எஸ்வி சேகர் மகன் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து!


நடிகர் எஸ்வி சேகரின் மகன் அஸ்வின் சேகர் - ஸ்ருதி திருமணம் இன்று சென்னையில் நடந்தது. திரையுலக - அரசியல் பிரமுகர்கள் திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் எஸ்.வி. சேகர் மகன் அஸ்வின் சேகர். இவர் 'வேகம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நினைவில் நின்றவள், மணல் கயிறு -2 படங்களில் நடித்து வருகிறார்.

அஸ்வினுக்கும் கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜி.எஸ். வெங்கட்ராமன் மகள் ஸ்ருதிக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அஸ்வின்-ஸ்ருதி திருமணம் இன்று காலை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.
 

'தலைவி'யாகும் ரம்யா!


கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவி பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகை ரம்யா.

கன்னட சினிமாவின் நம்பர் ஒன் நடிகை ரம்யா. இவரது படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட்டாகின. தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ரம்யா. ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்ததாக அறிவித்த அவர், அடுத்து தீவிர கட்சிப் பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

இதற்கு வசதியாக கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

அடுத்த மாதம் (செப்டம்பர்) கர்நாடக காங்கிரசுக்கு கட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

அதே நேரம் ரம்யாவை போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன.
 

நான் இந்தியில் பிசி : அசின்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நான் இந்தியில் பிசி : அசின்!

8/24/2011 2:11:51 PM

“இந்திக்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவை மறந்துவிட்டார் அசின்” என்ற தகவல்களை மறுத்துள்ளார் அசின். அசின் கூறியது: தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதில்லையா என்கிறார்கள். நல்ல கதைகள் வரும்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தற்போது 2012 மார்ச் வரை இந்தி படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். அடுத்து பெரிய ஹீரோ படம் ஒன்றில் நடிப்பது பற்றி பேச்சு நடந்து வருகிறது. அதன் பிறகு அதிக தமிழ் படங்களில் நடிப்பேன் என்று அசின் கூறினார்.

 

ஒஸ்தியில் தீபிகா படுகோன், கேத்ரினா கைப் நடனம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒஸ்தியில் தீபிகா படுகோன், கேத்ரினா கைப் நடனம்!

8/24/2011 2:11:29 PM

சல்மான் கான், சோனாக்ஷி சின்கா நடித்து ஹிட்டான இந்தி படம் 'தபாங்'. இந்த படம் தமிழில் சிம்பு நடிக்க, 'ஒஸ்தி' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இப்போதே பிரமிப்பாக பேசுகின்றனர். ஒஸ்தி தொடக்க விழாவில் சல்மான்கானின் தம்பியும் , தபாங் தயா‌ரிப்பாளருமான அர்பாஸ்கான் கலந்து கொண்டார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எப்படியும் சல்மான்கானை பங்கு பெற செய்தாக வேண்டும் என விரும்புகிறாராம் சிம்பு. அதுமட்டுமின்றி படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு நடனமாட கேத்ரினா கைப், தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

 

3டி படத்தை இயக்கும் வெங்கட் பிரபு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

3டி படத்தை இயக்கும் வெங்கட் பிரபு!

8/24/2011 2:10:27 PM

படத்தை ஜாலியாக எடுப்பதில் வெங்கட் கில்லாடி. தற்போது தல அஜீத்தை வைத்து ‘மங்காத்தா’ முடித்திருக்கும் வெங்கட் பிரபு அடுத்து 3டி படத்தை இயக்க திட்டுமிட்டுள்ளார். ‘மங்காத்தா’ ரிலீசுக்கு பிறகு அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. படத்தில் யார் ஹீரோ என்பது இன்னும் முடிவாகவில்லை.

 

சார்மிக்கு சிபாரிசு செய்யும் வில்லன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சார்மிக்கு சிபாரிசு செய்யும் வில்லன்!

8/24/2011 2:09:32 PM

தமிழில் 'காதல் அழிவதில்லைÕ படத்தை தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தெலுங்கிற்கு சென்றார் சார்மி. முன்னணி பட்டியலில் இருந்தவர் அனுஷ்கா, இலியானா, தமன்னாவின் ஆதிக்கத்தால் மார்க்கெட் இழந்தார். இரண்டாம் கட்ட கதாநாயகியாக தள்ளப்பட்டவருக்கு பாலிவுட்டிலிருந்து வாய்ப்பு வந்தது. 'புட்டா ஹோகா தேரா பாப்Õ படத்தில் நடித்தார் சார்மி. இதே படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் சோனு சூட். இருவரும் படத்தில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் ஷூட்டிங்கில் மனம்விட்டு பேசி, நட்பை வளர்த்துக்கொண்டனர். அந்த நட்பு இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் சல்மான் கானுடன் 'தபங்Õ படத்தில் நடித்ததன் மூலம் அங்கு பிரபலம் ஆகி இருக்கும் சோனு சூட், தமிழில் 'ராணாÕ, 'ஒஸ்திÕ படங்களில் நடிக்கிறார். பாலிவுட்டில் சார்மிக்கு சான்ஸ் வாங்கித் தரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். தெரிந்த இயக்குனர்கள், நண்பர்களிடம் சார்மிக்கு ஹீரோயின் வேடம் தரும்படி சிபாரிசு செய்கிறாராம். சார்மியுடனான நட்பு பற்றி சோனுவிடம் கேட்டபோது, '’படங்களில்தான் வில்லனாக நடிக்கிறேன். நிஜத்தில் குடும்ப பாசம் உடையவன். திரையுலகில் எல்லாரிடமும் நட்புடன் பழகுகிறேன்” என்றார்.

 

நான் இந்தியில் பிசி : அசின்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நான் இந்தியில் பிசி : அசின்!

8/24/2011 2:08:16 PM

"இந்திக்கு சென்ற பிறகு தமிழ் சினிமாவை மறந்துவிட்டார் அசின்" என்ற தகவல்களை மறுத்துள்ளார் அசின். அசின் கூறியது: தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதில்லையா என்கிறார்கள். நல்ல கதைகள் வரும்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தற்போது 2012 மார்ச் வரை இந்தி படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். அடுத்து பெரிய ஹீரோ படம் ஒன்றில் நடிப்பது பற்றி பேச்சு நடந்து வருகிறது. அதன் பிறகு அதிக தமிழ் படங்களில் நடிப்பேன் என்று அசின் கூறினார்.




 

சன் பேப்பர் மில் வழக்கில் சக்சேனாவுக்கு ஜாமீன்!


கோவை: சன் பேப்பர் மில்லை அபகரித்தார் என தொடரப்பட்ட வழக்கில் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமீனில் வழங்கப்பட்டது.

கோவை அருகே உள்ள பேப்பர் மில் அபகரிப்பு தொடர்பான வழக்கில் சன்பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு வக்கீல் என்.செந்தில்குமார் உடுமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த ஜாமீன் மனு உடுமலை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் உடுமலை அரசு வக்கீல் டி.ராஜசேகரனும், ஹன்ஸ்ராஜ் சக்சேனா தரப்பில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் என்.செந்தில்குமாரும் ஆஜராகி வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு என்.சர்மிளா, மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 

சென்னையை கலக்கும் 'புலிகள்'!


சென்னை நகரில் இன்று முக்கிய பகுதிகளுக்குப் போனவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்க முடியும்.

அது ஆங்காங்கே புலிவேஷம் போட்டு ஆட்டமாடும் புலிவேசக்காரர்கள். எதற்காக என்பது இந்நேரம் புரிந்திருக்கும்... ஆம். புலிவேசம் படத்தின் விளம்பரத்துக்காகத்தான்.

இந்தப் படம் தொடர்பாக எந்தெந்த வகையிலெல்லாம் விளம்பரம் செய்ய முடியும் அத்தனை வழிகளையும் கையாண்டு வருகிறார் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஆர்கே. இவரது விளம்பர உத்திகளைப் பார்த்து, இயக்குநர் பி வாசுவே, "என் படங்களிலேயே புதுமையான விளம்பரங்களைப் பார்த்தது புலிவேசம்தான்" என்று வியந்து பாராட்டியிருக்கிறார்.

படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், புலி வேடமணிந்த 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னை முழுக்க உலா வருகின்றனர், புலிவேசம் விளம்பர பனியன்களுடன்.

இதை வேடிக்கைப் பார்க்கவும் ஏக கூட்டம் கூடுகிறது.

இந்த நிலையில், படம் குறித்த பாஸிடிவ் பேச்சுக்கள் காரணமாக சன் டிவி நல்ல விலைக்கு புலிவேசத்தை வாங்கியிருக்கிறது.
 

''என்ன மரியாதை, என்ன மரியாதை'': மோகன்லால் பற்றி ஷாருக்கான் புளகாங்கிதம்!


கேரளாவில் ரிசார்ட் ஒன்றை திறந்து வைக்கச் சென்ற ஷாருக் கானுக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஊர் சுற்றிக் காட்டி, ஷாருக் மனதில் இடம் பிடித்து விட்டார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ரிசார்ட் திறந்து வைப்பதற்காக கேரளாவுக்கு சென்றார். கொல்லத்தில் ரவீஸ் ரிசார்ட்டை தனது கைகளால் திறந்து வைத்த ஷாருக் உடனே மும்பைக்கு பறந்துவிடவில்லை. மாறாக கொல்லத்தை சுற்றிப் பார்த்தார். அவருக்கு ஊர் சுற்றிக் காட்டியது யார் தெரியுமா? சூப்பர் ஸ்டார் மோகன் லால் தான்.

இது குறித்து ஷாருக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

தி கிரேட் மோகன்லால்ஜி. என்ன ஒரு தன்னடக்கம், அடடா. உற்சாகமாக எனக்கு கொல்லத்தை சுற்றிக் காட்டினார். கொல்லம் ரவீஸ் ரிசார்ட்டுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். அழகிய ரிசார்ட். என்னைப் பார்த்தவுடன் மக்கள் சந்தோஷமாக கையசைத்தனர் என்று அதில் கூறியுள்ளார்.

ஷாருக் மோகன் லாலுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவையும், ஒரு பாலத்தில் இருந்து ரசிகர்கள் அவரைப் பார்த்து கையசைக்கும் போட்டோவையும் டுவிட்டரில் போட்டுள்ளார் ஷாருக்.
 

கோடி, கோடியா கொடுத்தாலும் பார்ட்டிகளில் ஆட மாட்டேன்: ஜான் ஆபிரகாம்


கோடி, கோடியாகப் பணம் கொத்தாலும் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டிகளில் ஆட மாட்டேன் என்று இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

பணக்காரர்கள் தங்கள் வீட்டு பிறந்தநாள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பிரபல நடிகர், நடிகையரை அழைத்து நடனமாட வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி ஒரு வைர வியாபாரி தனது திருமணத்திற்கு வந்து ஆடுமாறு ஜான் ஆபிரகாமை அழைத்துள்ளார். சும்மா இல்ல ரூ. 6 கோடி தருகிறேன் என்றிருக்கிறார். ஆனால் ஜான் வர மறுத்துவிட்டார்.

இந்த ஜான் பிழைக்கத் தெரியாதவரா இருக்காரே. யாராவது ரூ. 6 கோடிய வேண்டாம்னு சொல்லுவார்களா என்று பாலிவுட்டில் சிலர் கூறுகின்றனர்.

ஜான் ஆபிரகாம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா,

நான் நடிக்க வந்ததில் இருந்தே இது போன்று பலர் என்னை அழைக்கி்ன்றனர். தற்போது என்ன வித்தியாசம் என்றால் ஆண்டுதோறும் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இவ்வளவு பணம் தருகிறேன் என்று சொல்லியும் மறுக்கலாமா என்று பலர் என்னைக் கேட்கின்றனர். ஆனால் நான் இன்னும் மறுத்து தான் வருகிறேன். திருமணம், பிறந்தநாள் விழாக்களில் ஆடமாட்டேன் என்பது என் கொள்கை. அதே போன்று மது மற்றும் சிகரெட் விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்.

பலர் என்னிடம் இது போன்ற விழாக்களுக்கு வரும் அழைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். ஒரு நடிகனை திரையில் தான் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

யார் என்றே தெரியாதவர்கள் வீட்டு விழாக்களில் நான் எப்படி ஆட முடியும். பலர் என்னை முட்டாள் என்று சொல்வது எனக்குத் தெரியும் என்றார்.
 

தீபாவளிக்கு ஏழாம் அறிவு... உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது!!


சூர்யா - ஸ்ருதி ஹாஸன் நடிப்பில் உருவாகியுள்ள, பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகக் கருதப்படும் 7ஆம் அறிவு, தீபாவளியன்று வெளியாகும் என தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தப் படம் தனது ரெட்ஜெயன்ட் பேனரிலேயே வெளியாகும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் உதயநிதி.

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கருணாநிதி குடும்ப வாரிசுகள் தொடர்புடைய திரைப்படங்கள் சிக்கலுக்குள்ளாகி வருகின்றன. இந்தப் படங்களைத் திரையிட இப்போது ஆர்வம் காட்டுவோர் குறைந்துவிட்டனர். ஆளும்கட்சியைப் பகைத்துக் கொள்ளக்கூடாது மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக இதை செய்கின்றனர்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது புதிய படமான 7-ஆம் அறிவை தானே வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "7-ஆண் அறிவு திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது. ரெட்ஜெயன்ட் மூவீஸ் பேனரிலேயே இந்தப் படம் வெளியாகும்", என்று கூறியுள்ளார்.

ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன் டிவிக்கு மிகப்பெரிய விலைக்குத் தரப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 10-ம் தேதி படத்தின் ஆடியோ வெளியாகிறது.
 

செப்.1ம் தேதி திருப்பதியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மறுமணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

செப்.1ம் தேதி திருப்பதியில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மறுமணம்!

8/24/2011 10:46:07 AM

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது காதலியை மறுமணம் செய்கிறார். இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது காதலியான லண்டனைச் சேர்ந்த சுஜாயாவை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2008-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இதையடுத்து இசை அமைப்பதில் கவனம் செலுத்தி வந்த யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது வீட்டில் பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில், சமீபகாலமாக ஷில்பா என்பவரை காதலித்து வந்தார் யுவன் சங்க ராஜா. ஷில்பா, டாக்டர். இவர்கள் காதலுக்கு இருவரது குடும்பமும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திருப்பதியில் திருமணம் நடக்கிறது. இதில் இரண்டு குடும்பத்தையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள புதிய ஓட்டல் ஒன்றில் செப்டம்பர் 2ம் தேதி நடக்கிறது.

 

அடுத்த மாதம் ராணா ஷூட்டிங் : டிஸ்கஷனில் ரஜினிகாந்த்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அடுத்த மாதம் ராணா ஷூட்டிங் : டிஸ்கஷனில் ரஜினிகாந்த்!

8/24/2011 10:14:47 AM

'ராணா' படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆபீஸில் நடக்கும் டிஸ்கஷனில் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்த 'ராணா' படப்பிடிப்பில் திடீரென்று உடல்நிலை குன்றிய ரஜினி, சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றார். தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர், தன் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டிலும், போயஸ் கார்டனிலுள்ள தன் வீட்டிலும் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், 'ராணா' படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷூட்டிங்கில் பழைய உற்சாகத்துடன் நடிக்க முடியும் என்று, ரஜினியைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தினமும் ரஜினியை சந்தித்து, 'ராணா' படப்பிடிப்பு தொடங்குவது குறித்து ஆலோசித்து வந்தார். இதையடுத்து, சென்னை அசோக் நகரிலுள்ள ரவிகுமாரின் அலுவலகத்துக்கு தினமும் நேரில் வரும் ரஜினி, காலை முதல் மாலை வரை கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். அடுத்த மாதம் 'ராணா' படப்பிடிப்பு தொடங்கும் என்று, பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

செப். 1-ம் தேதி திருப்பதியில் டாக்டர் ஷில்பாவை மணக்கும் யுவன்


சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டாக்டர் ஷில்பா திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் நடக்கிறது.

தற்போது தமிழகத்தில் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர் யார் என்றால் அது யுவன் தான். அவர் கடந்த 2005-ம் ஆண்டு சுஜாயா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். ஆனால் காதல் திருமணம் கசந்துபோய் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றக் கதவுகளைத் தட்டினர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது.

அதன் பிறகு யுவன் இசையிலேயே மூழ்கிவிட்டார். பின்னர் யுவனுக்கு மறுகல்யாணம் செய்ய வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினார். இந்நிலையில் யுவனுக்கு டாக்டர் ஷில்பா என்பவர் மீது காதல் வந்தது. இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. 2-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
 

மீண்டும் புது வேகத்தில் சன் பிக்சர்ஸ்- மங்காத்தாவை வாங்கியது!


வழக்குகள், கைதுகள், தயாரிப்பாளர்களின் புகார்கள் என ஒரு பக்கம் சிக்கல்களைச் சந்தித்தாலும் மீண்டும் புதிய வேகத்தோடு திரைப்படத் துறையில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே மங்காத்தா என்ற பெரிய படத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம்.

தயாநிதி அழகிரியின் தயாரிப்பான இந்தப் படம், சமீபத்தில் ஞானவேல் ராஜாவுக்கு விற்கப்பட்டது. உடனே அவர் படம் தொடர்பான விளம்பரங்களில் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மற்றும் அவரது க்ளவுட் நைன் நிறுவன பெயரை முற்றாக நீக்கிவிட்டார். மேலும் ஜெயா டிவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தர முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தை ஞானவேலிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் தயாநிதி அழகிரி.

மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் குழுமத்துக்கே அவர் கொடுத்துவிட்டார்.

வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி சன் பிக்சர்ஸ் பேனரில் மங்காத்தா வெளியாகிறது. எங்கேயும் காதலுக்குப் பிறகு, தான் வாங்கிய அவன் இவன் உள்ளிட்ட படங்களைக் கூட திரும்பக் கொடுத்து வந்த சன் பிக்சர்ஸ், இப்போது மீண்டும் அதிரடியாக மங்காத்தாவை வெளியிடுகிறது.
 

90 வயது மூதாட்டியை தீயில் இருந்து காப்பாற்றிய டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட்


லண்டன்: தீ பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டில் இருந்து 90 வயது மூதாட்டியை டைட்டானிக் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் காப்பாற்றினார்.

பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட்(35). இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்(61). அவருக்கு நெக்கர் தீவில் சொகுசு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் விடுமுறையைக் கழிக்க கேட், அவரது காதலர் லூயி டவ்லர், 2 குழந்தைகள் உள்பட 20 பேர் தங்கினர்.

அந்த சொகுசு மாளிக்கைகு அருகில் உள்ள கட்டிடத்தில் பிரான்சன் தன் மனைவி மற்றும் மகன் சாமுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கேட் தங்கியிருந்த மாளிகையை மின்னல் தாக்கியதால திடீர் என்று தீ பிடித்தது. உடனே மாளிகையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

அப்போது அங்கிருந்து பிரான்சனின் 90 வயது தாயை கேட் லாவகமாகத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

இது குறித்து பிரான்சன் கூறுகையில்,

நான் கேட் வின்ஸ்லெட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தான் எனது தாயை மாளிகையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். என் தாய்க்கு 90 வயது ஆகிறது. அவரால் நடக்க முடியும். இருப்பினும் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்ததால் கேட் அவரை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார் என்றார்.

எரிந்து போன அந்த மாளிகையை பிரான்சன் தன் 28-வது வயதில் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 58 ஆயிரத்து 162-க்கு வாங்கினார். விரைவில் மாளிகையைப் புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த பிரான்சன் தான் வெர்ஜின் குரூப்பின் தலைவர் ஆவார்.
 

குஸ்தியில் சிம்புவுடன் குத்தாட்டம்... கத்ரீனாவுக்கு ரூ 1 கோடி?


குஸ்தி படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைஃபுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வேடத்தில் நடிக்க நயன்தாராவை இதே தொகைக்கு அணுகி பேசிப் பார்த்தார் இயக்குநர் தரணி. சிம்புவும் தனது பழைய தொடர்புகளை தூதுவிட்டுப் பார்த்தாராம். நயன்தாரா சம்மதிக்காத நிலையில், வேறு சில டாப் நடிகைகளை அணுகிப் பார்த்தனர்.

ஆனால் யாரும் சரியாக வராத நிலையில், கத்ரீனா கைஃபிடம் பேசினர். அவர் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்க, உடனே ஓகே சொல்லுமாறு நாயகன் சிம்பு கூறிவிட்டாராம்.

இன்னொரு பக்கம் ரஜினியின் ராணா நாயகி தீபிகா படுகோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்.

ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை இதுவரை ஸ்ரேயாவுக்குதான் இருந்தது. அதை தகர்த்துவிட்டார் கத்ரீனா இப்போது!
 

மங்காத்தா... பின்வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!!


மங்காத்தா படம் குறித்த லேட்டஸ்ட் செய்தி இது... அந்தப் படத்தை வாங்கிய ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், இப்போது பின்வாங்கிவிட்டது!

அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா பட விவகாரத்தில் நடக்கும் திடீர் மாறுதல்களுக்கு இணையாக திருப்பங்கள் அந்தப் படத்தில் கூட இருக்குமா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தை மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்க ஆரம்பித்த போது, திமுக ஆளும் கட்சி. அதனால் செல்லப்பிள்ளை கணக்காக போஷாக்குடன் வளர்ந்தது படம். வெளியிடுவதிலும் சிக்கல் இருக்காது என்பதால் வாங்கிக் கொள்ள நிறைய விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.

ஆட்சி மாற்றம் நடந்ததும், எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. இப்போது தயாநிதி அழகிரியை படத்தின் மைனஸாக பார்க்க ஆரம்பித்துவிட்டது அதே விநியோகஸ்தர் தரப்பு. தியேட்டர் தர உரிமையாளர்கள் தயங்கும் நிலை.

எனவே படத்தை கைமாற்றிவிட முடிவு செய்தார் தயாநிதி. பொதுவாக வேறு யார் படம் தயாரித்தாலும், அதை கடைசியில் தயாநிதி, உதயநிதி அல்லது சன் டிவிக்கு விற்றுவிட்டுப் போவதுதான் கடந்த 5 ஆண்டுகளாக நாம் பார்த்தது. இப்போது முதல்முறையாக தயாநிதி அழகிரி அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தப் படத்தை இவர் வாங்கப் போகிறார், அவர் வாங்கப் போகிறார் என ஏகப்பட்ட யூகங்கள்.

கடைசியில் நடிகர் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் அவர் பின் வாங்கிவிட்டார் மங்காத்தாவிலிருந்து. இதற்கு பின்னணியாக பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமான காரணம் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன்டிவிக்கு விற்கப்பட்டதுதான் என்கிறது விவரமறிந்த தரப்பு. ஆனால் இதுகுறித்து விரிவாக பேச மறுத்துவிட்ட ஞானவேல் ராஜா, மங்காத்தா படத்தை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வளவுதான் என்றார்.

தயாநிதி அழகிரி இதுபற்றி தனது ட்விட்டரில், "மங்காத்தா ஸ்டுடியோ கிரீன் பேனரில் வெளியாகாது. ஆனால் நிச்சயம் ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸாகிவிடும்," என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.