ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா

தமிழர்கள், தமிழர் வளர்ச்சி, தமிழருக்கான முக்கியத்துவம் எதற்குமே பெரிய இடம் கொடுக்கக் கூடாது என அரசியல்வாதிகள் நினைக்கிறார்களோ இல்லையோ... வட இந்திய மீடியாக்கள் அதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

தமிழர்கள் வளர்ச்சியை, சாதனைகளை, வரலாற்றுப் பெருமைகளை அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட கருதுவதில்லை. அவர்களின் பரபரப்புக்கு ஏதாவது உதவும் என்றால் மட்டுமே, தமிழர் விஷயத்தை கையிலெடுப்பார்கள்.

ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா

சினிமாவைப் பொருத்தவரை, தமிழ் கதாநாயகிகளை மட்டும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கும் பாலிவுட் மீடியா, தமிழ் நடிகர் அல்லது கலைஞர் யாராவது பெரிய ரேஞ்சுக்கு வருவார்கள் என்று தெரிந்தால் ஆரம்பத்திலேயே அவர்களுக்கான முக்கியத்துவத்தை ஒழித்துக் கட்டுவதில் குறியாக நிற்கும்.

ஷமிதாப் படத்தை வட இந்திய மீடியா கடித்துக் குதறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது இது மீண்டும் உறதியானது.

இந்தப் படத்தைப் பார்த்த தென்னிந்திய ஊடகங்கள், விமர்சகர்கள், திரையுலகினர் அனைவரும் பிரமித்து கொண்டாடுகிறார்கள்.

ஆனால் வட இந்திய ஊடகங்கள் அத்தனையும் சொல்லி வைத்தமாதிரி படத்தை மட்டம் தட்டியுள்ளன. இவை அனைத்தும் அமிதாப்புக்காக மட்டும் படத்தைப் பார்க்கலாம் என எழுதியுள்ளன.

காரணம் அமிதாப் தவிர பிற முக்கிய கலைஞர்கள் அனைவருமே தமிழர்கள்.

இயக்குநர் பால்கி, ஹீரோ தனுஷ், நாயகி அக்ஷரா, இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் என முக்கிய கலைஞர்கள் அனைவருமே தமிழர்கள்.

பல பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் மீடியாக்கள் தனுஷையோ, இளையராஜாவையோ பற்றி குறிப்பிடாமலே விமர்சனம் எழுதியுள்ளனர். சில பத்திரிகைகள் இளையராஜா பெயரைக் கூட குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆள் அம்பு சேனை... அடுத்த 'யுத்தத்திற்கு' தயாராகி விட்டார் இயக்குநர் சரண்!

சென்னை : இயக்குநர் சரண் - வினய் கூட்டணி மீண்டும் ஆள் அம்பு சேனை படம் மூலம் இணைந்துள்ளது.

காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சரண். இவர் தற்போது வினயை வைத்து ‘ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் இப்படம் ரிலீஸ் செய்யப் பட உள்ளது.

ஆள் அம்பு சேனை... அடுத்த 'யுத்தத்திற்கு' தயாராகி விட்டார் இயக்குநர் சரண்!

ஆள் அம்பு சேனை...

இந்நிலையில், தனது அடுத்தப்பட வேலைகளில் இறங்கி விட்டார் இயக்குநர் சரண். தனது புதிய படத்திற்கு ‘ஆள் அம்பு சேனை' என அவர் பெயரிட்டுள்ளார்.

வினய்...

இப்படத்தை சரண் தனது சொந்த நிறுவனமான சரண் மூவி பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இப்படத்திலும் மீண்டும் வினயே நாயகனாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்கியது...

ஆள் அம்பு சேனையின் நாயகி மற்றும் பிற நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. ஆனால், படப்பிடிப்பு வேலைகளை சரண் ஆரம்பித்து விட்டார்.

ஆகஸ்ட் ரிலீஸ்...

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்?

பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் இப்போது நடித்து வரும் விக்ரம், அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் பொங்கலுக்கு வெளியாகி, கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டுள்ளது. இப்படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்?

இந்நிலையில், கவுதம் மேனன் கூறிய ஒரு கதை விக்ரமுக்குப் பிடித்துப் போனதாம்.

எனவே இதில் நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

பத்து எண்றதுக்குள்ள படம் முடிவடைந்ததும் கவுதம் மேனன் படத்துடன் இணைவார் என்று கூறப்படுகிறது.

கவுதம் மேனனும், சிம்புவை வைத்து இயக்கி, பாதியில் நிற்கும் படத்தை முடித்துவிட்டு விக்ரம் புராஜெக்டுக்கு வருவார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர் விக்ரமுடன் இணையும் முதல் படம் இதுவாகும். டி.இமான் இசையமைத்துள்ளார்.

 

பட வாய்ப்பு இல்லேன்னா திருமணம்தான் - நமீதா

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனால் திருமணம் செய்து கொள்வேன் என்று பட வாய்ப்பு இல்லேன்னா திருமணம்தான் - நமீதா  

இடையில் அவர் படங்களில் நடிப்பதில் இடைவெளி விழுந்தது. உடம்பை ஸ்லிம்மாக்கி பழைய நமீதாவாக வலம் அவர் தற்போது ‘பார்வதி புறா' என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். தமிழிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நமீதா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் மீடியாவில் உலா வந்தன.

இதுகுறித்து கேட்டபோது, "நான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு எப்போது படவாய்ப்புகள் இல்லாமல் போகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

 

தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு

கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படமான அனேகனுக்கு முழு கேளிக்கை வரிவிலக்கு அளித்துள்ளது தமிழக அரசு.

அனேகன் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு கேளிக்கை வரிவிலக்குக்கு பரிந்துரைக்கும் குழு முன்பு படத்தை திரையிட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள்.

தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு

அக்குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, படத்து முழு வரிவிலக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது அனேகன் குழுவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

காரணம் சமீபத்தில் வந்த பெரிய படங்களான ஐ, என்னை அறிந்தால் போன்றவை யு ஏ சான்று பெற்றதால், வரி விலக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 13-ம் தேதி 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

 

சிம்பு - கவுதம் மேனன் படத்துக்கு எம்ஜிஆர் தலைப்பு

அஜீத்தை வைத்து தான் இயக்கிய படத்துக்கு என்னை அறிந்தால் என்று தலைப்பு வைத்தார் கவுதம் மேனன். இது எம்ஜிஆரின் உன்னை அறிந்தால்... பாடலின் உல்டா என்பது பலருக்கும் தெரியும்.

அடுத்து சிம்புவை வைத்து தான் இயக்கும் புதிய படத்துக்கும் எம்ஜிஆர் பாடலின் ஆரம்ப வரிகளை வைத்துள்ளார்.

சிம்பு - கவுதம் மேனன் படத்துக்கு எம்ஜிஆர் தலைப்பு

அது புகழ்பெற்ற 'அச்சம் என்பது மடமையடா'.

இந்தப் படத்துக்கு முதல் சட்டென்று மாறுது வானிலை என்றுதான் தலைப்பிட்டிருந்தார் கவுதம் மேனன்.

ஆனால் இப்போது எம்ஜிஆர் படப் பாடலை தலைப்பாக்கியுள்ளார். மக்கள் திலகம் சென்டிமென்ட்?

 

ஏப்ரலில் மணிரத்னத்தின் ஓகே கண்மணி

மணிரத்னம் சத்தமின்றி இயக்கி வரும் ஓகே கண்மணி (இதான் தலைப்பு என்று மணிரத்னம் சொல்லவில்லை.. பிசி ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார்!) படம் வரும் ஏப்ரலில் வெளியாகிறது.

‘கடல்' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனமும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஏப்ரலில் மணிரத்னத்தின் ஓகே கண்மணி

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

எந்த அறிவிப்போ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வருகிற ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக இம்மாத இறுதியில் படத்தின் ஆடியோ வெளியாகும் எனத் தெரிகிறது.

 

அடப்பாவமே, நடிகையின் 4வது காதலும் புஸ்ஸாகிடுச்சே!

சென்னை: முன்னணி நடிகையின் நான்காவது காதலும் புஸ்ஸாகிவிட்டது.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் அந்த நட்சத்திர நடிகை. வந்த வேகத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். இந்நிலையில் அவர் இளம் நடிகர் ஒருவரை காதலித்து வம்பில் சிக்கினார். அந்த காதல் முறிந்த பிறகு சோகத்தில் இருந்த நடிகைக்கு மீண்டும் காதல் ஏற்பட்டது.

4வது காதலும் புஸ்: முதல் காதலரையே மணக்கும் நடிகை?

நடிகையின் இரண்டாவது காதல் டான்ஸ் ஆட அவர் மீண்டும் சிங்கிள் ஆனார். இந்த நேரத்தில் தான் அவர் அழுக தோள் கொடுத்தார் ஒரு இளம் ஹீரோ. இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றார்கள். ஆனால் அவர்கள் காதலர்கள் என்று ஊர் உலகமே தெரிவித்தது. அந்த காதலும் பாஸ் ஆகவில்லை.

இந்நிலையில் தான் நடிகைக்கும் பாடிபில்டர் நடிகருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பாடிபில்டரோ டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் செட்டிலாகிவிட்டார். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

நடிகையின் மூன்று காதல்களை போன்றே நான்காவது காதலும் புஸ்ஸாகியுள்ளது. இதற்கிடையே நடிகை தனது முதலாவது காதலரையே திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக வேறு பேசப்படுகிறது.

 

'பவர்' இல்லா விஜய்யின் புலி

சென்னை: விஜய்யின் புலி படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் புலி. ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். அதில் ஸ்ருதி விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.

'பவர்' இல்லா விஜய்யின் புலி

புலி படத்தில் பரோட்டா சூரி, சத்யன், கருணாஸ் என காமெடி பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புலி படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஐ படத்தை அடுத்து பவர்ஸ்டார் விஜய் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

பவர் ஸ்டார் தவிர நான் கடவுள் ராஜேந்திரனும் புலி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பவரும், ராஜேந்திரனும் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

விஜய் புலியை முடித்த கையோடு அட்லீயின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வித்யா பாலன்தான் "பெனாசிர் பூட்டோவா"... ?

மும்பை: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், அவரது வேடத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டில் சவாலான வேடங்களை தைரியமாக ஏற்று நடிப்பவர் வித்யா பாலன். தனக்கென தனித்தன்மை, நடிப்பு, தைரியம் என இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் சற்றே அதிகம்.

வித்யா பாலன்தான்

இந்நிலையில் பல முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படம் என்றாலே இயக்குநர்களின் முதல் தேர்வு வித்யாபாலன் தான்.

எனினும் இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், "என்னிடம் பெண் சார்ந்த வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் வருகின்றன. ஆனால் இப்போதைக்கு எதிலும் நான் ஒப்பந்தமாகவில்லை.

வித்யா பாலன்தான்

இந்த வருடமே பல படங்கள் முடிக்க வேண்டியுள்ளது. அதையெல்லாம் முடித்துவிட்டுதான் அடுத்த படம் குறித்து முடிவெடுப்பேன்" என கூறியுள்ளார்.

எனினும் பெனாசிர் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்பட்டால் பாகிஸ்தான் வசமிருந்து கண்டிப்பாக இடையூறுகள் உண்டு . அதே போல் பெனாசிர் பூட்டோவின் கொலையின் ரகசியங்கள் கூட வெளியாகும் என்பதால் வித்யா பாலன் தயங்குவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான "தி டர்ட்டி பிக்சர்" படத்தில் நடித்து சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை.: மருத்துவமனையில் அனுமதி

மும்பை: படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பாலிவுட் நடிகை சோனம் கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை.: மருத்துவமனையில் அனுமதி

சோனம் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் தனக்கு மிகவும் களைப்பாக உள்ளதாக தெரிவித்தார். விடாது வேலை செய்ததால் சோனம் கபூருக்கு அலுப்பு மற்றும் காய்ச்சல் இருந்தது. இருப்பினும் அவர் ஓய்வு எடுக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சோனம் ட்விட்டரில் தெரிவித்து தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை வெறுக்கிறேன்... ஊவி என்று தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் தொடங்கிய சிவி குமாரின் 11வது படம் 144!

144... இந்தத் தலைப்பில் இன்று ஒரு புதிய படத்துக்கு பூஜை போடப்பட்டது. தமிழ் சினிமாவின் தலைநகரான சென்னையில் அல்ல... தமிழின் தலைநகரான மதுரை நகரில்!

மதுரையில் தொடங்கிய சிவி குமாரின் 11வது படம் 144!

சிவி குமார் தயாரிக்கும் பதினோறாவது படம் இந்த 144.

மிர்ச்சி சிவா, ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், முனீஸ்காந்த் நடிக்கும் இந்தப் படத்தை மணிகண்டன் இயக்குகிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சீன் ரோல்டன் இசை அமைக்கிறார்.

மதுரையில் தொடங்கிய சிவி குமாரின் 11வது படம் 144!

திருக்குமரன் என்டர்டெயிண்மென்ட் மற்றும் அபி அன்ட் அபி நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

 

அனேகன் ஓடும் அரங்குகளை முற்றுகையிடுவோம் - சலவைத் தொழிலாளர்கள் அறிவிப்பு

அனேகன் ஓடும் அரங்குகளை முற்றுகையிடுவோம் - சலவைத் தொழிலாளர்கள் அறிவிப்பு  

கூட்டத்தில் மாநில தலைவர் மாரிச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாயாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினர்.

கூட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. அதை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல் 'அனேகன்' படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் படத்துக்கு எதிராக மதுரை போலீசாரிடம் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்.

 

மீண்டும் ராஞ்ஜனா இயக்குநருடன் இணையும் தனுஷ்!

தனது முதல் இந்திப் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராயுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் இந்தியில் மிகப் பெரிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டார். அவரது முதல் படமான ராஞ்ஜனா பெரும் வெற்றியைப் பெற்றது.

மீண்டும் ராஞ்ஜனா இயக்குநருடன் இணையும் தனுஷ்!

அடுத்த படமான ஷமிதாப்பில், சாதனையாளர் அமிதாப்புடன் நடித்தார். இளையராஜா, பால்கி என உச்சநிலை கலைஞர்கள் இடம்பெற்ற அந்தப் படம் மிகப் பெரிய கவுரவத்தை அவருக்கு தேடித் தந்துள்ளது.

அடுத்த இந்திப் பட வேலைகளில் உடனே இறங்கிவிட்டார் தனுஷ்.

ஷமிதாப்புக்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படத்தை ராஞ்ஜனாவை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.

மற்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படம் தவிர வேறொரு இந்திப் படத்திலும் நடிக்க தனுஷ் சம்மதித்துள்ளார்.