‘வேலாயுதம்’ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘வேலாயுதம்’ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்

3/14/2011 3:43:07 PM

வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா ‌மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ‌சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 'வேலாயுதம்Õ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் டாம் டெல்மர் அமைக்கும் சண்டை காட்சியில் விரைவில் நடிக்க இருக்கிறார் விஜய்.


Source: Dinakaran
 

ஏஞ்சலினாவை பார்த்து தைரியம் வந்தது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏஞ்சலினாவை பார்த்து தைரியம் வந்தது

3/15/2011 11:43:59 AM

சினேகா கூறியது: குடும்ப பாங்காகவும் காதல் நாயகியாகவும் என்னை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜயசாந்தி நடித்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்Õ ரீமேக்கான 'பவானிÕ படத்தில் நடிக்க கேட்டு கதை சொல்ல வந்தார் இயக்குனர் கிச்சா. ஆச்சர்யமாக இருந்தது. 'இது போல் நடித்ததில்லை. இந்த வேடத்தை 100 சதவீதம் சரியாக செய்ய முடியுமா?Õ என்று தெரியவில்லை என தயங்கினேன். ஆனால் எனக்கு நம்பிக்கையூட்டினார் இயக்குனர். என் மீது அவர் நம்பிக்கை வைத்திருக்கும்போது எனக்கே தைரியம் வந்தது. போலீஸ் வேடத்தில் நடிப்பதற்கு முன் எப்படியெல்லாம் அதற்கான பயிற்சி தேவை என்பதை கேட்டறிந்து பயிற்சி பெற்றேன். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி நடித்த 'லாரா கிரஸ்ட்Õ, Ôடாம்ப் ரெய்டர்Õ ஆகியவை அவரை ஒரே இரவில் ஆக்ஷன் ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த படங்கள். அவை இரண்டையும் குறைந்தது ஆறு முறை பார்த்தேன். அதன்பிறகே என் மேல் நம்பிக்கை வந்தது. பிறகு ஒப்புக்கொண்டேன். முதல்நாள் ஷூட்டிங்கில் வரவழைத்துக்கொண்ட தைரியத்தை கிளைமாக்ஸ் வரை மனதில் நிறுத்திக் கொண்டேன். தற்போது இதுபோல் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் ஆக்ஷன் ஹீரோயினாக தொடர்ந்து நடிப்பதற்கு முழுமையாக தயாராக நேரம் தேவைப்படுகிறது.


Source: Dinakaran
 

பூபதி பாண்டியன் மீது ஸ்ரேயா ரெட்டி தாக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பூபதி பாண்டியன் மீது ஸ்ரேயா ரெட்டி தாக்கு

3/15/2011 11:46:28 AM

காமெடி, காதல், சென்டிமென்ட் என்று கமர்ஷியல் பார்முலாவை வைத்து படங்களை தந்தவர் பூபதி பாண்டியன். தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்’, 'திருவிளையாடல் ஆரம்பம்’, விஷால் நடித்த 'மலைக்கோட்டை’ படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு கதை உருவாக்கினார். இந்த கதையை கேட்டு அதில் நடிக்க விருப்பம் தெரிவித்தார் விஷால். இயக்குனரும் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகளில் தீவிர ஈடுபட்டார். இதற்கிடையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. திடீரென்று தனது புதிய படத்தில் நடிக்க ஆர்யாவை தேர்வு செய்திருக்கிறார் பூபதி.  விஷாலின் அண்ணியும் தயாரிப்பாளருமான நடிகை ஸ்ரேயா ரெட்டி இது பற்றி கருத்து தெரிவித்தபோது, 'பூபதி பாண்டியன் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. இதனால் அவரது இயக்கத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Source: Dinakaran
 

ஹீரோயின் மீது நிகிதா பாய்ச்சல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோயின் மீது நிகிதா பாய்ச்சல்

3/14/2011 3:31:43 PM

'சரோஜா’ படத்தில் நடித்த பின், சேரனுடன் 'முரண்Õ படத்தில் நடிக்கிறார் நிகிதா. அவர் கூறியது: சமீபத்தில்தான் எனது தந்தை இறந்தார். அந்த வேதனையில் இருக்கும்போது எனக்கும் கன்னட நடிகர் தர்ஷனுக்கும் திருமணம் என்று புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது மேலும் வேதனையாக இருந்தது. 'பிரின்ஸ்Õ என்ற படத்திற்காக அவருடன் திருமண காட்சியில் நடித்தேன். அதைத்தான் புரளியாக கிளப்பி இருக்கிறார்கள். இதே படத்தில் ஜெனிபர் கோட்வால் நடித்துள்ளார். மும்பையில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். ஆனால் ட்விட்டரில் என்னைப் பற்றி குறிப்பிடும்போது 'எனக்கு நிகிதா நண்பரல்லÕ என்று கூறி இருக்கிறார். 'பிரின்ஸ்Õ படத்தை சிறப்பு காட்சி திரையிட்டார்கள். எனது நடிப்பை நிறைய பேர் பாராட்டினர். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் இப்படி நடந்து கொள்கிறார். எனக்கு காதலன் யாரும் இல்லை. தர்ஷன் நல்ல நண்பர். சினிமாவில் 9 வருடமாக இருக்கிறேன். அதனால் புகழ் கிடைத்தது. இனிமேல் என் எதிர்கால வாழ்க்கையை யோசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. காதல் திருமணம், குடும்பத்தார் நடத்தி வைக்கும் திருமணம் என எதுவாக இருந்தாலும் ஓகேதான்.


Source: Dinakaran
 

மீண்டும் விக்ரமன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் விக்ரமன்

3/14/2011 12:42:57 PM

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் விக்ரமன் இயக்கும் படம் 'இளமை நாட்கள்'. இதில் முழுவதும் புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். பால்ராஜ் இசை. கே.எஸ்.ராஜன் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது. ப்ளஸ் டூ மாணவர்கள் பற்றிய கதையான இந்தப் படத்தில், அவர்களுக்குள் ஏற்படும் காதல், நட்பு, மோதல் ஆகியவற்றை யதார்த்தமாகச் சொல்கிறார்களாம்.


Source: Dinakaran
 

த்ரிஷாவின் மெகா ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

த்ரிஷாவின் மெகா ஆசை

3/15/2011 11:55:48 AM

விடுமுறை என்றால் த்ரிஷாவின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. பார்ட்டி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது நண்பர்களுடன் கேம்ப் என விதவிதமாக அனுபவிப்பது அவரது வழக்கம். சமீபத்தில் தோழிகளுடன் ஜெய்ப்பூருக்கு சென்றார் த்ரிஷா. அங்குள்ள காட்டுப் பகுதிகளுக்கு சென்று விலங்குகளை பார்த்து வந்தது மறக்க முடியாத அனுபவம் என பூரிக்கிறார். த்ரிஷாவுக்கு ஒரு ஆசையாம், நடுக்காட்டில் உலவும் மெகா சைஸ் புலிகளைப் பார்க்க வேண்டுமாம். அதேபோல, நல்ல ஏற்ற இறக்கம் கொண்ட முரட்டு மலையில் ட்ரெக்கிங் போகவும் ஆசையாம்.


Source: Dinakaran
 

விக்ரமுக்கு டாக்டர் பட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விக்ரமுக்கு டாக்டர் பட்டம்

3/14/2011 12:41:03 PM

ஏராளமான வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்தவர், விக்ரம். இவருக்கு இத்தாலியிலுள்ள பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காக, இந்த விருதை விக்ரமுக்கு வழங்குவதாக, இத்தாலி யுனிவர்சிட்டா பாப்புலேர் டெக்லி ஸ்டெடி டிமிலானோ பல்கலைக்கழக இயக்குனர்களும், செனட் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். மே 29ம் தேதி, இத்தாலி யுனிவர்சிட்டியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் விக்ரம் இந்தப் பட்டத்தை பெறுகிறார்.


Source: Dinakaran
 

அரவான் உண்மை சம்பவ கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அரவான் உண்மை சம்பவ கதை

3/14/2011 12:39:47 PM

வசந்தபாலன் இயக்கும் 'அரவான்' படத்தில், நடிக்கும் தன்ஷிகா கூறியதாவது: வரும் 18-ம் தேதி முதல், 'அரவான்' படத்தில் நடிக்கிறேன். 300 வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. முதல்முறையாக ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறேன். இதற்காக, இந்தியில் ஜீனத் அமன் நடித்த 'சத்யம் சிவம் சுந்தரம்', தமிழில் ராதா நடித்த 'முதல் மரியாதை', ரஞ்சிதா நடித்த 'நாடோடி தென்றல்' படங்களை பார்க்குமாறு வசந்தபாலன் சொன்னார். அந்தப் படங்களை பார்த்தேன். அவற்றில் நடித்த ஹீரோயின்கள், சில காட்சிகளில் ஜாக்கெட் அணியாமல் நடித்திருப்பார்கள். அதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டேன்.


Source: Dinakaran
 

சுவாரஸ்யமான அனுபவம் :ஓவியா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சுவாரஸ்யமான அனுபவம் : ஓவியா!

3/14/2011 12:45:46 PM

'களவாணி' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஓவியா, இந்த படத்தின் கன்னட, தெலுங்கு ரீமேக்கில் அதே கேரக்டரில் நடித்து வருகிறார். இதுபற்றி ஓவியா கூறியதாவது: தமிழில் 'களவாணி' ஹிட்டானதால், கன்னட, தெலுங்கு வாய்ப்புகள் கிடைத்தன. கன்னடத்தில் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர் பிரதீப் ராஜா. மேலும் ஒரு மழை பாடலும் படத்தில் இருக்கிறது. கன்னட ரசிகர்களுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் இதே வேடத்தில் நிகிலுடன் நடிக்கிறேன். ஒரே வேடத்தை வெவ்வேறு மொழிகளில் செய்வதால் போரடிக்கவில்லையா என்கிறார்கள். இதில் ஏன் போரடிக்கப் போகிறது? ஒவ்வொரு முறையும் முதலில் நடித்ததை விட இன்னும் சிறப்பாக நடிக்க முடியும். இது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கிறது. தமிழில், ராசு. மதுரவன் இயக்கத்தில் நடித்துள்ள 'முத்துக்கு முத்தாக' விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கூடை பந்து பிளேயராக நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு ஓவியா கூறினார்.


Source: Dinakaran
 

சிங்கம் புலியில் ஒரு பாடல் நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிங்கம் புலியில் ஒரு பாடல் நீக்கம்

3/14/2011 12:48:52 PM

'சிங்கம் புலி' படத்தில் ஒரு பாடலை நீக்கியுள்ளதாக அதன் இயக்குனர் சாய்ரமணி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 8 வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் கதையை தயார் செய்து வைத்திருந்தேன். பல ஹீரோக்களிடம் சொல்ல முயற்சித்தும் நடக்கவில்லை. கதை கேட்ட சில ஹீரோக்கள் வில்லனாக நடிக்க தயக்கம் காட்டினார்கள். அதனால் அண்ணன், தம்பி கதையை இரட்டைவேட கதையாக மாற்றினேன். சில ஹீரோக்களுக்கு பிடித்திருந்தது. கால்ஷீட் இல்லை. கடைசியில் சூப்பர்குட் சவுத்ரி தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவுக்கு சொல்லச் சொன்னார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஜீவா கதை கேட்டார். உடனே ஒப்புக்கொண்டா£ர். படம் நீளமாக இருக்கிறது என்று பலரும் சொன்னதால் ஒரு பாடல் காட்சியை நீக்கி இருக்கிறோம். இதே கதையை தெலுங்கு, இந்தியில் உரிமம் கேட்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Source: Dinakaran
 

விஷால் படத்தில் கவர்ச்சி பாடகி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஷால் படத்தில் கவர்ச்சி பாடகி

3/14/2011 3:35:24 PM

பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ரெட்டி ஹீரோயின். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. கவர்ச்சி பாப் பாடகி சோஃபி சவுத்ரியை இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் பிரபு தேவா. இதில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளார். இது பற்றி சோஃபி கூறும்போது, 'Ôபிரபு தேவா இயக்கும் படத்துக்காக பாலிவுட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது நண்பரும் டிசைனருமான மனிஷ் மல்ஹோத்ரா, இப்படத்துக்காக எனக்கு காஸ்டியூம் வடிவமைத்திருக்கிறார். தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. கோலிவுட்டில் நல்ல கதைகளுடன் படங்கள் வெளி வருகின்றன. மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க ஆசை. நான் கமல் ரசிகை. ரஜினி, விஜய், அஜீத் ஆகியோரும் பிடிக்கும். அவர்களுடன் நடிக்க ஆசை. பிரபு தேவா படத்தில் நடிக்கும் பாடல் பற்றி விரிவாக இப்போது கூற முடியாது. தமிழில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது முழுமையாக நிறைவேறும் என்ற எதிர்பார்க்கிறேன்ÕÕ என்றார்.


Source: Dinakaran
 

ரியல் எஸ்டேட் பிசினசில் கவனம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரியல் எஸ்டேட் பிசினசில் கவனம்

3/15/2011 12:01:28 PM

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையான நமீதா, இப்போது ஒரு பிரமாண்ட பிஸினஸிலும் குதித்துள்ளார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ரியல் எஸ்டேட் பிசினசிலும் கவனம் செலுத்தி வருகிறார் நமீதா. கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்றுதான் இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாகத் துவங்கினார் நமீதா. சென்னையிலும் இதுபோன்ற பிஸினஸிலும் உருவாக்கித் தரும் திட்டத்தையும் கையோடு துவங்கியுள்ளார் நமீதா.





Source: Dinakaran