சரத்குமாருக்கு ஹீரோயின் தேடுகிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சரத்குமார்-சினேகா நடிக்கும் படம் 'விடியல்'. செல்வராஜ் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இம் மாத இறுதியில் அம்பாசமுத்திரம் பகுதியில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் சரத்குமாருக்கு இன்னொரு ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் செல்வராஜ் கூறியதாவது:

படத்தின் கதை 1946, 1976, 2010 என மூன்று கால கட்டங்களில் நடக்கிறது. சரத்குமார் இரண்டு வேடங்களிலும் மூன்று தோற்றங்களிலும் நடிக்கிறார். இளம் வயது சரத்குமாருக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். அந்த படப்பிடிப்பு ஓரளவு முடிந்திருக்கிறது. ஹீரோ 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி பிறக்கிறார். அவரது பெயர் சுதந்திரம். முதல் தலைமுறை சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறோம். முன்னணி ஹீரோயின்களுடன் பேசி வருகிறோம். புதுமுகங்கள் தேர்வும் நடக்கிறது. ரவிக்கை அணியாமல் நடிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.


Source: Dinakaran
 

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்துக்கு சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமாதானப்படுத்தும் முயற்சியில் இயக்குனர் இறங்கியுள்ளார். ஜே.எஸ். 24 பிரேம்ஸ் சார்பில் ஜெ.செந்தில்குமார் தயாரிக்கும் படம் 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள&தமிழ்நாடு எல்லை பகுதியில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இப்போது வெட்டோத்தி சுந்தரத்தின் குடும்பத்தினர், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் படத் தரப்பு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:இந்த கதை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அறிந்த ஒன்று. நானும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கும் தெரியும். மதுரை, கோவை, நெல்லை மாவட்டத்தின் பதிவுகளாக பல படங்கள் வந்து விட்டது. அதுபோன்று குமரி மாவட்டத்தின் சமீபத்திய வரலாற்றையும், மக்களின் வாழ்க்கை முறையும் பதிவு செய்யும் முயற்சிதான் இது. சுந்தரத்தின் கதையோடு குமரி மாவட்டத்தின் பிரச்னைகளும் மண்ணின் மணமும் சேர்ந்தே வரும். அவர் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராயும் படம் அல்ல. அவரது வாழ்க்கையை சொல்லும்படம். அதில் நிஜ கேரக்டர்களை சொல்லாவிட்டால் டாக்குமென்டரி ஆகிவிடும். படத்தின் கேரக்டர்களில் பலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அஞ்சலி நடிக்கும் லூர்துமேரி கேரக்டர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் கேரக்டர். யாரையும் இந்தப் படம் புண்படுத்தாது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து படத்தை போட்டுக் காட்ட இருக்கிறோம். தற்போது இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. அது முடிந்ததும் படத்தை போட்டுக் காட்டுவோம்.


Source: Dinakaran
 

தெலுங்கில் மட்டுமே கவனம் :சமந்தா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'பாணா காத்தாடி', 'மாஸ்கோவின் காவிரி' படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது: 'விண்ணைத்தாண்டி வருவாயா' தெலுங்கு பதிப்பில் த்ரிஷா கேரக்டரில் நான் நடித்தேன். அதன் ஹிட்டுக்குப் பிறகு அங்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதே கேரக்டர் போலவே இருந்ததால் பல வாய்ப்புகளை மறுத்தேன். இப்போது ஜுனியர் என்.டி.ஆருடன் 'பிருந்தாவனம்' படத்தில் நடித்துள்ளேன். இதில் வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தி உள்ளேன். இதையடுத்து மகேஷ்பாபு ஜோடியாக 'தூக்குடு' என்ற படத்தில் நடிக்கிறேன். இப்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இவ்வாறு சமந்தா கூறினார்.


Source: Dinakaran
 

தமிழில் போட்டி கடுமையாக இருக்கிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில் போட்டி கடுமையாக இருக்கிறது என்று ஷீலா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நான் சென்னை பெண்தான். ஆனாலும் தெலுங்கில், மலையாளத்தில் சாதித்த அளவிற்கு, தமிழில் சாதிக்க முடியவில்லை. இப்போது கூட தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் படங்கள் இல்லை. முன்பு சில தவறான படங்களை தேர்வு செய்ததுதான் அதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. நேரம் சரியாக அமையவில்லை என்றுதான் சொல்வேன்.

தெலுங்கு, மலையாளத்தில் டாப் ஹீரோயின்கள் படங்கள் வெளிவரும் அதே நேரத்தில், அடுத்தகட்ட ஹீரோயின்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது. தமிழில் கடும்போட்டி இருக்கிறது. மற்ற மொழிகளில் நடிப்பவர்கள் அனைவருமே தமிழில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதோடு நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களை தாண்டி ஜெயிப்பது கடினம். அதற்காக போராடுவேன்.


Source: Dinakaran
 

3 ஹீரோயின் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெலுங்கில் 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆறு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் அனுஷ்கா. நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் மூன்றில் ஒருவராக நடிக்கிறார். இதற்கிடையே ரவிதேஜா ஜோடியாக 'வீரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். கதை கேட்டு ஓகே சொல்லியிருந்த அனுஷ்கா, திடீரென ஷூட்டிங் போகும் நேரத்தில் படத்திலிருந்து விலகியுள்ளார்.

இது குறித்து அவரது தரப்பில் கூறும்போது, ''முன்பு சொன்ன கதையில் நிறைய மாற்றங்கள் செய்துவிட்டனர். அதன்படி இப்போது படத்தில் மூன்று ஹீரோயின்கள். டாப்ஸி, மஞ்சரி ஆகியோரும் நடிக்கின்றனர். இதனால் தனது கேரக்டருக்கு முக்க¤யத்துவம் குறைவதாக அனுஷ்கா உணர்ந்தார். இதையடுத்து படத்திலிருந்து அவர் விலகியுள்ளார்'' என்றனர். அனுஷ்கா விலகியதையடுத்து அந்த வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.


Source: Dinakaran
 

த்ரிஷாவுக்கு ‘கெட் அவுட்’-எமிக்கு ‘வெல்கம்’!

Amy Jackson
கவுதம் மேனன் தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பின் வேலைகளைத் துவங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்திலும் த்ரிஷாவே நாயகி என்று கூறப்பட்டது. கவுதமும் அப்படித்தான் சொல்லி வந்தார். ஆனால் இப்போது அதில் மாற்றம்.
மதராஸப்பட்டினம் புகழ் எமி ஜாக்ஸனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். இந்தியில் த்ரிஷாவின் முதல்படமே பப்படமாகிவிட, இனி அவரால் அந்த ரோலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு வந்தாராம்.
இதற்கிடையே, சமீபத்தில் தான் தயாரிக்கும் அழகர்சாமியின் குதிரை படத்துக்கு இளையராஜா இசையில் வந்திருக்கும் பாடல்களைக் கேட்டு, சிலிர்த்துப் போனாராம் கவுதம்.
இசையில் அவரோட டச்சே தனி என்றாராம் படத்தின் இயக்குநர் சுசீந்திரனிடம்!
 

அனகாவுக்கு மாமனாராக நடித்த கஜினி தனி நாயகனானார்

Gajini and Anaka
சிந்துசமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய மாமனார் கேரக்டரில் நடித்த நடிகர் கஜினி இப்போது ஹீரோவாகி விட்டார்.
சாமி இயக்கிய படம்தான் சிந்துசமவெளி. மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையிலான கள்ளக்காதலை விளக்கிய படம் இது. ஏகப்பட்ட விமர்சனங்களையும், விரோதங்களையும் சம்பாதித்துக் கொடுத்தது.
இப்படத்தில் மருமகள் வேடத்தில் அனகாவும், மாமனார் வேடத்தில் கஜினியும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் இருவருக்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்ததுதான் மிச்சம்.
இப்போது கஜினி தனி ஹீரோவாகி விட்டார். பீமன் ஹஸ்தினாபுரம் என்ற படத்தில் கஜினிதான் நாயகனாம்.
தான் வெளிச்சத்திற்கு வர இயக்குநர் சாமிதான் காரணம் என்று கையைத் தூக்கி நன்றி கூறுகிறார் கஜினி.
பீமன் ஹஸ்தினாபுரத்தில் எப்படி நடிக்கப் போகிறாரோ கஜினி!
 

சினிமா கலைஞர்களுக்கு பிரதிதித்துவம்! - பாரதிராஜா வலியுறுத்தல்

Bharathiraja
சென்னை: மத்திய-மாநில அரசுகளில், சினிமா கலைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும், என்று, இயக்குநர் பாரதி ராஜா வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 40-ஆண்டுகள் ஆனதையொட்டி, சென்னையில், வருகிற 23-ந் தேதி, மிகப் பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது.
இது பற்றி இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ” தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக இந்த விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி வருகிற 23-ந் தேதி தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்கவேண்டும். சினிமா கலைஞர்களுக்கு மத்திய-மாநில அரசுகளில் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும். எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீதர் போன்ற சாதனையாளர்களுக்கு தபால்தலை (ஸ்டாம்பு) வெளியிட வேண்டும்…” என்றார்.
 

சைஸ் ஜீரோவை விட்டார் கரீனா

Kareena Kapoor
ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இதுவரை வளைய வந்த கரீனா கபூர் இப்போது சைஸ் ஜீரோவுக்கு குட்பை சொல்லி விட்டார். உடம்பைப் பெருக்க வைக்கும் முயற்சியில் தற்போது அவர் தீவிரமாகியுள்ளார்.
எலும்பும் தோலுமாக தெரிவதுதான் சைஸ் ஜீரோ. இது இப்போதைய பெண்களிடம், குறிப்பாக அழகுப் பெண்களிடம் பேஷன் போல மாறி விட்டது. யாரைப் பார்த்தாலும் ஒல்லிக் குச்சியாக தெரிவதையே அதிகம் விரும்புகிறார்கள்.
இப்படி கொஞ்ச காலத்திற்கு முன்பு உலா வந்தவர்தான் கரீனா கபூர். இவரால்தான் இந்தியப் பெண்களிடம் சைஸ் ஜீரோ குறித்த விழிப்புணர்வே வந்தது. ஆனால் இப்போது கரீனா மாறி விட்டார். உடம்பைப் பெருக்க வைக்கும் ஆர்வத்திற்கு அவர் வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக உடம்பைக் கூட்டும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறாராம். பழையபடி புஸு புஸு உடம்புக்கு மாற வேண்டும் என்று கூறி வருகிறாராம்.
இதுகுறித்து கரீனாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதெல்லாம் ஒரு பிரச்சினையா, தேசிய பிரச்சினையைப் போல இதைப் போய்க் கேட்கிறீர்களே என்று கூறி சிரிக்கிறார் கரீனா.
 

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Rajinikanth
ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்து, அந்த படம் திரைக்கு வந்ததும் இமயமலை செல்வது வழக்கம்.
அதேபோல எந்திரன் படத்தை முடித்துக் கொடுத்ததும், அவர் இமயமலை செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். அதன்படி, அந்த படம் திரைக்கு வந்து பெரும் பெற்றுவிட்டதைத் தொர்ந்து ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையிலிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து இமயமலைக்கு செல்கிறார்.
இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் ரஜினிகாந்த் தங்கியிருந்து, தியானம் செய்கிறார். ஒரு மாதம் கழித்து, அவர் சென்னை திரும்புகிறார்.
சென்னை திரும்பியதும், அடுத்த படத்தில் நடிப்பது பற்றி அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது.
இந்தப் புதிய படம் சத்யா மூவீஸ் தயாரிப்பாக இருக்கக் கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது

SS Chandran
சென்னை : மன்னார்குடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மரணம் அடைந்த நடிகரும், முன்னாள் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். 67 வயதான சந்திரன், அதிமுகவில் துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக விளங்கினார்.முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் ஆவார்.
மன்னார்குடியில் அதிமுக கூட்டத்திற்குப் போயிருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்தார்.
அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகிலிருந்து நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், விவேக், குண்டு கல்யாணம், சி.ஆர்.சரஸ்வதி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதேசமயம், நடிகர் சங்கம் சார்பில் யாரும் வந்ததாக தெரியவில்லை.
நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.எஸ்.சந்திரன் குறித்த ஒரு இரங்கல் பாடலை இயற்றி, அதை அவரது வீட்டு முன்பு நின்று பாடி மனம் உருகி பெரும் சோகத்துடன் அதை அவருக்கு காணிக்கையாக செலுத்தினார்.
இதையடுத்து இன்றுகாலை இறுதிச் சடங்குகள் தொடங்கின. சந்திரனின் உடல் ஊர்லவமாக கண்ணம்மாப்பேட்டை மின்சார மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
தகனத்திற்கு முன்பு மயானத்தில் வைத்து அதிமுக சார்பி்ல் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக தலைவர்கள் பேசினர்.