விஷாலின் ‘பட்டத்து யானை’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஷாலின் ‘பட்டத்து யானை’

1/25/2011 10:37:30 AM

தேவதையை கண்டேன், திருவிளையாடல், மலைக்கோட்டை. காதல் சொல்ல வந்தேன் படங்களுக்கு பின் ‘பட்டத்து யானை’ படத்தை இயக்க உள்ளார். முன்னதாக, சீயான் விக்ரம் நடிக்கும் வெடி படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் நின்று போனது. இதனால் சிறிது காலம் தன் கதைக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த பூபதி பாண்டியன் தற்போது விஷாலுடன் ‘பட்டத்து யானை’ படத்தில் இணைய உள்ளார். ஆனால் இது விக்ரமுக்கு தயாரான கதையா அல்லது புது கதையா என்பது தெரியவில்லை.


Source: Dinakaran
 

பரத்தின் ’555′

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பரத்தின் ’555′

1/25/2011 10:30:58 AM

'நினைத்தாலே இனிக்கும்' குமரவேல் இயக்கும் 'யுவன் யுவதி' படத்தில் நடிக்கிறார் பரத். 'யுவன் யுவதி' படத்தில் ஆக்ஷன், ரொமான்டிக் ஹீரோ என வெரைட்டியான கேரக்டர்களில் நடிப்பதாக பரத் கூறியுள்ள பரத் அடுத்து ‘பூ’ படத்துக்கு பின் சசி இயக்கும் 555 படத்தில் நடிக்கிறார். தற்போது படத்திற்கு ஹீரோயின் தேர்வு நடக்கிறது.


Source: Dinakaran
 

சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகர்கள்

1/25/2011 10:38:37 AM

புதுமுகங்கள் அமீத் பதக், நீது சவுத்ரி நடிக்கும் படம் 'அன்பிற்கு அளவில்லை'. படம் குறித்து இயக்குனர்கள் மரியம் கானசக், ஆனந்த்பாபு கூறியது:
இந்தியாவில் ஆண¢டுதோறும் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. 2007ம் ஆண்டில் 3,874 விவாகரத்துகள் நடந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 4,643 விவாகரத்துகள் நடந்துள்ளது. குழந்தை பிறந்ததும் கணவன், மனைவி இடையே தூரம் அதிகமாகிவிடுகிறது. குழந்தையை வளர்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால் தம்பதி இடையிலான பாசம் குறைந்து விவாகரத்துகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இப்படக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப¢படத்தை பார்த்து கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் இணைந்தால் அதுவே படத்தின் வெற்றி. நல்ல கருத்தை சொல்வதால் படத¢தில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடாமல் பணியாற்றுகின்றனர். படம் முடிந்த பின் நாங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர்.


Source: Dinakaran
 

மலையாளத்தில் அறிமுகமாகும் பாக்யராஜ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாளத்தில் அறிமுகமாகும் பாக்யராஜ்!

1/25/2011 10:43:54 AM

சமீபகாலமாக அதிக தமிழ் படங்களில் ஹீரோவின் அப்பா நடித்து வரும் பாக்யராஜ், தற்போது பிறமொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கு முதற்கட்டமாக ‘மிஸ்டர் மருமகன்’ என்ற மலையாள படத்தில் திலீப்புக்கு மாமனராக நடிக்கிறார் பாக்யராஜ். அவர் அறிமுகமாகும் முதல் மலையாள படம் இது. இதில் அவருக்கு ஜோடி ரோஜா நடிக்கிறார்.


Source: Dinakaran
 

ஹீரோ ஆகிறார் கண்ணதாசன் பேரன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ ஆகிறார் கண்ணதாசன் பேரன்

1/25/2011 10:52:48 AM

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர் கண்ணதாசன்.  தமிழ் சினிமாவில் அவரது இடத்தை நிரப்ப யாரலும் மடியாது. தற்போது அவரது பேரன் ஆதவ் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ‘பொன்மாலைப் பொழுது’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.


Source: Dinakaran
 

கேத்ரினா கைப்,பிரியங்கா சோப்ரா வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு

1/24/2011 4:44:58 PM

மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகைகள் கேத்ரினா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கேத்ரினா கைப், லண்டனைச் சேர்ந்தவர். இவரது தந்தை காஷ்மீரி இந்தியர். தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர். மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வரும் கேத்ரினா கைப், படம் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'தீஸ் மார் கான்' என்ற இந்திப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும் இதில் இடம் பெற்றிருந்த கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. இதே போல் மற்றொரு முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்று திரைப்படங்களில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானத்துக்கு உரிய வரி கட்டப்படவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடிகைகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை.


Source: Dinakaran