3 கோடி செலவில் பின்னி மில்லில் ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது. இந்தக் காட்சியில் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட 50 ஜிம் பாய்கள் நடித்தனர். ராஜீவன் இந்த செட்டை அமைத்திருந்தார்.

படத்தின் முக்கிய பாடல் காட்சி ஜப்பானில் படமாக்கப்பட உள்ளது.
 

கவர்ச்சி வேலைக்காரியாக ஸ்வேதா மேனன்!


சினிமாவில் மறுபிரவேசம் செய்த கையோடு ரதி நிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் படங்களில் கவர்ச்சி விருந்து படைத்த சர்ச்சை நாயகி ஸ்வேதா மேனன், மீண்டும் ஒரு படத்தில் படு செக்ஸியாக நடிக்கிறார்.

இதுவும் மலையாளப்படம்தான். பெயர் 'பருதீசா'.

கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சிக்காலப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஸ்வேதா மேனன் ஏற்றுள்ள வேடம் கவர்ச்சி வேலைக்காரி.

பொதுவாக சரித்திரக் கதைகளில் இதுபோன்ற வேலைக்காரிகள், மன்னனையே கைக்குள் வைத்திருப்பதாக காட்சிகள் வரும். அப்படிப்பட்ட காட்சிகளுக்கு வெறும் ஐட்டம் டான்ஸரை மட்டும் போட முடியாதல்லவா... அதனால் நடிக்கவும் தெரிந்த ஸ்வேதா மேனனுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

தமிழிலும் பெரிய பிரேக் கிடைக்கும் என்று நம்புகிறார் ஸ்வேதா. இப்போது வசந்தபாலனின் அரவான் படத்தில் தாசி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியானால், தமிழில் கவர்ச்சி கலந்த கேரக்டர் ரோல்கள் குவியும் என்கிறார் ஸ்வேதா.
 

சிம்புவை 'சிக்ஸ் பேக்' வைக்கச் சொன்னது யாரு?


நேற்று ஒஸ்தி படத்துக்காக சிம்புவின் பிரஸ் மீட். மகா லேட்டாக ஆரம்பித்தது நிகழ்ச்சி.

சென்டிமெண்டாக பேசும் நினைப்பில் ஸ்ரீதர் - எம்எஸ்வி காம்பினேஷனையும் சிம்பு- தமன் கூட்டணியையும் ஒப்பிட்டு காமெடி டைம் ஆக்கிக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் மைக்கைப் பிடித்தார் சிம்பு. எடுத்த எடுப்பில் எனக்கு பிரஸ் மேல ரொம்ப கோபம் ஒரு பக்கம், ரொம்ப மகிழ்ச்சி ஒருபக்கம், என்று கூற, அதுவரை நெளிந்து கொண்டிருந்த நிருபர்கள் 'ஜெர்க்' ஆனார்கள்.

உடனே இப்படிச் சொன்னார் சிம்பு:

இந்தப் படம் ஒஸ்தி ஆரம்பித்த போது, படத்தில் சட்டையைக் கழற்றிவிட்டு சிக்ஸ் பேக் காட்டியபடி ஒரு காட்சியில் வரவேண்டும். சல்மான்கான் இந்தியில் அப்படிச் செய்திருந்தார். ஆனால் என்னால் அப்படி முடியாது என சொல்லிவிட்டேன் இயக்குநர் தரணியிடம். காரணம், இந்தப் படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தால் அடுத்தடுத்து என்னுடைய படங்கள் போடா போடி, வேட்டை மன்னன் ஆகியவற்றின் தொடர்ச்சி கெட்டுவிடும்.

நான் பாட்டுக்கு சாதாரணமா நடித்துக் கொண்டிருந்தபோது, பத்திரிகைகளில் நான் சிக்ஸ் பேக் வைத்து நடிப்பதாக செய்திகள். எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் இந்த செய்தி (அப்டியா!?). உடனே ரசிகர்கள் வேறு பயங்கரமாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கே போனாலும் சிக்ஸ் பேக் பத்தி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க (அது என்ன சிகரெட் பாக்கெட்டா?). சரி அவர்களை ஏமாத்தக் கூடாதே என்பதற்காக நானும் சிக்ஸ் பேக்குக்காக ஒர்க் அவுட் பண்ணேன்.

இப்போது படத்தில் அந்தக் காட்சி அருமையாக வந்துள்ளது. இதுக்கு காரணம் பத்திரிகைகள் எழுதிய செய்திதானே என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது," என்று கூற, நிருபர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அந்தப் பார்வையில், 'நான் அவனில்லை' என்ற 'அப்பாவித்தனம்' தெரிந்தது!
 

பொங்கலுக்கு வரும் நண்பன்!


வரும் தைத் திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இப்போதெல்லாம், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் ரிலீசாகும் படங்களுக்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே தியேட்டர்களில் இடம்பிடித்தாக வேண்டிய நிலை.

எனவே பொங்கலுக்கு வெளியாகப் போகும் படங்கள் என்னென்ன என்பதை இப்போதிலிருந்தே தெளிவுபடுத்த ஆரம்பித்துள்ளனர்.

முதலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள படம் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன்.

இதுகுறித்து இயக்கநர் ஷங்கர் கூறுகையில், "நண்பன் படம் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு வேலாயுதம், பொங்கலுக்கு நண்பன் என விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். டிசம்பரில் நண்பன் ஆடியோ வெளியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் நண்பன் படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகிவிட்டது.