மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையராஜா!

மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையராஜா!

சென்னை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக இசையமைக்கக் கோரி தன்னிடம் வந்த இயக்குநர் மிஷ்கினை முதலில் வெளியே போகச் சொன்னாராம் இசையமைப்பாளர் இளையராஜா.

இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் - இளையராஜா இணைந்த முதல் படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு அருமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் தந்திருந்தார் ராஜா.

ஆனால் இரண்டு பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மீதியை சிடியில் மட்டும் வைத்துக் கொண்டார் மிஷ்கின்.

இடையில் யுத்தம் செய், முகமூடி என இரண்டு படங்களைச் செய்திருந்தார் மிஷ்கின். இவற்றுக்கு இசையமைத்தவர் கே எனும் இளைஞர். இவரும் ராஜா ரசிகர்தான். முகமூடி படத்தில் வரும் ஒரு பாட்டில், 'ராஜா இல்லாத சங்கீதமா' என ஒரு வரியே இடம்பெற்றிருக்கும், பின்னணியில் அன்னக்கிளி இசை ஒலிக்க.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மிஷ்கின் கூறுகையில், "முதலில் என்னை பார்த்தவுடன் வெளியே போ என்றுதான் சொன்னார். நந்தலாலா படத்தில் அவரது பாடல்களை உபயோகிக்கவில்லை என்ற வருத்தத்தை உணர்ந்த நான் அதற்கான காரணங்களை சரிவர விளக்கிய பின்னர் ஒரு மூத்த சகோதரர் போல் கேட்டுக் கொண்டார்.

பின்னர் தயங்கி தயங்கி இப்படத்தில் பாடல் இல்லை என்று சொன்னதும் சற்றே அதிர்ச்சியடைந்தவர் பின்னர் கதையை முழுமையாகக் கேட்ட பின்னர் முழு சம்மதம் எனச் சொன்னார்.

இப்படத்தின் முன்னணி இசைதான் படத்தின் பிரதானம் என்று இருவரும் உணர்ந்து பணியாற்றத் தொடங்கி விட்டோம் . பின்னணி இசை என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. திரையில் நாம் படம் பார்க்கும் முன்னரே நம் செவியில் வந்து விழும் இசையை எப்படி பின்னணி இசை என்பது. அது முன்னணி இசைதானே... தவிர இசைஞானி என்றுமே முன்னணிதான். பாடல் இல்லையென்றாலும் இது அவரது ராஜாங்கமே!

இப்படத்தில் கதாநயாகியும் இல்லை. அது கதை எடுத்தமுடிவு. நான் எடுத்த முடிவு அல்ல. இந்த படத்தின் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதன் கூடுதல் பலமே சில முடிவுகளை எடுக்க சுதந்திரம் இருப்பதுதான். என்னுடைய நிறுவனமான லோன் வுல்ஃப் சார்பில் தயாரிக்கப்படும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ' உங்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் ஒரு த்ரில்லர் படமாகும். பெரும் பகுதி சென்னையை சுற்றி இரவு நேரத்தில் மட்டும் படமாக்கப்பட்டது. வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து இருந்த ஸ்ரீ இப்படத்தில் பாதிக்க பட்ட கல்லூரி மாணவனாக வாழ்ந்து காட்டி இருக்கிறான். படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ள இப்படத்தின் வெளியீடு செப்டம்பர் இறுதியில் இருக்கும்," என்றார்.

 

முனி ரீமேக் உரிமையை வாங்கிய சஞ்சய் லீலா பன்சாலி

முனி ரீமேக் உரிமையை வாங்கிய சஞ்சய் லீலா பன்சாலி

மும்பை: முனி படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

பாலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. தேவதாஸ், ப்ளாக் போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தந்த பன்சாலி, பிற மொழியில் வெற்றி பெற்ற படங்களை தனது பேனரில் தயாரித்தும் வருகிறார்.

சமீபத்தில் சிறுத்தை படத்தின் உரிமையை வாங்கி, அதை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார். பிரபு தேவா இயக்கிய இந்தப் படம் வசூலைக் குவித்தது.

இப்போது தமிழ் - தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் முனி 2 (காஞ்சனா) ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.

இந்தப் படத்தை ராகவா லாரன்சே இயக்கப் போகிறார். இளம் நடிகர் ஒருவரை நாயகனாக ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ளார்களாம்.

காஞ்சனா படத்தில் சரத்குமார், ராகவா லாரன்ஸ், லட்சுமி ராய், கோவை சரளா நடித்திருந்தனர். ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார்.

 

நினைத்தது யாரோ.. படம் பார்த்து உற்சாகமான தயாரிப்பாளர்கள்!

தொடர்ந்து வெற்றிப் படங்களையும் வெள்ளி விழாப் படங்களையும் தந்த இயக்குநர் விக்ரமன், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உருவாக்கியுள்ள படம் நினைத்தது யாரோ.

சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது படம் வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் மற்றும் இமானுவேல் ஆகியோர், சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர்.

நினைத்தது யாரோ.. படம் பார்த்து உற்சாகமான தயாரிப்பாளர்கள்!

அவர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், "விக்ரமன் மிக அருமையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இனி புதுப் புது இயக்குநர்களை வைத்து படங்கள் தயாரிக்க பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது நினைத்தது யாரோ படம்," என்றனர்.

இப்போது சசிதரன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் வாராயோ வெண்ணிலாவே என்ற படத்தை தயாரித்து கொண்டிருக்கின்றனர் ரமேஷும் இமானுவேலும்.

அடுத்து இரண்டு புதிய இயக்குனர்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

 

தோழிகள் பட்டாளத்துக்கு தயாரிப்பாளரை செலவு செய்ய வைக்கும் நடிகை

சென்னை: மூனுஷா நடிகை ஷூட்டிங்கின்போது தோழிகளுடன் சேர்ந்து போடும் ஆட்டம் படக்குழுவை கடுப்பேத்தியுள்ளதாம்.

மூனுஷா நடிகை ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துவதற்கு பெயர் போனவர். இந்நிலையில் அவர் ஷூட்டிங்கிற்கு தோழிகள் பட்டாளத்தையே அழைத்து வருகிறாராம். தன்னுடன் வரும் பட்டாளம் அங்கே தங்குவதால் தயாரிப்பாளர் பர்ஸ் படக்கென்று காலியாகிவிடுகிறதாம். மேலும் அவர் தனது காட்சிகளில் கவனம் செலுத்தாமல் தோழிகளுடன் ஒரே அரட்டையாம்.

இதைப் பார்க்கும் படக்குழுவினர் இந்த அம்மாவை என்ன சொல்லி திருத்துவது என்று தெரியாமல் உள்ளார்களாம். அண்மையில் கூட அவருக்கு ஒரு பெரிய இயக்குனரின் படம் கிடைக்கிற மாதிரி இருந்து பால் நடிகைக்கு அந்த வாய்ப்பு சென்றுவிட்டது. ஒரு வேளை இயக்குனருக்கு மூனுஷாவின் லூட்டி விஷயம் தெரிந்திருக்குமோ?

ஏற்கனவே மார்க்கெட் நன்றாக இல்லாதபோது அவர் இப்படி லூட்டி அடித்தால் பட வாய்ப்புகள் எப்படி வரும்?

 

மன்மோகனுக்கும், தாய்லாந்து பிரதமருக்கும் என்ன வித்தியாசம்?: மாதவன் சொல்கிறார்

சென்னை: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், தாய்லாந்து பிரதமர் இங்லக் ஷினாவத்ராவுக்கும் உள்ள வித்தியாசத்தை நடிகர் மாதவன் ட்விட்டரில் ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்திற்கு நேற்று சென்றனர். அவர்கள் விமானம் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.

மன்மோகனுக்கும், தாய்லாந்து பிரதமருக்கும் என்ன வித்தியாசம்?: மாதவன் சொல்கிறார்

இந்நிலையில் நடிகர் மாதவன் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். அதில் ஒரு பக்கம் மன்மோகனும், சோனியாவும் விமானத்தில் இருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்கின்றனர். மறுபக்கம் தாய்லாந்து பிரதமர் இங்லக் ஷினாவத்ரா தங்கள் நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிக்கே சென்று தண்ணீரில் நின்று மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

இரு நாட்டு பிரதமர்களுக்கு உள்ள வித்தாயசத்தை பாருங்கள் என்று மாதவன் சொல்லாமல் சொல்கிறார்.

 

நாளை தலைவா இசை... விஜய் - அமலா பால் பங்கேற்பு

நாளை தலைவா இசை... விஜய் - அமலா பால் பங்கேற்பு

சென்னை: விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை நாளை வெளியாகிறது. நாளை மறுதினம் விஜய் பிறந்த தினம் என்பதால், நாளை இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள்.

இயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடக்கிறது.

தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

தலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது.

இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது.

 

பவருக்கு பதில்... இதோ சகலகலா டெரர் ஸ்டார்!

பவருக்கு பதில்... இதோ சகலகலா டெரர் ஸ்டார்!

பவர் ஸ்டார் ஆஃபிசியலாக டெல்லி வரை போயிருக்கிறார் அல்லவா... (கோடம்பாக்கத்தில் இப்போது அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள்!).

இதனால் பவர் ஸ்டார் ஒப்பந்தமாகியிருந்த ஏகப்பட்ட படங்களில் அவருடைய போர்ஷனில் யாரை நடிக்க வைப்பது... அல்லது பவர் சிறைவாசம் முடிந்து வரும்வரை காத்திருப்பதா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இவர்களில் ராம நாராயணனும் ஒருவர். பவரை ஹீரோவாக வைத்து ஆர்யா சூர்யா என்ற படத்தை எடுத்துவருகிறார். பவரை வைத்து ஏகப்பட்ட காட்சிகளை ஷூட் பண்ணிவிட்டார். இப்போது கடைசி கட்டத்தில் பவர் ஸ்டார் இல்லை.

இப்போது இதற்கும் ஒரு அப்பாடக்கர் ஐடியா வைத்திருக்கிறார் ராம நாராயணன்.

பவர் ஸ்டார் பகுதிகளை எடுத்தவரைக்கும் அப்படியே வைத்துக் கொண்டு, மீதிக் காட்சிகளுக்கு, பத்து பவர் ஸ்டார்களை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கும் டி ராஜேந்தரை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

டிவி சீரியல்களில் ஒத்து வராத நடிகரை சாகடித்துவிட்டு அல்லது அவருக்கு பதில் இவர் நடிப்பார் என்று டைட்டில் கார்டு போடுவது போல போட்டுவிட்டு, டிஆரை நடிக்க வைக்கப் போகிறாராம்.

ராம நாராயணனின் இந்த ஐடியா, பவரை புக் பண்ணியிருந்த பலருக்கும் பிடித்துப் போனதால், பெட்டியோடு இந்திப் பிரச்சார சபா பக்கம் போய்க் கொண்டிருக்கிறார்களாம் (அங்குதான் இருக்கு டி ஆர் வீடு)!

 

ரசிகர்களே... ப்ளீஸ் கொஞ்ச நாளைக்கு ஷாரூக்கான கட்டிப்பிடிக்காதீங்க!

ரசிகர்களே... ப்ளீஸ் கொஞ்ச நாளைக்கு ஷாரூக்கான கட்டிப்பிடிக்காதீங்க!

மும்பை: ரசிகர்களைக் கண்டவுடன் கட்டிப்பிடித்து நலம் விசாரிக்கும் நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். ஆனால், தற்போது அதற்கு தடை விதித்திருக்கிறார்களாம் டாக்டர்கள்.

சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஷூட்டிங் போது ஷாரூக்கானிற்கு தோள் பட்டையில் அடி பட்டது. முதலில் அதற்கு லண்டனில் சென்று ஆபரேஷன் செய்து கொள்ள திட்டமிட்ட ஷாரூக்கான், பின்னர் முடிவை மாற்றி மும்பையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டது தெரிந்த விஷயம் தான்.

ஆபரேஷன் காரணமாக ஆறு வார காலம் கட்டாயம் ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்திய டாக்டர்கள், கடினமான காட்சிகளில் நடிக்கவும் தடா போட்டார்கள். தோள்பட்டை வழி குணமாகும் வரை யாரையும் கட்டி பிடிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்களாம்.

அதனால், இன்னும் கொஞ்ச காலத்திற்கு ரசிகர்கள் எட்ட நின்று ஷாரூக்கை ரசிக்க வேண்டியது தான். அப்போது தான் ஷாரூக் சீக்கிரம் குணமடைவாராம்.