பிரியாணியில் இருந்து பொங்கலுக்கு தாவிய அஜீத் குமார்

Ajith Shifts From Briyani

சென்னை: அஜீத் குமார் பிரியாணியில் இருந்து பொங்கலுக்கு தாவிவிட்டாராம்.

அஜீத் குமார் சூப்பரா பிரியாணி செய்வார் என்று நாங்கள் சொல்லவில்லை அவருடன் நடித்து வருபவர்கள் சொல்கிறார்கள். விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங்கில் அஜீத் தன் கையாலேயே பிரியாணி செய்து அதை படக்குழுவினருக்கு பரிமாறினார் என்று நாம் செய்தி வெளியிட்டோம்.

அவர் சமைக்கும் பிரியாணியை சாப்பிட முடியலையே என்று சில நடிகைகள் வருத்தம் தெரிவித்ததும் உண்டு. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் அஜீத் பிரியாணி சமைக்கவில்லை. மாறாக பொங்கல் சமைத்து அனைவருக்கும் பரிமாறுகிறாராம். என்ன அஜீத் திடீர் என்று பொங்கல் சமைக்க ஆரம்பித்துவிட்டீர்கள்?

 

அய்யய்யே, இந்த ஆர்யாவும், நயனும் சின்னப்புள்ளத்தனமா சண்டை போட்டிருக்காங்க

Arya Nayanthara Fight Like Kids

சென்னை: ஆர்யாவும், நயன்தாராவும் சின்னப்புள்ளத் தனமாக சண்டை போட்டுள்ளனர்.

ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் என்று வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜா ராணி படத்தின் டீசர் நேற்று வெளியானது. 45 விநாடிகள் ஓடும் டீசர் காதல் தோல்விக்கு பிறகும் வாழ்க்கை உண்டு. காதல் தோல்விக்கு பிறகும் காதல் உண்டு என்ற கருத்துடன் துவங்குகிறது.

ஆர்யாவும், நயன்தாராவும் கண்ணாடி முன்நின்று தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ரெடியாகும்போதே இருவரும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சின்னப் பிள்ளைகள் போன்று சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

டீசரைப் பார்க்கையில் படத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு நல்லா செய்றாங்கய்யா விளம்பரம்.

 

உடல் நலக்குறைவு: ஐ.சி.யு.வில் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்

Legendary Singer Tm Soundararajan Hospitalised

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்(91). கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கால் தவறி விழுந்தார். இதில் அவரது பின்தலையில் பலத்த அடிபட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ் மற்றும் செல்வகுமார் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.

 

'பவர்' ஸ்டாரின் பெண் புரோக்கர் வெங்கடம்மா கைது

Police Arrests Power Star 2 Aides Including A Woman

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனின் பெண் கூட்டாளி வெங்கடம்மா உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெரும் மோசடிவழக்கில் சிக்கி பவர்ஸ்டார் சீனிவாசன் தறபோது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளும், புகார்களும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பவருக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பெண், பெயர் வெங்கடம்மா. 46 வயதுப் பெண் இவர். இன்னொருவர் 45 வயதான கிருஷ்ணசாமி. இருவரும் தி.நகரைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தி.நகரில் ஒரு ஆபீஸ் போட்டுள்ளனர். கடனுக்காக அலைபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பவரிடம் கூட்டி வந்து மோசடி செய்வதே இவர்களது தொழில். இப்படி ஆள் கூட்டி வருவதற்காக பவரிடமிருந்து இருவரும் கமிஷன் பெற்று வந்துள்ளனர்.

இவர்களின் கைது குறித்து சென்னை குற்றப் பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெங்கம்மா என்ற லட்சுமிக்கு சொந்த ஊர் ஆந்திரா மாநிலமாகும். இவர் தெலுங்கு தெரிந்தவர்களையும், மற்றவர்களையும் ஏமாற்றுவதில் கெட்டிக்காரி. கிருஷ்ணசாமி, கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய புரோக்கராக செயல்பட்டுள்ளார்.

இவர், மலேசியாவை சேர்ந்த மணியம் என்பரை 2010-ம் ஆண்டு பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அப்போது மணியத்துக்கு ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.2.50 கோடியை சீனிவாசன் ஏமற்றியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள வெங்கம்மாவும், கிருஷ்ணசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் பவர் ஸ்டார் சீனிவாசனின் முக்கிய கூட்டாளிகள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 15ல் அஜீத் 53 வது படம் ரிலீஸ்?

Ajith Targets August 15

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத் 53 என்று ரசிகர்கள் பெயரிட்டுள்ள படத்தில் டிரெய்லர் இப்போது யுடியூப்பில் ஹிட் அடித்துள்ளது.

அஜீத் உடன் ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள அந்த திரைப்படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யலாமா என்று யோசிக்கிறாராம்.

படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. டப்பிங், போஸ்ட் புரடெக்சன் போன்ற வேலைகள் முடிய எப்படியும் மூன்று மாதங்கள் வேண்டும் என்பதால் ஆகஸ்ட் 15ம் தேதியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

புகைப்பிடிப்பது போல போஸ்டர் அடிப்பதா?- சனா கான் எதிர்ப்பு

Sana Khan Opposes Portray Her Smoking Scenes

சென்னை: புகைப்பிடிப்பது போன்ற கோலத்தில் தன்னை போஸ்டரில் சித்தரித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை சனாகான்.

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து நடிகையின் டைரி என்ற படம் தயாராகியுள்ளது. சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடித்துள்ளார். அவருடன் சுரேஷ் கிருஷ்ணா, அரவிந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். அனில்குமார் இயக்கியுள்ளார். இப்படம் தமிழகத்தில் வருகிற 24-ந்தேதி ரிலீசாகிறது.

நடிகையின் டைரி படத்தில் சனாகான் புகை பிடிப்பது போன்றும் மது அருந்துவது போன்றும் காட்சிகள் உள்ளன. புகை பிடிக்கும் காட்சியை போஸ்டராக அச்சிட்டு ஒட்ட ஏற்பாடு நடந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சனாகான் அதிர்ச்சியானார்.

புகை பிடிக்கும் போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏற்கனவே ஒரு பிரஸ் மீட்டில் நடிகைகள் புகைப் பிடிப்பதும், மது அருந்துவதும் இன்றைக்கு அதிகரித்து வருவது வருத்தமாக உள்ளது என்று கூறி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார் சனாகான்.

இப்போது தன்னையே அந்தக் கோலத்தில் போஸ்டரில் போடுவதா என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.