வளைகுடா நாடுகளில் டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்!

அபுதாபி: மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் வளைகுடா நாடுகளில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் த்ரிஷ்யம்.

இந்தப் படம் மோகன்லாலின் திரைவாழ்க்கையிலேயே பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது.

வளைகுடா நாடுகளில் டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்!

ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம்தான் இதுவரை பெற்றிருந்தது. ஆனால் அந்த படத்தின் சாதனையை த்ரிஷ்யம் முறியடித்து உள்ளது.

த்ரிஷ்யம் கடந்த ஜனவரி மாதம் 2 ந்தேதி எல்டோரடோவில் வெளியானது. 100-வது நாளை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

இந்த படம் கேரளாவில் அனைத்து சாதனைகளையும் உடைத்து மிகப்பெரிய வசூலை கொடுத்தது. ரூ.4.6 கோடியில் மட்டும் தயாரான இந்த திரைப்படம் இதுவரை 51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பது நினைவிருக்கலாம்.

 

'அமரர் பாலு மகேந்திராவுக்கு மனப்பூர்வமான நன்றி' - சசிகுமார்

சென்னை: தலைமுறைகள் படம் மூலம் தேசிய விருது வென்று பெருமை தேடித் தந்த அமரர் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு நன்றி, என்று இயக்குநர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகுமார் தயாரிப்பில் உருவான பாலுமகேந்திராவின் ‘தலைமுறைகள்' திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு நர்கீஸ் தத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'அமரர் பாலு மகேந்திராவுக்கு மனப்பூர்வமான நன்றி' - சசிகுமார்

தலைமுறைகள் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தவருமான சசிகுமார் வெளிநாட்டில் இருப்பதால், தனது நன்றியை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் வெளியிட்டுள்ள கடிதத்தில், "பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த தலைமுறைகள் திரைப்படம் 2013-ஆம் ஆண்டின் தேசிய ஒருமைப்பாட்டு படத்திற்கான நர்கீஸ் தட் விருதை பெற்றிருக்கிறது.

தேசிய விருது வழங்கிய மத்திய அரசுக்கும், படத்தை தயாரிக்கக் காரணமாக இருந்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இயக்குநர் குருதனபால் கோவையில் அரசு மருத்துவமனையில் மரணம்!

கோவை: பிரபல இயக்குநர் குருதனபால் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

குரு தனபால் இயக்கிய முதல் படம் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன். கார்த்திக் - மோனிஷா - சசிகலா நடித்திருந்தனர், இளையராஜா இசையமைத்திருந்தார்.

அடுத்து அவர் இயக்கிய படம் தாய் மாமன். சத்யராஜ் - மீனா - கவுண்டமணி நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது தாய்மாமன்.

இயக்குநர் குருதனபால் கோவையில் அரசு மருத்துவமனையில் மரணம்!

இதைத் தொடர்ந்து மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன், சுயேச்சை எம்எல்ஏ போன்ற படங்களை இயக்கினார் குருதனபால்.

உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த குருதனபால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று காலை மரணமடைந்தார்.

நடிகர்கள் கவுண்டமணி, சத்யராஜ் மற்றும் அமரர் மணிவண்ணனுக்கு நெருக்கமாக இருந்தவர் குருதனபால் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அட.. மான் கராத்தே ரூ 50 கோடி வசூலாமே!

சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் இரண்டு வாரங்களுக்குள் ரூ 50 கோடியைத் தாண்டி விட்டதாக அடித்துவிட ஆரம்பித்துள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஓட்டம் சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உயர்த்தியது.

இந்தப் படம் ரூ 25 கோடியை வசூலித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த படமான மான் கராத்தேவை உலகமெங்கும் 700 அரங்குகளில் வெளியிட்டனர்.

அட.. மான் கராத்தே ரூ 50 கோடி வசூலாமே!

இந்தப் படம் குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் வந்துள்ளன. மூன்றாவது நாளே கூட்டம் குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் பிரமாதமாக இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

படம் வெளியான 13 நாட்களில் உலகெங்கும் ரூ 50 கோடி வசூலாகியிருப்பதாக இப்போது தகவல் வெளியிட்டுள்ளனர். சென்னையில் மட்டும் ரூ 7.5 கோடி வசூலாகியுள்ளதாம் இந்தப் படத்துக்கு.

ஆனால் இந்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். "சென்னையில் ரூ 7 கோடி வசூலாக குறைந்தது 30 நாட்களாவது படம் ஓடியிருக்க வேண்டும். குறைந்தது 50 அரங்குகளிலாவது வெளியாகியிருக்க வேண்டும். எதை வைத்து மான் கராத்தே 13 நாட்களில் 7.5 கோடி வசூலித்தது எனச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை," என்றார் ஒரு முக்கியப் பிரமுகர்.

 

மோக்கியாவை அடுத்து ஹீரோவாக ஆசைப்படும் பரோட்டா

சென்னை: மோக்கியாவை அடுத்து பரோட்டா காமெடி நடிகருக்கு ஹீரோ அவதாரம் எடுக்கும் ஆசை வந்துள்ளது.

காமெடியில் கலக்கி வரும் மோக்கியா சோலோ ஹீரோவாக ஆயுதம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிக்கப் போகிறாராம்.

இந்நிலையில் மற்றும் ஒரு காமெடி நடிகருக்கும் ஹீரோவாகும் ஆசை வந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை நம்ம பரோட்டா நடிகர் தான். தன்னை ஹீரோவாக வைத்து படம் எடுக்க ஒரு வெயிட்டான தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறாராம்.

முன்னதாக மோக்கிய ஹீரோவானபோது அவருடன் நடித்த இளம் ஹீரோக்கள் அவரிடம், ஹீரோ அவதாரம் எடுத்த காமெடியன்கள் நிலைமை எல்லாம் என்ன ஆனது என்று பார்த்தீர்கள் தானே என பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள். ஆனால் மோக்கியாவோ நான் ஹீரோவாகிறேன் என்கிற காண்டுல பேசுறாங்க என்று தெரிவித்திருந்தார்.

மோக்கியா ஹீரோவானதால் பரோட்டாவுக்கு தான் கிராக்கி அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவரும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரே.