செம்மரக் கடத்தலில் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பிவிட்டனர் - நடிகர் சரவணன்

திருவாரூர்: செம்மர கடத்தலில் என்னை பற்றி தவறான தகவலை பரப்பி விட்டனர் என்று வலங்கைமானில் நடிகர் சரவணன் கூறினார்.

சினிமா நடிகரும், அ.தி.மு.க. பேச்சாளருமான சரவணன் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடைகட்டி மகாமாரியம்மன் கோவிலுக்கு தனது மனைவி சூர்யாஸ்திரியுடன் வந்து சாமி கும்பிட்டார்.

actor saravanan speaks about red sandalwood contorversy

பின்னர் குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக வலங்கைமானில் நடிகர் சரவணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில்,"தற்போது முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வருகிறேன். பலதரப்பு ஆதரவுடன் இருக்கும் எனக்கு செம்மர கடத்தலில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது பெயரை கொண்ட வேறொரு நடிகருக்கு தொடர்பு இருந்ததால் என்னை பற்றி தவறான தகவலை பரப்பி விட்டனர்.

அ.தி.மு.க.வில் தலைமை கழக பேச்சாளராகவும், பொறுப்பு மிக்க கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். சமுதாய அக்கறை உள்ளவராகவும் இருந்து வருகிறேன். நான் செம்மர கடத்தலில் ஈடுபட எந்த சாத்திய கூறுகளும் இல்லை. தற்போது மாணவர்கள், இளைஞர்களிடையே ஒழுக்கம் இல்லை

இளைஞர்கள் சினிமா நடிகர்களை ரோல் மாடலாக நினைப்பது ஆபத்தானது. எந்த ஒரு நடிகரையும் இளைஞர்கள் பின்பற்ற கூடாது. சினிமாக்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே நினைக்க வேண்டும். சினிமாக்களில் இடம்பெறும் நல்ல தகவல்களை வாழ்க்கையில் பின்பற்றலாம்" என்று தெரிவித்தார்.

 

இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஹேப்பி பர்த்டே... ஆளுயர மாலை போட்டு கேக் வெட்டிய ”அச்சமின்றி” படக்குழு!

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தன்னுடைய பிறந்தநாளை "அச்சமின்றி" படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

"சுப்ரமணியபுரம்", "நாடோடிகள்", "நிமிர்ந்து நில்" ஆகிய தரமான படங்களை தந்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி.

இயக்குனராக பளிச்சிட்டாலும், தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Director Samuthirakani's birthday today

குணச்சித்திர நடிகர்:

"சாட்டை", "வேலையில்லா பட்டதாரி" ஆகிய படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

கையில் அரை டஜன் படங்கள்:

தற்போது இவரது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. மேலும், படங்களை இயக்கும் பணியையும் விடாமல் தொடர்ந்து வருகிறார்.

Director Samuthirakani's birthday today

இன்று பிறந்தநாள்:

இந்நிலையில், சமுத்திரகனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் "அச்சமின்றி" படக்குழுவுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

கேக் வெட்டிக் கொண்டாட்டம்:

"அச்சமின்றி" படத்தில் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டி இயக்கிவருகிறார். இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆள் உயர மாலை அணிவித்த படக்குழு:

சமுத்திரகனியின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

 

கணவர், குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட வீணா மாலிக்!

மும்பை: பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் சர்ச்சை நாயகி வீணா மாலிக் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் போயுள்ளார்.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் வீணா மாலிக். இந்தியில் புகுந்து அதி பயங்கர கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். திடீரென அவர் நடிப்பை விட்டு விட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பினார். அசாத் பசீர் கான் என்பவரை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார்.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

இந்தத் தம்பதிக்கு தற்போது அப்ராம் கான் என்ற ஏழு மாதக் குழந்தை உள்ளது. தங்களது குழந்தையுடன் வீணாவும், அவரது கணவரும் உம்ரா புனித யாத்திரை போயுள்ளனர்.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

ஒவ்வொரு முஸ்லீமின் கனவே உம்ரா அல்லது ஹஜ் யாத்திரையை வாழ்நாளில் ஒருமுறையாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதுதான். இது எல்லோருக்கும் கை கூடி வந்து விடாது என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்தோர் புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவார்கள்.

இந்த நிலையில் 2வது முறையாக சமீபத்தில் உம்ரா கடமையை முடித்துள்ளார் வீணா. இதுகுறித்து அவர் கூறுகையில், புனித கப்பாவில் வழிபட்டதை பெருமையாக கருதுகிறேன். மனசெல்லாம் நிறைந்துள்ளது. அல்லாவிடம், எனது குடும்பத்தையும், என்னையும், எனது சமூகத்தையும் காக்குமாறு வேண்டிக் கொண்டேன். இந்தியா, பாகிஸதானில் வாழும் அனைத்து மக்களும் அமைதி, நிம்மதி, வளர்ச்சியுடன் திகழ வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன் என்றார் வீணா.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

சவூதியில் ஒரு வாரம் தங்கும் வீணா மாலிக் குடும்பத்தினர் மதீனா பார்க்குக்குக்கும் செல்கஇறார்கள். அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்ற பிந்னர் பாகிஸதான் திரும்புவார்களாம்.

 

ஜூனியர் கேப்டனுக்கு கதை ரெடி பண்ணும் 2 இயக்குனர்கள்

சென்னை: தனது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் தோல்வி அடைந்த கவலையில் உள்ளாராம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்.

சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த அவர் திடீர் என்று ஒரு நாள் அரசியல் கட்சியை துவங்கினார். நல்ல நடிகர், நல்ல மனிதர் நிச்சயம் நமக்கு அவர் நல்லது செய்வார் என மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். இந்நிலையில் நடிகர் தனது இரண்டாவது மகனை தனது வழியில் ஹீரோவாக்கினார்.

2 directors write story for junior captain

தானே தயாரித்து ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை அவரது கட்சியினர் தான் ஆஹா, ஓஹா என்று கொண்டாடினார்களே தவிர ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனை பேரிடம் கதை கேட்டு இதை தேர்வு செய்தும் வீணாகிவிட்டதே என்று அவர் கவலையில் உள்ளாராம்.

மேலும் உட்கார்ந்து, உட்கார்ந்து கதை கேட்டீங்களே இது தான் நீங்க கதை கேட்ட அழகா என்று மனைவி மீதும், மைத்துனர் மீதும் அவருக்கு கோபமாம். இந்நிலையில் அவர் தனது மகனை வேறு இயக்குனர்களின் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறாராம்.

இதற்காக அவர் கபடி கபடி இயக்குனர் மற்றும் தேசிய விருது வாங்கிய படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஆகியோரிடம் கதை தயார் செய்யுமாறு கூறியுள்ளார். மகனே, நீ கவலைப்படாதே உன்னை நான் நல்ல படத்தில் நடிக்க வைப்பேன் என்று ஆறுதல் கூறி வருகிறாராம்.

 

கங்காரு பட வாய்ப்பு என் பாக்கியம் - இசையமைப்பாளர் சீனிவாஸ்

பிரபல​ ​பாடகராக பல பாடல்கள் பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம்தான் 'கங்காரு'.

அவர் தன் முதல் பட அனுபவங்களை இங்கே கூறுகிறார்...

Singer cum music director Srinivas speaks about Kangaroo

"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் உண்டு. ஆர்வமுண்டு. நம்பிக்கை உண்டு. ஆனால் இசையமைப்பதைத் தேடிப் பயணப் படவில்லை. காரணம் பாடகராகவே நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அப்படியும் வஸந்த் சார் இயக்கத்தில் 'ஏய்நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தில்​ ​ஒரு பாடலுக்கு இசையமைத்தேன்.

'இனி நானும் நானில்லை' என்கிற அந்தப்​ ​படலும் ஹிட்தான். மீண்டும் இசை அமைக்க நேரமில்லை. இந்நிலையில் நண்பர் மூலம் சாமி வந்தார். கதை கேட்டேன். ரொம்பவும் நேர்மையாக இருந்தது. பாடல் உருவானது பாடல் பிடித்து தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி சம்மதித்தது அவரது ரசனையின் மதிப்பைக் காட்டியது.

Singer cum music director Srinivas speaks about Kangaroo

வைரமுத்து சாரின் வரிகளைப் பாடியிருக்கிறேன். அவர் வரிகளுக்கு இசையமைப்பேனா என்று கனவு கூட கண்டதில்லை. அப்படி நடந்தது என்பாக்கியம். அவர் பாடல்கள் படத்துக்குப் பெரியபலம். படத்தில் 5பாடல்கள் . அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து​ ​2பாடல்களும் மெட்டுக்கு எழுதி 3பாடல்களும் என்று இசையமைப்பில் இருவேறு அனுபவங்களும் கிடைத்தன. பாடல்கள் பெரிய வெற்றி. ஐ ட்யூன்களில் நம்பர் ஒன்.

காதல், பாசம், தத்துவம் என எல்லாவகை பாடல்களும் உள்ளன. பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து படமும்​ ​வெற்றி பெற்றிருப்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்..,'' என்கிறார் ஸ்ரீநிவாஸ்.