தாக்கரே மரணம்... ரஜினி வேதனை!

Thackeray S Death Mentally Affects Rajini

பால் தாக்கரே மரணம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொம்பவே பாதித்துள்ளது.

அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்த ரஜினி, இன்று பிற்பகல் தாக்கரே மரணம் அடைந்துவிட்டார் என்பது தெரிந்ததும் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடித்தாராம்.

முன்பு எந்திரன் படம் வெளியான சமயத்தில் மும்பை சென்ற ரஜினி, நேராக பால் தாக்கரே வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து ஆசி பெற்றார்.

தனது தந்தைக்கு நிகரான பாசம் காட்டும் உயர்ந்த மனிதர் பால் தாக்கரே என்று ரஜினி அப்போது கூறியிருந்தார்.

ரஜினியைப் பற்றி எப்போதுமே மிக உயர்ந்த கருத்து கொண்டிருந்தார் பால் தாக்கரே. மும்பையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பின்பற்ற வேண்டும். தான் வசிக்கும் மண்ணுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று முன்பொரு சமயம் தாக்கரே ரஜினியைப் பாராட்டியிருந்தார்.

ரஜினியின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தபோது, சிவசேனையின் ஆதரவு பூரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கல்யாணத்தில ஆட்டோகிராப் போட்டேன்… பரோட்டா சூரி

Namma Veetu Kalyanam Barota Soori

எல்லோரும் கல்யாணத்தில மொய் எழுதிட்டு மணமக்களை வாழ்த்திட்டு போவாங்க. ஆனா எங்க ஊர்ல என் கிட்ட ஆட்டோகிராப் கேட்டாங்க என்று பெருமை பொங்க கூறினார் நகைச்சுவை நடிகர் ‘பரோட்டா' சூரி.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு. திருமணநாளில் எடுக்கப்பட்ட போட்டோ, வீடியோ அவற்றை போட்டு பார்ப்பது சுவாரஸ்யமான விசயம். விஜய் டிவியில் பிரபலங்களின் வீட்டுத் திருமணங்களை நம்ம வீட்டுக் கல்யாணம் என்று ஒளிபரப்புகின்றனர். சம்பந்தப்பட்ட மணமக்களை நேரடியாக சந்தித்து திருமண நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கேட்டறிகின்றனர்.

நவம்பர் 4ம் தேதி ‘நம்ம வீட்டுக் கல்யாணம்' நிகழ்ச்சியில் ‘பரோட்டா' சூரியின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பானது. திருமண நாளில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கூறிக்கொண்டே வந்தார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற தனது திருமணம் தன்னை வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது என்று கூறிய சூரி, தனது திருமணத்திற்காக உள்ளூர் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டதாக கூறினார்.

திருமணத்திற்கு வந்த குழந்தைகள் அனைவரும் தன்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பிதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய ஆட்டோ கிராப் வாங்கிச் சென்றது மறக்கமுடியாத நிகழ்வு என்றார் சூரி.

பதினைந்து ஆண்டுகளாக சினிமாத்துறைக்கு வந்து சிரமப்பட்டது முதல் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வாய்ப்பு கிடைத்தது வரை நேயர்களிடையே பகிர்ந்து கொண்டார் சூரி. முதல் படத்தின் நினைவாக தனது மகளுக்கும் வெண்ணிலா என்று பெயரிட்டுள்ளதாக கூறினார்.

 

விஜய் - அமலா பால் நடிக்கும் பட பூஜை!


Vijay Amala Paul New Movie Pooja
துப்பாக்கி படத்துக்குப் பிறகு ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் - அமலா பால் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

இந்தப் படத்துக்கு முதலில் தலைவன் என்று பெயரிட்டிருந்தனர். ஆனால அந்தத் தலைப்பை, சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் நடிக்கும் படத்துக்கு வைத்துவிட்டதால், வேறு தலைப்பை யோசித்து வருகின்றனர்.

இந்த படத்தை மிஸ்ரி புரொடக்சன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். சத்யராஜ நடித்த பல படங்களின் தயாரிப்பாளர் - பைனான்ஸியர் என்பதாலோ என்னமோ, சென்டிமென்டாக அவருக்கும் ஒரு வேடத்தைக் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படப்பூஜை விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகை அமலாபால் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

படப்பிடிப்பை இம்மாத இறுதியி்ல் வெளிநாட்டில் ஆரம்பிக்கின்றனர்.
 

துப்பாக்கி விவகாரம்.. தாணு, விஜய், முருகதாஸ் அலறியதன் பின்னணி?


துப்பாக்கி படத்தில் சில காட்சிகளுக்கு முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுமே அலறியடித்துக் கொண்டு, அந்தப் படத்தின் இயக்குநர் முருகதாஸ், ஹீரோ விஜய் சார்பில் அவர் தந்தை (கவனிக்க, விஜய் கேட்கவில்லை!), தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டு, உருக்கமாக ஸ்டேட்மென்ட் கொடுத்தது ஏன் என்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.
thuppakki issue here is the inside story
இந்தப் படம் வெளியான மூன்று மணி நேரத்துக்குள், முஸ்லிம் அமைப்புகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது.

அடுத்த நாளே, விஜய், ஏஆர் முருகதாஸ், தாணு வீடுகளுக்கு முன்பாக பெரிய ஆர்ப்பாட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்தன. அதில் 60 பேர் கைதாகிய நிலையில், அதற்கடுத்த நாள் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து பெருமளவில் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர். அத்தோடு, படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தி, மக்களை படம் பார்க்க விடாமல் செய்யப் போவதாக செய்தி பரவியது.
இதில் தியேட்டர்காரர்களுக்கு கிலியடித்துவிட்டது. ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் முன்பு அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, நடந்த தாக்குதல் போல ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்தவர்கள், தயாரிப்பாளருக்கு போன் போட்டு, ஏதாவது பண்ணுங்கள்.. இல்லாவிட்டால் படத்தை தியேட்டரை விட்டு எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றதும் தான்... இந்த பகிரங்க மன்னிப்பு படலத்தை அரங்கேற்றினார்களாம்!
 

மீண்டு(ம்) வந்த மனோரமா... சிங்கம் 2வில் நடித்தார்

Manorama Back Business

சென்னை: உடல்நிலை பாதிப்பினால் சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்த மனோரமா மீண்டும் சிங்கம் 2 படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு வருடத்திற்கு பின்னர் கேமரா முன்பு நின்று அவர் நடித்தபோது நடிகர், நடிகையர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர்

ஆச்சியின் கின்னஸ் சாதனை

ஆச்சி என்று திரை உலகத்தினரால் அன்போடு அழைக்கப்படும் மனோரமா, மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதுவரை 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நடிப்பா, பாட்டா ஓகே

காமெடி, குணச்சித்திர நடிப்பு, பாடல், என ஆல் இன் ஆல் ஆச்சியாக திரை உலகில் கொடி கட்டி பறப்பவர் மனோரமா. ‘தில்லானா மோகனாம்பாள்' ஜில் ஜில் ரமாமணி, சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லைத் தட்டாதே நடிகன், சின்னக் கவுண்டர், போன்ற படங்கள் எவர்கிரீன் ஹிட்

5 முதல்வர்களுடன் நடித்தவர்

அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா 5 மாநில முதல்வர்களோடு நடித்த ஒரே சினிமா பிரபலம் மனோரமா தான்.

பல தலைமுறை நடிகை

எம்.ஜி.ஆர், சிவாஜி, அவரது மகன் பிரபு, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், அவர் மகன் கார்த்திக், ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார் ஆச்சி.

ஆறு மொழிகளில் அசத்தல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். கலிஃபோர்னியா யூனிவர்சிட்டி மனோரமாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

பொன்னர் சங்கருக்குப் பின் ஓய்வு

பொன்னர் சங்கர் படத்திற்கு பின்னர் மூட்டு வலி, தவறி விழுந்ததில் தலையில் ரத்த கட்டு, மூச்சு திணறல் போன்ற நோயால் அவதிப்பட்டார். இதற்காக அறுவை சிகிச்சையும் நடந்தது. இதையடுத்து கடந்த 1 வருடமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

மீண்டு வந்தார் ஆச்சி

ஒரு வருட ஓய்வுக்குப் பின்னர் சூர்யா நடிக்க ஹரி இயக்கும் ‘சிங்கம் 2' படத்தில் நடித்துள்ளார் ஆச்சி. அவர் நடித்த காட்சி சென்னை தி.நகரில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது. வழக்கம்போல் அவர் தனது காட்சிகளை மிக எளிதாக நடித்து முடித்தார். அவரை பட யூனிட்டே கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகிறது.

 

ஒரு நாயகிக்கு இரு காமெடியன்கள் போட்டி போடும் கதை

Two comedians is competing for a heroine ஷெரில் பிரின்டோவை காதலிக்க கருணாஸ், விவேக் போட்டியிடுவதுபோல் 'மச்சான்Õ படத்துக்காக படமாக்கப்பட்டது என்றார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். இது பற்றி அவர் கூறியதாவது: கருணாஸ், விவேக் இணைந்து நடிக்கும் படம் 'மச்சான்Õ. இருவரும் அவரவர் பாணியில் காமெடியில் கலக்குபவர்கள். இது இரட்டை காமெடி விருந்தாக இருக்கும். நண்பர்களுக்குள் மச்சான் என்று அழைத்துக் கொள்வது சகஜம். அதுபோல் நெருங்கிய நண்பர்களாக ஆல் இன் ஆல் அழகுராஜா கேரக்டரில் கருணாஸ், அனிமல் ராஜா கேரக்டரில் விவேக் நடிக்கின்றனர். இவர் சினிமா ஷூட்டிங்கிற்கு நாய்களை வாடகைக்கு விடும் வேடம் ஏற்றிருக்கிறார்.

நண்பர்களான கருணாஸ், விவேக் இருவரும் ஷெரில் பிரின்டோவை காதலிக்கின்றனர். அவரை கவர்வதற்காக பலவகையில் முயல்கின்றனர். 'என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சிÕ என்ற டூயட் பாடலில் கருணாஸ், ஷெரில் பிரின்டோ ஆடிப்பாட விவேக்கும் கற்பனையில் 'மின்சார கனவுÕ பிரபுதேவாவாகவும், ஷெரில் பிரின்டோவை காஜலாகவும் நினைத்து ஆடும் காட்சிகள் நகைச்சுவையாக படமாக்கப்பட்டுள்ளது. டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, வெ.ஆ.மூர்த்தி, பாண்டு, கோவைசரளா, வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. பாலமுருகன் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறினார்.
 

தமிழை தொடர்ந்து தெலுங்கு படங்களையும் ஒதுக்குகிறார் தமன்னா

Tamanna in Tamil Telugu films devotes தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் புதிய படங்கள் எதையும் ஏற்காமல் பாலிவுட்டில் கவனம் செலுத்துகிறார் தமன்னா. தமிழில் 'அயன்', 'பையா' உள்ளிட்ட பல படங்களில் நடித்த தமன்னா திடீரென்று தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பினார். இதையடுத்து கடந்த 2 வருடமாக புதிதாக தமிழ் படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. டோலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இப்போது டோலிவுட்டில் புதிய படங்களை ஏற்காமல் கால்ஷீட்டை முடக்கி வைத்திருக்கிறார். தெலுங்கில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட 'பலே தம்முடு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

இது தவிர புதிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காமல் காத்திருப்பில் வைத்திருக்கிறார். இதற்கு காரணம் அவர் தனது கவனத்தை இந்தி படங்களில் திருப்பி இருப்பதுதானாம். 'ஹிம்மத்வாலா படத்தில் அவர் முழுகவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும் ஒரு புதிய இந்த¤ படத்தை அவர் ஏற்றிருப்பதாக தெரிகிறது. இதையடுத்து வரவுள்ள இந்தி பட வாய்ப்புகளை ஏற்கும் வகையில் தென்னிந்திய படங்களை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. அசினைப்போல் தமன்னாவும் தென்னிந்திய படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட்டிலேயே கவனம் செலுத்துவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று தென்னிந்திய படவுலகினர் கூறுகின்றனர்.
 

சூர்யா படத்தில் பிரகாஷ்ராஜ் இல்லை

Surya Prakash Raj is not in the Surya film சூர்யா படத்தில் பிரகாஷ்ராஜுக்கு பதிலாக புதிய வில்லன் நடிக்கிறார். சூர்யா, அனுஷ்கா நடித்த படம் 'சிங்கம்Õ. ஹரி இயக்கினார். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சூர்யா, அனுஷ்காவுடன் ஹன்சிகா இணைந்து நடிக்கிறார். முதல் பாகத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்தார். 2ம் பாகத்தில் அவர் நடிக்கவில்லை. இப்படம் பற்றி சூர்யா கூறியதாவது: சிங்கம் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் ஏற்றார்கள். அந்த வெற்றிதான் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க வைத்திருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட்டும் நிறைய ஆக்ஷன் காட்சிகளுடன் நகைச்சுவை காட்சிகளும் உள்ளடக்கி இருக்கிறது.

'இரண்டாம் பாகத்திலும் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறாரா?Õ என்கிறார்கள். முரட்டுத்தனமான வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் கேரக்டர் முதல் பாகத்திலேயே  முற்றுபெற்றுவிட்டது. எனவே 2ம் பாகத்தில் புதிய வில்லன் நடிக்கிறார். கூடுதலாக 4 வேடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் நடித்தவர்களே ஏற்கிறார்கள். சிங்கம் படம் இந்தியில் அஜய் தேவ¢கன் நடிக்கவும், கன்னடத்தில சுதீப் நடிக்கவும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது. எனவே 2ம் பாகம் இயக்கும்போது எங்களுக்கு பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்தவர்கள், 2ம் பாகம் உருவாவதை கவனமுடன் கண்காணிக்கிறார்கள்.
 

கிசு கிசு - தம்பியை எச்சரித்த ஹீரோ

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

லவ் படத்துல நடிச்ச சந்திய நடிகைக்கு கோலிவுட்ல படங்களே இல்லையாம்... இல்லையாம்... டபுள் ஹீரோயின், டிரிபிள் ஹீரோயின் படங்கள்ள நடிக்க வந்த சான்ஸ மறுத்துட்டாராம். இப்ப மல்லுவுட் படங்கள்ள மட்டுமே நம்பிகிட்டிருக்காராம். 'இப்படித்தான் வந்தனமான நடிகையும் வந்த வாய்ப்ப மறுத்ததால கோலிவுட் கைவிட்டுச்சி. அதே மிஸ்டேக்க நீயும் பண்ணாதேÕனு தோழிங்க லவ் நடிகைக்கு அட்வைஸ் பண்றாங்களாம். அத காதுல வாங்காம, 'பத்தோட பதினொன்னா நடிக்க என்னால முடியாது. முக்கியமான வேஷமா இருந்தாதான் பண்ணுவேன்Õனு சூடு பறக்க பதில் சொல்றாராம்... சொல்றாராம்...

புதுசா வர்ற படங்கள பத்தி இப்பல்லாம் பேஸ் புக்லயும், டுவிட்டர் பக்கத்துலயும் ஜனங்களே விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதனால முதல் ஷோலேயே பட ரிசல்ட் தெரிஞ்சிபோயிடுது. மெகா பட்ஜெட்ல உப்புமா கதைகளை எடுக்கிற இயக்கங்களும் தயாரிப்புகளும் பேஸ்புக், டுவிட்டர் விமர்சனங்களால நொந்துபோயிருக்காங்களாம். படத்தை நெகடிவா விமர்சிக்காதீங்கனு இணையதள பிரியருங்கிட்ட தங்களோட நெட் பக்கத்துல கோரிக்கை வைக்கிறாங்களாம்... வைக்கிறாங்களாம்...

ஜ காட் நடிகர் புக் படத்துல நடிக¢கிற தன்னோட பிரதரை பூஸ்ட் பண்றதுல மும்முரமா இருக்காராம்... இருக்காராம்... ஷூட்டிங் ஸ்பாட்ல எப்படியெல்லாம் இயக்கத்த கவரணும்னு டிப்ஸ் கொடுத்திருக்காராம்... கொடுத்திருக்காராம்... ஹீரோயினுங்ககிட்ட கொஞ்சம் தள்ளியே நின்னுக்க. இல்லாட்டா என்னயபோல உன்ன பத்தியும் பக்கம்பக்கமா கிசுகிசு எழுதிடுவாங்கன்னு எச்சரிக்கிறாராம்... எச்சரிக்க¤றாராம்...
 

கடல் அனுபவத்தை மறக்க முடியாது

kadal  'கடல்' படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்று தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அவர் படத்தில் ஒரு பிரேமில் வந்து விட்டு போனால் கூட அது அழகுதான். அப்படி நினைத்த நேரத்தில் 'கடல்' வாய்ப்பு வந்தது. இதில் அர்ஜுனுடன் நான் நடித்துள்ளேன். அர்ஜுனை ஏற்கனவே தெரியும் என்றாலும் இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்தது இந்தப் படம்தான். படத்தின் கதை என்னவென்று கேட்டால் என்னால் ஒரே ஒரு விஷயம் மட்டுமே சொல்ல முடியும். கதை, கடல் தொடர்பானது. படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் அந்த அனுபவத்தில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறேன்.நான் தயாரித்து நடித்துள்ள 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. இது எனது கனவு படம். இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு லட்சுமி மஞ்சு கூறினார்.

 

பேஸ்புக்கில் மம்மூட்டி

Mammootty In Facebook மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, பேஸ்புக்கில் தனது பக்கத்தை வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். அதில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ''உங்களிடம் நேரடியாக தொடர்புகொள்ள இது சிறந்த வழி என நினைக்கிறேன். எனது படங்கள் மற்றும் செய்திகளையும் எனது அறக்கட்டளை தொடர்பான விஷயங்களையும் இதில் அடிக்கடி அப்டேட் செய்ய இருக்கிறேன். நான் நடித்து வரும் படங்களில் இருந்து வெளியிடப்படாத கிளிப்பிங்ஸ்களையும் இதில் இணைக்க இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ''பேஸ்புக் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. இதன் மூலம் எனது படம் மற்றும் நடிப்பு பற்றிய கருத்துகளையும் விமர்சனங்களையும் ரசிகர்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி தெரியும்போது, என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள அது உதவியாக அமையும்'' என்று கூறியுள்ளார்.
 

என் வாழ்வை சிக்கலாக்கி விட்டார்கள்

sona  தேவையில்லாத சர்ச்சையில் சிக்க வைத்து என் வாழ்வை சிக்கலாக்கி விட்டார்கள் என்று சோனா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
பத்திரிகை ஒன்றில் என்னை ஜாலி பேட்டி ஒன்று எடுத்தார்கள். அவர்கள் ஜாலியாக கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். ஆனால் நான் சொல்லாததையும் எழுதி என்னை சிக்கலில் மாட்டிவிட்டார்கள். ஆண்களுக்கு எதிராக நான் தவறான கருத்தை சொன்னதாக எழுதிவிட்டார்கள்.  சில அமைப்புகள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் எனது கடையை திறக்க முடியவில்லை. தீபாவளி வியாபாரம் முடங்கி பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நான் புதிதாக வாடகைக்கு குடிபோக இருந்த வீட்டுக்காரர், அட்வான்சை திருப்பித் தந்து, வீடு தர மறுத்துவிட்டார். சில இடங்களில் எனது கடையின் கிளையை திறக்க ஏற்பாடு செய்திருந்தேன். அவை அனைத்தும் முடங்கிவிட்டது. எல்லாவற்றையும் விட, கடந்த சில நாட்களாக மனவேதனையில் தவிக்கிறேன். தேவையில்லாத சர்ச்சையில் என்னை சிக்க வைத்து, என் வாழ்வையே சிக்கலாக்கி விட்டார்கள். சொந்தமாக படம் தயாரித்து பலகோடியை இழந்து இப்போதுதான் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது வளர்ச்சியை தடுக்கவும், என்னை அழிக்கவும் யாரோ திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என்று கருதுகிறேன். நான் எதையும் வெளிப்படையாக பேசுகிறவள். எனக்கு நண்பர்கள் அதிகம், எதிரிகளும் இருக்கிறார்கள் என்பதை இப்போதான் உணர்கிறேன். அவதூறாக எழுதிய சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
 

இந்தியில் நயன்தாரா படம் பிரபுதேவா அப்செட்

nayanthara  நயன்தாரா நடித்துள்ள படம் இந்தியில் வெளியாக இருப்பதால் பிரபுதேவா அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபுதேவாவும் நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வந்தனர். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவரான அவர் இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் இவர்கள் காதல் திடீரென முறிந்தது. இதையடுத்து படம் இயக்குவதில் பிரபுதேவாவும் நடிப்பில் நயன்தாராவும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நயன்தாரா, ராணா நடித்துள்ள தெலுங்கு படம், 'கிருஷ்ணன் வந்தே ஜகத்குரும்'. கிரிஷ் இயக்கி உள்ள இந்தப் படம், தமிழில் 'ஓங்காரம்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ராணா இந்தி படங்களிலும் நடித்துள்ளதால் இதை இந்தியில் டப் செய்ய உள்ளனர். இதையடுத்து இதன் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடக்க உள்ளது. இதற்காக ராணாவும் நயன்தாராவும் மும்பையில் முகாமிட உள்ளனர். இதை கேள்விபட்ட பிரபுதேவா, அவர்கள் வரும் நேரத்தில் மும்பையில் இருக்க வேண்டாம் என்று நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரபுதேவா தரப்பில் கூறும்போது, ''இந்தியில் 'ரவுடி ரத்தோர்' படத்தை பிரபுதேவா இயக்கும்போதுதான் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து இந்தியில் முக்கியமான இயக்குனராகி விட்டார் பிரபுதேவா. பிரிவுக்குப் பிறகு நயன்தாரா நடித்து வெளிவரும் முதல் படம், 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்'. இந்தப் படத்தின் புரமோஷனை மும்பையில் நடத்தும்போது, காதல் முறிவு விவகாரம் பற்றி நயன்தாராவிடம் கேட்பார்கள். இதனால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். அதனால் அந்த நேரத்தில் பிரபுதேவா மும்பையில் இருக்கமாட்டார்'' என்றனர்.
 

பூஜா காந்தி நிச்சயதார்த்தம்

Pooja Gandhi engagement  பூஜா காந்தி திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடந்தது.பஞ்சாபை சேர்ந்தவர் பூஜா காந்தி. தமிழில் 'கொக்கி', 'திருவண்ணாமலை', 'தலையெழுத்து' படங்களில் நடித்தார். 'முங்காருமலே' படம் மூலம் கன்னடத்தில் நுழைந்தார். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, தொடர்ந்து நடித்தார். சில மாதங்களுக்கு முன் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இணைந்தார். அவரை மாநில மகளிரணி தலைவியாக அதன் தலைவர் குமாரசாமி நியமனம் செய்தார். இந்நிலையில் தொழிலதிபரும், மஜத இளைஞரணி பிரமுகருமான ஆனந்த் கவுடாவுடன் பூஜா காந்திக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் காலை பெங்களூர் கத்ரிகுப்பே பகுதியில் உள்ள பூஜாகாந்தி வீட்டில் நிச்சயத்தார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கும் என்று தெரிகிறது. ஆனந்த் கவுடா, நடிகை சரோஜாதேவியின் பேத்தி இந்திராவை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.