பனிவிழும் நிலவு - விமர்சனம்

Rating:
2.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஹிருதய், ஈடன், கிருஷ்ணன், கோவை சரளா, பாண்டியராஜன்
இசை: எல்வி கணேசன்
தயாரிப்பு: வீ எஸ் பிக்சர்ஸ்
இயக்கம்: கௌசிக்

கல்லூரி, நண்பர்கள் கலாட்டா, காதல், மோதல் என வழக்கமான அம்சங்களுடன் வந்திருக்கும் படம் பனி விழும் நிலவு.

ஹீரோ ஹிருதய் மகா குறும்புக்காரர். இவர் செய்யும் விளையாட்டுத்தனத்தால் உடன் படிக்கும் ஒரு நண்பன் கல்லூரிக்கே வரமுடியாமல் போகிறது.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

உடன் படிக்கும் ஹீரோயின் ஈடனிடம் ஒரு முறை நண்பனுக்காக காதலைச் சொல்லப் போகிறார் ஹ்ருதய். எனக்கு அவனைப் பிடிக்கல என்று கூறிவிடுகிறார். ஆனால் சில காட்சிகள் போனதுமே ஹ்ருதயும் ஈடனும் காதலர்களாகிவிடுகிறார்கள்.

ஒரு நாள் தனது கடற்கரை பங்களாவுக்கு காதலனை அழைக்கிறார் ஈடன். ஏகப்பட்ட சமாச்சாரங்களை கற்பனை பண்ணிக்கொண்டு ரொமான்டிக் மனநிலையில் போகிறார் ஹ்ருதய். அங்கு போன பிறகுதான், தன்னைப் போலவே தன் வகுப்பு நண்பர்களையும் அழைத்திருப்பதும், ஈடன் தன்னைக் காதலிப்பதாக நடித்திருக்கும் உண்மையும் தெரிய வருகிறது.

வெறுத்துப் போன ஹ்ருதய், அந்த கோபத்துடன் நண்பர்கள் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டே போகிறார்.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

அதன் பிறகு ஒரு திருமணத்துக்கு திட்டமிட்டு ஹ்ருதயை வரவழைக்கிறார்கள் நண்பர்கள். அந்த திருமணத்துக்கு ஈடனும் வருகிறார். பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.

நாயகன் ஹ்ருதயால் எல்லாம் செய்ய முடிகிறது. ஆனால் முகத்தில் உணர்வுகளைக் காட்ட இன்னும் முயற்சித்திருக்கலாம். அதேநேரம் வெறுத்துப் போய்த் திட்டுமளவுக்கு மோசமில்லை என்பதே பெரிய விஷயம்தானே.

நாயகி ஈடன் பார்க்க அழகாக இருக்கிறார். தேவையான அளவு நடிப்பையும், தேவைக்கு மேலேயே கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார்.

கல்லூரி நண்பர்களாக வருபவர்கள் ஓகே என்றாலும், காட்சிகளில் கலகலப்பு, நகைச்சுவைப் பஞ்சம்.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

வெண்ணிற ஆடை மூர்த்தி, கோவை சரளா, பாண்டியராஜனும் உண்டு. இவர்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி தான் வரும் காட்சிகளில் தன் பாணி இரட்டை அர்த்த வசனங்களை ஏகத்துக்கு அள்ளி விடுகிறார்.

ஒளிப்பதிவு பரவாயில்லை. ஆனால் இசை- பாடல்கள் ஈர்க்கும்படி இல்லை. இரண்டாம் பாதியை இன்னும் கச்சிதமாகத் தந்திருக்கலாம்.

கௌசிக் இயக்கத்தில் போன வாரம்தான் ஆதியும் அந்தமும் என்ற ஒரு த்ரில்லர் பார்த்தோம். இந்த வாரம் கல்லூரி காதலை வைத்து ஒரு படம். ஒரு புது இயக்குநரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வருவது சாதாரண விஷயமல்ல. ஆனால் இந்த வாய்ப்பை இன்னும் திறம்பட பயன்படுத்தியிருக்கலாம்!

 

பவர் ஸ்டார் சீனிவாசன் சூப்பர் மார்க்கெட்டைச் சூறையாடிய பக்கத்து வீட்டுக்காரர்கள்!

பவர் ஸ்டார் சீனிவாசன் சூப்பர் மார்க்கெட்டைச் சூறையாடிய பக்கத்து வீட்டுக்காரர்கள்!

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டின் கேட்டை உடைத்து ரூ 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் சூறையாடியுள்ளனர்.

இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் குடியிருப்போரோ, சீனிவாசன் தங்களை மிரட்டுவதாக பதிலுக்கு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரவாயல் அருகே உள்ள வானகரம்-அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார்.

அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10-க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயுள்ளது. குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பதில் புகார்

இதேபோல் குடியிருப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர்கள் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்து பவர் ஸ்டார் சீனிவாசன் தனது சூப்பர் மார்க்கெட் முன்பு செட் அமைத்துள்ளார். அதை அகற்றக்கோரி டிசம்பர் மாதம் வரை கெடு விடுத்து இருந்தோம். ஆனால் அவர் அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம்.

இதற்காக எங்களை அவரது தரப்பினர் மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த புகார்கள் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

 

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் புது சாதனைப் படைக்க வேண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள, இந்தியாவின் முதல் நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பப் படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

இந்தப் படத்தின் இசை, ட்ரைலர் மார்ச் 9-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை வரவேற்கவும், வெற்றி பெறச் செய்யவும் ரசிகர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள், இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திருப்பதி திருமலைக்கு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

ஏப்ரல் 2-ம் தேதி சோளிங்கர் நகரிலிருந்து ஏராளமான ரசிகர்கள் குழுவாக இந்த நடைபயணத்தைத் தொடங்குகிறார்கள்.

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றப் பொருளாளரும், சோளிங்கர் ரஜினி மன்றத் தலைவருமான என் ரவி தலைமையில் இந்த பாதயாத்திரை தொடங்குகிறது.

 

என் வாழ்க்கையில் தலைவா படத்தால் பட்டதை மறக்க முடியாது! - இயக்குநர் விஜய்!

சென்னை: என் வாழ்க்கையில் தலைவா படத்தால் பட்ட பாட்டை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.

நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் முதன் முதலாக இணைந்த படம் தலைவா. இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்து வெளியானது வரை ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தது.

என் வாழ்க்கையில் தலைவா படத்தால் பட்டதை மறக்க முடியாது! - இயக்குநர் விஜய்!

ஒரு வழியாக படம் வெளியானது. படு தோல்வியைச் சந்தித்தது.

ஆனால் அந்தப் படம் வெளியாக முடியாமல் அரசியல் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட நேரத்தில் இரண்டு விஜய்களும் வாயைத் திறக்கவே இல்லை. நடிகர் விஜய் என் படம் எப்படியாவது ரிலீஸ் ஆகணும்.. முதல்வர் நல்லவங்க.. என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இயக்குநர் விஜய் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார். தலைவா அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "இப்போது நான் இயக்கும் சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்பட வேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்து விட்டு தலைவா எடுத்தேன்.

தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல. காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ள முடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம்தான்," என்றார்.