மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாயில் நடக்கும் ஹேப்பி நியூ இயர் படப்பிடிப்புக்கு தனது குடும்பத்தாரையும் அழைத்துச் செல்கிறார்.
சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றி ஜோடியான ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் ஃபரா கானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்கள் துபாயில் நடக்கிறது. 3 மாதங்கள் தனது குடும்பத்தாரை பிரிய மனமில்லாத ஷாருக்கான் அவர்களையும் தன்னுடன் துபாய்க்கு அழைத்துச் செல்கிறார்.
அவருடன் அவரது மனைவி கௌரி, மகன் ஆர்யன், மகள் சுஹானா, குட்டிப் பையன் ஆப்ராம் ஆகியோர் துபாய் செல்கின்றனர். ஷாருக்கின் சகோதரியும் அவர்களுடன் செல்கிறார்.
ஷாருக்கானுக்கு துபாயின் முக்கிய பகுதியில் சொந்தமாக வில்லா உள்ளது. ஃபரா கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் தான் தீபிகா இதே ஷாருக் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.