சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் விக்ரம் குமார். இவர் வேறு யாருமல்ல, தமிழில் யாவரும் நலம் என்ற வெற்றிப் படத்தைத் தந்தவர்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற மனம் என்ற படத்தின் இயக்குநரும் இவர்தான்.
குறிப்பாக மனம் படத்தைப் பார்த்த சூர்யாவுக்கு விக்ரம் குமாருடன் இணைந்து படம் பண்ணும் ஆசை அதிகமாகிவிட, இதுகுறித்து அழைத்துப் பேசியிருக்கிறார்.
யாவரும் நலம் படத்துக்குப் பிறகு, தமிழில் பெரிய அளவில் படம் இயக்க விக்ரம் குமாருக்கு அதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால்தான் தெலுங்குப் பக்கம் போனார்.
இப்போது சூர்யாவை இயக்கும் வாய்ப்பு தேடி வந்ததால், ஒரு பக்காவான கதையோடு போய்ச் சந்தித்தாராம். சூர்யாவுக்கும் கதை பிடித்துப் போக, மாஸ் படம் முடிந்ததுமே இந்தப் படத்தை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டாராம்!
இந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.