விஜய் டிவி நீயா நானா கோபிநாத் தெரியும்… வாய்ஸ் கோபி தெரியுமா?

சென்னை: ஒரு சிலரின் குரல் வசீகரிக்கும். முகம் பார்க்காமல் பின்னணி குரலுக்காகவே ரசிகர்கள் ஆனவர்கள் பலர் உண்டு. அதேபோல விஜய் டிவியில் பின்னணி குரல் கொடுத்து வரும் கோபி நேற்று சிறந்த வாய்ஸ் ஓவர் விருது பெற்றதன் மூலம் தனது முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

Vijay TV Voice Of The Channel award winner Gopi.

மகாபாரதம் தொடரின் சகுனியின் குரல்... அந்த வில்லத்தனமாக சிரிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் கோபி என்றால் நம்ப முடிகிறதா? விஜய் டிவியின் புரமோக்களில் கேட்ட குரல்... ரசிகர்களால் ரசிக்கப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் நேற்று ரசிகர்கள் முன்பு அறிமுகமானார். இப்படி ஒரு அறிமுகம் கிடைக்க இந்த விருதுவாங்க தனக்கு 13 வருடங்கள் ஆகிவிட்டது என்று சற்றே வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் தெரிவித்தார் கோபி.

Vijay TV Voice Of The Channel award winner Gopi.

உங்களுக்கு எல்லாம் நீயா நானா கோபி தெரியும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார் வாய்ஸ் கோபி. கோபியின் குரலுக்கு ரசிகர்களாக இருக்கும் பலரும் இன்று ஃபேஸ்புக், டுவிட்டரில் வாய்ஸ் கோபிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விருது பெற்றதை குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார் கோபி...

 

விஜய்க்கு ஈடாக ஆட்டம் போட சிரமப்பட்ட ஹன்சிகா

சென்னை: புலி படத்தில் விஜய்க்கு ஈடாக டான்ஸ் ஆட சிரமமாக இருந்ததாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

புலி படம் மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஹன்சிகா. முன்னதாக அவர் வேலாயுதம் படத்தில் விஜய்யை விரட்டி விரட்டி காதலித்தார். புலி படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாகிறது.

Hansika

இந்நிலையில் படம் பற்றி ஹன்சிகா கூறுகையில்,

இளவரசியாக நடிப்பது லேசானது அல்ல. என்னை என் அம்மாவும், சகோதரரும் இளவரசி என்று தான் அழைப்பார்கள். இளவரசி கதாபாத்திரத்திற்காக மேக்கப் போட்டு தயாராகவே 2.5 முதல் 3 மணிநேரம் ஆனது.

விஜய் சிறப்பான டான்சர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு ஈடாக ஆடத் தான் சிரமமாக இருந்தது. படத்தில் நான் 2 பாடல்களுக்கு மேல் வருகிறேன். நான் வரும் பாடல்களுக்கு ராஜுசுந்தரம் மாஸ்டர் தான் டான்ஸ் ஸ்டெப் அமைத்துள்ளார் என்றார்.

 

சுசீந்திரன் 'வில்'... ரமேஷ் சுப்பிரமணியன் 'அம்பு'!

வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன், "இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு எனக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதும் கூட வெண்ணிலா கபடி குழு மேடையில் நிறப்பது போல் உள்ளது. இந்த வில் அம்பு படம் எங்கள் பதினாலு வருட நட்பின் சாட்சி," என்றார்.

Vill Ambu audio launched

கவிஞர் வைரமுத்து பேசும் போது, இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிரூபித்துவிட்டு, தற்போது ஆலமரமாக இருந்து பல விழுதுகளை உருவாக்கி வருகிறார். அவர் நட்புக்கு செய்யும் செயல் மிகப்பெரியது. ஆற்றல் மிகுந்த தன் நண்பர்களுக்கு வெளிச்சம் தந்து கொண்டிருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டி வருகிறார்கள். இது நிச்சயம் பாராட்டத்தக்க ஒரு விஷயம். எனக்கு அழுக்கை அழகாகக் காட்டும் இந்த விஷயம் மிகவும் பிடித்துள்ளது. இந்தப் படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெறும்," என்றார்.

நடிகர் சூரி பேசும் போது, "நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தவன். நான் மட்டுமல்ல, விஷ்ணு உள்ளிட்ட பலர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக வந்தவர்கள்தான். இப்போது அண்ணன் தயாரித்துள்ள வில் அம்பு படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார் , அனிருத் , டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி இசையமைப்பாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும், பாடலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்," என்றார்.

Vill Ambu audio launched

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும் போது, "படத்தில் நான் எழுதிய பாடல் குறும்படமே உயிர்க்கிறாய்.. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலை இயக்குநர் ரமேஷ் சொல்லும் போது, இது குறும்படம் எடுக்கும் நாயகன் பாடும் பாடலாக அமைய வேண்டும் என்று கேட்டார். உடனேயே இந்த பாடல் குறும்படமும் அதைச் சார்ந்த விஷயமும் இருக்கும் வகையில் உருவாக்கினேன். பாடல் நன்றாக வந்துள்ளது," என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, "சுசீந்திரன்தான் என்னை முதலில் நடிக்க வைத்தார். அவர் மிகச் சிறந்த இயக்குநர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரை போல் வெர்ஜின் பாய்தான் என்பதை நிரூபிக்க முடிகிறது. இப்போது பாடல்களை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள் அது எனக்கு தவறாகப்படுகிறது. லிப் அசைவோடு எடுக்கும் போதுதான் ஒரு நடிகனின் நடிப்பும் வெளிவரும்," என்றார்.

 

அமலா மகனை தமிழில் அறிமுகப்படுத்தும் ரஜினி!

பிரபல நடிகை, சமூக சேவகி அமலாவின் மகன் அகிலை தமிழில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.

அமலா - நாகர்ஜூனாவின் மகன் அகில் சினிமாவில் நடிக்கிறார். மனம் என்ற படத்தில் அறிமுகமான அவர், இப்போது அவர் பெயரிலேயே உருவாகும் புதிய படத்தில் (அகில்) நடிக்கிறார்.

Rajini may introduce Amala Son Akhil in Tamil

இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சி. கல்யாண் அந்த உரிமையைப் பெற்றுள்ளார்.

தமிழில் வெளியாகும் அகில் படத்துக்காக ஒரு பிரமாண்ட விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதில் கலந்து கொண்டு தங்கள் மகனை வாழ்த்தி அறிமுகப்படுத்துமாறு ரஜினிக்கு அமலாவும் நாகர்ஜூனாவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஜினியும் விழாவில் கலந்துகொண்டு அகிலைத் தமிழில் அறிமுகம் செய்வார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

அகில் படத்தை விவி விநாயக் இயக்கியுள்ளார். அக்டோபர் 22-ம் தேதி வெளியாகிறது.

 

எலி படத்தில் மோசடி பண்ணிட்டார்..!- வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: எலி படத்தில் தன்னை வடிவேலு மோசடி செய்துவிட்டதாகக் கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.

வடிவேலு ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் எலி. இந்தப் படம் பெரிய நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

Cheating case against Vadivelu

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த வடிவேலு தன்னை மோசடி செய்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், ரூ 12 கோடிக்கு இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் வடிவேலுவுக்கு சம்பளமாக மட்டும் ரூ 8 கோடி கொடுத்ததாகவும், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சேனலில் ரூ 10 கோடி வரை தரத் தயாராக இருந்தும் அதனை வாங்க விடாமல் வடிவேலு தடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வேறு சேனல்கள் எதுவும் இந்தப் படத்தை வாங்காமல் விட்டதால், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்துக்குமே வடிவேலுதான் காரணம் என்றும் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.

இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

மாறுவேடமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற 'புலி' விஜய்

விருதுநகர்: புலி பட ரிலீஸுக்கு முன்பு இளைய தளபதி விஜய் மாறுவேடமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் அக்டோபர் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போதே புலி படம் பற்றி பேசி அதை ட்விட்டரில் தொடர்ந்து டிரெண்டாக்கவிட்டு வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

Vijay visits Srivilliputhur Andal temple in disguise

இந்நிலையில் படம் வெற்றி பெற வேண்டி விஜய் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். கோவிலுக்கு அவர் மாறுவேடமிட்டு சென்றுள்ளார். தலையில் பெரிய தொப்பி போட்டு முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.

அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அவர் பிரார்த்தனை செய்கையில் சிலர் அவரை அடையாளம் கண்டுவிட்டார்களாம். இதை உணர்ந்த விஜய் தயவு செய்து இதை யாரிடமும் கூறிவிடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொண்டாராம்.

தனது படங்கள் ரிலீஸாகும் முன்பு விஜய் வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஒரு வேளை அடுத்தபடியாக வேளாங்கண்ணி செல்வார் போன்று.

 

கரு.பழனியப்பனின் புது அவதாரம்... உள்ளம் கவர்வானா இந்தக் 'கள்ளன்?'

சென்னை: பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ம் ஆண்டில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் கரு.பழனியப்பன்.

பார்த்திபன் கனவு திரைப்படம் வெற்றிப் படமாக மாறியதுடன் தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருதையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

தொடர்ந்து சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் போன்ற போன்ற படங்களை இயக்கினார். தான் இயக்கிய மந்திர புன்னகை படத்தின் மூலம் நாயகனாகவும் அவதாரமெடுத்த கரு.பழனியப்பன் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Karu. Pazhaniappan's next Movie

கரு.பழனியப்பன் தற்போது புதுமுக இயக்குநர் சந்திரா இயக்கி வரும் ‘கள்ளன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பருத்திவீரன் படத்தில் அமீரின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. நவம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கின்றனர்.

இப்படத்தில் கரு.பழனியப்பன் வித்தியாசமாக அடர்ந்த தாடி, முறுக்கு மீசை என கிராமத்து கெட்டப்பில் தோன்றுகிறார். விவசாய சமூகத்துக்கு முன்பிருந்த வேட்டையாடிகளின் கதையாம் இது. வேட்டையாடி வாழ்ந்த அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றிய கதையாக "கள்ளன்"திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு கரு.பழனியப்பன் மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார். பின்னர் ‘கிராமபோஃன் என்ற படத்தையும் இவரே இயக்கி நடிக்கவிருக்கிறாராம்.

 

"வேதாளம்” பாட்டுக்கு கல்யாண் மாஸ்டர் டான்ஸுதானாம்- டுவிட்டரில் அஜித்துடன் ஹாப்பி போட்டோ!

சென்னை: அஜித்தின் வேதாளம் படத்தில் பாடலுக்கு நடன அசைவுகளை கற்றுத் தந்தது கல்யாண் மாஸ்டர்தானாம். இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படு மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் அவர்.

கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் முதல் பார்வையும், போஸ்டரும் வெளியான நிலையில் அதுதான் தல ரசிகர்களிடையே "டாக் ஆப் தி டவுன்". தல 56 இதுதான் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இப்படம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாம்.


இப்படத்தில் அஜித்தின் தனிப்பாடல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இப்பாடலுக்குத்தான் நடன அசைவுகளை அளித்துள்ளார் நடன இயக்குனரான கல்யாண் மாஸ்டர்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில், "பல நாட்களுக்கு பிறகு அஜித்துடன் ஒரு அற்புதமான பாட்டு..வேதாளம்" என்று டுவிட்டியுள்ளார். சிவாவின் இயக்கத்தில் தயாராகும் "வேதாளம்" தீபாவளி ரிலீசாக வெளிவரும் என்று நம்பப் படுகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 16 அன்று இப்படத்தின் இசை வெளியாகலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

 

இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா சரத்குமார்? - பிரகாஷ் ராஜ்

சேலம்: தலைமைப் பொறுப்பில் உள்ள சரத்குமார் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Prakash Raj slams Sarath Kumar

இதையொட்டி சேலம், நாமக்கல்லில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், கருணாஸ், சரவணன், அஜய்ரத்னம், மனோபாலா உள்ளிட்டோர் சனிக்கிழமை சேலம் வந்தனர்.

சேலத்தில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து விஷால், நாசர் தலைமையிலான அணிக்கு ஆதரவு தரும்படி கோரினர்.

இதைத்தொடர்ந்து, நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறோம். யாரையும் குறைகூற இங்கு வரவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும்.

சரத்குமார் எனது நண்பர். ஆனால், அவர் தவறான இடத்தில் உள்ளார். எதிரணியினர் அரசியல், சாதியைப் புகுத்துகின்றனர். கலைஞர்களுக்கு சாதி, மத பாகுபாடு கிடையாது.

நடிகர் சங்கத் தேர்தலில் புரட்சி ஆரம்பிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும், மாற்றத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை இருக்காது என சரத்குமார் கூறுவது அநாகரிகமானது. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் வாழ முடியாது. மேலும், தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. அதேபோல, சங்க உறுப்பினர்களை பயமுறுத்தக்கூடாது.

நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கேள்விக் கேட்கும் உரிமை உண்டு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர். அப்படியானால் ஏதோ நடக்கிறது என்றுதானே அர்த்தம். நான் யாருக்கும் பயப்படவில்லை. எனக்குப் பதவி வேண்டாம். ஆனால், நடிகர் சங்கத்தில் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். இந்தத் தேர்தல் நடிகர் சங்கத் தேர்தலை மாற்றக்கூடியது. ஒன்றுசேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்."

நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்கள் தபால் வாக்கு அளிக்காமல் சென்னைக்கு வந்து வாக்களிக்க வேண்டும். மேலும், உறுப்பினர் அடையாள அட்டையை மிரட்டி வாங்கி வைத்திருக்கின்றனர் என்றார்.

 

தப்புத் தப்பா பேசிய விஷால், எஸ்வி சேகருக்கு நோட்டீஸ் அனுப்பிட்டோம்! - சரத்குமார்

நடிகர் சங்கம் மற்றும் நிர்வாகிகள் பற்றி தவறாகப் பேசி வரும் விஷால் மற்றும் எஸ் வி சேகர் போன்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

சேலத்தில் விஷால் அணியும் சரத்குமார் அணியும் தீவிரமாக ஆதரவு கோரி வருகின்றனர்.

Sarath sent notice to Vishal and S V Sekar

நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கோரிய பின்னர் சரத்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி:

கடந்த 3 நாட்களாக மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று சகோதர, சகோதரிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் நடிகர் சங்கத்தில் இதுவரை என்னென்ன செய்து உள்ளோம் என்பதை அனைவருக்கும் சுட்டிக்காட்டி என்றும் போல் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி கட்ட முடியும்? இல்லையெனில் அவர்களாவது பூச்சி முருகனிடம் வாபஸ் பெறக்கோரியோ அல்லது கட்டிடம் தொடர்பாக புதிய திட்டமோ இருந்தால் என்னிடம் பேசி இருக்கலாம்.

அப்படி உங்களது திட்டத்தை நடிகர் சங்கம் நிராகரித்தால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் ஒப்பந்தம் போட்டது முதல் திட்டம் தீட்டியது வரை எதுவும் கூறாமல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறி வருகின்றனர்.

இளைஞர்களை நாங்கள் வரவேற்கிறோம். சங்க செயற்குழுவில் சூர்யா, நாசர், குஷ்பு ஆகியோர் இருந்தவர்கள்தானே.

நடிகர் சங்க கட்டிடம் கட்டியிருந்தால் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கமாட்டேன். ஆனால் இந்த வழக்கை முடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டிய பணி எனக்கு இருக்கிறது. நடிகர் சங்கம் மீண்டும் கடனில் மூழ்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன்.

நடிகர் சங்கத்துக்கு வரும் ரூ. 24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறு கூறுவதன் மூலம் நலிவடைந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கிடைக்கப்படாமல் போவதுடன் நடிகர் சங்க வருமானத்தையும் தடுத்து விடாதீர்கள்.

தவறான குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்கும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஷால் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீசு அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக அவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

சிலர் நான் தமிழனே இல்லை என்று கூறி வருகிறார்கள். என் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தினால் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நடிகர் சங்கத்தை பற்றி தவறான குற்றச்சாட்டுகளை கூறினால் கண்டிப்பாக நான் பதில் சொல்லி தான் ஆவேன்.

ரகசியத்தை வெளியிடுவேன் என்று உணர்ச்சிகரமாக தான் கூறினேனே தவிர மிரட்டலாக கூறவில்லை. மாற்றம் தேவை என்கிறார்கள். நடிகர் சங்கத்தில் திறமை உள்ளவர்கள்தான் உள்ளார்கள். தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது," என்றார்.

 

இயக்குநர் பெரோஸ் முகம்மதுவை மணந்து திருமதியானார் நடிகை விஜயலட்சுமி

சென்னை: நடிகை விஜயலட்சுமியின் திருமணம் இன்று காலை நடந்தது, இயக்குநர் பெரோஸ் முகம்மதுவை மணந்து திருமதியாக மாறினார் நடிகை விஜயலட்சுமி.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி, சுமார் 10 க்கும் அதிகமான படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். இயக்குநர் அறிவழகனின் வல்லினம், ஈரம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பெரோஸ் முகம்மதுவை காதலித்து மணந்திருக்கிறார் விஜயலட்சுமி.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் பண்டிகை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார் பெரோஸ் முகம்மது. இந்தப் படத்தை விஜயலட்சுமி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹிந்து முறைப்படி கோவிலில் நடந்த இந்தத் திருமணத்திற்கு இரு வீட்டாருடன் சற்று நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

திருமணத்திற்கு முன் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து மணம் புரிந்தாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மதம் மாற மாட்டோம். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுவோம் என்று விஜயலட்சுமி கூறியிருந்தார்.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

திருமணத்திற்குப் பின்பு நடிப்பிற்கு முழுக்குப் போடும் விஜயலட்சுமி, தொடர்ந்து தனது நிறுவனங்களின் தயாரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார்.

வாழ்க பல்லாண்டு என்று நாமும் மணமக்களை வாழ்த்துவோம்....

 

விஜயின் புலியுடன் வெளியாகிறதா விக்ரமின் 10 எண்றதுக்குள்ள "டிரெய்லர்"?

சென்னை: விக்ரம் - சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் "10 எண்றதுக்குள்ள" படத்தின் டிரெய்லர், விஜய் நடிப்பில் வெளியாகும் புலி படத்தின் இடைவேளையில் திரையிடப்பட விருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜயின் நடிப்பில் ஆக்க்ஷன் கலந்த பேன்டஸி திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி அக்டோபர் 1 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Vikram’s '10 Enradahukulla' trailer in interval of  Vijay's Puli?

விக்ரம் - சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் "10 எண்றதுக்குள்ள" திரைப்படம் அக்டோபர் 21ம் தேதியன்று காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது.

கோலிசோடா படத்திற்குப் பின்பு விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. மேலும் நெடுஞ்சாலைகளைப் பற்றிய ஒரு படமாகவும் 10 எண்றதுக்குள்ள உருவாகியிருக்கிறது.


படத்தின் டிரெய்லரை வரும் 30 ம் தேதியன்று படக்குழுவினர் யூடியூபில் வெளியிடவிருக்கின்றனர். இந்தத் தகவலை சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் விஜயின் புலி படத்தின் இடைவேளையில் விக்ரமின் "10 எண்றதுக்குள்ள" படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிடவிருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் விக்ரம் ரசிகர்களின் ஆதரவும் புலிக்கு கிடைக்கவிருக்கிறது.

 

சேலத்தைத் தூக்கிச் சாப்பிட்ட பெங்களூரு... ஸ்ருதிஹாசனை மொய்த்தெடுத்த ரசிகர்கள்!

பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஓரியன் மாலில் ஜிஏபி துணிக் கடையை திறந்து வைக்க வந்த நடிகை ஸ்ருதி ஹாஸனை ரசிகர்கள் மொய்த்துவிட்டார்கள்.

பெங்களூரில் உள்ள ஓரியன் மாலில் ஜிஏபி துணிக்கடை திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கடையை திறந்து வைக்க நடிகை ஸ்ருதி ஹாஸன் வந்திருந்தார். ஜீன்ஸ், ஜிஏபி டி-சர்ட் அணிந்து வந்திருந்த ஸ்ருதியை காண மாலில் ரசிகர்கள் கூடிவிட்டனர்.

 Shruti gets mobbed in Bangalore

கடை திறந்து வைப்பது குறித்து ஸ்ருதி ஏற்கனவே சமூக வலைதளம் மூலம் அறிவித்திருந்தார். இதனால் அவரைப் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் மாலில் குவிந்துவிட்டனர். வழக்கத்தை விட அன்று மாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஸ்ருதியை பார்த்ததும் ரசிகர்கள் குஷியாகி அவரை மொய்க்க ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசார் ரசிகர்களை ஸ்ருதி அருகில் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். போலீசாரையும் மீறி சில ரசிகர்கள் ஸ்ருதியை தொட்டும், கை கொடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரசிகர்களிடம் இருந்து ஸ்ருதியை காப்பாற்ற போலீசார் தான் படாதபாடு பட்டனர்.

 

குண்டாக இருந்தாலும் நீங்க ஹாட் தான் ஆமீர் கான்: ட்வீட் செய்த சன்னி லியோன்

மும்பை: குண்டாக இருக்கும் ஆமீர் கான் பார்க்க ஹாட்டாக இருப்பதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

Sunny finds ‘fat’ Aamir Khan hot

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தங்கால் படத்திற்காக தனது உடல் எடையை 35 கிலோ அதிகரித்து குண்டாக உள்ளார். திடீர் என உடல் எடையை இவ்வளவு அதிகரித்துள்ளதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

குண்டாக இருக்கும் ஆமீர் கான் ஸ்னாப்டீல் விளம்பரத்தில் நடித்துள்ளார். விளம்பரத்தை பார்த்த நடிகை சன்னி லியோன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,

ஹே ஆமீர் கான் ஸ்னாப்டீல் விளம்பரத்தில் உங்களை பார்த்தேன். நீங்கள் குண்டாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னும் ஹாட்டாகவே உள்ளீர்கள். லவ் யூ என்று தெரிவித்திருந்தார்.

இதை பார்த்த ஆமீர் ட்விட்டரில் பதிலுக்கு தெரிவித்திருப்பதாவது,

நன்றி சன்னி லியோன், நீங்கள் மிகவும் அன்பானவர், லவ். ஏ. என தெரிவித்துள்ளார்.