சென்னை: ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர். ஆனால், அவர் இசையில் பாடல் வரிகளை கேட்க முடியவில்லை என்றார் கிரிஷ் கர்னாட். இதற்கு ரகுமான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் கிரிஷ் கர்னாட். பல்வேறு படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் புத்தகங்களும் எழுதி இருக்கிறார். இவர் சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானை விமர்சித்தார்.
மும்பையில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசும்போது,'ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர். அவரது இசை கோர்ப்பு அழகும், அதிக சக்தியுடனும் இருக்கும். ஆனால் கடைசியில் ஒன்று மட்டும் மிஸ்ஸாகிறது. அதுதான் பாடல் வரிகள்' என்றார். கிரிஷ் கர்னாடின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அவரது பேச்சை கேட்ட ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் இணைய தளங்களில் கிரிஷ் கர்னாடுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 'ரகுமான் எப்போதுமே பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் தருபவர். இது எப்படி கிரிஷ் கர்னாடுக்கு தெரியாமல்போனது' என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.