நயன்தாரா சீதையாக நடித்த ராமராஜ்யம் இப்போது தமிழில்!


 

த்ரிஷா அழுகை சொல்லும் சேதி!


 

ரஜினிக்கு பச்சை குத்தணும் - ஒரு டாட்டூ கலைஞரின் ஆசை


 

மலையாளத்தில் ஹீரோயின்கள் சம்பளம் உயர்ந்தது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோலிவுட்டைபோல் மல்லுவுட்டிலும் ஹீரோயின்கள் சம்பளம் உயர்ந்து வருகிறது. கோலிவுட், டோலிவுட் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகைகள் சிலரின் சம்பளம் லட்சங்களில் தொடங்கி இன்று கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மலையாள படங்களில் குறைந்த சம்பளமே கிடைக்கிறது என்பதால் முன்னணி நடிகைகள் அங்கு நடிக்க தயக்கம் காட்டி வந்தனர். இப்போது மல்லுவுட்டிலும் படிப்படியாக ஹீரோயின்கள் சம்பளம் உயரத் தொடங்கி உள்ளது.

'குரு என் ஆளு' படத்தில் நடித்த மம்தாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு மலையாள படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த வேடத்தில் மம்தாவால்தான் சிறப்பான நடிப்பை தர முடியும் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் முடிவு செய்ததையடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக ரூ.15 லட்சம் சம்பளம் பெற்றார். இதுவரை மலையாளத்தில் மம்தா வாங்கிய சம்பளத்தில் அதிக தொகை இதுதான் என்று கூறப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து காவ்யா மாதவன் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அடுத்து நடிக்க உள்ள படத்துக்கு இவர் ரூ.17 லட்சம் சம்பளம் பெறுகிறார். மற்ற மொழிப்படங்களில் நடிக்க இவர்கள் ரூ.15 லட்சம் முதல் 30 லட்சம்வரை சம்பளம் கேட்கிறார்களாம். ஹீரோயின் சம்பளம் உயர்ந்ததைதொடர்ந்து, மலையாளத்தில் ஹீரோக்கள் சம்பளமும் அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது.


 

கேரள காட்டு பகுதியில் மணிரத்னம் முகாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது அடுத்த படத்துக்காக இயக்குனர் மணிரத்னம் கேரளா காட்டு பகுதிகளில் முகாமிட்டிருக்கிறார். விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்த 'ராவணன்Õ படத்தை கேரள காட்டுபகுதிகளில் படமாக்கினார் மணிரத்னம். அதேபோல் தற்போது இயக்கி வரும் 'கடல்Õ பட ஷூட்டிங்கையும் கேரள காட்டுபகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் நடத்த திடீரென திட்டமிட்டிருக்கிறார். இந்த திடீர் திட்டம¤டுதலுக்கு காரணம், கோலிவுட்டில் தற்போது ஸ்டிரைக் நடப்பதுதான். இதனால் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மணிரத்னம் சில தினங்களுக்கு முன்பு கேரளா புறப்பட்டு சென்றார். அங்குள்ள அடர்ந்த காட்டுபகுதிகளில் பட குழுவினருடன் சென்று லொகேஷன் தேர்வு செய்தார். கடந்த சில வாரங்களாக தமிழக கடற்கரை பகுதிகளில் கார்த்திக் மகன் கவுதம் மற்றும் சமந்தா, அர்ஜுன், அரவிந்தசாமி, பசுபதி ஆகியோர் நடித்த காட்சிகளை படமாக்கிய மணிரத்னம் முக்கிய காட்சிகள் சிலவற்றை கோட்டயம் மற்றும் கொச்சியில் படமாக்கினார். பெப்சி, தயாரிப்பாளர் பிரச்னை முடிவுக்கு வந்து படப்பிடிப்புகள் தொடங்கிய பிறகு கேரளா வில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்து ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.


 

கிசு கிசு - ஜோடியின் பிளான்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

எப்போ பிரதரை ஹீரோவாக்கப்போறீங்கன்னு பாக்க¤றவங்க எல்லாரும் தாஸ் இயக்கத்தை கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்... Ôஸ்கிரிப்ட் ரெடி, இயக்கம் ரெடி, ஹீரோயின் ரெடி, ஷூட்டிங்தான் பாக்கிÕன்னு பதில் சொல்லி நழுவிட்டிருந்தாராம். இப்போ சத்தமில்லாம பிரதர் பட ஷூட்டிங்கை தொடங்கிட்டாராம். படம் முடிஞ்சி ரிலீஸுக்கு தயாராகுற வரை இதுபத்தி யார்கிட்டேயும் மூச்சுவிடக்கூடாதுன்னு பிரதருக்கும், இயக்கத்துக்கும் கண்டிஷன் போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்... அதுக்கு காரணம், இந்த படம் ஒரு வெளிநாட்டு படத்தோட உல்டாவாம்... உல்டாவாம்...

நயன ஹீரோயின், நடன இயக்கம் விரிசல் உண்மை கிடையாது. ஜோடியே தங்களுக்குள்ள போட்ட பிளான்தான்னு கோலிவுட்ல பேசுறாங்களாம்... பேசுறாங்களாம்... ஹீரோயினோட பேங்க் பேலன்ஸ் சர்ருன்னு இறங்கிப்போச்சாம்... இறங்கிப்போச்சாம்... அதை ஏத்துறதுக்கு ஒரே வழி ரீஎன்ட்ரிதான்னு முடிவு பண்ண¤னாராம். ஜோடிபோட்டுகிட்டு சுத்துனா சான்ஸ் வராதுன்னு டிசைட் பண்ண¤னவங்க, காதல் முறிவுன்னு சொல்லி பிரிஞ்சா நிறைய வாய்ப்புகள் வரும்னு கணக்கு போட்டாங்களாம்... போட்டாங்களாம்... அதன்படியே நடந்ததால ஜோடிக்கு சந்தோஷமாம். அதனாலதான் நயனம், பச்சை குத்தின நடனத்தோட பெயரை அழிக்க விரும்பலேன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க... பேசிக்கிறாங்க...

இனிய நடிகை ரெண்டுங்கெட்டான் நிலைல இருக்காராம்... இருக்காராம்... டாப் இயக்கம்னு ஒட்டுமொத்தமா பாரதி கிங் இயக்கத்துக்கு கால்ஷீட் கொடுத்தாராம். இதனால இடைல வந்த படங்களை ஏத்துக்கலையாம். திடீர்னு  கிங் இயக்கம் தன்னை படத்துலேயிருந்து தூக்கிட்டதால அழாத குறையா முழிக்கிறாராம்... முழிக்கிறாராம்... வேற வழியில்லாம யாராவது குறைச்ச சம்பளத்துக்கு டேட் கேட்டாலும் ஓகே சொல்ல ரெடியா இருக்காராம்... இருக்காராம்...


 

பிசியான ஸ்டார்களை தேடிப்போக மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிசி ஸ்டார்களை தேடிப் போவதில்லை என்றார் செல்வராகவன். 'மயக்கம் என்ன?Õ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் 'இரண்டாம் உலகம்Õ. ஆர்யா, அனுஷ்கா நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கோவாவில் 15 நாட்கள் நடந்தது. ஒரு மாதத்துக்குமேல் திட்டமிடப்பட்டிருந்த ஷூட்டிங் திரையுலக ஸ்டிரைக்கால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பட குழுவினர் சென்னை திரும்பினர். இதில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர். ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதுபற்றி செல்வராகவன் கூறும்போது, 'Ôஆர்யா, அனுஷ்கா இருவருமே தொழில் ரீதியான நடிகர்கள் என்பதால் காட்சிகள் படமாக்குவதில் சிரமம் இல்லை. இருவரும் எந்த தலையீடும் செய்யவில்லை. 35 சதவீத ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இரண்டு முன்னணி ஸ்டார்கள் தவிர பிஸியாக இருக்கும் வேறு யாரையும் இப்படத்திற்கு தேர்வு செய்யவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் பிஸி கிடையாது. இப்போது அவரும் பிஸி என்பதால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள்தான். நான் எப்போதுமே பிசியான ஸ்டார்களை தேடிப்போவதில்லைÕÕ என்றார்.



 

அஜீத்துக்கு ஜோடியாகும் மாடல் அழகி ஹ்யூமா!!


 

ஐஸ் ஒன்றும் உலக அழகி எல்லாம் கிடையாது: ஹ்யூ ஜாக்மேன்


 

பில்லா 2... இழுத்துக் கொண்டே போகும் ரிலீஸ் தேதி!


 

சின்னத் திரைப் படப்பிடிப்புகளுக்கு ஸ்ட்ரைக் இல்லை - பெப்சி அறிவிப்பு


 

கவுதம் மேனன் படத்தில் தனுஷ்?


 

பெப்சி -தயாரிப்பாளர் மோதல்: இயக்குநர்களின் சமரச முயற்சி பலிக்குமா?


 

வெடிவிபத்து அபாயம்-லண்டன் ஹோட்டலிலிருந்து அமிதாப் பச்சன் வெளியேற்றம்


 

பாலா ஷூட்டிங் - 365 நாட்கள் காத்திருந்து திரும்பிய நாயகிகள்...


 

'கடவுள் பாதி மிருகம் பாதி!'


 

நடிகை சச்சுவுக்கு 'நாடக சூடாமணி' விருது!


 

நயன்தாரா அளித்த ஈஸ்டர் விருந்து!


 

புரோட்டா கடைக்கு சகாக்களோடு விசிட் அடித்த எஸ்.ஜே.சூர்யா!