ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு வில்லனாவாரா கட்டப்பா?

சென்னை: ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது, இந்தப் படத்திற்கு ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்கிறார் என்று 2 தினங்களுக்கு முன்பு தான் அரைகுறையாக முடிவானது.

தற்போது படத்தில் வில்லனாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது, அனேகமாக கட்டப்பா சத்யராஜ் நடிக்கலாம் என்று தகவல்கள் அடிபடுகின்றன.

Rajini's Next Movie Sathyaraj Play as a Villain?

இந்தப் படத்தில் முதலில் நடிகர் பிரகாஷ் ராஜை நடிக்க வைக்க திட்டமிட்டு இயக்குநர் ரஞ்சித் அவரை அணுக, தற்போது பிஸியாக இருக்கும் பிரகாஷ் ராஜால் தேதிகளை ஒதுக்கிக் கொடுக்க முடியவில்லையாம்.

எனவே சத்யராஜை அணுக இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன, ஆனால் சத்யராஜ் அந்த வாய்ப்பை ஏற்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இதற்கு முன்பு சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஷங்கர் சத்யராஜை கேட்டபோது அவர் மறுத்து விட்டார்.

இந்த முறையாவது ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை சத்யராஜ் ஏற்பாரா அல்லது மறுப்பாரா என்பது..அந்த ஆண்டவன் கைகளில் எல்லாம் இல்லை சத்யராஜ் கைகளில் தான் உள்ளது.

 

சுதந்திர தின ஸ்பெஷல்: விஜய் டிவியில் காக்கா முட்டை

இந்திய சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக விஜய் டிவியில் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

விடுமுறை தினம் என்றாலே டிவி சேனல்களில் புத்தம் புதிய சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். இதில் சேல்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும்.

Kaaka Muttai to be aired on Independence Day

தியேட்டர்களில் புதுப்படம் ரிலீஸ் ஆனாலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் வீட்டிலேயே அமர்ந்து தொலைக்காட்சிகளில் புதுப்படத்தை பார்த்து ரசிப்பார்கள். அவர்களுக்காகவே விஜய் டிவியில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் திரைப்படம் காக்கா முட்டை ஒளிபரப்பாகிறது.

தனுஷ் - வெற்றிமாறன் தயாரிப்பில், மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குட்டீஸ்கள் நடித்துள்ள இந்தப்படம் குட்டிப்பசங்களுக்கு பிடித்த திரைப்படமாக இருப்பதால் டி.ஆர்.பியில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

44 வயது, ஆனாலும் என்ன.. தபுவுக்குள் பூத்தது புதுக் காதல்!

மும்பை: நடிகை தபு காதலில் மூழ்கியிருக்கிறார்.. இதுதான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு.

அதிலும் தன்னை விட வயதில் இளையவருடன் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பதுதான் கிசுகிசுவின் முக்கிய சாராம்சம்.

இந்தித் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த நடிகைதான் தபு. ஷபானா ஆஸ்மியின் அக்காள் மகள். இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வரும் தபு, சிங்கிளாகவே முதிர் கன்னியாகி விட்டார்.

Love bites Tabu at 44

இந்த நிலையில் தற்போது தபு காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள், அதுவும் தன்னை விட வயதில் குறைந்த ஆணுடன் காதலில் திளைத்துள்ளாராம் தபு.

திரிஷ்யம் படத்தில் இறுக்கமான போலீஸ் அதிகாரி வேடத்தில் அசத்தியிருக்கிறார் தபு. படத்தில் மற்ற முக்கிய கேரக்டர்களை விட தபுவின் இந்த பாத்திரம்தான் பிரமாதமாக வந்துள்ளதாம். எனவேதான் திரிஷ்யம், இந்தியில் தோல்வி என்றாலும் கூட தபுவுக்காக ஓடி வருகிறதாம்.

44 வயதாகி விட்ட தபு, தற்போது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் காதலில் ஈடுபட்டுள்ளாராம். அவருக்கு தபுவை விட வயது குறைவாம். அவருக்கு இது முதல் காதலா இல்லையா என்பது தெரியவில்லை.

தபு இதுகுறித்து இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் உள்பட எல்லாவற்றுக்கும் நான் தயாராகவே உள்ளேன் என்று கூறியிருந்தார். இதை வைத்துப் பார்க்கும்போது தபு காதலில் விழுந்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சந்தோஷம்!

 

அமலாவின் 2வது மகனின் பட விநியோக உரிமையில் சாதனை.. ரூ. 18 கோடிக்கு விற்பனையாம்!

ஹைதராபாத்: நாகர்ஜுனா - அமலா தம்பதிகளின் இளைய மகன் அகில் அக்கினி ஹீரோவாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படம் ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் விநியோக உரிமையில் சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறதாம்.

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினி என 2 மகன்கள் இருக்கின்றனர்.

Akhil Akkineni's Debut Film Andhra Sold Rights Rs. 18 Crores?

இதில் நாக சைதன்யா ஏற்கனவே ஹீரோவாக அறிமுகமாகி காலூன்றி விட்டார், தற்போது இந்த தம்பதிகளின் இளைய மகன் அகில் அக்கினி பெயரிப்படாத ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கின் பிரபல இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு அனூப் ரூபென்ஸ் உடன் இணைந்து தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகும் அகில் இதற்கு முன்பு மனம் திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றிருக்கிறார்.

இவர் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நடித்துக் கொண்டிருக்கும் படமும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படத்திற்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. படத்தின் விநியோக பிசினஸ் சூடு பிடித்துள்ளது.

ஆந்திர பிராந்திய விநியோக உரிமை சுமார் 18 கோடிக்கு விலைபோயிருக்கிறது. அறிமுக நடிகர் ஒருவரின் திரைப்படம் இந்த அளவு விலை போவது தெலுங்கு தேசத்தில் இதுவே முதல்முறையாம். அதேபோல நிஜாம் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் பெரும விலைக்கு பட விநியோக உரிமை போயுள்ளதாக கூறுகிறார்கள்.

 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நாகாவில் நடிக்கிறார் ஜோதிகா!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நாகா படத்தில் நாயகியாக ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவைக் காதலித்து மணந்த ஜோதிகா, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 36 வயதினிலே படத்தில் நாயகியாக நடித்தார். அந்தப் படத்தை சூர்யாவே தயாரித்தார். படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

Raghava Lawrence to direct Jyothika

இதைத் தொடர்ந்து நல்ல கதைகள் அமைந்தால் புதிய படங்களில் நடிப்பைத் தொடர்வேன் என்று ஜோதிகா கூறியிருந்தார்.

இப்போது காஞ்சனா 2 படத்துக்குப் பிறகு நாகா என்ற பெயரில் பேய்ப் படம் ஒன்றை இயக்குகிறார் லாரன்ஸ். இந்தப் படம் பாம்பு சென்டிமென்டை அடிப்படையாக வைத்து உருவாகிறது. படத்தின் கதையை ஜோதிகாவிடம் லாரன்ஸ் கூறியதாகவும், கதை பிடித்ததால் நடிக்க ஜோதிகா ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் தயாரிக்கிறது. நாகா படத்தை மூன்று பாகங்களாக எடுக்கும் முயற்சியில் உள்ளார் ராகவா லாரன்ஸ்.

 

தமிழ் நன்கு தெரியும்.. தமிழில் நடிப்பேன்!- "மண்ணின் மைந்தர்"களுக்கு ஷாக் தரும் மகேஷ்பாபு

சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த எனக்கு தமிழ் மிக நன்றாகத் தெரியும். இனி தமிழ்ப் படங்களிலும் நடிப்பேன், என்று தமிழ் முன்னணி நடிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் மகேஷ்பாபு.

தெலுங்கில் முதல் நிலை நடிகர் மகேஷ் பாபு. பிரபல நடிகர் கிருஷ்ணாவின் வாரிசு.

Mahesh Babu decides to act in direct Tamil films

இவருக்கு தெலுங்கில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் கணிசமான ரசிகர்கள் உண்டு. இவரது நேரடி தெலுங்குப் படங்கள் கூட சென்னையில் ஏக வசூலை அள்ளுகின்றன.

இப்போது நேரடியாக தமிழில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். அப்படி வெளியாகும் முதல் படம் செல்வந்தன்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் மகேஷ் பாபு கூறுகையில், "நான் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். தமிழில் நன்றாக பேசுவேன். தெலுங்கில் பட வாய்ப்பு கிடைத்ததால் அங்கு ஹீரோ ஆனேன்.

தமிழில் நடிக்க வேண்டும் என்பதும் எனது நீண்ட நால் ஆசை. தெலுங்கில் நான் நடித்துள்ள படம் ‘ஸ்ரீமந்த்துடு' இதற்கு ‘பணக்காரன்' என்பது பொருள். எனவே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள படத்துக்கு ‘செல்வந்தன்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இது கிராம சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ள படம். தற்போது நான் 'பிரமோற்சவம்' படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். அடுத்து தொடர்ந்து தமிழில் நடிப்பேன். தெலுங்கில் நான் நடிக்கும் போது தமிழிலும் அதே படத்தை நேரடி தமிழ்ப் படமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

 

வைத்தியத்துக்கு வந்த பேய்... இது ஜின் நாயகியின் அனுபவம்.. நிஜமா, ரீலா?

சமீப காலமாக பெருகி வரும் பேய் படங்களின் வரிசையில், அடுத்து வரவிருப்பது ஜின் படம்.

நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமான ஜின்னில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் புது முகம் டாக்டர் மாயா.

இன்னொரு புன்னகை அரசி எனும் அளவுக்கு மயக்கும் சிரிப்புக்கு சொந்தக்காரரான மாயா ஒரு பல் மருத்துவர். சினிமா மேல் உள்ள காதலால் 'ஜின்' மூலம் நாயகியாகிறார்.

Dr Maaya's experience with 'Ghost'

தான் நாயகியானது குறித்து டாக்டர் மாயா இப்படிச் சொல்கிறார்:

'எனக்கு இயக்குநர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பெரிய ஆசை. 'கஜினி' படத்தின் நாயகி கல்பனா போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூர்யா சாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் கனவு. எனக்கு பிடித்த கதாநாயகி ஜெனிலியாதான். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இயல்பாகவே டீன் ஏஜ் இளம் பெண்கள் போலவே இருக்கும். அந்த நடிப்பை அவர் தான் பிரமாதமாக பிரதிபலிக்கிறார்.என் கல்லூரி தோழிகள் பலர் அவரை போலவே நடித்தும் ,நடந்தும் கொள்வர்.

Dr Maaya's experience with 'Ghost'

'ஜின் படத்தை தொடர்ந்து என் அடுத்த படத்துக்காக நான் ஏகப்பட்ட கதைகள் கேட்டு வருகிறேன். பெயர் வாங்கும் அளவுக்கு பாத்திரம் இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். 'ஜின்' படத்தில் என்னுடைய அனுபவங்கள் ஏறத்தாழ படத்தின் மைய கதையான பேய் கதை போலதான். காளி வெங்கட், 'காதலில் சொதப்புவது எப்படி' அர்ஜுனன், முண்டாசு பட்டி முனீஸ் காந்த், மெட்ராஸ் ஜானி என்ற வளர்ந்து வரும் நகைசுவை கலைஞர்களுடன் 40 நாட்கள் படப்பிடிப்பு என்றால் எப்படி இருக்கும் . சிரித்து சிரித்து வயிற்று வலிதான். இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை கதாநாயகர்கள் ரமீஸ் ராஜாவும் , 'மெட்ராஸ்' கலையும் . தொடர்ந்து 40 நாட்களும் சில்லிடும் இரவுகளில் நடுக் காட்டில் பெரும்பாலும் படப்பிடிப்பு என்றாலும் , இவர்களின் கலாட்டாவால் படம் முடிந்ததே தெரியவில்லை.

ஒரு வித்தியாசமான அனுபவம் என்ன வென்றால், ஒரு நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்த போது ஒரு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் சற்றே தயங்கித்தான் அழைப்புக்கு செவி சாய்த்தேன். யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசினால், நடுங்கும் குரலில் ஒரு பெண். என்னவென்று விசாரித்தால் எனக்கு பல் வலி , வைத்தியம் பாப்பீங்களா என்று கேட்டது. என்ன பிரச்சனை என்றுக் கேட்டேன். நான் ரத்த காட்டேரி , எனக்கு பல் வலி . இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க இயலவில்லை என்று கேட்டு விட்டு கட கட என சிரிக்க ஆரம்பித்தது. நான் அவ்வளவுதான்.. கத்தி விட்டேன்.

Dr Maaya's experience with 'Ghost'

பயத்தால் காய்ச்சலே வந்து விட்டது. விளையாட்டுக்குத்தான் யாராவது செய்திருப்பார்கள் என்று பின்னர் புரிந்தது. ஆனால் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது. அதை செய்தது யார் என்று இன்னமும் தெரிய வில்லை," என்றார்.

ம்ம்.. ஒரு நடிகைக்கு எப்படியெல்லாம் விளம்பரம் தேவைப்படுகிறது பாருங்க!

 

அஜீத் படத்திற்கு வெட்டி விலாஸ் என்று பெயர் சூட்ட திட்டம்?

சென்னை: சிறிய படங்கள் தான் தலைப்பு வைக்க மெனக்கேடுகிறார்கள் வித்தியாசமாக பெயர் வைக்கிறார்கள் என்று நினைத்தால், அந்த நினைப்பை உடனடியாக ஒரு நல்ல ரப்பர் வைத்து அழித்து விடுங்கள்.

பெரிய படங்களுக்கும் அதே நிலைமைதான் கதை யோசிப்பது படமெடுப்பது இவை எல்லாவற்றையும் பெரிய விசயமாக இருப்பது படங்களுக்கு பெயர் வைப்பதுதான். விஷயம் இதுதான் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வந்த தல 56 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.

Ajith Next Movie Title Vetti Vilas?

கொல்கத்தாவில் ஷூட்டிங் முடித்து தற்போது சென்னை திரும்பியிருக்கும் படக்குழுவினர் அடுத்து சென்னையில் ஒரு மாத காலம் படப்பிடிப்பை தொடர இருக்கின்றனர். இத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவுற இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

முழுப் படமும் முடியப் போகும் இந்த தருணத்திலாவது பெயரை வைத்துவிட வேண்டும் என்று மொத்த படக்குழுவும் ரூம் போட்டு யோசித்து, வரம் என்று முதலில் பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நிறைய பேருக்கு அந்தப் பெயர் பிடிக்காமல் போய்விட தற்போது படத்திற்கு பொருத்தமாக வெட்டி விலாஸ், என்று பெயர் வைத்திருப்பதாக சாரி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெட்டி விலாஸ்? கதைப் பஞ்சம் தலைவிரித்தாடுதுன்னு கேள்விபட்டுருக்கேன், தலைப்புப் பஞ்சம் புதுசா இருக்கு...

 

ராஜமெளலியின் அடுத்த குறி அஜீத்?

சென்னை: பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு சொந்தக்காரர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தற்போது பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தை இயக்கும் வேலைகளில் மிகவும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

பாகுபலியின் 2 ம் பாகம் அடுத்த வருடத்தில் திரைக்கு வரவிருக்கிறது, இந்த படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். மகேஷ்பாபுவின் படத்தைத் தொடர்ந்து தமிழில் அஜீத்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajamouli To Direct Ajith?

அஜீத்தை வைத்து இயக்கும் இந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் எடுக்க இருக்கிறாராம் ராஜமௌலி, தமிழில் அஜீத்தும் தெலுங்கு மொழியில் அல்லு அர்ஜுனும் நடிக்க இருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

மேற்சொன்ன தகவல்களை இயக்குநர் ராஜமௌலியின் தந்தை கே.வி. விஜயேந்திரன் ஒரு பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார், தென்னிந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த செய்தி அஜீத்தின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று மேலும் இந்தத் தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார் கே.வி.விஜயேந்திரன்.

அனேகமாக 2016 ம் ஆண்டின் இறுதியில் இந்தப் படம் திரைக்கு வரலாம் என்று தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறார் ராஜமௌலியின் தந்தையும் பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் படங்களின் கதை ஆசிரியருமான கே.வி.விஜயேந்திரன்.

தந்தை சொல்லை தனயன் தட்ட வாய்ப்பில்லை பார்க்கலாம்...

 

இயக்குநர் சங்கத்தின் புதிய விதிகள்... எதிர்த்து கோர்ட்டுப் போன புது இயக்குநர்!

தமிழ் சினிமாவில் அடிக்கடி கோர்ட் படியேறும் அமைப்பு அநேகமாக தயாரிப்பாளர் சங்கம்தான். இப்போது, இயக்குநர் சங்கம் நீதிமன்றப் படிகளில் ஏற ஆரம்பித்துள்ளது.

விஷயம் இதுதான்... தமிழ் சினிமா இயக்குநர் சங்கத்தில் "தலைவர்" அல்லது "செயலாளர்" பதவிக்கு போட்டியிட குறைந்தது 5 படம் இயக்கி இருக்க வேண்டும் என்றும் 10 வருடம் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரபட்டுள்ளதாம்.

Directors Association in trouble

இதனை எதிர்த்து முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு இன்று 15 ஆவது கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அதற்கு இயக்குநர் சங்க தலைவர் திரு.விக்ரமன் அவர்கள் ஆஜர் ஆவதாக தெரியவந்துள்ளது.

இயக்குநர் அமீர் போன்றவர்களே 4 படம் மட்டுமே இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது..

 

அக்கட தேசத்தில் 8 கோடிக்கு விலைபோன புலி

சென்னை: விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் போன்ற முக்கியமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படம் அடுத்த மாதம் 17 ம் தேதியன்று உலகமெங்கும் வெள்ளித்திரைகளில் வெளியாகிறது.

இந்தியா முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் புலி திரைப்படத்தை வெளியிட இருக்கின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன, இந்நிலையில் ஆந்திராவில் புலி திரைப்படம் 8 கோடிக்கு விலை போயிருக்கிறது.

Puli Telugu Rights Rs 8 Crores

ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் புலி படத்தைத் திரையிடும் உரிமையை எஸ்விஆர் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் வாங்கி 8 கோடியை கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறது.

விஜயின் படங்களிலேயே அதிக விலைபோன படம் புலிதான் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதற்கு முன்பு துப்பாக்கி திரைப்படம் விஜய் படங்களில் ஆந்திராவில் அதிக விலை போன படம் என்ற பெருமையைத் தக்க வைத்திருந்தது.

தற்போது புலி திரைப்படம் துப்பாக்கியின் வரலாற்றை முறியடித்து இருக்கிறது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா என 2 மாநிலங்களிலும் சுமார் 1400 திரையரங்குகளில் தெலுங்கு பேசவிருக்கின்றது புலி.

 

அரசியலுக்கு அஸ்திவாரமிடும் தலைவா நடிகர்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அந்த நடிகர் தற்போது அரசியலில் குதிக்கப் போகிறார், என்ற ஒரு பேச்சு தமிழ்த் திரையுலகில் அரசல்புரசலாக எழுந்துள்ளது.

ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களின் மூலம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்குவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்ற சில விஷயங்களை செய்து வரும் நடிகர் தற்போது முழுமூச்சாக அரசியலில் இறங்க இருக்கிறாராம்.

சமீபத்தில் நடந்த பிரமாண்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தாடிக்கார இயக்குனருக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்ததின் பின்னணி, இதுதான் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அரசியலில் தான் இறங்கும் போது தனக்கு ஆதரவாக தாடிக்கார இயக்குநர் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், அவரின் மகன் சம்பந்தப்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்திருக்கிறார் நடிகர்.

விரைவில் இவர்கள் இருவரின் கூட்டணி பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகின்றனர், அப்போ அரசியலுக்கு இன்னொரு நடிகர் ரெடி...