அரசு சினிமாவுக்கு அளிக்கும் வரிவிலக்கில் முறைகேடுகள்- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார்

சென்னை: தமிழக அரசு தமிழ்ப் படங்களுக்கு அளிக்கும் வரிவிலக்கில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தொடர்ச்சியாக தான் தயாரித்த ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் நீர்ப்பறவை, இப்போது வணக்கம் சென்னை போன்ற படங்கள் யு சான்று பெற்றிருந்தும் வரிவிலக்கு வழங்கப்படாததைக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் கொடுத்துள்ள 7 பக்க புகார்:

அரசு சினிமாவுக்கு அளிக்கும் வரிவிலக்கில் முறைகேடுகள்- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார்

''ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை' போன்ற மக்களின் வரவேற்பைப் பெற்ற எங்களின் படங்களுக்கு வரிவிலக்கை நிராகரித்த இந்தக் குழுவினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் 'வணக்கம் சென்னை' திரைப்படத்துக்கும் வரிவிலக்கு நிராகரிப்புச் செய்து பரிந்துரை செய்துள்ளனர்.

குறிப்பாக திரைப்படப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி இம்மூன்று படங்களையுமே பார்வையிட்ட குழுக்களில் இடம் பெற்றுள்ளார். எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மக்கள் குரல் பத்திரிகை நிருபர் ராம்ஜி போன்றோர் வரிவிலக்கு நிராகரிப்படும் படங்களைப் பார்க்கும் குழுக்களில் தவறாமல் இடம் பெறுகின்றனர். இவர்கள் சுயேச்சையாக தங்கள் முடிவுகளை அறிவிக்காமல், அரசு அதிகாரிகளால் இடப்படும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்தே தங்கள் முடிவுகளை எழுதி வருகின்றனர்.

திரைப்படத்தை பார்வையிட வரும் குழு உறுப்பினர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலரைத் தங்களுடன் திரையரங்குகள் அழைத்துச்சென்று திரைப்படத்தைப் பார்வையிடுவது வாடிக்கையாக உள்ளது. இவர்கள் முன் கூட்டியே திட்டமிட்டபடி பரிந்துரைக் கடிதங்களை குழு உறுப்பினர்களிடமிருந்து எழுதி வாங்குவதற்கும், வணிக வரி இணை ஆணையருக்கு உதவுவதற்குமே வருவதாக தெரிகிறது.

'வணக்கம் சென்னை' வரி விலக்குக் குழுவிற்காகத் திரையிடப்பட்டபோது பழனி என்ற வணிக வரித்துறை இணை ஆணையாளர் அலுவல் சார்ந்த உறுப்பினராகக் குழுவில் இடம் பிடித்திருந்தார். குழுவின் இன்னொரு உறுப்பினரான பின்னணிப் பாடகர் டி.எல்.மகாராஜன் சந்தேகத்துக்குரிய ஒரு நபரை உடன் அழைத்து வந்த போது பழனி மறுப்பேதும் கூறாமல் அந்த நபரை தங்களுடன் திரைப்படத்தைப் பார்வையிட அனுமதித்தார்.

அதேபோல மற்றொரு உறுப்பினரான எம்.என் ராஜம் தனது கணவர் ஏ.எல்.ராகவனை உடன் அழைத்து வந்தபோதும் பழனி அவர்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நீதிபதியாக படம் பார்க்க வருபவர் தன்னுடன் உறவினர்களை அழைத்து வருவது சட்ட விரோதமான செயல். இதை பொறுப்பு அதிகாரியான வணிக வரித்துறை இணை ஆணையாளர் கண்டும் காணாமல் இருந்தது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது.

படம் பார்த்த ஆறு பேரில், ஐந்து பேர் நிராகரித்து எழுதிவிட்ட நிலையில், வரிவிலக்கு இந்தப் படத்துக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையிலும், பிடிவாதமாக படம் பார்த்த அனைவருமே நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசு அதிகாரிகள் பிடிவாதமாக இருப்பது, எந்த அளவிற்கு அவர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் உள்ளவர்கள் என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு தொடர்ந்து எங்களது படங்களுக்கு மட்டும் நியாயமற்ற முறையில் கேளிக்கை வரிவிலக்கு நிராகரிக்கப்படுவதால் எங்களை நம்பி திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

எங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஊழல் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய விரைவில் நடவடிக்கை எடுத்து அனைத்து தயாரிப்பாளர்களின் நலனையும் காத்திட வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறோம்" என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 5 முறைகேடுகளையும் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் கொடுத்துள்ள 7 பக்க புகார்

 

சரவணன் என்கிற சூர்யா: தலைப்பை மாற்ற சூர்யா தரப்பு புகார்.. இயக்குநர் மறுப்பு!

சரவணன் என்கிற சூர்யா: தலைப்பை மாற்ற சூர்யா தரப்பு புகார்..  இயக்குநர் மறுப்பு!

சென்னை: சரவணன் என்கிற சூர்யா என்ற தலைப்பை மாற்றுமாறு நடிகர் சூர்யா தரப்பு நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் புகார் செய்துள்ளது. ஆனால் தலைப்பை மாற்ற முடியாது என அப்படத்தின் இயக்குநர் மறுத்துவிட்டார்.

சரவணன் என்கிற சூர்யா' என்ற பெயரில் ஒரு புது படம் தயாராகிறது. இதை ராஜா சுப்பையா இயக்குகிறார். நடிக்க வரும் முன் சூர்யாவின் பெயர் சரவணன் என்பதுதான். சினிமாவுக்காக சூர்யா என மாற்றினார்கள்.

எப்படிப் பார்த்தாலும் தலைப்பு சூர்யாவைக் குறிப்பதாக உள்ளதால் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் சூர்யா தரப்பில்.

சூர்யா ரசிகர்களும் தலைப்பை மாற்றும்படி கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து சூர்யா தரப்பில் கூறும்போது தலைப்பை மாற்றும்படி வற்புறுத்தி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். நடிகர் சங்கமும் இதனை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றனர்.

மாற்ற முடியாது

ஆனால் இயக்குநர் ராஜா சுப்பையா தலைப்பை மாற்ற முடியாது என மறுத்துவிட்டார்.

"இந்தப் படத்தின் கதைக்கு சரவணன் என்கிற சூர்யா தலைப்பு பொருத்தமாக இருந்ததால் வைத்தோம். படத்தில் நடிகர் சூர்யாவை இழிவு படுத்துவது போல் காட்சிகள் எதுவும் இல்லை. இதே தலைப்பில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. நிறைய செலவில் விளம்பரங்களும் செய்துவிட்டோம். இப்போது தலைப்பை மாற்ற முடியாது," என்கிறார் ராஜா சுப்பையா.

 

அப்பாவான சிவகார்த்திகேயன்: பெண் குழந்தை பிறந்துள்ளது

மதுரை: சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவராக உள்ளவர் சிவகார்த்திகேயன். மனிதர் கோடிகளில் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. அவரோ நான் சம்பளத்தை விட கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறி வருகிறார்.

அப்பாவான சிவகார்த்திகேயன்: பெண் குழந்தை பிறந்துள்ளது

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்த காலத்திலேயே தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியாக இருந்த ஆர்த்தி மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றிருந்தார். சிவகார்த்திகேயன் மான் கராத்தே படப்பிடிப்பில் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஆர்த்தி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து அப்பாவாகியுள்ள சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

 

ஹீரோயின் மேனேஜர்கள்தான் தடுக்கிறார்கள் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு

ஹீரோயின் மேனேஜர்கள்தான் தடுக்கிறார்கள் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு

சென்னை: பட விழாக்களில் ஹீரோயின்கள் கலந்து கொள்ளாமல் தடுப்பது அவர்களின் மேனேஜர்கள்தான், என்று குற்றம்சாட்டினார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

முன்னணி தயாரிப்பாளரும் நடிகர் சங்க கவுரவ பொதுச் செயலாளருமான ஞானவேல்ராஜா நேற்று கோலாகலம் பட இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "இந்த கோலாகலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு எவ்வளவோ கூப்பிட்டும் சரண்யா மோகன் வரவில்லை என்று தயாரிப்பாளர் என்னிடமும் சொன்னார். இது மிகப் பெரய தவறு. படவிழாக்களுக்கு நடிகைகள் கண்டிப்பாக வரவேண்டும்.

நான் தயாரித்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதில் நடித்த கதாநாயகி காஜல் அகர்வாலை அழைத்தோம். அவர் வரவில்லை. அந்த நடிகையின் மானேஜர் விழாவுக்கு வரவிடாமல் தடுத்து விட்டாராம். மானேஜர் அனுமதிக்காததால் நடிகை வரவில்லை. நான் அந்த மேனேஜரிடம் கேட்டபோது, விளம்பரங்களில் பங்கேற்பது நடிகைகளின் வேலையில்லை என்று கூறிவிட்டார்.

படங்களின் ரிலீசுக்கு விளம்பரங்கள் முக்கியம். இது போன்ற விழாக்களில் நடிகைகள் பங்கேற்றால்தான் படம் மக்களை சென்று அடையும்.

இது நம் படம். ரசிகர்களிடம் கொண்டு போகும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்ற உணர்வு நடிகைகளுக்கு வரவேண்டும்," என்றார்.

 

மாலினி 22 பாளையங்கோட்டை!

சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் புதிய படமான மாலினி 22 பாளையங்கோட்டை படப்பிடிப்பு இறுதிக்கட்டதைதை அடைந்துள்ளது.

தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்தை படத்தை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தயாரிக்கிறார். மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தைத்தான் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார்.

இதில் கதாநாயகியாக நித்யா மேனன், புதுமுக நாயகனாக கிரிஷ் நடிக்கின்றனர். கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

மாலினி 22 பாளையங்கோட்டை!

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடந்த இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படம் எப்படியும் போட்ட முதலுக்கு மேல் தேற்றிவிடும் என்ற நம்பிக்கை ஏராளமாக வந்துவிட்டதாம் ஸ்ரீப்ரியாவுக்கு. எனவே மேலும் இரு மலையாளப் படங்களின் உரிமையை வாங்கி வைத்துள்ளாராம் தொடர்ந்து இயக்க.

மாலினி 22 பாளையங்கோட்டை!

ஏற்கெனவே டிவி தொடர்கள், படங்களை இயக்கிய அனுபவசாலிதான் ஸ்ரீப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

 

பவர் ஸ்டார் சீனிவாசன் சரணடைய ஹைகோர்ட் உத்தரவு!

மதுரை: மோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கார் எண்ணை மாற்றி விற்று மோசடி செய்துள்ளதாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அதிகாரி திருத்தங்கல் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஜோதிராஜன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் சீனிவாசன் சரணடைய ஹைகோர்ட் உத்தரவு!

இந்த வழக்கு விசாரணை சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.


இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், மனுதாரர் மீது சிவகாசி நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. இதனால், மனுதாரர் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அங்கு ஜாமீன் கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்யலாம். அப்படி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனுவை மாஜிஸ்திரேட் விசாரித்து, அன்றே உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

நாட்டாமையும், 'அந்த' ஹீரோவும் மோதுவதற்கு காதல் தான் காரணமாமே!

சென்னை: உயரமான இளம் ஹீரோ ஒருவர் நாட்டாமையுடன் முட்டி மோதுவதற்கு நடிக்கிறவர்கள் சங்க விவகாரம் காரணம் இல்லையாம்.

உயரமான இளம் ஹீரோ ஒருவருடன் நாட்டாமையின் மகளின் பெயர் சேர்ந்து அடிபடுகிறது. அண்மையில் படப்பிடிப்பில் நடந்த ஹீரோவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நாட்டாமையின் நடிகை மகள் வந்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ இருக்கிறது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த ஹீரோவுக்கும் நாட்டாமைக்கும் இடையே உள்ள மோதலுக்கு நடிக்கிறவர்கள் சங்க விஷயம் காரணம் இல்லை என்றும் மாறாாக காதல் விவகாரம் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை பிரச்சனைகளுக்கு இடையே ஹீரோ ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தான் திருமணம் செய்துகொள்ளும் பெண் ஒரு நடிகையாக இருக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

அப்படி என்றால் அந்த நடிகை நாட்டாமையின் மகளா?

 

வேண்டாம் சிம்புவின் காதலி... லட்சுமி மேனனே போதும் - விஷால் முடிவு

பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த சொந்தத் தயாரிப்பிலும் தனக்கு ஜோடியாக லட்சுமி மேனனையே ஒப்பந்தம் செய்துள்ளார் வேண்டாம் சிம்புவின் காதலி... லட்சுமி மேனனே போதும் - விஷால் முடிவு  

இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் சமீப காலமாக அவரது காதல் பிரச்சினை, அவரை வைத்து இயக்குபவர்களுக்கு சங்கடங்களை உண்டாக்கி வருவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துவிட்டு, சிம்புவுடன் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருப்பதைவிட, பாண்டிய நாடு படத்தில் நல்ல ஒத்துழைப்பு தந்த லட்சுமி மேனனே இந்தப் படத்தில் தொடரட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் விஷால்.

இந்தப் படத்தை தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். விஷாலே தயாரிக்கிறார்.

‘மஞ்சப்பை', ‘சிப்பாய்', ‘ஜிகர்தண்டா' உள்ளிட்ட 6 படங்களில் இப்போது லட்சுமி மேனன் நடிக்கிறார். நஸ்ரியா பிரச்சினையால் அவர் நடிக்க வேண்டிய சில படங்களுக்கும் இப்போது லட்சுமியிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்!

 

சம்பள உயர்வு, திருட்டு விசிடி குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க பெப்சி முடிவு!

சென்னை: சினிமா தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் திருட்டு விசிடி பிரச்சினை குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க பெப்சி முடிவு செய்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை சென்னையில் இயக்குனரும், சம்மேளனத்தின் தலைவருமான அமீர் தலைமையில் நடந்தது.

இதில் இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் உள்ளிட்ட சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவில் சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, திருட்டு விசிடியை தடுப்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-10-2013 அன்று பேரணியாக சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.

சம்பள உயர்வு, திருட்டு விசிடி குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க பெப்சி முடிவு!

இதுகுறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளன. இதில் 24,000 தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பிற்காக சம்மேளனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக வரும் 28.10.2013 திங்கட்கிழமை அன்று சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் 24,000 உறுப்பினர்களும் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரை சந்திக்க மாபெரும் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கோரிக்கைகள்:

1. கடந்த மூன்று ஆண்டுகளாக முடிக்கப்படாத நிலையில் உள்ள சினிமா தொழிலாளர்கள் மற்றும் சின்னத்திரை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து எங்களது 24,000 தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த கோரியும்.

2. திருட்டு விசிடி மீண்டும் தலைதூக்குவதை தடுத்த நிறுத்தக் கோரியும்

3. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக முதல்முறையாக திரைப்படத் துறைக்கு வீடு கட்ட தங்களது அரசு நிலம் வழங்கியும் சில இடர்பாடுகளால் வீடு கட்ட முடியாமல் இருக்கும் நிலையை மாற்றக் கோரியும்.

4. சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களின் உறுப்பினர்களுக்காக ஏற்படுத்திய கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தேர்தலை முறையற்ற முறையில் நடத்திய தேர்தல் அதிகாரி மற்றும் அதற்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்.

5. தவறான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு வசதி சங்கத்தில் தலைவராக உள்ள செந்தில், வி.சி.குகநாதன் உள்ளிட்ட குழுவை முழுவதுமாக கலைத்து மீண்டும் முறையாக தேர்தலை நடத்தக் கோரியும்.

6. கடந்த இரண்டு வருடமாக சம்மேளனத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சிலர் தொடர்ந்து சம்மேளனத்தில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் கொடுத்து வரும் தொல்லைகளை நிறுத்தக் கோரியும், அதனைத் தொடர்ந்து திரைப்படத் தொழில் பாதிக்கப்படுவதை தடுக்கக் கோரியும்.

7. சில சமூக விரோத சக்திகளுக்கு துணை புரியும் ஆர் 8 வடபழனி காவல் நிலையத்தின் ஆய்வாளர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த 27.05.2013 அன்று சம்மேளன நிர்வாகிகள் முது தாக்குதல் தொடுத்தவர்கள் மீது இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்களை கைது செய்யக்கோரியும்.

8. தொடர்ந்து சம்மேளன நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்தக் கோரியும்.

9. சம்மேளனத்திற்கு சொந்தமான பணத்தை முறைகேடாக பயன்படுத்திய வி.சி.குகநாதன் உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும்...

10. பாதுகாப்பற்ற நிலையில் இருக்கக்கூடிய திரைப்பட தொழிலாளர்களின் வாழ்க்கையில் உரிய பாதுகாப்பை ஏற்படுத்திட வேண்டும்

என்பது உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுததி தமிழக முதல்வரை பேரணியாக சென்று சந்தித்து முறையிட உள்ளோம்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.