'நீலாம்பரி'யாக ஆசைப்படும் 'முத்தழகி' பிரியாமணி

Priyamani Wants Become Neelambari   

சென்னை: பிரியாமணிக்கு ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாம்.

பருத்தி வீரன் படத்தில் முத்தழகியாக வந்து நடிப்பில் கலக்கிய பிரியாமணிக்கு ஏனோ தமிழில் தற்போது வாய்ப்பே இல்லை. இதனால் அவர் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் பேச்சை யாரும் சட்டை பண்ணியதாக தெரியவில்லை.

இந்நிலையில் அவர் தன்னுடைய ஆசை ஒன்றை தெரிவித்துள்ளார். படையப்பா படத்தில் நீலாம்பரியாக வந்து ரஜினியை படாதபாடு படுத்தியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணிக்கு ஆசையாக உள்ளதாம். அது சரி நீங்க நல்லாதான் நடிப்பீங்க. ஆனால் தமிழில் இன்னொரு நீலாம்பரியாக உங்களை ஆக்க யார் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் பெரிய்யயய கேள்விக்குறி.

 

விஸ்வரூப் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக சல்மான் பாராட்டினார்: கமல் பெருமிதம்

Kamal Salman Khan Found Vishwaroop Hollywood

மும்பை: விஸ்வரூப் படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியதாக கமல் ஹாசன் தெரிவித்தார்.

கமலின் விஸ்வரூபம் இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் கடந்த 1ம் தேதி வெளியானது. முன்னதாக விஸ்வரூப் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கமல் கடந்த மாதம் 31ம் தேதி சென்னையில் இருந்து மும்பை சென்றார். வெள்ளிக்கிழமை விஸ்வரூப் வெளியானவுடன் அதை பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை ரேகா உள்ளிட்டோர் பார்த்தனர்.

படத்தைப் பார்த்த பிறகு சல்மான் கான் கூறியதாக கமல் தெரிவித்துள்ளதாவது,

சல்மானுக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக அவர் நினைக்கிறார். படத்தில் உள்ள அனைத்துமே அவருக்கு பிடித்துள்ளது என்றார்.

விஸ்வரூப் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பால் கமல் உற்சாகமாக உள்ளார். அதே சமயம் படத்தை தமிழில் வெளியிட காலதாமதம் ஆவது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறப்படுகிறது.

 

நயனை இம்பிரஸ் பண்ணாத தங்கம்: மயக்கிய பிளாட்டினம்

Nayanthara Loves Platinum Jewels   

சென்னை: நயன்தாராவுக்கு தங்க நகைகளே பிடிக்காதாம்.

தங்க நகைகள் என்றால் எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது என்று இனிமேல் கூற முடியாது. அதற்கு விதிவிலக்காக உள்ளார் நயன்தாரா. கேரளத்து சேச்சிகள் திருமணத்தில் தங்க நகைக்கடையையே கொட்டி வைத்த அளவுக்கு நகை அணிந்திருப்பார்கள். பிற நாட்களிலும் அவர்கள் தங்க நகைகளை விரும்பி அணிவார்கள். ஆனால் நம்ம சேச்சி நயன்தாராவுக்கு தங்கமே பிடிக்காதாம்.

தங்கத்தின் விலையே விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. ஆனால் நயனுக்கோ அதை விட விலை உயர்ந்த பிளாட்டினம் நகைகள் மட்டுமே பிடிக்குமாம். அது சரி அவருக்கு என்ன பிடிக்கிறதோ அதைத் தானே அணிய முடியும்.

நயன்தாரா தற்போது அஜீத்துடன் ஒரு படத்தில் நடத்து வருகிறார். இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அதில் வித்யா கதாபாத்திரத்தில் நயன்தாரா தான் நடிக்கிறார்.

 

கடல் - சினிமா விமர்சனம்

Kadal Movie Review   

எஸ். ஷங்கர்

நடிப்பு: அர்ஜூன், அரவிந்த்சாமி, கவுதம், துளசி, பொன்வண்ணன்
இசை: ஏஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம்: மணிரத்னம்

எல்லா கலைஞர்களுக்குமே ஒரு தேக்க நிலை வரும். போகும்... சினிமாவில் அது சகஜம்தான். ஆனால் இந்த நிலை மணிரத்னத்துக்கு உயிரே-யிலிருந்து தொடர்கிறது... கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாய்!

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து சிறந்த படம் எடுக்க வேண்டும் என மணிரத்னம் விரும்பினால், முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டியது அந்த மக்களின் வாழ்க்கை முறையை. அந்த மண்ணையும் மண்சார்ந்த கலாச்சாரத்தையும் உணர்ந்தறிதல் அவசியம்.

ஆனால் மணிரத்னம் ஏதோ கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு தன் பாணியில் கிராமங்களைக் காட்டுவார். குஜராத்தில் கதை நடக்கும். கதை மாந்தர்கள் திருநெல்வேலித் தமிழ் பேசுவார்கள். விளைவு.. அவர் ஆகச் சிறப்பாக காட்சியமைத்தாலும் அது பார்வையாளனுக்குள் கிண்டல் அலைகளையே கிளப்பிவிடும்.

அவரது சமீபத்திய வெளியீடான கடல் படமும் இதற்கு விலக்கில்லை. முந்தைய படங்களிலாவது ஏதாவது ஒரு பகுதியில் உணர்வுப் பூர்வமான காட்சிகள் ஒன்றிரண்டு மனதை நிரடும். ஆனால் கடல்புர மாந்தர்களை உள்ளடக்கிய இந்த கடலில் ஒரு காட்சி, கதாபாத்திரம் கூட மனதில் பதியவில்லை என்ற உண்மையை சொல்லியே தீர வேண்டும்.

சாத்தான் அர்ஜூனுக்கும், தேவதூதன் அர்விந்த் சாமிக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்ற ஒற்றை வரிக் கதை.

கிறிஸ்தவ ஊழியப் பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படிக்கிறார்கள். ஆனால் அங்கு அர்ஜூன் செய்யும் தகாத சமாச்சாரத்தைப் போட்டுக் கொடுத்துவிடுகிறார் அரவிந்த்சாமி. எனவே அர்ஜுன் வெளியேற்றப்படுகிறார். மனதில் அரவிந்த்சாமியுடனான விரோதத்துடன், தவறான வழியில் போய் பெரிய தாதாவாகிவிடுகிறார் அர்ஜூன்.

ஒரு கட்டத்தில் திட்டமிட்டு அரவிந்த்சாமியை ஜெயிலில் தள்ளுகிறார்.

இடையில் முறைதவறிய உறவால் பிறந்து, ஆதரவற்று வாழ்ந்து, பாதிரியார் அரவிந்த் சாமியால் நல்வழிப்படுத்தப்படுகிறார் கவுதம். பாதிரியார் சிறைக்குப் போனதும், அத்தனை நாள் நல்லவனாக வளர்ந்த கவுதம், 'சாத்தான்' அர்ஜூனின் கையாளாக மாறுகிறார். வெளியில் வரும் பாதிரியார் கவுதமை மீண்டும் நல்வழிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் மனதால் குழந்தையாக, உருவத்தில் குமரியாக உலா வரும் துளசியின் காதல்தான் கவுதமைத் திருத்துகிறது. அர்ஜுனின் மகள்தான் இந்த துளசி. அது இன்னொரு 'தகாத உறவுக் கதை'!

கவுதம் நல்லவனாக மாறியதை சாத்தானுக்குக் கிடைத்த தோல்வியாக நினைக்கிறார் அர்ஜூன். பாதிரியுடன் மோதல் தொடர்கிறது. எப்பேர்ப்பட்ட பாவத்தையும் செய்யக் கூடியவன் சாத்தான் என்பதை நிரூபிக்க, பெற்ற மகளையே கொல்ல முயல்கிறார் அர்ஜூன். உடன் பாதிரியாரையும் கொல்வதற்காக இருவரையும் கப்பலில் ஏற்றி நடுக்கடலுக்குப் போகிறார். அவர்களைத் தேடி படகில் போகிறார் கவுதம். கடலில் பெரும் சண்டை. ஜெயித்தது சாத்தானா, தேவ தூதனா.. என்பது க்ளைமாக்ஸ்.

அப்பாடா.. ஒருவழியா மணிரத்னமும் ஜெயமோகனும் சொல்ல நினைத்த கதையை ஒரு கோர்வையா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்!

இந்தப் படத்தின் ப்ளஸ்களை முதலிலேயே சொல்லிவிடுகிறோம். முதலிடத்தில் இருப்பது ராஜீவ் மேனனின் அபார ஒளிப்பதிவு. அதே நேரம் படம் முழுக்க ஏதோ ஒரு ஆங்கில நாடகம் பார்ப்பது போன்ற எஃபெக்ட் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை போலும்.

அடுத்து அர்ஜூனின் நடிப்பு. வில்லனாக அவதாரமெடுத்தாலே தனி சுதந்திரம் வந்துவிடுகிறது போலும்... அவரது கெட்டப்பும் கூட நன்றாகத்தான் உள்ளது.

மூன்றாவது ஏ ஆர் ரஹ்மானின் இரு பாடல்கள். நெஞ்சுக்குள்ளே, மூங்கில் தோட்டம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஆனால் ஈர்க்கின்றன. பின்னணி இசைக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்று தெரிந்து அமைதியாகிவிட்டிருக்கிறது இசைப் புயல்!

இந்த மூன்றைத் தவிர... மற்றதெல்லாம் இந்தப் படத்துக்கு மைனஸ்தான்!

ஹீரோ என்று சொல்லப்பட்டாலும், ஒரு துணை நடிகருக்கும் கூடுதலான அந்தஸ்துடன்தான் கார்த்திக் மகன் கவுதமை அறிமுகப்படுத்தியுள்ளார் மணிரத்னம். மீனவக் கிராமத்துப் பையன் என்ற எந்த அடையாளமும் இல்லாத முகம், உடல்மொழி. வசன உச்சரிப்பில் அவரும் கஷ்டப்பட்டு, நம்மையும் கஷ்டப்படுத்துகிறார். அடுத்த படம் கைகொடுக்க வாழ்த்துவோம்!

ராதா மகளும் அப்படியே. அவரது கதாபாத்திரம் மகா குழப்பமானது. அதிலும் துளசிக்கு வந்துள்ள நோய்க்கான காரணம் என ஒன்றைச் சொல்கிறார்களே... அது படத்தில் காமெடி இல்லை என்ற குறையைத் தீர்த்துவிட்டது.

கதை வசனம் ஜெயமோகனாம். காலில் கல்லைக் கட்டிக் கொண்டு மணிரத்னத்தையும் இறுகத் தழுவியபடி கடலில் குதித்திருக்கிறார். அல்லது மணிரத்னம் ஜெயமோகனைக் கட்டிக் கொண்டு குதித்ததாகக் கூட வைத்துக் கொள்ளலாம்... எப்படி மீள முடியும்!

படம் முழுக்க யாராவது ஒரு முக்கிய பாத்திரம் தகாத உறவில் ஈடுபடுகிறது. படம் நெடுக ஆபாச திட்டுகள் நம் முகத்தில் வந்து விழுகின்றன. மீனவர்கள் நாகரீக சமூகத்தில் சேரவில்லை என்கிறாரோ மணிரத்னம்?

இதைக் கூட மன்னிக்கலாம்... ஆனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதே கடத்தலுக்காகத்தான்... அவர்களை கொன்று மூட்டையாகக் கட்டி நடுக்கடலில் வீசுவதே தமிழக தாதாக்கள்தான் என்பது போல காட்சிகளையும வசனங்களையும் வைத்திருக்கிறாரே மணிரத்னம்... அதை எப்படி மன்னிக்கப் போகிறார்களோ!

 

ஏய் தேனி, ஏய் பரமக்குடி: பாரதிராஜா, கமல் ஸ்பெஷல்

Bharathiraja Kamal Hassan

சென்னை: பாரதிராஜா உலக நாயகனை எப்படி அழைப்பார் என்று தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல் சப்பானியாக நடித்ததையும் சரி, யாராவது சப்பானின்னா சப்புன்னு அடி என்று ஸ்ரீதேவி கூறியதையும் சரி யாராலும் மறக்க முடியாது. பல ஆண்டுகளாக பாரதிராஜாவும், கமலும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

கமல் ஹாசனை அனைவரும் உலக நாயகன் என்று அழைக்கிறார்கள். ஆனால் பாரதிராஜா எப்படி கூப்பிடுவார் என்று தெரியுமா? பரமக்குடி என்று கூப்பிடுவார். காரணம் கமல் பரமக்குடியைச் சேர்ந்தவர். அதே போன்று கமல் பாரதிராஜாவை தேனி என்றே கூப்பிடுவார். ஏனென்றால் பாரதிராஜா தேனிக்காரர்.

இப்படி கமலும், பாரதிராஜாவும் ஒருவரையொருவர் அவரவர் ஊர் பெயரை வைத்து தான் அழைக்கிறார்கள்.

 

குலதெய்வ கோவிலில் ரஜினி பேரனுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன்: கெடாவெட்டி விருந்து

Dhanush Family Visit Kultheiva Temple

தேனி: ரஜினிகாந்தின் பேரனும், தனுஷின் இளைய மகனுமான லிங்காவுக்கு குலதெய்வ கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா(6), லிங்கா(2 1/2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அதில் லிங்காவுக்கு, தனுஷின் அண்ணன் செல்வராகவனின் 1 வயது மகள் மற்றும் அக்கா டாக்டர் விமலகீதாவின் மகளுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தரெங்கபுரத்தில் உள்ள தங்கள் குல தெய்வ கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்த முடிவு செய்தனர்.

அதன்படி கஸ்தூரி ராஜா, தனது மகன்கள் தனுஷ், செல்வராகவன், மகள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் நேற்று முத்துரெங்காபுரம் கோவிலுக்கு காரில் வந்தார். அங்கு லிங்கா, செல்வராகவன் மகள், விமலகீதாவின் மகளுக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. அதன் பிறகு கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அருகில் உள்ள தோட்டத்தில் கிடா வெட்டி விருந்து தயாரித்து சாமிக்கு படைத்துவிட்டு அனைவரும் சாப்பிட்டனர்.

தனுஷ் குடும்பம் வந்திருக்கும் செய்தி அறிந்த ஊர் மக்கள் அங்கு கூடிவிட்டனர். நேற்று மாலை 4 மணி அளவில் தனுஷ் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டு தேனிக்கு சென்றனர். தனுஷின் அம்மா விஜயலட்சுமியின் சொந்த ஊரான சங்கராபுரத்தில் இருக்கும் கருப்பசாமி கோவிலில் இன்று அவர்கள் பொங்கல் வைப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

 

விஸ்வரூபம் பார்க்க கேரளாவில் அலை மோதும் தமிழக ரசிகர்கள்

Kamal Haasan Fans From Tamil Nadu Throng Kerala

குமுளி: கமல்ஹாசன் ரசிகர்கள் தொடர்ந்து கேரளாவுக்குப் படையெடுத்து வருகின்றனராம். தமிழகத்தில் காட்சிகளை வெட்டி விஸ்வரூபம் படம் வெளியாகவுள்ள நிலையிலும் அவர்கள் கேரளாவுக்குச் செல்வது சற்றும் குறையவில்லையாம். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேரளாவில் குவிந்து வருகினனராம்.

தமிழகத்தில் விஸ்வரூபத்திற்கான தடை கிட்டத்தட்ட நீங்கி விட்டபோதிலும் படம் திரைக்கு வரமேலும் சில நாட்களாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தைப் பார்க்க தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவுக்குத்தான் கமல் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்து வருகின்றனராம்.

கேரளாவில் வந்து குவியும் ரசிகர்களின் எண்ணிக்கையில் சற்றும் குறைச்சல் இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை எந்த கட்டும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு ரசிகர்கள் பெருமளவில் அலை மோதுகின்றனராம்.

கோவை மாவட்டத்தையொட்டியுள்ள கேரளப் பகுதிகளுக்கும், தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரளப் பகுதிகளிலும் கமல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

ஒருமுறை என்றில்லாமல் அடுத்தடுத்து பலமுறை படத்தைப் பார்த்து வருகின்றனராம் ரசிகர்கள். குமுளியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் கவுண்ட்டரைத் திறந்த சில நிமிடங்களிலேயே ஹவுஸ் புல் ஆகி விட்டது.

படம் பார்க்க கம்பம், தேனி, ராமநாதபுரம், பரமக்குடி என்று பல்வேறு தென் மாவட்ட ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் குவி்ந்தனர். சில ரசிகர்கள் கூறுகையில், படத்தை எந்தவித கட்டும் இல்லாமல் பார்க்க முடியும் என்பதால் இங்கு வந்தோம். படத்தை எத்தனை முறை பார்க்க முடியுமோ அத்தனை முறை பார்ப்போம் என்றனர்.

குமுளி தியேட்டரில் கட்டணமும் மிகக் குறைவாக உள்ளதாலும், படத்தைப் பார்க்க எந்தப் பிரச்சினையும், சிக்கலும் இல்லை என்பதாலும் தொடர்ந்து இங்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனராம்.

 

விஸ்வரூபத்துக்காக கடல் படத்தைக் காவு கொடுக்கத் தயாராகின்றன தியேட்டர்கள்?

Will Viswaroopam Swallow Kadal

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்பார்ப்புகள் பெரிதாகவே இருப்பதால் அப்படத்தைத் திரையிடுவதில் தமிழக தியேட்டர்களிடம் பெரும் ஆர்வம் காணப்படுகிறது. இதனால் புதிதாக திரைக்கு வந்து 'மொக்கை'ப் படம் என்று ரசிகர்களிடம் 'வரவேற்பைப்' பெற்றுள்ள கடல் படத்தைத் தூக்கி விட்டு விஸ்வரூபத்தைப் போட பல தியேட்டர்கள் முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

விஸ்வரூபம் பெரும் சிக்கலைக் கடந்து ஒரு வழியாக வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கமல்ஹாசன் தரப்பு இறங்கியுள்ளது. படத்தில் 7 காட்சிகளை எடிட் செய்யும் பணிகளை கமல்ஹாசன் தரப்பு முடுக்கி விட்டுள்ளது. வெள்ளிக்கிழமை படம் திரைக்குவரலாம் என்று தெரிகிறது.

ஆனால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் அப்படம் திரையிடப்படுவதாக இருந்த பல தியேட்டர்களில் கடல் மற்றும் டேவிட் ஆகிய படங்களை திரையிட்டுள்ளனர். இதனால் விஸ்வரூபம் படத்திற்குத் தியேட்டர்கள் கிடைக்காது என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் கடல் படம் சரியில்லை என்று ரிசல்ட் வெளியாக ஆரம்பித்திருப்பதால், அப்படத்தைத் தூக்கி விட்டு விஸ்வரூபம் படத்தைப் போடும் மன நிலைக்கு பெரும்பாலான தியேட்டர்கள் வந்துள்ளதாக புதிதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் அப்படி என்னதான் உள்ளது இப்படத்தில் என்ற எண்ணத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர். எனவே படத்தில் சில காட்சிகளை ரத்து செய்தாலும் கூட படத்தில் என்னதான் சொல்லியுள்ளார் கமல் என்பதை அறியும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே படத்திற்கு பெரும் கூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதை மனதில் வைத்தே கடல் படத்தை தூக்கி விட்டு விஸ்வரூபத்தைப் போட தியேட்டர் நிர்வாகங்கள் பல முடிவு செய்திருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

 

ரஜினியை லீடராக்கத் துடிக்கும் தெலுங்கு இயக்குனர்

Sekhar Kammula Wants Rajinikanth Be Leader

ஹைதராபாத்: தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுக்கு ரஜினிகாந்தை லீடராக்கி பார்க்க ஆசையாக உள்ளதாம்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சேகர் கம்முலா. டாலர் ட்ரீம்ஸ், ஆனந்த் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்தவர். அவர் ராணா டக்குபாத்தியை வைத்து எடுத்த படம் லீடர். கடந்த 2010ம் ஆண்டு ரிலீஸான இப்படம் சுமாராக ஓடினாலும் கதைக்காக பெரிதும் பேசப்பட்டது.

மேலும் சிறந்த கதைக்காக இப்படத்திற்கு நந்தி விருது கிடைத்தது. இந்நிலையில் கம்முலாவுக்கு ஒரு ஆசை ஏற்பட்டுள்ளது. தான் தெலுங்கில் எடுத்த லீடர் படத்தை தமிழில் ரீமேக் செய்து தானே இயக்க விரும்புகிறார். அவர் தன் படத்திற்கு ரஜினிகாந்தை ஹீரோவாக்க விரும்புகிறார்.

தெலுங்கு திரையுலகில் கம்முலாவின் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் விருப்பமாக உள்ள நிலையில் அவர் கண்ணோ நம்ம சூப்பர் ஸ்டார் மேல் உள்ளது. ரஜினிகாந்த் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லையே.

 

டேம் 999 தடை குறித்த ஆளுநர் உரைக்கு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு

Tntj Welcomes Governor S Speech On Dam 999

சென்னை: டேம் 999 படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது குறித்து தமிழக ஆளுநரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய, டேம் 999 போன்ற படங்கள் உரிய தருணத்தில் தடைசெய்யப்பட்டதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தடுக்கப்பட்டுள்ளன.இது போன்ற படங்களை தயாரிக்கும் போது, மக்களின் உணர்வுகள் புண்படாத வகையில், தயாரிப்பாளர்கள் செயல்பட என சட்டசபையில் தமிழக ஆளுநர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

இதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வரவேற்கின்றது என்று தெரிவித்துள்ளார் அவர்.

 

முடிந்தது சர்ச்சை விஸ்வரூபம் வெளியீடு எப்போது?

Vishwaroopam Release Date Soon

சென்னை: விஸ்வரூபம் சர்ச்சை ஒருவழியாக ஓய்ந்துள்ளது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

விஸ்வரூபம் சர்ச்சையால் தமிழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்குப் போய் விஸ்வரூபம் படத்தைப் பார்த்து வந்தனர் கமல்ஹாசன் ரசிகர்கள்.

இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்குகளை திரும்பப் பெறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படம் எப்போது தமிழகத்தில் திரையிடப்படும் என்பது குறித்தும் அவராகவே விளக்கம் அளித்தார். இது பற்றி அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் இருந்து சில ஒலி குறிப்புகளை நீக்குவதாக ஒப்புக் கொண்டு உள்ளேன். இதுபற்றி மத்திய சென்சார் போர்டிடம் தெரிவித்துவிட்டு, சட்டப்படி படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுப்போம். எனக்கும் எனது ரசிகர்களுக்கும் முக்கியமான அறிவிப்பு படத்தை வெளியிடும் தேதி குறித்து சிலருடனும் தொழில்நுட்ப ரீதியாகவும் பேசி அறிவிக்கப்படும் என்றார்.

 

நிர்வாணமாக நடித்த பிரகாஷ்ராஜ்: 'ஏ' சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு

Prakash Raj Goes Nude

சென்னை: ஒங்கோல் கித்தா என்ற தெலுங்கு படத்தில் பிரகாஷ்ராஜ் நிர்வாணமாக நடித்துள்ளார்.

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பொம்மரில்லு படத்தை இயக்கிய பாஸ்கர் ஒங்கோல் கித்தா என்ற படத்தை இயக்கினார். சென்சார் போர்டு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. அதற்கு காரணம் நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ். அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? மனிதர் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

கடந்த 1ம் தேதி ரிலீஸான படத்தைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் பிரகாஷ்ராஜின் கோலத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் மற்றும் மணி சர்மா இசையமைத்துள்ளனர்.

தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபலமான பிரகாஷ்ராஜ் ஒரு காட்சியில் நிர்வாணமாக ஓடுவது அடடா இவர் படத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டுள்ளார் என்று ரசிகர்களை பேச வைத்துள்ளதாம்.

 

இங்கிலாந்து, ஐரோப்பாவில் விஸ்வரூபம் 'சூப்பர் ஹிட்' -ஐங்கரன்

Vishwaroopam Super Hit Uk Rest The Europe

லண்டன்: இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக அப்படத்தை அந்த நாடுகளில் விநியோகம் செய்துள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஸ்வரூபம் மட்டுமே உலக அளவில் தற்போது பெருமளவில் பேசப்பட்டு வரும் ஒரே தமிழ்ப் படமாகும்.

இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் திரையிடப்பட்டது. தற்போது 2வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளுடன் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் இப்படத்துக்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் இப்படம் மொத்தம் 30 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. பல தியேட்டர்களில் தினசரி 9 காட்சிகள் வரை திரையிடுகின்றனர். காரணம், ரசிகர்களின் கூட்டம் மற்றும் கோரிக்கை காரணமாக.

கமல்ஹாசன் படம் ஒன்று இங்கிலாந்தில் இந்த அளவுக்கு பிரமாண்ட வரவேற்பைப் பெற்றிருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிச் செய்தியாகும்.

ரசிகர்களின் கோரிக்கை காரணமாக இந்த வாரம் கூடுதலாக 8 திரைகள் விஸ்வரூபத்தை திரையிடவுள்ளன.

ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

கமல்ஹாசன் மீது ஒரு பிராமணர் சங்கம் திடீர் பாய்ச்சல்!

A Brahmin Association Wants Viswaroopam To Be Banned

சென்னை: இஸ்லாமியர்கள் பிரச்சினையை முடித்து விட்ட கமல்ஹாசன் அடுத்து பிராமணர்களிடமிருந்து புது எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் பிராமணர்கள் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக பிராமணர் சங்கம் ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் அந்த சங்கம் புகார் மனுவைக் கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக புகார் மனுவைக் கொடுத்த அதன் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்புகொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது.

இது எங்களின் உணர்வை புண்படுத்துகிறது. கமல் முற்போக்குவாதி, அறிவுஜிவி என்று சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பிராமணராக அங்கீகரித்தது கிடையாது.

பூணூல் என்பது சொறிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பிராமணராக இருக்க முடியும்.

விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டுவதைவிட ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைத்திருந்தால் விஸ்வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும் என்றார்.

இன்னொரு பிராமணர் சங்கம் தடை கூடாது என்கிறது

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் படத்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களை இழிவுபடுத்தியிருப்பதால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பிராமண சங்கத்தினர் புகார் தெரிவித்திருகின்றனர்.

அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பிராமணன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப்பதால் தடை செய்யக்கூடாது.

ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார்.

அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்களை இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்து போகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணர வேண்டும் என்றார்.

 

ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில் வடிவேலு.. இரண்டரை ஆண்டு வனவாசத்துக்கு முடிவு!

Vadivelu S Rentry With Ags Movie

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு. அதுவும் வெறும் காமெடியனாக அல்ல... கதாநாயகனாக!

2010 தேர்தலில் திமுகவுக்காக புயலாய் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்த வடிவேலு, ஆட்சி மாறியதும் இருக்குமிடம் தெரியாத அளவு ஆகிப் போனார்.

இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் மம்பட்டியான் மற்றும் மறுபடியும் ஒரு காதல் ஆகிய படங்கள்தான். ஆனால் இவற்றில் அவர் எப்போதோ நடித்து முடித்திருந்தார்.

ஜெயலலிதா முதல்வரான பிறகு, வடிவேலுவை எந்த நிறுவனமும் நடிக்க அழைக்கவில்லை. இயக்குநர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

இடையில் அவ்வப்போது வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கிறார், அந்தப் படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வரும். அவ்வளவுதான்.

ஆனால் வடிவேலு உண்மையிலேயே தனது அடுத்த என்ட்ரி அசத்தலாக இருக்க வேண்டும் என்பதற்காக சில வேலைகளைச் செய்து வந்தார்.

அதில் ஒன்று இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிப்பது. அதற்கான ஆரம்பப் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவிருக்கிறது.

இன்னொரு பக்கம், ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில், யுவராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பது. இந்தப் படம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் மற்ற விவரங்கள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் வடிவேலு நடிக்கப் போகிறார்.