'விஷயம் வெளிய தெரியக்கூடாது'!

வேற ஒண்ணுமில்ல.. புதுசா வரப் போற தமிழ்ப் படத்தோட தலைப்புதான் இது.

உழைத்த காசில் இன்பம் இருக்காது. அடுத்தவர் காசுன்னா துன்பம் இருக்காது. எனவே பணம் சம்பாதிக்க எந்த தில்லுமுல்லு, மோசடியிலும் இறங்கலாம் என்ற எண்ணம் கொண்ட 5 இளைஞர்கள், நண்பர்கள்.

ஒருவருக்கு்த தெரியாமல் இன்னொருவர் மோசடியில் இறங்க, எதிர்ப்பாராத நேரத்தில் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான், 'விஷயம் வெளிய தெரியக் கூடாது'.

'விஷயம் வெளிய தெரியக்கூடாது'!

ஓபன் ஐ தியேட்டர்ஸ் சார்பில் வி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தை, ஏ ராகவேந்திரா இயக்குகிறார்

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் சென்ராயன். காமெடி, குணச்சித்திரம் என நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது முழு ஹீரோவாகிவிட்டார். இவருடன் ஆர்யன், மூடர் கூடம் குபேரன், நாடோடிகள் நங்கன், அம்பா சங்கர் ஆகியோர் மற்ற கில்லாடிகளாக நடிக்கிறார்கள். அமிதா முக்கிய பாத்திரத்தில் வருகிறார்.

இயக்குநர் ராகவேந்திராவே இசையும் அமைத்துள்ளார்.

45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டவர்கள், அடுத்த மாதம் படத்தை வெளியிடத் தயாராகி வருகிறார்கள்.

 

விபத்தில் ரசிகர் மரணம்... நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்!

தன்னைச் சந்தித்துவிட்டுச் செல்லும்போது விபத்தில் பலியான ரசிகருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய்.

ரசிகர் மன்றங்களை எப்போதும் ஆக்டிவாக வைத்திருப்பதில் கவனமாக இருப்பவர் நடிகர் விஜய். அடிக்கடி அவர்களைச் சந்தித்து, நலத் திட்ட விழாக்கள் நடத்தி வருகிறார்.

அரசியல் பிரச்சினைகள் காரணமாக, கடந்த ஓராண்டாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். கடந்த ஆண்டு பிறந்த நாள் கூட கொண்டாடவில்லை.

விபத்தில் ரசிகர் மரணம்... நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்!

இந்த ஆண்டு அவர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இதற்காக ரசிகர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.

இருதினங்களுக்கு முன்னர் சேலம், நெல்லை மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் விஜய்யை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு முடிந்து வீடு திரும்பிய போது எதிர்பாராத விதமாக நெல்லையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார்.

விஷயம் கேள்விப்பட்ட விஜய், அந்த ரசிகரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 

மணிரத்னம் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் பெயரில் ட்விட்டரில் யாரோ போலியாக கணக்கு தொடங்கியுள்ளனர்.

பாலிவுட்டின் பெரும்பாலான நடிகர்கள் ட்விட்டரில் இணைந்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். இதுவரை அமைதியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்தார்.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் பெயரில் இன்று ட்விட்டரில் ஒரு கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'ஐமணிரத்னம்' என்பது ட்விட்டர் பக்க ஐடி.

மணிரத்னம் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு!

மணிரத்னம் குறுந்தாடியுடன் புரொபைல் படத்தில் காட்சியளிக்கிறார். இன்று காலை 11 மணியளவில் 'நான் இப்போது ட்விட்டரில்' என்று முதல் ட்விட் செய்யப்பட்டுள்ளது. நான்தான் ஒரிஜினல் மணிரத்னம் என்று வேறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது ட்விட்டில், தன்னை ட்விட்டர் உலகத்திற்கு அழைத்துவந்தது மனைவி சுகாசினிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ட்விட்டரால் இன்னும் ஒரிஜினல் ஐடி என சரிபார்க்கப்படவில்லை. அடுத்தது, அங்கு தரப்பட்டுள்ள சுஹாசினியின் ட்விட்டர் பக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாம் விசாரித்ததில், இது போலியான கணக்கு என்றே பலரும் கூறினர்.

இந்த நிலையில், மணிரத்னம் மனைவி சுகாசினி தனது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னம் பெயரில் உள்ள இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மணிரத்னம் பெயரில் ஏற்கெனவே இரு போலி கணக்குகள் ட்விட்டரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் ட்விட்டருக்கு உண்மையாகவே வரும்போது, கணக்கு ஆரம்பிக்க அவர் பெயரே அவருக்குக் கிடைக்காது போலிருக்கே!

 

உத்தம வில்லன் வெளியாகி 2 மாதங்களுக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2!!

சென்னை: உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.

உத்தம வில்லன் வெளியாகி 2 மாதங்களுக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2!!

இதனால் அவர் இன்னொரு படமான உத்தம வில்லனுக்குப் போய்விட்டார். அந்தப் படத்தின் ஷூட்டிங் பெருமளவு முடிந்துவிட்டது. வரும் செப்டம்பர் 10-ம் தேதி உத்தம வில்லன் படம் வெளியாகிறது.

அந்தப் படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்துதான் விஸ்வரூபம் படம் வெளியாகிறதாம். இதனை கமல்ஹாஸனே உறுதிப்படுத்தியுள்ளார்.

உத்தம வில்லன் வெளியான பிறகுதான் விஸ்வரூபம் வெளியாகும். இன்னும் கொஞ்சம் பணிகள் பாக்கியிருக்கிறன, என்று தெரிவித்துள்ளார்.

 

தன் வீட்டு வேலையாட்களுக்கு புது வீடுகள்... அடுத்த மாதம் அன்பளிப்பாகத் தருகிறார் அஜீத்!

சென்னை: அஜீத்தின் கொடையுள்ளம் பற்றி தினசரி ஏதாவது ஒரு செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது.

இன்றைய செய்தி... அவர் தனது வீட்டு வேலையாட்களுக்கு புதிய வீடு கட்டித் தந்திருப்பதுதான்.

இந்த செய்தி ஏற்கெனவே வெளியான ஒன்றுதான். இப்போது வருவது அதன் ஃபாலோ அப்!

தன் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி 5 கிரவுண்ட் நிலம் வாங்கி, அதை பத்தாகப் பிரித்து, தன் வீட்டில் பணியாற்றுபவர்களுக்கு முன்பு பத்திரப் பதிவு செய்து வைத்தார் அல்லவா...

அந்த இடத்தில் தன் மனைவி ஷாலினி மேற்பார்வையில் 10 வீடுகளைக் கட்டியுள்ளார் அஜீத்.

தன் வீட்டு வேலையாட்களுக்கு புது வீடுகள்... அடுத்த மாதம் அன்பளிப்பாகத் தருகிறார் அஜீத்!

தேவையான வசதிகளுடன் அந்த வீட்டைக் கட்டிய அஜீத், ஒரு குடும்பத்துக்குத் தேவையான அறைகலன்களைக் கூட தன் சொந்த செலவிலேயே வாங்கிக் கொடுத்துள்ளார்.

கவுதம் மேனன் படத்தின் படப்பிடிப்புக்காக மலேஷியா போயிருக்கும் அஜீத், ஷூட்டிங் முடிந்து திரும்பியதும், புதுமனைப் புகுவிழா நடத்தி, தன் பணியாளர்கள் பத்து பேரிடமும் சாவியைத் தரவிருக்கிறார்.

ஏற்கெனவே தன்னிடம் வேலைப் பார்த்த 25 பேருக்கு தலா 1 கிரவுண்டில் கேளம்பாக்கத்தில் வீடு கட்டிக் கொடுத்து முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இப்போது அவர் பாணியில் அஜீத்!

 

ஹீரோ இல்லை.. ஹீரோயினை மட்டும் வைத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கும் முருகதாஸ்!

ஏ ஆர் முருகதாஸ் படங்கள் என்றாலே... ஹீரோக்களின் ஷோதான். தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என எல்லாமே ஹீரோக்களின் அதிரடி ஆக்ஷன் கதைகள்தான்.

ஆனால் முதல் முறையாக ஹீரோ இல்லாமல், நாயகியை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் இயக்கப் போகிறாராம். அந்த நாயகி சோனாக்ஷி சின்ஹா. கத்தி படம் முடிந்த கையோடு இந்தப் படத்தை இந்தியில் இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்.

ஹீரோ இல்லை.. ஹீரோயினை மட்டும் வைத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கும் முருகதாஸ்!

இதுபற்றி ட்விட்டரில் சோனாக்‌ஷி, "நான் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் ஹீரோயினை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறேன். நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும்," என்று கூறியிருக்கிறார்.

ஹாலிடே திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் பற்றி சோனாக்‌ஷி அதிக ஆர்வத்துடன் பேசிய போது முருகதாஸ் சோனாக்‌ஷியின் திறமைகளைப் பற்றி அறிந்து இந்த வாய்ப்பை அளித்துள்ளாராம்.

படத்தைத் தயாரிப்பது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷனும்!

 

ஒரே நேரத்தில் இரண்டு பட ஷூட்டிங்குகளைச் சமாளிக்கும் நயன்தாரா!

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் நயன்தாரா உச்சத்திலிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம், அவரது நேரந்தவறாமையும், தொழில் நேர்த்தியும்தான் என்பார்கள் திரையுலகில்.

காதல் விவகாரங்கள், தனிப்பட்ட மனக்கசப்புகள் எதுவும் அவரது சினிமா பயணத்தை பாதித்ததில்லை. அப்படி பாதித்திருந்தால் அவரால் சிம்புவுடன் நடிக்கத்தான் முடியுமா!

ஒரே நேரத்தில் இரண்டு பட ஷூட்டிங்குகளைச் சமாளிக்கும் நயன்தாரா!

நயன்தாரா இப்போது முகாமிட்டிருப்பது கும்பகோணத்தில். தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு காலத்தில் கோபிச் செட்டிப்பாளையத்தை குட்டி கோடம்பாக்கமாக மாற்றியிருந்தார்கள். இப்போது அவர்கள் மோகம் கும்பகோணத்தில்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நண்பேன்டா, சிம்புவை வைத்து பாண்டிராஜ் இயக்கும் இது நம்ம ஆளு ஆகிய இரு படங்களின் ஷூட்டிங்குகளும் கும்பகோணத்தில்தான் நடந்து வருகின்றன.

இரண்டு படங்களுக்கும் வெவ்வேறு தேதிகள்தான் கொடுத்திருந்தார் நயன்தாரா. ஆனால் இது நம்ம ஆளு படம் இடையில் தாமதமானதால், இப்போது இரண்டு படங்களும் ஒரே தேதியில் முட்டிக் கொண்டன.

ஆனாலும் இரு படங்களுக்கும் ஷூட்டிங் ஸ்பாட் கும்பகோணம் என்பதால், இரண்டு படப்பிடிப்புகளையுமே சமாளிக்கும் முடிவோடு போனார் நயன்தாரா.

காலையில் உதயநிதியின் நண்பேன்டா படத்தில் கலந்து கொண்டவர், மாலையில் இது நம்ம ஆளு படத்தின் பாடல் காட்சியில் கலந்து கொண்டார். கடந்த ஆறேழு நாட்களாக இப்படித்தான் சமாளித்து வருகிறார், எந்த பிரச்சினையும் இல்லாமல்!

 

விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் 'கண்டுபிடி கண்டுபிடி'!

என்னடா இது... இவங்க மூணு பேரும் எப்போ சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்கன்னு கேக்கறீங்களா...

இவர்கள் புதுசு.. மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என நான்கு சிறுவர்கள் இணைந்து நடித்த படம்தான் இந்த கண்டுபிடி கண்டுபிடி.

மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம்சுப்பாராமன் இயக்கியுள்ளார்.

விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் 'கண்டுபிடி கண்டுபிடி'!

படம் குறித்து ராம்சுப்பாராமன் கூறுகையில், "திரைப்படங்களில் திருமணம் என்பது படத்தின் கடைசியில் சில மணித்துளிகள் வரும் காட்சியாகவே இருக்கும். ஒரு முழு திரைப்படக் கதையும் திருமணச் சூழலில் நடக்கும் படியாக இருந்தால் எப்படியிருக்கும்... அப்படியொரு கலகலப்பான படம்தான் "கண்டுபிடி கண்டுபிடி".

விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் 'கண்டுபிடி கண்டுபிடி'!

படத்தின் முன்பாதியில் திருமண மண்டபம், மொய், விருந்து, திருமண சடங்குகள் போன்றவற்றை நகைச்சுவையுடன் விலாவாரியாக சொல்லியிருப்பது விலா நோக சிரிக்க வைக்கும்படி இருக்கும். கலகலப்பாக போகும் கதையில் எதிர்பாராத ஒரு சம்பவமும் உண்டு. அது கதையின் போக்கை எப்படி மாற்றம் செய்வது என்பதே மீதி கதை," என்றார்.

தயாரிப்பாளரான கல்கி யுவாதான் படத்துக்கு இசையமைப்பாளரும். ஜூலையில் வெளியாகிறது கண்டுபிடி கண்டுபிடி.