காதலனைக் காணக் கடல் கடந்த ‘கடவுள்’ நடிகை

கடவுள் படத்தில் கண் பார்வையற்றவராக கஷ்டப்பட்டு நடித்தும், கை கொடுக்கவில்லை தமிழ் சினிமா. சொந்த மொழியில் நடிக்கிறேன் என கடக் கடந்து சென்றவர், அங்கு ஒரு காதலை வாங்கி வந்தாராம்.

பட வாய்ப்புகள் இல்லாமல் தனியார் கம்பெனியில் பணிக்கு சேர்ந்த பின்னரும் காதலன் நினைவால் வாடினாராம் நடிகை. இதனால், நடிப்பும் வேண்டாம், வேலையும் வேண்டாம் என எல்லாவர்றிற்கும் சேர்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு, மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தனது தாயகத்திற்கே பறந்து விட்டதாம் இந்த ஜேஜே என்றிருக்கும் கிளி.

சீக்கிரமே டும் டும் செய்தி அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்து நண்பர்கள்.

 

‘தேவதாசிகள்’ பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சொர்ணமால்யா

‘தேவதாசிகள்’ பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சொர்ணமால்யா

சென்னை: கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ஒன்றில் தேவதாசிகள் குறித்து பேசிய நடிகை சொர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னை தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை இரு தினங்களுக்கு முன்னர் கருத்தரங்கம் ஒன்று நடத்தியது. முதலில் "தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்" (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு, பின்னர் பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக "பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்" (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது.

கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா, ‘கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர்' என கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், ‘தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் லாபம் கருதியே தேவதாசி முறையை ஒழித்தனர் என்றும் விமர்சித்துள்ளார்.

அத்தோடு, காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி 'தேவதாசி முறை ஒழிப்பு'க்கு எதிராக வாதித்த கருத்துகளையும் தனது பேச்சில் நினைவு கூர்ந்துள்ளார் ஸ்வர்ணமால்யா. தேவதாசி முறை மூலம் பெண்களின் கண்ணியம் குறித்து தவறாக பேசியதாக அவர் மீது பெண்ணியவாதிகள் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

 

எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நல்லாதான் இருக்கேன்- நடிகை கனகா பேட்டி

எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நல்லாதான் இருக்கேன்- நடிகை கனகா பேட்டி

சென்னை: எனக்குப் புற்றுநோய் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று நடிகை கனகா நேரில் தெரிவித்தார்.

நடிகை கனகா பற்றி கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்றோருக்கான கேரளா மருத்துவமனையில் உருக்குலைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி பரவியது.

இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக இன்று சில செய்தி ஏஜென்சிகள், ஆங்கிலப் பத்திரிகைகளின் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் செய்தி வெளியாகி பரபரப்பேற்படுத்தியது.

இப்படி செய்தி வெளியான சில நிமிடங்களில் கனகா நன்றாக இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டனர். சென்னை காளியப்பா மருத்துவமனையில் கனகா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

ஆனால் இதுவும் தவறான செய்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கனகா பிரஸ் மீட் தகவல் கிடைத்தது.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். கண்ணாடி அணிந்திருந்த கனகா, முன்பு ஆவி அமுதா வழக்கில் நீதிமன்றத்தில் பார்த்ததை விட தெளிவாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்பட்டார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "என்னைப் பற்றி யாரோ தவறாக சொன்ன தகவல்களை வைத்து இப்படி செய்தி வெளியானது வேதனையைத் தருகிறது.

யாரோ சொன்னதை வைத்து ஏன் செய்தி போடறீங்க.. நான் ஆலப்புழா போனது ப்ரெண்டைப் பார்க்கக்கூட இருக்கலாம்ல. நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு கேன்சரெல்லாம் கிடையாது. எங்கும் சிகிச்சையும் பெறவில்லை!," என்றார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

ஆர்யா - அனுஷ்கா மகா நெருக்கம்... எப்போ கல்யாணம்?

ஆர்யா - அனுஷ்கா மகா நெருக்கம்... எப்போ கல்யாணம்?

ஊரெல்லாம் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், ரகசியமா குடும்பமே நடத்துறாங்கன்னு பேச்சா கிடக்கு. ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது.

ஆர்யாவுடன் ரொம்ம்ப்ப நெருக்கமாக இருப்பது அனுஷ்காதான் என்கிறார்கள். இரண்டாம் உலகம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே இருவரும் தங்களுக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழ ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் யூனிட்டில்.

இரண்டாம் உலகம் படம் முடிந்த பிறகும் கூட, இருவரும் மிக நெருக்கமாக உள்ளார்களாம்.

சமீபத்தில் நடந்த சிங்கம் 2 வெற்றி விழா பார்ட்டிக்கு ஹைதராபாதிலிருந்து ஜோடியாகவே வந்த அனுஷ்காவும் ஆர்யாவும் விடியும் வரை விருந்தில் இருந்துவிட்டு, விடியலில் ஜோடியாகவே புறப்பட்டார்களாம்.

அதுமட்டுமல்ல, ருத்ரமாதேவி படத்துக்காக வாள் சண்டைப் பயிற்சிக்குப் போன அனுஷ்காவுக்கு பாதுகாப்பாக கூடவே இருந்தாராம் ஆர்யா.

இப்படி பல கதைகளை ஆந்திர திரையுலகப் பத்திரிகைகளும் இணையதளங்களும் தொகுத்து வெளியிட்டு வருகின்றன.

நெசமா பொய்யா என்பது சம்பந்தப்பட்டவர்கள் ஜோடி மாற்றும்வரை தெரியப் போவதில்லை!

 

சிம்பு கூடவா நடிக்கப் போறீங்க: ஹன்சிகாவை எச்சரித்த சிலர்

சிம்பு கூடவா நடிக்கப் போறீங்க: ஹன்சிகாவை எச்சரித்த சிலர்

சென்னை: சிம்பு படத்தில் நடிக்கும் முன்பு ஹன்சிகாவை சிலர் எச்சரித்துள்ளனர்.

ஹன்சிகா வாலு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் முன்பு அவரிடம் சிம்புவை பற்றி சிலர் எச்சரித்துள்ளார்களாம். ஷூட்டிங் துவங்கிய பிறகு கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று சொல்கிறார்களே அது ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் சிம்புவை பற்றி ஹன்சிகாவிடம் ஆஹா, ஓஹோ என்று பேசியுள்ளார்களாம்.

இதை கேட்டு ஹன்சிகா சிம்புவிடம் மனதை பறிகொடுத்துவிட்டாராம். வழக்கமான காதல் ஜோடிகள் போன்று அவர்களும் நாங்கள் காதலர்கள் இல்லை நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திடீர் என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம், திருமணமும் செய்துகொள்ளப் போகிறோம் என்று அறிவித்தனர்.

திருமணம் செய்து கொண்டு அஜீத், ஷாலினி போன்று வாழப் போகிறார்களாம்.

 

மரியானை கேட்டு வாங்கிப் பார்த்த ரஜினி

மரியானை கேட்டு வாங்கிப் பார்த்த ரஜினி

சென்னை: ரஜினிகாந்த் தனது வீட்டில் உள்ள திரையரங்கில் மருமகன் தனுஷ் நடித்த மரியான் படத்தை பார்த்துள்ளார்.

படங்களை விளம்பரப்படுத்த விரும்புவோர் அதை ரஜினிகாந்துக்கு போட்டு காட்டி சூப்பர் ஸ்டார் எங்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்று அறிவித்துவிடுவார்கள். அடடா ரஜினி பாராட்டியுள்ளாராமே என்று அந்த படத்திற்கு மவுசு அதிகரித்துவிடும். இப்படி பலர் தங்களின் படங்களை விளம்பரப்படுத்துவதை பார்த்த ரஜினி படம் பார்ப்பதை தவிர்த்தார்.

ரஜினி தான் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு க்யூப் தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்நிலையில் அவர் ரவிச்சந்திரனை அழைத்து நீங்கள் தயாரித்த மரியான் படத்தை கொஞ்சம் போட்டுக் காட்டுங்களேன் என்று கூறியுள்ளார்.

ரஜினியே கேட்டுவிட்டார் என்று மரியான் பிரிண்ட் ஒன்றை ரவிச்சந்திரன் அனுப்பி வைத்துள்ளார். அதை தனது க்யூப் தொழில்நுட்ப திரையரங்கில் போட்டு பார்த்து ரசித்துள்ளார் ரஜினி.

மரியான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ், இசையமைத்துள்ளதோ கோச்சடையான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சித்தார்த் வரலியே... - வருத்தத்தில் சமந்தா

சித்தார்த் வரலியே... - வருத்தத்தில் சமந்தா  

நான் விருது வாங்கியதைப் பார்க்க என் நெருங்கிய நண்பர் சித்தார்த் வராதது வருத்தத்தைத் தந்தது என்று சமந்தா கூறியுள்ளார்.

சித்தார்த்தும் சமந்தாவும் கிட்டத்தட்ட கணவன் மனைவி எனும் அளவுக்கு நெருக்கமாக உள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் எங்கும் இணைந்தே காணப்படுகிறார்கள்.

குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சமந்தாவுக்கு நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்ததற்காக சமந்தாவுக்கு இரு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன.

விருது கிடைத்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி என்றாலும், அந்த தருணத்தை நேரில் வந்து தனது காதலர் பார்க்கவில்லையே என்ற வருத்தம் சமந்தாவுக்கு நிறைய இருந்தது. அதை அவர் ட்விட்டரிலும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய இரு படங்களிலும் சிறப்பான நடிப்பைக் காட்ட முடிந்தது. எனது இயக்குநர்களுக்கு நன்றி.

நான் விருது வாங்கிய விழாவில் சித்தார்த் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது என்று ட்விட்டரில் குறிப்பிட்டது பற்றி பலரும் பேசுகின்றனர். நான் எல்லோரிடமும் பாசமாக இருக்கிறேன். சித்தார்த் என் நெருங்கிய நண்பர். குடும்பத்தில் ஒருவர். எனவேதான் விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்ப்பார்த்தேன்," என்றார்.

 

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்!

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்!

நடிகை நக்மா மீண்டும் நடிக்க வருகிறார். இந்த முறை அவர் ஏற்கவிருப்பது அம்மா வேடம்.

தொன்னூறுகளில் தமிழ், தெலுங்கில் முதல் நிலை நடிகையாக வலம் வந்தவர் நக்மா.

ரஜினிக்கு நாயகியாக பாட்ஷாவில் நடித்ததின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். சினிமா நடனத்தில் சிறந்த நடிகை எனப் பெயர் பெற்ற நக்மாவுக்கு, சரத்குமார் உருவில் வந்தது சோதனை.

இருவரும் அரவிந்தன், ஜானகிராமன், ரகசிய போலீஸ் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தனர். ஒருகட்டத்தில் இருவரும் மிக நெருக்கமாக இருந்தனர். திடீரென இருவருக்கும் பிரிவு வர, நக்மா சென்னையைக் காலிசெய்து விட்டு மும்பைக்கே போய்விட்டார்.

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் நடித்த படம் சிட்டிசன். ஆனாலும் தமிழில் தொடரவில்லை. போஜ்புரி படங்களில் பிஸியாக இருந்தார்.

தங்கை ஜோதிகாவுக்கு திருமணமான பிறகு, சினிமாவைவிட்டு ஒதுங்கி அரசியலில் சேர்ந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தர்மா தேஜா இயக்கும் புதிய படத்தில் இளம் அம்மா வேடத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு மிக முக்கிய வேடம். கதையை யோசிக்கும்போதே இந்த வேடத்துக்கு நக்மாதான் என்று முடிவு செய்துவிட்டேன், என்று இயக்குநர் தேஜா கூறினார்.

நக்மா கடைசியாக நடித்த தெலுங்குப் படம் அல்லாரி ராமுடு. 2002-ல் வெளியானது.

 

வினயன் உதவியாளர் இயக்கத்தில் விதார்த்!

பிரபல மலையாள இயக்குநர் வினயனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சஜின் வர்கீஸ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விதார்த்.

காசி, அற்புதத் தீவு, என்மனவானில் உள்ளிட்ட படங்களில் வினையனிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் சஜின்வர்கீஸ்.

வினயன் உதவியாளர் இயக்கத்தில் விதார்த்!

இந்தப் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

படம் குறித்து சஜின்வர்கீஸ் கூறுகையில், "இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புதுமையான கதையமைப்பு கொண்ட படமாகவும், அனைவராலும் பேசப்படக்கூடிய படமாகவும் இந்த படம் இருக்கும். அனைத்து தரப்பு மக்களுடைய மனநிலையை பிரதிபலிக்கின்ற படமாகவும் இப்படம் இருக்கும்." என்றார்.

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஷிகாஜூதின் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான முரளிராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

 

நடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்!

சென்னை: நடிகை கனகா புற்று நோயால் மரணமடைந்துவிட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அவர் உயிரோடு தன் சென்னை வீட்டில் உள்ளார்.

தான் உயிரோடு உள்ளதை நிரூபிக்க இன்று அவசரமாக பிரஸ் மீட் வைத்து செய்தியாளர்கள் முன்பு தோன்றினார்.

நடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்!  

கரகாட்டக்காரனில் அறிமுகமாகி தென் இந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். 40 வயதான கனகா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, உடல் நலம் குன்றியிருந்தார். கடந்த சில மாதங்களாக அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

திடீரென அவரை கேரளாவில் ஆதரவற்றோருக்காக நடிகர் ஜெயராம் நடத்தும் ஆலப்புழா மருத்துவமனையில் சினிமா பிரமுகர் ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகே கனகா பற்றி தெரிய வந்தது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகல் மரணம் அடைந்ததாக செய்தி ஏஜென்சிகள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் கனகா மரணமடையவில்லை என்றும், அவர் கேரள மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரது அப்பாவும் சித்தப்பாவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கனகா செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல் வெளியானதும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்கள் குவிந்தனர்.

சில நிமிடங்களில் செய்தியாளர்கள் முன் தோன்றிய கனகா, தான் உயிரோடு இருப்பதாகவும், கேரளாவில் சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்பட்டதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

ஸ்கின் அலர்ஜியால் தவிக்கும் நயன்தாரா... கேரளாவில் ரகசிய சிகிச்சை?

ஸ்கின் அலர்ஜியால் தவிக்கும் நயன்தாரா... கேரளாவில் ரகசிய சிகிச்சை?  

ஸ்கின் அலர்ஜி காரணமாக மேக்கப் போட முடியாமல் தவிக்கும் நயன்தாரா, இதற்காக ரகசிய சிகிச்சை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அமலா பால், ஹன்சிகா, அனுஷ்கா என எத்தனை நாயகிகள் வந்தாலும், நயன்தாராவுக்கு மவுசு குறையவில்லை.

ஆனால் இந்த நேரம் பார்த்து நயன்தாராவின் உடல் நிலை குறித்து ஏகப்பட்ட வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக ஆந்திரத் திரையுலகில், நயன்தாராவுக்கு சரும நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் புதிய பட ஷூட்டிங்குகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளனர் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள்.

இதற்கிடையில் தனது சருமப் பிரச்சினைக்காக கேரளாவில் ரகசியமாக நயன்தாரா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்: மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்: மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

சென்னை: நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி அவரது ரசிகையிடம் ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்ததாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் பாக்கியராஜியின் மகனும், நடிகருமான சாந்தனு கடந்த மாதம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது பெயரில் ஃபேஸ்புக் இணையளத்தில் போலி பக்கம் உருவாக்கப்பட்டு, தனது ரசிகர்-ரசிகைகளிடம் மோசடி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை பெற்ற பெருநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ், அப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சைபர் குற்றப்பிரிவின் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபடுவது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சலாலுதீன் மகன் ரியாஸ்கான் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சாந்தனுவின் ரசிகையை ஏமாற்றி ரூ. 10 ஆயிரம் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ரியாஸ்கானை போலீஸார் தேடி வந்தனர்.

கேரளத்தில் தலைமறைவாக இருந்த ரியாஸ்கான் திங்கள்கிழமை சென்னை வந்தார். இதனையறிந்த போலீஸார் ரியாஸ்கானை உடனடியாக கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பிரபல தனியார் டி.டி.எச். சேவை நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும் அவர், அனிதா என்ற பெண்ணிடம் ஃபேஸ்புக் மூலம் சாந்தனு தொடர்பு கொள்வதுபோல கொண்டு தான் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், பண நெருக்கடியில் இருப்பதாகவும், தனக்கு ரூ. 10 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளார். தனது நண்பரை அனுப்பிவைப்பதாகவும், பணத்தை அவரிடம் கொடுக்குமாறும் சாட் செய்துள்ளார். அதை நம்பிய அனிதா அந்த பணத்தை கொடுத்துள்ளார். ரூ. 10 ஆயிரத்தை அனிதாவிடம் நேரில் சென்று ரியாஸ்கானே சென்று வாங்கியுள்ளார். அப்போது ரியாஸ்கான், தான் சாந்தனுவின் நெருங்கிய நண்பர் எனக் கூறி அனிதாவை ஏமாற்றினாராம்.

இது தொடர்பாக ரியாஸ்கானிடம் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே!

ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே!

ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ 20 கோடிவரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை.

ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது.

விஜய்யைப் பொறுத்தவரை, பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை. ஆனால் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ 18 கோடி என்றும், அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு ரூ 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி

படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி

சென்னை: ஹரி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளால் படம் கைவிடப்பட்டுள்ளது. ஹரியும், கார்த்தியும் நண்பர்களாக பிரிந்து சென்றனர் என்று கூறப்படுகிறது.

சிங்கம் 2 படத்தை அடுத்து கார்த்தியின் அருவா எப்பொழுது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 4 மாதங்களில் ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்தியின் பிரியாணி படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.