இந்தப் பக்கம் சிம்பு.. அந்தப் பக்கம் விஷால்... புது பார்முலாவோடு களம் இறங்கும் கெளதம்!

சென்னை : என்னை அறிந்தால் வெற்றிப்படமானதைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்தடுத்தப் பட வேலைகளில் பிசியாகி விட்டார் இயக்குநர் கௌதம்மேனன்.

முதலாவதாக சிம்பு நடிக்கும் காதல் கதை. படத்திற்கு அச்சம் என்பது மடமையடா எனப் பெயரிடப் பட்டுள்ளது. சிம்பு - கௌதம் காம்பினேஷனில் தயாராகும் இந்தப் படம் இன்னொரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா'வாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தப் பக்கம் சிம்பு.. அந்தப் பக்கம் விஷால்... புது பார்முலாவோடு களம் இறங்கும் கெளதம்!

சிம்பு படத்தை முடித்து விட்டு விக்ரம், நயன்தாரா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்' படத்தை இயக்குகிறார் கௌதம். இப்படம் போலீஸ் கதையாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேற்கூறிய இரண்டு படங்களையும் முடித்தவுடன் விஷாலை இயக்கத் திட்டமிட்டுள்ளார் கௌதம். சமீபகாலமாக ஆக்‌ஷனில் வெளுத்து வாங்கி வரும் விஷாலை வைத்து, மென்மையான காதல் கதையை இயக்க கௌதம் திட்டமிட்டிருக்கிறாராம்.

இதற்கிடையே மீண்டும் அஜீத்தை வைத்து என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் இயக்கும் ஐடியாவிலும் கௌதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எப்படியோ போலீஸ் கதை, காதல் கதை என மாற்றி மாற்றி சலிப்பு தட்டாமல் ரசிகர்களுக்கு விருந்து வைக்கப் போகிறார் கௌதம் என்பது மட்டும் உறுதி.

 

அய்யய்யோ, தம்பி அது நான் இல்லீங்கோ: விரல் நடிகரிடம் சரணடைந்த பவர்

சென்னை: பவர் நடிகர் தனது படத்தின் தலைப்பு பற்றி போட்ட ட்வீட்டைப் பார்த்து விரல் நடிகர் கடுப்பாகிவிட்டாராம்.

விரல் நடிகர் புஸு புஸு நடிகையுடன் சேர்ந்து விலங்கின் பின்னால் இருக்கும் உறுப்பின் பெயர் கொண்ட படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸாகாமல் பல காலமாக இழுத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் காமெடி பீஸ் என்று தெரியமாலேயே காமெடி செய்பவர் என்று மோக்கியா கூறும் பவர் நடிகர் விரல் நடிகரின் படத் தலைப்பு பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அதாவது விரல் நடிகர் மட்டும் தனது படத்தின் தலைப்பை ஹெட் என்று வைத்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் என்று ட்வீட் போட்டார்.

இதை பார்த்த விரல் நடிகர் கடுப்பாகிவிட்டார். இவர் யார் இப்படி ட்வீட் போட என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த பவர் அய்யய்யோ தம்பி அது டுபாக்கூர் அக்கவுண்ட், நான் அப்படி எல்லாம் ட்வீட் போடவே இல்லை ராசா என்று சரண்டர் ஆகிவிட்டாராம்.

அவர் போட்ட ட்வீட்டில் விரல் மற்றும் பவர் எனும் இரண்டு இளம் ஹீரோக்களின் படங்களை வெளியிடவிடாமல் தீய சக்தி தடுப்பதாக வேறு தெரிவித்திருந்தார்.

 

நான் விபத்தில் சிக்கினேனா?: சிவகார்த்திகேயன் விளக்கம்

சென்னை: தான் விபத்தில் சிக்கி காயம் அடையவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான காக்கிச் சட்டை ஹிட்டாகியுள்ளது. அந்த சந்தோஷத்தில் அவர் ரஜினிமுருகன் படத்தில் தெம்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சிவா காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி சிவகார்த்திகேயன் காதுகளையும் எட்டியது. உடனே அவர் ட்விட்டரில் இது பற்றி விளக்கம் அளித்து ரசிகர்களுக்கு தெம்பை அளித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

என்னை பற்றி வதந்தியை படித்தேன். நான் நலமாக உள்ளேன். மதுரையில் ரஜினிமுருகன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளேன். ஏப்ரல் 25ம் தேதி பர்ஸ்ட் லுக்கிற்கு தயாராகி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்பும் கூட சிவா விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியானது. அதை பார்த்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். அதன் பிறகு தான் அவர் விபத்தில் சிக்கியதாக வெளியான தகவல் பொய் என்பது தெரிய வந்தது.

 

அப்படி என்னங்கப்பா இது உலக மகா கதை....!

மும்பை: மராத்தி மொழியில் எடுக்கப்படவுள்ள "கண்டிப்பாக வயது வந்தோருக்கான" படம் ஒன்றில் சன்னி லியோன் நடிக்கப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. ஆனால் இதுவரை சன்னி லியோன் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.

இந்தப் படத்தை ஷாலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவரான சுஜய் தஹாக்கே இயக்குகிறார். இப்படத்தின் கதையை ரெடி செய்தபோதே அதில் சன்னி லியோனைத்தான் நடிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டாராம் சுஜய்.

கடந்த ஒரு வருடமாக இவர் படம் எதையும் இயக்காமல் இந்தப் படத்தின் கதையை தயாரித்து வந்தாராம். தற்போது களத்தில் குதிக்க முடிவு செய்து விட்டார். தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கோரி சன்னி லியோனை அணுகியுள்ளாராம் சுஜய்.

அப்படி என்னங்கப்பா இது உலக மகா கதை....!

வல்கர் ஆக்டிவிட்டிஸ் இன்கார்ப் என்பதுதான் படத்தின் தலைப்பு. செக்ஸ், ஆபாசம் மற்றும் ஆபாச வக்கிரம் ஆகியவைதான் இந்தப் படத்தின் கதைக் கரு. இதைச் சுற்றித்தான் இந்தப் படத்தின் கதையை வடிவமைத்துள்ளாராம் சுஜய்.

சன்னி நடிப்பது குறித்து சுஜய் கூறுகையில், சன்னி லியோனின் கணவர் டேணியல் வெப்பர் மூலமாக சன்னியுடன் பேசி வருகிறேன். படம், கதை குறித்து அவருக்கு மெயில் அனுப்பியுள்ளேன். இந்தப் படத்தை ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது ஹிங்கிலிஷ் என எந்த மொழியிலும் இயக்கத் தயாராக இருக்கிறேன். முதலில் மராத்தியில் இது தயாராகும். இந்தப் படத்தின் கதை சர்வதேச பொருள். எனவே எந்த மொழியில் வேண்டுமானாலும் இதை உருவாக்க முடியும்.

இன்னும் 15 நாளில் பதில் சொல்வதாக வெப்பர் பதில் அனுப்பியுள்ளார். தற்போது சன்னி தம்பதியினர் விடுமுறையில் உள்ளனர். திரும்பி வந்ததும் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கதையை சன்னியை வைத்துத்தான் நான் உருவாக்கியுள்ளேன். ஒரு வேளை சன்னி மறுத்து விட்டால் இந்தப் படத்தை இயக்குவதா, இல்லையா என்பது குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை என்றார் சுஜய்.

அப்படி என்னங்கய்யா உலக மகா கதை....!

 

உதய நிதியின் கெத்து எப்படி? பர்ஸ்ட் லுக் பாருங்க!

தனது நண்பேன்டா படம் இன்று வெளியாகும் நிலையில், அடுத்த படமான கெத்து முதல் தோற்றப் போஸ்டரை வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இந்தப் படத்தையும் அவரது ரெட்ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்க, திருக்குமரன் இயக்குகிறார். மான் கராத்தே படத்தை இயக்கியவர் இந்த திருக்குமரன்.

உதய நிதியின் கெத்து எப்படி? பர்ஸ்ட் லுக் பாருங்க!

உதயநிதி ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்க, அவருடன் முதல் முறையாக காமெடி பண்ணுகிறார் கருணாகரன். வழக்கம்போல படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கெத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக இதில் உதயநிதியை ரொம்ப சீரியஸாகக் காட்டியுள்ளனர்.

 

தத்தரிகிட தத்திரிகிட.. ததீங்கின ததீங்கின... தத்தோம் தத்தோம்.. வருகிற ஞாயிற்றுக்கிழமை!

சென்னை: மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.. அழகர் மலை அழகா.. இல்லை இந்த சிலை அழகா... நவரசம் நடனமாடும் அந்த பத்மினியின் முகத்தை மறக்க முடியுமா.... அந்த பத்மினி நடித்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசேன் நாதஸ்வர வித்வானாக வாழ்ந்து காட்டிய தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் திரையிடப்படவுள்ளது.

தத்தரிகிட தத்திரிகிட.. ததீங்கின ததீங்கின... தத்தோம் தத்தோம்.. வருகிற ஞாயிற்றுக்கிழமை!

நல்ல நோட்டைப் பார்த்து கள்ள நோட்டு அடிப்பதைப் போல இந்தப் படத்தைப் பார்த்து காப்பி அடித்து எடுக்கப்பட்ட படங்கள் எத்தனையோ. அத்தனைக்கும் காரணமான தில்லானா மோகனாம்பாளை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. அப்படி ஒரு அருமையான திரைப்படம்தான் இந்த தில்லானா.

இதில் நடித்த அத்தனை நடிகர்களுமே அசத்தியிருப்பார்கள்.. மனோரமா.. நாகேஷ் .. பாலாஜி... நம்பியார்.. பத்மினி.. சிவாஜி கணேசன் என அத்தனை பேரும் நடிப்பில் வெளுத்திருப்பார்கள்.

தத்தரிகிட தத்திரிகிட.. ததீங்கின ததீங்கின... தத்தோம் தத்தோம்.. வருகிற ஞாயிற்றுக்கிழமை!

டி.எஸ். பாலையா பற்றிச் சொல்லவே வேண்டாம். பின்னியிருப்பார்.. பின்னியிருப்பார்...

பத்மினி, சிவாஜி இடையிலான அந்த ரொமான்ஸ் காட்சி.. இப்பப் பார்த்தாலும் நாமே நெளிந்து போவோம்.. அதுவும் அந்த ரயில் ரொமான்ஸ்... கிளாஸ்.. மாஸ்!

தத்தரிகிட தத்திரிகிட.. ததீங்கின ததீங்கின... தத்தோம் தத்தோம்.. வருகிற ஞாயிற்றுக்கிழமை!

பாடல்கள், இசை, ஆக்ஷன், நகைச்சுவை, உணர்ச்சி, காதல் என அத்தனையையும் கலந்து அசத்தலாக கொடுத்த படம்தான் இந்த தில்லானா மோகனாம்பாள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் பார்க்கத் தவறாதீர்கள்..!

 

கொம்பன் பிரச்சினையில் என்னை ஏன் இழுக்கறீங்க? - உதயநிதி ஆவேசம்

‘கொம்பன்' பட பிரச்சினையில் என் பெயரை இழுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொம்பன் படத்துக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு காட்டியதன் பின்னணியில் உதயநிதி இருப்பதாக சிலர் செய்தி பரப்பினர்.

உதயநிதியின் நண்பேன்டா படம் இன்று ரிலீசாவதால் இப்படி செய்வதாக சிலர் கூறிவந்தனர்.

கொம்பன் பிரச்சினையில் என்னை ஏன் இழுக்கறீங்க? - உதயநிதி ஆவேசம்

இந்தப் பேச்சுக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் உதயநிதி.

அதில், "ஒரு சமூகத்தை பெருமைப்படுத்தி படம் எடுக்கும்போது, அது இன்னொரு சமூகத்தை பாதிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தேவர் மகன், விருமாண்டி படங்களின் போது கமலுக்கே அந்த நிலை வந்தது.

‘தலைவா' படத்தின்போது விஜய்க்கு பிரச்சினை வந்தது. இப் போது ‘கொம்பன்' படத்துக்கும் இந்த பிரச்சினை வந்திருக்கிறது.

‘கொம்பன்' படத்தின் ரிலீஸுக்கு நான் தடையாக இருப்பதாக சிலர் கூறிவருகிறார்கள். விளம்பரத்துக்காகத்தான் என் பெயரை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு மாதத்துக்கு முன்பே என் படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை நான் அறிவித்து, 275 தியேட்டர்களுடன் ஒப்பந்தமும் போட்டுள்ளேன்.

எனவே ‘கொம்பன்' படம் வந்தாலும், வராவிட்டாலும் எனக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கப் போவதில்லை. அதனால் இதில் என் பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்கது," என்றார்.

 

அஜீத் படத்தில் வில்லனாகும் கபீர் சிங்?

அஜீத்தின் 56 வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் கபீர் சிங்கிடம் பேசி வருகின்றனர்.

படத்துக்குப் படம் வித்தியாசமான வில்லன்களோடு மோதுவது அஜீத் வழக்கம். இவரது பில்லா 2 படத்தில் நடித்த பிறகுதான் வித்யுத் ஜம்வாலுக்கு பெரிய பிரேக் கிடைத்தது தமிழில். அதன் பிறகுதான் துப்பாக்கியில் நடித்தார்.

அஜீத் படத்தில் வில்லனாகும் கபீர் சிங்?

என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஏற்ற வில்லன் வேடம் அவருக்கு பெரிய திருப்புமுனையைத் தந்தது.

இப்போது சிவா இயக்கும் அஜீத்தின் 56வது படத்துக்கு கபீர் சிங்கை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். கபீர் சிங் தெலுங்கில் ஜில் படத்தில் வில்லனாக நடித்தவர். இப்போது ரவிதேஜா நடிக்கும் கிக் 2 படத்திலும் அவர்தான் வில்லன். புனித் ராஜ்குமாரின் கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்.

கம்பீர தோற்றம், வில்லன்களுக்கே உரிய முக அமைப்பு எல்லாம் கச்சிதமாகப் பொருந்தியிருப்பதால் இப்போது கபீர் சிங்குக்கு ஏக வரவேற்பாம்.

 

ப்ளீஸ்... அவ்ளோ சீக்கிரமா என்னைக் கொன்னுடாதீங்க!- பிந்து மாதவி

தன் உடல் நிலை குறித்து வெளியான செய்திகளை மறுத்துள்ள நடிகை பிந்து மாதவி, அத்தனை சீக்கிரம் என்னை கொன்றுவிடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ப்ளீஸ்... அவ்ளோ சீக்கிரமா என்னைக் கொன்னுடாதீங்க!- பிந்து மாதவி

நடிகை பிந்து மாதவிக்கு விபத்து என்றும், அவர் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெலுங்கு சேனல்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனைக் கேள்விப்பட்ட பிந்து மாதவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதில், "என் உடல் நிலை குறித்து தவறாக செய்திகள் பரவுவதை இப்போதுதான் கேள்விப்பட்டேன். இதைப் பரப்புவதை நிறுத்துங்கள். அதற்குள் என்னைக் கொன்றுவிடாதீர்கள் ப்ளீஸ்.. நான் நலமாக சென்னையில் இருக்கிறேன்.. நாளை வெளியாகும் என் படத்தின் இசையைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்," என்றார்.

 

புலிமுருகன்... இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மோகன்லால் - பிரபு

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் மோகன்லாலும் பிரபுவும்.

1996-ம் ஆண்டு காலாபாணி (சிறைச்சாலை) படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு வேறு படங்களில் இணையவில்லை.

புலிமுருகன்... இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மோகன்லால் - பிரபு

இப்போது நடிக்கும் புதிய படத்துக்கு புலிமுருகன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் புலிமுருகனாக மோகன்லால் நடிக்க, அவருக்கு இணையான வேடத்தில் பிரபு நடிக்கிறார். வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார். உதயகிருஷ்ணா படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதுகிறார்.

மே மாதம் படம் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் வைசாக் கூறுகையில், "மோகன்லாலை இந்தப் படத்தில் மிக மாறுபட்ட வேடத்தில் பார்க்கலாம். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக எடுக்கப் போகிறோம்," என்றார்.

சண்டைக் காட்சிகள் அதிகம் என்பதால் பீட்டர் ஹெய்னை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

 

சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் செய்யணும்! - ராதாரவி

சென்னை: சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் பார்த்தா எந்த பிரச்சினையும் வராது என்றார் நடிகர் ராதாரவி.

மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் 'என்வழி தனி வழி' படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, "ஆர்கேவை நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். அவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இவர் ஒரு நல்ல தொழிலாளி, நல்ல நிர்வாகியும் கூட.

சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் செய்யணும்! - ராதாரவி

இந்த விழாவில் ஒரு இயக்குநர் உங்களது இந்த தலைமுடி கெட்அப்-ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு. என் அடுத்த படத்தில் பயன்படுத்திக்கிறேன் என்றார். மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை.

நான் சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாதவன். எனக்கு நடிப்பது தவிர தெரியாது. கேமரா முன்னால் மட்டும்தான் நடிக்கத் தெரிந்தவன். ஆர்கே தேர்ந்தெடுக்கிற கதைகளைப் பார்த்து எங்கே இப்படிப்பட்ட கதையைப் பிடிக்கிறார் என்று ஆச்சரியப்படுவேன்.

‘என் வழி தனி வழி' படத்தில் அவர் முதல் போட்ட தயாரிப்பாளராக இருந்தாலும் டைரக்டர் சொன்னபடிதான் கேட்டார். அவரிடம் ஆர்கே எவ்வளவு திட்டு வாங்கினார் தெரியுமா? ஒரு உதவியாளர்போல வேலை பார்த்தார்.

சினிமாவில் அவனவன் வேலையை அவனவன் செய்யவேண்டும். அடுத்தவன் வேலையைச் செய்யக் கூடாது. அதுபோல டைரக்டர் வேலையை அவர் செய்கிறார் என்று பொறுமையாக இருந்தார் ஆர்கே. அவரிடம் தான் முதலாளி என்கிற திமிர் இல்லை. எதிலும் தலையிடவில்லை. சினிமாமீது அவருக்கு அவ்வளவு காதல். அது அவரை இன்னும் உயர்த்தும்," என்றார்.

 

கத்ரீனாவுக்கு மெழுகுச் சிலை: சோனாக்ஷி சின்ஹா என்ன ஃபீல் பண்ணுகிறார்?

மும்பை: லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைபுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளதை நினைத்து தான் மகிழ்ச்சி அடைவதாக நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்நிலையில் அந்த அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைபுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை கத்ரீனா கைப் திறந்து வைத்தார்.

கத்ரீனாவுக்கு மெழுகுச் சிலை: சோனாக்ஷி சின்ஹா என்ன ஃபீல் பண்ணுகிறார்?

கத்ரீனாவுக்கு சிலை வைக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,

கத்ரீனாவின் மெழுகுச் சிலையை நான் நேரில் பார்க்கவில்லை. உங்களைப் போன்று புகைப்படத்தில் தான் பார்த்தேன். சிலை மிகவும் அருமையாக உள்ளது. அவர் திரைத் துறையில் பல ஆண்டுகளாக இருந்து இந்த நிலையை அடைந்துள்ளார். நான் கத்ரீனாவுக்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

உங்களுக்கும் மேடம் டுசாட்ஸில் மெழுகுச் சிலை வைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனக்கும் ஒரு நாள் சிலை வைப்பார்கள் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ் என்றார் சோனாக்ஷி.

 

கொம்பன் - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், கோவை சரளா, தம்பி ராமய்யா

இசை: ஜீவி பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

எழுத்து - இயக்கம்: எம் முத்தையா

இந்தப் படம் வந்தால் தென் மாவட்ட மக்கள் வெட்டிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பார்கள் என்று சிலர் கடந்த ஒரு வாரமாக கொம்பனுக்கு எதிராக கொடி பிடிக்க, அப்படி என்னதான்யா சொல்லியிருக்காங்க என்று படம் பார்க்கும் ஆர்வம் 'சினிமாவே பிடிக்காது' என்று சொல்பவர்களுக்கும் கூட வந்திருக்கும்.

படத்தில் அப்படி எந்த வில்லங்கமும் இல்லை. ஒரு அழகான கிராமத்துக் கதை. குறிப்பிட்ட சாதிக்குள் நடக்கிற சம்பவங்கள்தான் என்றாலும், சாதிப்பெயரைக் கூட எங்கும் குறிப்பிடவில்லை.

ராமநாதபுரம் பரமக்குடி பக்கமுள்ள மூன்று கிராமங்களைச் சுற்றி நடக்கும் கதை இது. ஊருக்கே செல்லப் பிள்ளை, முரட்டுப் பிள்ளையான கார்த்திதான் கொம்பன் என்கிற கொம்பையா பாண்டியன்.

கொம்பன் - விமர்சனம்

பக்கத்து கிராமத்து திருவிழாவுக்குப் போகும்போது லட்சுமி மேனனைப் பார்த்து காதல் கொள்கிறார். இருவருக்குமான நெருக்கத்தைப் பார்த்து, திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அப்போது லட்சுமியின் பாசமிக்க தந்தை ராஜ்கிரண், தனக்கு வரப்போகும் மருமகனைப் பற்றி அவரது கிராமத்துக்கே போய் விசாரிக்க, அது தெரிந்து கோபம் கொள்கிறார் கார்த்தி. ஆனாலும் மணமகள் தன் காதலி லட்சுமி என்பதை அறிந்து, திருமணம் செய்து கொள்கிறார். தன் அப்பாவும் கூடவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு லட்சுமி திருமணம் செய்து கொள்ள, அதற்கு வேண்டா வெறுப்பாக சம்மதிக்கிறார் கார்த்தி.

வீட்டுக்குள் மாமனாரை மரியாதையில்லாமல் பேசும் கார்த்தி, ஒரு சூழலில் கை நீட்டி அடித்துவிட, லட்சுமி கோபத்துடன் தந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியேறுகிறார்.

மாமனார் தன்மீது வைத்துள்ள பாசம் புரிந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் அழைத்துவருகிறார். அப்போதுதான் கார்த்தி மீதான பழைய பகை அவரது குடும்பத்தையே காவு வாங்கப் பார்க்கிறது. அதிலிருந்து குடும்பத்தை எப்படிக் காப்பாற்றினார் கார்த்தி என்பது மீதி.

கொம்பன் - விமர்சனம்

தெக்கத்தி வாசமும் அதன் புழுதியும் முரட்டுப் பாசமும் தெறிக்கும் வன்முறையும் கலந்து கட்டி அடிக்கிறது படம் முழுக்க. இப்படி ஒரு கிராமத்துப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்று சொல்லும் வகையில் காட்சிகள்.

கார்த்தி பெரிய கொம்பன் என்பதால், அனைவரும் அவரிடம் அடி வாங்கிக் கொண்டே இருப்பதும், இடைவேளைக்குப் பிறகு இப்படித்தான் காட்சிகள் வரப் போகின்றன என யூகிக்க முடிவதையும் தவிர்த்துப் பார்த்தால் கொம்பன் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை.

கார்த்திக்கு இந்தப் படம் இன்னொரு பருத்தி வீரன் என்றுகூடச் சொல்லலாம். கொம்பையா பாண்டியனாகவே மாறியிருக்கிறார். சண்டை என்று வந்துவிட்டால் போதும், வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு எதிராளிகளைப் புரட்டி எடுக்கிறார். பார்க்க அச்சு அசல் சண்டை மாதிரிதான் தெரிகிறது.

லட்சுமி மேனனுடன் காதல், மாமனார் ராஜ்கிரணுடன் மோதல் இரண்டையுமே ரசிக்கும்படி செய்திருக்கிறார். மனம் திருந்தி மாமனார் வீட்டுக்குப் போகும்போது மாமனார் வாங்கிக் கொடுத்த அந்த பஞ்சுமிட்டாய் சட்டையைப் போட்டுக் கொண்டு போவது அழகு.

கார்த்தி இந்தப் படத்தின் மூலம் புதிய நவரச நாயகனாகியிருக்கிறார்.

கொம்பன் - விமர்சனம்

ராஜ்கிரண் நடிக்கிறார் என்றாலே, அது அர்த்தமுள்ள படமாகத்தான் இருக்கும் என்ற நம்பகத்தன்மை வந்துவிட்டது. அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார் தனக்கான பாத்திரங்களை. இதில் முத்தையாவாக வந்து மனசில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார். கிராமத்துக்காரர்கள் எல்லாரும் முரட்டு சாதி வெறியர்கள் என்ற கருத்தை உடைத்து நொறுக்கும் பாத்திரம் இவருடையது. மருமகன் தன்னை மரியாதையின்றிப் பேசினாலும், அதில் குறைகாணாது, புது அர்த்தம் தரும் ராஜ்கிரணை அப்படிப் பிடித்துப் போகிறது.

லட்சுமி மேனனுக்கும் தெக்கத்திக் கதைகளுக்கும் அப்படி ஒரு ராசி. அசல் தெக்கத்திப் பெண்ணாகத்தான் அவரைப் பார்க்க முடிகிறது. சுந்தரபாண்டியன், குட்டிப் புலி, பாண்டிய நாடு... இப்போது கொம்பன். தன் அப்பாவுக்கு மீன் வறுத்துக் கொடுத்து, சரக்கெடுத்து வைக்கும் பாங்கிருக்கிறதே.. அடடா! கணவனையும் விட்டுக் கொடுக்காமல், அப்பாவுக்கும் அவமானம் நேராமல் சமாளிக்கும் அந்த பாத்திரத்தை இத்தனை சிறப்பாகச் செய்ய லட்சுமியை விட்டால் இன்றைக்கு வேறு நடிகையே கிடையாது!

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொருவர் வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன். என்னமா மிரட்டுகிறார்!

கோவை சரளா, கருணாஸ், வேல ராமமூர்த்தி என நடித்த அத்தனைப் பேரும் நம்மை பரமக்குடி பக்கத்துக்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு அத்தனை யதார்த்தம். எந்தக் காட்சியிலும் சினிமாத்தனமே எட்டிப் பார்க்காத அளவுக்கு, குறிப்பாக சண்டைக் காட்சிகளில் வேலை பார்த்திருக்கிறார்.

அதே போல ஜீவி பிரகாஷ். ரொம்ப நாளைக்குப் பிறகு அவரது பாடல் கறுப்பு நிறத்தழகி.. மனசில் ஒட்டிக் கொள்கிறது. பின்னணி இசையும் மிகப் பொருத்தம்.

கொம்பன் - விமர்சனம்

வசனங்கள் படத்தின் இன்னொரு ஹீரோ என்று கூடச் சொல்லலாம்.

'சாதி சனமெல்லாம் கோயிலுக்குப் போகுது.. நீயும் வாப்பா..'

'சனம் இருக்கிற இடத்துக்கு வரலாம், கூடவே சாதியும்ல வருது அங்க எதுக்கு நான் வரணும்!'

"ஏலேய் ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்குப் போடா.. இல்லனா அதோ .. வெள்ளையும், சொள்ளையுமா பெருசா மீசை வச்சிட்டு வாராய்ங்க பாரு.. அவிங்களப்போல உருப்படாம போயிருவடா.."

‘பெத்தவங்க வெறும் நெற்றிதான். அதுல இருக்கிற பொட்டுதாம்மா புருஷன். நெத்தி எவ்வளவு பெரிசா இருந்தாலும் பெருமையில்ல. ஆனா அதுல பொட்டு நிரந்தரமா இருக்கணும்'

- தனி வசனப் புத்தகமாகவே போட வேண்டிய அளவுக்கு நறுக்குத் தெறிக்கும் வசனங்கள்.

இவ்ளோ சொல்லியாச்சில்ல.. அப்புறம் ஏன் இன்னும் போஸ்டரையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு.. கிளம்புங்க கொம்பனுக்கு!

 

வழக்கில் வென்றார் ரஜினி... இந்திப் படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர் உறுதி!

"மெயின் ஹூன் ரஜினிகாந்த்' படத்தின் தலைப்பை மாற்றி விடுகிறோம்," என பாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த வர்ஷா என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனம், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற பெயரில் ஒரு ஹிந்தி திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

வழக்கில் வென்றார் ரஜினி... இந்திப் படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர் உறுதி!

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதமாக கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதில், ரஜினியைப் போன்று வசனம் பேசுதல், நடை உடை பாவனை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, இந்தப் படத்தை வெளியிடத் தடை கோரி நடிகர் ரஜினிகாந்த் வழக்குத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், ஒழுங்கீனமற்ற முறையில் அந்த கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய சினிமா துறையில் எனக்கு உள்ள மரியாதை, நற்பெயர் அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில், எனது பெயரை வைத்து முற்றிலும் முரணாக ஒரு படத்தை வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது.
அதனால், மெயின் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வர்ஷா தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ரஜினிகாந்தின் பெயர், தோற்றம், வசன உச்சரிப்பு போன்றவைகளைப் பயன்படுத்த மாட்டோம் எனவும், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற படத்தின் தலைப்பை மாற்றி நீக்கி விடுகிறோம் எனவும் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்த உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது. தலைப்பை மாற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் 10 நாள்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ரஜினிகாந்த், அவரது குடும்பத்தினர் தொடர்பாக இடம்பெற்றுள்ள காட்சிகளையும் நீக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால் வழக்கை முடித்து வைக்கிறோம்."