சென்னை: ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தைப் பற்றி தினசரி ஒரு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது நயன்தாரா மணிரத்னத்தின் படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய செய்திகள் வெளியாகி உள்ளன.
மணிரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் இருவருடன் இணைந்து சுருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று முதலில் கூறினார்கள். தற்போது அதில் இன்னொரு நாயகியாக நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
தமிழின் முன்னணி நாயகியாக இருந்தாலும் கூட இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் என்று பெயரெடுத்த, மணிரத்னத்தின் படங்களில் இதுவரை நயன்தாரா நடித்தது இல்லை.
இதனை ஒரு குறையாக எல்லோரும் கூறிவந்த நிலையில் தற்போது நயன்தாராவின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கிறது, முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரையுலகிலும் தற்போது எழுந்துள்ளது.
ஆனால் முறையான அறிவிப்புகள் வெளியாகும் வரை எதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது, எனவே நயன்தாராவின் கனவு நிறைவேறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்