அஜீத்தைப் பார்த்தேன், அடடா அதை கேட்க மறுந்துட்டேனே: தயாநிதி அழகிரி

Dayanidhi Azhagiri Meets Ajith

சென்னை: மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி அஜீத் குமாரை சந்தித்துள்ளார்.

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனும், தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி அஜீத் குமாரை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் வெற்றி பெற அவர் வாழ்த்தியுள்ளார்.

அஜீத் குமாரிடம் விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பை கேட்க மறந்துவிட்டேன் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடித்த மங்காத்தா படத்தை தயாநிதி அழகிரி தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பு இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அஜீத் ஹேக்கராக நடிப்பதால் படத்தின் தலைப்பு வலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு ரெட்டை தல என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளார்களாம்.

 

என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க… 'டிரீம் கேர்ள்' சமந்தா

Samantha Get Married 3 Years

தென்னிந்திய ரசிகர்களின் ட்ரீம் கேர்ள் சமந்தா தனது திருமணத்திற்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார். இப்போதுதான் 25 வயதாகிறது. வரிசையாக படங்கள் புக் ஆகி வருகின்றன. அவற்றை முடித்துவிட்டு எனது காதலரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சமந்தா.

தெலுங்கில் ஈகா... தொடங்கி தொடர் வெற்றிதான் சமந்தாவிற்கு. இன்றைய தேதியில் சமந்தாதான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஆந்திராவில் இப்போது, வெளியான ‘சீதம்மா வகிட்லே ஸ்ரீ மல்லி செட்டு... .படமும் வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்ந்து விட்டது. சமீபத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெர்டர்ச்சியான வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் என்ற பெருமையைப் பெறுகிறார் சமந்தா.

ஏ மாயே சேசாவே, பிருந்தாவனம், தூக்கடு, ஈகா, வெற்றி வரிசையில் சீதம்மா படமும் சேர்ந்துவிட்டது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருக்கிறார். இதற்கு முன் மகேஷ் பாபுவுடன் ‘தூக்கடு' என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து, ஜுனியர் என்டிஆர், பவன் கல்யாண் படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் தனது திருமணம் பற்றி மனம் திறந்திருக்கிறார் சமந்தா.

நான் காதலிக்கிறேன்

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு ஒரு பாய்ப்ரண்ட் இருப்பதாக தெரிவித்தார். அவர் தனக்கானவர் என்பதை நான் உணர்ந்துள்ளேன். இப்போது எனக்கு 25 வயதாகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் எனது காதலரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சமந்தா.

இந்த வெற்றி நிரந்தரமில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கைதான் நிரந்தரமானது அதை நான் உணர்ந்துள்ளேன் என்றும் சமந்தா கூறியுள்ளார். தன்னுடைய காதலர் யார் என்பதையோ, அவரின் பெயரையோ சமந்தா வெளியிடவில்லை.

 

உடலை மினுமினுப்பாக்க வெளிநாடு பறக்கும் சுனைனா….

Sunaina Go Foreign Become More Shining

சென்னை: நடிப்பில் நல்ல பெயர் பெற்றிருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியலையே என்ற ஆதங்கம் சுனைனாவிற்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

நமக்கு பின்னால் வந்த நடிகைகள் எல்லாம் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டுவிட்டார்கள் ஆனால் நன்றாக நடித்து தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று தெரிந்தவர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார் சுனைனா.

நல்ல நடிகைதான் ஆனால் கிளாமர் பத்தாது என்பது பட இயக்குநர்களின் கருத்து. இதனை யாரோ சுனைனாவின் காதில் ஓதவே சமர் படத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே கிளாமர் காட்டினார்.

தற்போது செயற்கை சிகிச்சை மூலம் தனது உடலழகை மெருகூட்டியிருக்கும் சுனைனா அதற்காக அடிக்கடி அயல்நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார்.

அங்கு உடம்பில் செய்யப்படும் அதிநவீன சிகிச்சையினால் அவரது உடல் பளபளக்கிறதாம். மேலும் அவர்கள் சொன்னபடி உணவு பழக்கத்தை கடைபிடித்தால் உடம்பு பூசினாற் போன்று சதை போடுகிறதாம். இதைத்தான் சமீபகாலமாக கடைபிடித்து வருகிறார் சுனைனா.

இந்த சிகிச்சையை 3 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் தோல் மினுமினுப்பு காணாமல் போய் பழையபடி மாறிவிடுமாம். சருமத்தை காக்க 3 மாசத்துக்கு ஒரு முறை வெளிநாட்டுக்குச் சென்று பல லட்சங்களை கரைத்து வருகிறார் சுனைனா.

 

சென்னையின் முதல் ஐமேக்ஸ் தியேட்டர் - வேளச்சேரியில் சத்யம் சினிமாஸ் தொடங்குகிறது!

Chennai S First Imax Theater At Velachery

சென்னை: இந்திய சினிமாவின் தலைநகரம் என்று புகழப்படும் சென்னையில் ஐமேக்ஸ் தியேட்டர் இல்லாத குறை விரைவில் தீரப் போகிறது.

சென்னை வேளச்சேரியில் பிரமாண்டமாக உருவாகும் பீனிக்ஸ் மாலில் முதல் ஐமேக்ஸ் அரங்கம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இந்த மாலில் 9 புதிய திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.

சத்யம் சினிமாஸ் இந்த 10 அரங்குகளையும் நடத்துகிறது. இவற்றுக்கு லூக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர்.

சென்னையில் ஏற்கெனவே 16 அரங்குகளை நடத்தி வருகிறது சத்யம் சினிமாஸ். இப்போது வேளச்சேரியில் திறக்கப்படும் மல்டிப்ளெக்ஸ் தவிர, தி நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் 10-க்கும் மேற்பட்ட அரங்குகளை உருவாக்கவிருக்கிறது.

இது தவிர கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையிலும் புதிய அரங்குகளைத் திறக்கவிருக்கிறது சத்யம்.

 

விஸ்வரூபம்... சிக்கலுக்கு காரணமான அந்த 'இருவர்' யார்?

விஸ்வரூபம் படம் சந்திக்கும் பல சிக்கல்களுக்கும் காரணமே, கோடம்பாக்கத்தின் 'புதிய சக்ஸேனா- ஐயப்பன்' என்று வர்ணிக்கப்படும் இருவர்தானாம்.

இதில் ஒருவர் ஒரு முக்கியமான டிவி நிர்வாகி என்றும், மற்றொருவர் ஹீல்ஸ் செருப்பால் தாக்கப்பட்டதாக புகார் கூறிய ஆடிட்டர் என்றும் சொல்கிறார்கள்.

டிடிஎச் விவகாரத்தில் கமலை முழுக்க முழுக்க தவறாக வழிநடத்தியதே இந்த இருவர்தான் என்கிறார்கள்.

குறிப்பாக இந்த ஆடிட்டர், ஏதாவது ஒரு வழியில் பணம் வந்தால் போதும் என்று நினைத்து டிடிஎச் முதலில், தியேட்டர்களில் பிறகு என முதலில் யோசனை கூறி, பின்னர் கமலை பின்வாங்க வைத்தாராம்.

கைமாறிய சேட்டிலைட் உரிமை...

இன்னொரு பக்கம், அரசின் பார்வை விஸ்வரூபத்தின் மீது இத்தனை கடுமையாக இருக்கக் காரணம், இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை வேறு சேனலுக்கு கைமாறியதுதான் என்கிறார்கள்.

ஆரம்பத்தில் பெரும் விலைக்கு ஜெயா டிவி வாங்கியிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது அதை விஜய் டிவிக்கு கைமாற்றியுள்ளார் கமல்.

இதெல்லாம் நிஜமா.. அல்லது வெறும் அனுமானங்களா... என்பதையெல்லாம் காலம்தான் சொல்ல வேண்டும்!

 

'பிக் பாஸ்' வீட்டில் பயங்கர தீ: வீடு முற்றிலும் சேதம்

மும்பை: பிக் பாக்ஸ் ரியாலிட்டி ஷோ நடத்தப்படும் வீட்டில் இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மும்பையில் இருந்து 63 மைல் தொலைவில் உள்ள லோனாவ்லாவில் இருக்கும் பெரிய பங்களாவில் நடந்து வந்தது. அந்த பங்களாவில் அழகான தோட்டம், நீச்சல் குளம், ஜிம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்தன.

bigg boss house gutted massive fire

அந்த வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீர் என்று தீ பிடித்தது. இதைப் பார்த்த காவலாளி உடனே இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டது. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் 2 வாரத்திற்கு முன்பு தான் முடிந்ததால் அந்த வீட்டில் யாரும் இல்லை. அதனால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாகத் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

 

4 வது நார்வே தமிழ் திரைப்பட விழா 2013 - சுந்தரபாண்டியன், கும்கி உள்பட 15 படங்கள் தேர்வு!

15 Films Including Kumki Sundarapandian Selected

நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு கும்கி, சுந்தரபாண்டியன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்பட 15 படங்கள் தேர்வாகி உள்ளன.

நார்வே தமிழ் திரைப்பட விழா 2013- கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த முறை ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான லண்டன், பெர்லின் மற்றும் ஆஸ்லோவில் இந்த விழா ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட படங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை 4 பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது.

தேர்வு செய்யப்பட்ட படங்களை விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ் சங்கர் வெளியிட்டார்.

படங்களின் பட்டியல்:

சுந்தரபாண்டியன்
பிட்சா
வழக்கு எண் 18 / 9
அட்டைக் கத்தி
கும்கி
சாட்டை
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணம்
டோனி
ராட்டினம்
நீர்ப்பறவை
ஒருகல் ஒருகண்ணாடி
புதுமுகங்கள் தேவை
இனியவளே காத்திருப்பேன் (ஆஸ்திரேலியா)
இனி அவன் (இலங்கை)
சகாராப் பூக்கள் (கனடா)

குறும்படங்கள்

விழாவுக்கு குறும்படங்கள் அனுப்புவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் கும்கி பட இயக்குநர் பிரபு சாலமன், நீர்ப்பறவை இயக்குநர் சீனு ராமசாமி, அட்டக்கத்தி இயக்குநர் ரஞ்சித், சாட்டை இயக்குநர் அன்பழகன், ராட்டினம் இயக்குநர் தங்கசாமி, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குநர் பாலாஜி தரணிதரன், புதுமுகங்கள் தேவை பட இயக்குநர் மணீஷ்பாபு, பிட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரெட் ஜெயன்ட் சார்பில் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நார்வே திரைப்பட விழா பிஆர்ஓ ஏ ஜான் அனைவரையும் வரவேற்று, தொகுத்து வழங்கினார்.

 

சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தம் இது.. விஸ்வரூபம் தடை குறித்து பவன் கல்யாண்

Ban On Kamal Hassan S Vishwaroopam Unfair

சென்னை: சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பும், தடையும் என்று தெலுங்கு நடிக்ர் பவன்கல்யாண் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் தடை தொடர்பாக பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரில் அவர்கள் பேசி வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் வெளியிட்ட செய்தியில், விஸ்வரூபம் திரைப்படம் நாளை வெளியாகும். காத்திருங்கள்... அனைத்து தடைகளைத் தாண்டி வெல்க! என்று கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கூறுகையில், மத உணர்வுகளின் பெயரால் விஸ்வரூபத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சேட்டிலைட் உரிமத்துக்கான ‘நிழல் யுத்தம்' இது! என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கமலுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

கேரளாவில் ரிலீஸானது விஸ்வரூபம்: அங்கு படையெடுக்கும் தமிழக ரசிகர்கள்

Vishwaroopam Released Kerala Tn Fan Go There To Watchit   

திருவனந்தபுரம்: கமலின் விஸ்வரூபம் படம் கேரளாவில் 70 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் கேரளாவுக்கு படையெடுக்க தயாராகி வருகின்றனர்.

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் 70 தியேட்டர்களில் இன்று விஸ்வரூபம் ரிலீஸாகியுள்ளது. அவை அனைத்துமே பி மற்றும் சி வகுப்பு தியேட்டர்கள் ஆகும். ஏ வகுப்பு தியேட்டர்கள் எதிலும் விஸ்வரூபம் ரிலீஸ் செய்யப்படவில்லை.

கேரளாவில் படம் ரிலீஸான செய்தி அறிந்த தமிழக ரசிகர்கள் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

 

நாளை விஸ்வரூபம் பார்க்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி... தடை அகலுமா?

Madras Hc Judge See Viswaroopam Tomorrow

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நாளை விஸ்வரூபம் படத்தை பார்க்கிறார். அதன் பிறகே படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நீக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.

விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இஸ்லாமியர்களை மிகவும் கேவலமாகவும், மோசமானவர்களாவும் சித்தரித்துள்ளனர். எனவே இந்தப் படத்தை வெளியிடக் கூடாது. அதை அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இதையடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு படத்திற்கு தமிழக அரசு 2 வார கால தடை விதித்துள்ளது. இந்தத் தடைய நீக்கக் கோரி கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கமல்ஹாசன் தரப்பி்ல ஆஜரான வக்கீல்கள், படத்தில் எந்தவிதமான ஆட்சேபகரமான காட்சிகளும் இல்லை. சென்சார் போர்டும் படத்தை அனுமதித்துள்ளது. இந்த நிலையி்ல் படத்தைத் தடை செய்வதற்கு தமிழக அரசுக்கு உரிமை இல்லை எனறு வாதிட்டனர். தமிழக அரசு சார்பில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை காரணமாக முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 26ம் தேதியன்று படத்தைப் பார்த்து அதன் பிறகு தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டார். அதுவரை ஜனவரி 28ம் தேதி வரை படத்தை திரையிடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி நீதிபதி வெங்கட்ராமனுக்காக விஸ்வரூபம் திரைப்படம் நாளை பிரத்யேகமாக போட்டுக் காட்டப்படவுள்ளது. படத்தைப் பார்வையிடும் நீதிபதி அதன் பிறகு தடையை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து முடிவெடுப்பார்.

ஒருவேளை தடையை நீடிக்க நீதிபதி உத்தரவிட்டால், படம் வெளியாவது பெரும் சிக்கலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Sc Bans Dam 999 Screening Tn

டெல்லி: 'டேம் 999' திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தவிட்டுள்ளது.

தமிழக அரசு ‘டேம்999' என்ற திரைப்படத்தை வெளியிட தடை செய்தது. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி இந்த படம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அணை உடைந்து வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவது போல இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் முன்னதாக 24-ந் தேதியே இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்தது. இந்த படம் தமிழ்நாடு-கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை திரையிட்டால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு கூறியது.

இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக நவம்பர் மாதம் 30-ந் தேதி முதல் 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த திரைப்படம் தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் திரையிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளை தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை கோர்ட்டு கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியை பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது. மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

 

ஆந்திராவில் 'விஸ்வரூபம்' ரிலீஸ்.. ஆனால், ஹைதராபாத்தில் சில தியேட்டர்களில் 'லேது'!

Dandupalya Screened Instead Viswaroopam In Hyderabad

ஹைதராபாத்: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் இன்று ஹைதராபாதில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் படம் ரிலீசாகவில்லை. பிற இடங்களில் படம் திரையிடப்பட்டுள்ளது. ஹைதராதாத்தில் விஸ்வரூபம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ஒரு தியேட்டரில் கன்னடப் படமான தண்டுபால்யா போடப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திராவின் பிற பகுதிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை, முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் நாள். மீலாடி நபி விழா வேறு. எனவே படத்தை ஹைதராபாத்தில் முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதிகளில் எந்த தியேட்டரும் திரையிடவில்லை என்று கூறப்படுகிறது. நாளை வெளியாகுமா என்றும் தெரியவில்லை. அதே நேரத்தில் குண்டூர், சித்தூர் உள்ளிட்ட பல ஆந்திர மாவட்டங்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் படத்தை தமிழகம், புதுவையில் முழுமையாக தடை செய்துள்ளன மாநில அரசுகள். கர்நாடகத்திலும் சட்டம் ஒழுங்கு காரணமாக படத்தைத் திரையிடவில்லை.

 

விஸ்வரூபம் தடை: ரஜினிகாந்த் சத்தத்தையே காணோம்

 

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்


Rating:
3.5/5

விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை!

அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல்.

நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும், வில்லங்க பூஜாவும் வில்லன்கள் கையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

viswaroopam special review
கமல் திடீரென வீராவேசமாக வழக்கம்போல் ஹீரோ, வில்லன்களை அடித்து நொறுக்க, தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்க, ஆக்‌ஷன் படமாக வேறு தளத்தில், ஆப்கன் தலிபான் பின்னணியில் விரிகிறது.

ப்ளாஷ்பேக்கில் அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார் கமல். ஆனால் உண்மையில் அவர் ரா அதிகாரி. அமெரிக்க எப்பிஐக்கு உதவுகிறார். அமெரிக்காவை பழிவாங்க நியூயார்க் நகரையே அழிக்க புறாக்களைப் பயன்படுத்தி அணுகுண்டு வைக்கும் தலிபான்கள் திட்டத்தை எப்பிஐயுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை!

கமல் நன்றாக நடித்திருக்கிறார்... பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஸ்வீட் இனிப்பாக இருக்கிறது என்று சொல்வது அபத்தத்துக்கு இணை!. மனுஷன் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். முகத்தில் தெரியும் வயதின் ரேகைகள்தான் கவலை தருகிறது. ஆனால் அதற்கேற்ப கதையை அமைத்துக் கொண்டதுதான் கமல் ஸ்பெஷல்!.

பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் தெரிந்த பிற முகங்கள் சேகர் கபூர், நாசர் மட்டும்தான்.

இது வரையிலும் தமிழ்த் திரையில் காட்டப்படாத நியூயார்க் நகரின் ஏனைய இடங்கள் எல்லாம் படமாக்கியுள்ளார்கள். பார்க்காதவர்கள், அட நியூயார்க் இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப்பட்டுப் போவார்கள்.

ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல்.

சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான் லாய்.

ஓளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் கொஞ்சம் தூங்கி விட்டார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம்.

அந்த புறாக்காட்சிகள், ஒரு மெக்சிகன் படத்திலிருந்து தழுவல் போலிருக்கே கமல் சார்!

முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று என்று காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் தமிழகத்தை பற்றி எங்கே வருகிறது என்று தேட வேண்டியுள்ளது. ஒரே ஒரு காட்சியில் வில்லன் (தலிபான் தலைவர் முல்லா ஒமர்) தமிழ்நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார். அத்தோடு மதுரை, கோவை, அகமதாபாத் என்று பஸ்ஸுக்கு ஆள் கூப்பிடுவது போல் வரிசையாக சில ஊர் பெயர்களை சொல்கிறார்.

மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழுக்கு தெரிந்த ஒரே முகம் நாசர் மட்டும்தான்.

பின்லேடன் பற்றி ஒபாமா சொல்லும் போது, பிண்ணனியில் கமல், ஆண்ட்ரியாவின் உரையாடல் இயல்பாக இருக்கிறது.

ரூ. 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதை தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் அல்லவா இது!. நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும்.

விஸ்வரூபம் 2 இந்தியாவில் தொடரும் என்று முடித்திருந்தாலும், அது அமெரிக்காவில் தொடரட்டும் என்றுதான் அட்வான்ஸ் கொடுத்திருப்பார் போலிருக்கிறது ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன்.

சராசரி ஹாலிவுட் படங்களை விட நன்றாகவே படமாக்கியுள்ளார் கமல். நடுவில் கொஞ்சம் கத்தரியை போட்டிருக்கலாம்.

Any how... கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!

Read in English: Viswaroopam Movie Review
 

பெங்களூரில் விஸ்வரூபம் இன்று ரிலீஸ் இல்லை - இது விநியோகஸ்தர்கள் முடிவு!

Viswaroopam Not Releasing Bangaloru

பெங்களூர்: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் பெங்களூரிலும் இன்று வெளியாகவில்லை.

சட்டம் ஒழுங்கு காரணங்களால், தியேட்டர்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், படத்தை வெளியிட வேண்டாம் என்று விநியோகஸ்தர்களே இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படத்துக்கும் ஏற்படாத நிலை விஸ்வரூபத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படம் இப்போது மதப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுப்பூர்மானது, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசு படத்தைத் தடை செய்துவிட்டது. இது தொடர்பான போராட்டங்களுக்கும் 144 தடை விதித்துள்ளது.

இந்த தடையை எதிர்த்து கமல் உயர்நீதிமன்றத்துக்குப் போனார். ஆனால் அங்கும் நீதிபதி தடையை விலக்க மறுத்துவிட்டார்.

எனவே தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகவில்லை. பல ஆயிரம் ரசிகர்கள் இதற்காக முன்பதிவு செய்திருந்தனர். அதற்கும் சரியான பதிலில்லை.

இந்த நிலையில் பக்கத்து மாநிலங்களிலும் இந்தப் படத்தை திரையிட தயக்கம் காட்டியுள்ளனர்.

கர்நாடகத்தில் இந்தப் படம் வெளியாகவில்லை. இன்று வெள்ளிக்கிழமை, மீலாடி நபி வேறு என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காட்டி பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்தை திரையிட எந்த தியேட்டர் மற்றும் விநியோகஸ்தரும் முன்வரவில்லை.

ஒரு வேளை நாளை இந்தப் படம் வெளியாகக் கூடும் என்கிறார்கள்.

 

விஸ்வரூபம்- அமெரிக்காவில் அனைத்து அரங்குகளிலும் ஹவுஸ்புல்!!

Viswaroopam Gets Excellent Opening Us

சான் ஓசே (யு.எஸ்): தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ள விஸ்வரூபம் படத்துக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகின் மேற்கு கோடியில் வெளியாகியுள்ள தமிழ்ப் படத்திற்கு, நாயகன் கமல் ப்ரமோட் செய்கிறார். ஆனால் உலகின் பல பகுதிகளிலும் வெளியாகிய விஸ்வரூபம் தமிழகம், புதுவை மற்றும் பெங்களூரில் வெளியாகவில்லை. இது தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய விவகாரமாகும்.

அமெரிக்காவில் கிழக்கே நியூயார்க் முதல் மேற்கே லாஸ் ஏஞ்சல்ஸ் வரை அனைத்து பெரும் நகரங்களிலும் வியாழக்கிழமை இரவே சிறப்புக் காட்சிகள் நடந்துள்ளன. கலிஃபோர்னியா சிறப்புக் காட்சிகள் இன்னும் முடியவில்லை.

கமல் ஹாசன், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஓசே மற்றும் ஃப்ரீமாண்ட் நகரங்களில் நேரடியாக ரசிகர்களை சந்திக்கிறார். அனைத்து காட்சிகளுக்கும் அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. ஏனைய நகரங்களிலும் சிறப்புக் காட்சிகள் ஹவுஸ் புல்லாகியுள்ளது.

தமிழ் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது ஆனால் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது என்ற செய்தி, அமெரிக்காவில் தமிழ் தெலுங்கு, இந்தி பேசும் மக்களிடையே பெரும் ஆவலை தூண்டிவிட்டுள்ளது. தடை செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்ற ஆவலே, பெரும் விளம்பரமாகிவிட்ட்து.

 

கமலை நினைத்து மனம் கலங்குகிறேன் - ரஜினி அறிக்கை

Rajini Deeply Hurts After Hear The Ban On Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் கமல் எவ்வளவு துன்பத்துக்கு ஆளாகியிருப்பார் என்பதை நினைத்து மனம் கலங்குகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார்.

இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்' திரைப்படப் பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

கமல் எனது 40 ஆண்டுகால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத் திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததிலிருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

மேலும் கமலஹாசன் இந்த படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது.

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுசா தடை செய்ய வேண்டும் என்ற கருத்திலிருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாதுநபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Rajinikanth Statement About Viswaroopam Ban

Rajinikanth Statement About Viswaroopam Ban