படத்தின் ஆடியோவிழாவிற்கு வரும் நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளின் அலம்பல் தாங்க முடியலைப்பா என்று சொல்லும் அளவிற்குத்தான் இன்றைக்கு பெரும்பாலான தொகுப்பாளினிகள் நடந்து கொள்கின்றனராம்.
ஐ பட ஆடியோ வெளியீட்டுவிழாவில் இதை நன்றாகவே உணர்ந்தனர் பட தயாரிப்பாளர்கள். அதேபோல மற்றொரு சம்பவம் இன்னொரு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அரங்கேறியுள்ளதாம்.
பிரபல டிவியின் அலுவலகம் தொடரில் நடிக்கும் நடிகை ஒருவர் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகப் போயிருக்கிறார். அவருடன் சென்றவரோ படு கவர்ச்சியாகப் போனாராம்.
அது மட்டுமல்லாது வந்த பிரபலங்களுக்கு பூங்கொத்து கொடுத்தது மேற்படி தொகுப்பாளினிகள்தானாம். படத்தயாரிப்பாளர்கள்தான் பூங்கொத்து கொடுப்பார்கள். வரவேற்று மேடைக்கு அழைத்து வருவார்கள். ஆனால் இந்த தொகுப்பாளிகள் செய்த செயல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாம் தயாரிப்பாளருக்கு.
பிரபலங்கள் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கும் போதெல்லாம் கிண்டல் அடித்து பேசி சிரித்தாராம் அலுவலகம் நடிகை. அதோடு மட்டுமல்லாது ஆடியோ சிடியை வெளியிடும் போது நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் பிரபலங்களின் அருகில் நின்று போஸ் கொடுத்துள்ளனர். இதுதான் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்திவிட்டதாம்.
இது என்ன வந்த வேலையை விட்டு வேண்டாத வேலை பார்த்துக்கிட்டு!இந்த தொகுப்பாளினிகளோட ஒரே குஷ்டமப்பா....... என்று பேசிக்கொண்டனர் நிகழ்ச்சி வந்தவர்கள்.